சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில்,
உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் @CMOTamilNadu!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அதிகரிக்கும் மின் வெட்டு! அவதியுறும் தமிழக மக்கள்! இருளை நோக்கி நகரும் தமிழகம்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
இயக்குனர் இமயம்
பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தென் தமிழகத்தின் கிராமத்தில்
இருந்து புறப்பட்டு,
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்;
திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்;
தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள்.
அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பால ஒப்ப்ந்தம்
ரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்கது: ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ தொலைவுக்கு ரூ.2100 கோடியில் 4 வழி உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. மக்களின் வரிப்பணம் ரூ.700 கோடியை ஊழல் மூலம் சுரண்டும் இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்கது ஆகும்.
திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடியில் உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த திசம்பர் 24&ஆம் நாள் ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நாளில் இருந்தே ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதன் பின்னணியில் நடந்த ஊழல் மற்றும் கூட்டுச் சதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். கடைசியாக கடந்த மே 28-ஆம் தேதி கூட இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு காரணம் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது அப்பட்டமாக தெரிவது தான்.
உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.2100 கோடி செலவாகும் என குறிப்பிட்டிருந்த நிலையில், அதில் ரூ.700 கோடி குறைவாக ரூ.1400 கோடியில் அப்பணியை முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தது. ஆனால், அதிக தொகையை குறிப்பிட்டிருந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த அளிக்க வேண்டும் என்பதற்காக திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை எந்தக் காரணமும் கூறாமல் திமுக அரசு நிராகரித்து விட்டது. பின்னர் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதை எதிர்த்தும், தங்களின் ஒப்பந்தப்புள்ளி இரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திலிப் பில்ட்கான் நிறுவனம் பின்னர் ஏனோ பின்வாங்கி விட்டது. திமுக ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், புதிய ஆட்சியிலும் தடையின்றி பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தேன். அதன் பிறகாவது இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதை தெரிந்து கொண்டு அதை இரத்து செய்வதற்கான முயற்சிகளை அரசு தொடங்கியிருப்பது நீதி வெல்லும் என்பதைக் காட்டுகிறது.
வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையை மதுரவாயல் பகுதியுடன் இணைப்பதற்காக 6 வழி உயர்மட்டப்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த பாலம் அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.147 கோடி மட்டுமே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை விட அகலம் குறைந்த 4 வழி உயர்மட்டப்பாலத்திற்கு கிலோ மீட்டருக்கு ரூ.157.89 வழங்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலத்திற்கு அதிகபட்சமாகவே ரூ.1400 கோடி தான் செலவாகும் எனும் நிலையில், அதில் 50 விழுக்காடான ரூ.700 கோடியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு கூடுதலாக வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்வது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். கடந்த ஆட்சியில் இதன் பின்னணியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.
எனவே, எந்த தயக்கமும் இல்லாமல் திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் திட்டத்தை செயல்படுத்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
@CMOTamilnadu
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு அண்டை மாநிலங்களுக்குப் படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள் – தொழில் வளத்தைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டாத தவெக அரசால் மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி உயரும்?
தூத்துக்குடியில் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்வதற்காக கடந்த ஆட்சியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்த Mazagon Dock Shipbuilders Limited (MDL) எனும் நிறுவனம் தற்போது ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த கவலையைத் தருகிறது.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் மற்றும் தொழில்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதாக INSTA வில் REELS கள் வருகிறதே தவிர, ஆக்கப்பூர்வமான எந்தவொரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவோ, அதனால் எந்தவித முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் உருவானதாகவோ இதுவரை தெரியவில்லை.
தொழில்நுட்ப ரீதியிலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும் எப்போதுமே இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில், தொழிலைத் தொடங்க முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திடீரென அண்டை மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் தவெக அரசு முனைப்புக்காட்டத் தவறியுள்ளதாக இளைஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு, ஏற்கனவே தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு திட்டமிட்ட படி தமிழகத்தில் தொழில் தொடங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
மின்துறையில் Hard Disk திருடு போன வழக்கை ஏன் CBCID- யிடம் ஒப்படைக்கவில்லை என நாம் 3 நாட்கள் முன்பு கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,
தற்போது மிகவும் தாமதமாக CBCID விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பொய்க்கால் குதிரை அரசு.
இதற்கு எதற்கு இத்தனை நாட்கள்?
திருடு போன முதல் நாளே செய்ய வேண்டிய வேலையை ஏறத்தாழ ஒரு வாரம் Delay செய்துள்ளதன் பின்னணி என்ன?
செய்திகளில் வரும் வரை இதுபற்றி அமைச்சர் @CTR_Nirmalkumar விளக்கம் தராமல் மறைத்து வைத்திருந்ததே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது வெறும் Hard Disk திருட்டு மட்டுமல்ல.
தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
Data Theft பற்றி உங்கள் அரசின் காவல்துறையே விசாரிப்பதை இனிமேல் எப்படி நம்ப முடியும்?
நியாயமான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் எனில்,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கோரியபடி CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
@CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
வழக்கு குற்றவாளிகள் :
1) ஜான் பிரிட்டோ - ஆதவ் அர்ஜுனா மனைவியின் தாய்மாமன்
3) மார்டின் லீமா ரோஸ் - ஆதவ் அர்ஜுனா மாமியார்
4) டெய்சி ஆதவ் அர்ஜுனா - ஆதவ் அர்ஜுனா மனைவி
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக வாங்கியதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய போதைபொருள் விற்பனை திட்டம். இது அவர்களுக்கு தொழில்.
லாட்டரி விற்பனை போல் போதைப் பொருள் விற்பனையும் ஒரு தொழில்..
திமுக அரசு 2025 ல் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கும்
தவெக அரசு இன்று கைது செய்யப்பட்டதற்கும் ஒரே காரணத்திற்கைதான் அரசின் தவறுகளை சுட்டிகாட்டியதற்குதான்.
அதிலும் முதல் கைது இன்றைய முதல்வரை காப்பாற்ற பேசியதற்காக.
கரூர் துயரத்தில் விஜயக்கு அன்று உதவியது மூன்றேபேர்
முதலில் எடப்பாடி பழநிசாமி என்கிற எதிர்த்த மனிதர்! அதற்காக எடப்பாடி கட்சியை விஜய் உடைத்தார்.
இரண்டாமவர் மாரிதாஸ்,
அன்று கரூர் துயரத்தில் பல வீடியோகளை வெளியிட்டு விஜய்க்கு ஏற்பட்ட நெருக்கடியை தகர்த்தார்.
அதற்கான பலனை விஜய் திருப்பி கொடுக்கிறார்.
அடுத்து சாவுக்கு சங்கர் அவரும் மீண்டும் கைது செய்யப்படலாம் என நினைக்கிறேன்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய youtuber மாரி தாஸ் அவர்கள் கைது நடவடிக்கை குறித்தும்,
போதைப்பொருள் கடத்தல் பிண்ணனியில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் தொடர்பை அமலாக்க துறை வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என,
அதிமுக கண்டன அறிக்கை வெளியிட்டு கேள்வி!!!
ஆட்சிக்கு வந்த உடனே கட் ஆகிடுச்சு சார்…
எது, கமிஷனா?
இல்ல.. கரண்ட்டு..!!!
நேற்று இரவு இசிஆர் சாலையில் ஏற்பட்ட மின்வெட்டால் மக்கள் நடுரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
வாவ். What a மாற்றம் @CMOTamilNadu@CTR_Nirmalkumar ?
#பொய்க்கால்_குதிரை_அரசு
அட ஆச்சரியக்குறிகளே…
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா தோற்றுவித்த திமுக-வின் போர்வாளாகத் திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு திரு. கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர்.
தான் தேர்ந்தெடுத்த தலைமை தடம் புரண்டதைக் கண்டு, அண்ணாவின் கொள்கை காக்க உண்மையான திராவிட இயக்கம் @AIADMKOfficial-ஐ தோற்றுவித்தவர்.
மாண்புமிகு அம்மா அவர்கள் கழகத்தின் கொள்கை பரப்ப தமிழகமெங்கும் பயணித்தவர். சத்துணவு திட்டத்தை செயல்படுத்த அரும்பணியாற்றியவர். புரட்சித் தலைவர் மருத்துவமனையில் இருந்தபோது கழகத்தின் முகமாய் தமிழகத் தெருவெங்கும் சென்று கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் புரட்சித் தலைவி அம்மா.
வரலாற்றை “படிடா பரமா, படிடா பரமா” என்று சொன்னால் கேட்டா தானே?
தமிழக வரலாற்றின் ஒப்பில்லா தலைவர்களின் திருப்பெயரோடு உங்கள் தலைவர் பெயரை எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம்.
உங்கள் தலைவருக்கு என்ன வரலாறு இருக்கிறது?
அப்பா தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டு, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில் தன் ஆரம்பகாலத்தில் கூச்சமின்றி நடித்த நடிகர் தானே?
8 படங்கள் அப்பாவின் இயக்கத்தில்,
பெரிய இயக்குனர்கள் படங்கள் அப்பாவின் சிபாரிசில்,
தெலுங்கு பட ரீமேக் ரைட்ஸ் அப்பாவின் செல்வாக்கில்,
உங்கள் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் @actorvijay ?
அதே அப்பா மீதும், பெற்ற அம்மா மீதும் வழக்கு போட்டவர் தானே நீங்கள்?
இலங்கைத் தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசு அவர்களை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு?
ஈழத் தமிழர்களுக்கான நடிகர் சங்கப் போராட்டத்தின் பொது எல்லா நடிகர்களும் அள்ளிக் கொடுக்க, 500 ரூபாயை கஞ்சத் தனமாக கிள்ளிக் கொடுத்தவர் தானே நீங்கள்?
நீங்களாக ஒரு மேடை போட்டு, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்று பாடியதால் தான் இலங்கைப் போர் நின்றது என்று உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் உருட்டலாம். தமிழக மக்கள் இதையெல்லாம் கண்டு சிரித்ததே வரலாறு.
ஒரு Twitter ID விமர்சனம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், கமிஷனர் ஆபீசுக்கு சென்று கதறிய உங்கள் இயக்கத்தின் “மாபெரும் அரசியல் வரலாறு” எங்களுக்கு தெரியாதா என்ன?
“கோட் சூட் போட்டோஷூட்” நடத்தினால் அதை சொல்லத் தான் செய்வோம். உங்களைப் போல “Wow… How Cute?” என்று சிலாகிக்க நாங்கள் என்ன ஆச்சரியக்குறிகளா?
கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா?
கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
அஇஅதிமுக தீர்ந்து போன சக்தியாம்.
விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப் படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அஇஅதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க.
@TVKHQITWingOffl