அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 55ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். உடன் கழக நிர்வாகிகள்
பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை புறநகர் வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு PRG. அருண்குமார் Ex MLA அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை புறநகர் வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சமத்துவமும், சமூகநீதியும் இவர் உயிர்மூச்சு!
சுயமரியாதை இவரது அடிப்படை,
அடக்குமுறை எதிர்ப்பு இவரது பிறவி குணம்,
அதிரடி பேச்சு இவரின் பெரும் ஆயுதம்,
எதிரிகளும் போற்றும் அறிவார்ந்த தலைவர் அண்ணா.
ஆசிரியர்கள்
என் ஆறாம் அறிவிற்கு
கல்வி புகட்டி
கூர்மை சேர்த்தவர்கள்.
நாளைய சமுதாயத்திற்கு
நல்லஎண்ணம் போதிப்பவர்கள்.
உலகே வாழ்த்துகிறது
உங்களை நான் வணங்குகிறேன்!
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, இதய தெய்வம் மாளிகையில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வரும் த.வெ.க. அரசைக் கண்டித்து இன்று
கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஒன்றிணைந்த கோவை மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
டாக்டர் APJ. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் APJ அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக காளப்பட்டி நேரு நகரில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் செய்து மற்றும் அன்னதானம் வழங்கினேன்.
சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு குழு சார்பாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இடமாற்றம் செய்ய வேண்டி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். உடன் சின்னவேடம்பட்டி பகுதி கழகச் செயலாளர் மாரிச்சாமி , வட்டக் கழக செயலாளர் மாரப்பன் , சுரேஷ் , ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
கோவை புறநகர் வடக்கு மாவட்டக்கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.