செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமைப் பொதுக்குழுவில் மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது. மேலும் பொதுச்செயலாளராக வடிவேல் இராவணன் அவர்களும், பொருளாளராக திலகபாமா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உடன் பாமக சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்கள்.!
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், திருச்சியில் விழிப்புணர்வு பரப்பரை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
ரூ.75,000 ஆக உயர்த்தியிருப்பது போதாது: சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்.
@TVKVijayHQ@CMOTamilnadu
கடலூர் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் 4 ஹைட்ரோகார்பன்
கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டம்:சூழலை சீர்குலைக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் (Hindustan Oil Exploration Company - HOEC) முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் சுரங்க நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளை ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், அம்மாவட்டத்தின் சுற்றுச்சூழலை மேலும் சீரழிக்கும் நோக்குடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமாக ஏற்கனவே இருக்கும் எண்ணெய்க் கிணறுகளில் எண்ணெய் வளம் வேகமாக குறைந்து வரும் நிலையில், புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்த 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும் பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பகுதிகள் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (Tamil Nadu Coastal Zone Management Authority.) கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதன் அனுமதி கேட்டு ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது.
வங்கக்கடலில் இந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்; அப்பகுதியில் அதிக அளவில் உள்ள மாங்குரோவ் காடுகளும் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகள் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் முயல்வதை மன்னிக்கவே முடியாது.
தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும், வேளாண் நிலங்களிலும் ஏராளமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியும் கூட பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே நிலை தான் இனியும் தொடர வேண்டும். சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளரை தலைவராகக் கொண்டு தான் செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்திற்கு இந்த ஆணையமும், தமிழக அரசும் அனுமதி அளிக்கக் கூடாது. அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.
@CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்களை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
@TVKVijayHQ@draramadoss@Sowmiyanbumani
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
அஜீத்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl
பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது: விடுதலை செய்க!
திண்டிவனத்தில் அறவழியில் போராட்டம் நடத்திய விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ், தலைவர் பாவாடைராயன் உள்ளிட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் தாக்கியதில் 3 பெண்கள் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும். அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது. கைது செய்யப்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
@tnpoliceoffl
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி செயல்வீரன் தமிழரசன், கடந்த 16&ஆம் தேதி சமூக விரோத கும்பலால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த நிலையில், இன்று மாலை மறைந்து விட்டார் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
பாட்டாளித் தம்பி தமிழரசன் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவரான அவர், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதில் முன்னிலையில் இருந்தார். சமூகவிரோத சக்திகளை கண்டித்தது தான் அவரது உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. நெல்வாய் பகுதியில் திருமால்பூரைச் சேர்ந்த சட்டவிரோத கும்பல் செய்த அட்டூழியங்களைத் தட்டிக் கேட்டதற்காகத் தான் கஞ்சா வணிகம் செய்வதையும், சட்டவிரோத செயல்களைச் செய்வதையும் பிழைப்பாகக் கொண்ட கும்பல், அவரை கொடூரமான முறையில் பெட்ரோல் குண்டு வீசி, உயிருடன் எரித்து படுகொலை செய்திருக்கிறது.
பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த தமிழரசன் எப்படியும் பிழைத்து விடுவார் என்று தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், நம்மை அவர் ஏமாற்றி விட்டார். அவரது மறைவையும், பிரிவையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தமிழரசனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில், கொடியவர்களால் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டன் தம்பி தமிழரசன் மறைந்து விட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழரசனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளித் தம்பி தமிழரசன் இப்போது தான் பதின்வயதைக் கடந்து வந்திருந்தார். அவரது வாழ்வில் இனி தான் வசந்தங்கள் வீசியிருக்க வேண்டும். அரசியலிலும், சொந்த வாழ்விலும் உயரங்களை நோக்கி இனி தான் அவர் பயணித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு சற்றும் வாய்ப்பளிக்காமல், தமிழரசனை கொடூரமான முறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி, கட்டாயப்படுத்தி தீவைத்து படுகொலை செய்து விட்டனர். நெல்வாய் கிராமத்திற்குள் நுழைந்து கொடியவர்கள் சிலர் செய்த அட்டூழியங்களைத் தட்டிக் கேட்டதைத் தவிர வேறு எந்த பாவததையும் தமிழரசன் செய்யவில்லை. கஞ்சா போதையில் நெல்வாய் கிராமத்தில் திருமால்பூரைச் சேர்ந்த பிரேம், மணிகண்டன், வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் இரு சக்கர ஊர்தியில் வந்து அட்டகாசம் செய்ததை தமிழரசன், விஜயகணபதி, சங்கர் உள்ளிட்ட இளைஞர்கள் தட்டிக் கேட்டனர். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தமிழரசனையும், விஜயகணபதியையும் கொடியவர்கள் கூட்டம் பெட்ரோல் குண்டுகளை வீசி படுகொலை செய்ய முயன்றுள்ளது. அந்தக் கொடியத் தாக்குதலில் தமிழரசன் உயிரிழந்து விட்ட நிலையில், இன்னொரு தம்பி விஜயகணபதி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். இந்த சதித்திட்டத்திற்கு பெரும் கூட்டம் எல்லா வகையிலும் உதவி செய்துள்ளது.
நெல்வாய் கிராமத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் இத்தகைய கும்பலால் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. கஞ்சா வணிகர் செய்வதில் தொடங்கி எதிர்ப்பவர்களைக் கொலை செய்வது வரை எல்லாக் குற்றங்களையும் செய்யும் அந்தக் கும்பலுக்கு அரசும், காவல்துறையும் துணை நிற்பது தான் அவர்களின் துணிச்சலுக்கு காரணமாக உள்ளது. அத்தகைய கும்பல்களின் அட்டகாசத்துக்கு தமிழக அரசும், காவல்துறையும் முடிவு கட்ட வேண்டும். தமிழரசன் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழரசனின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்.
மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் விஜயகணபதிக்கு தரமான மருத்துவர் அளிப்பதுடன், அவருக்கு ரூ.10 லட்சம் நிதியும், அரசு வேலையும் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய பொதுவுடைமைக் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பெ.சண்முகம் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எளியக் குடும்பத்தில் பிறந்து போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்ட பெ.சண்முகம் அவர்கள் சமரசமின்றி இடதுசாரி கொள்கைகளை கடைபிடிக்கவும், இயக்கத்தை வளர்க்கவும் வாழ்த்துகள்!
@tncpim