பாசிச இருளகற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் @dmk_youthwing-ன் 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத் திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.
இந்த சுடர், சென்னை - காஞ்சிபுரம் - விழுப்புரம் - கள்ளக்குறிச்சி - சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்படவுள்ளது.
சேலம் மாநாட்டுத்திடலில் வரும் ஜனவரி 20-ஆம் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளேன்.
கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம் - பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம். @PKSekarbabu@nchitrarasu@Joel_Dmk #கழக_இளைஞரணி_மாநாடு
மிகச்சரியாய் 54 ஆண்டுகளுக்கு முன்னர் (27-07-1969) இனமானம் காக்கும் கழகத்தின் தலைவராக 'முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்' பொறுப்பேற்ற நாள் இன்று.
இந்தியத் திருநாடு காக்கும் தி.மு.கழகத்தையும்;
தாய்த்தமிழ்நாட்டையும் கட்டமைத்த தலைவரின் நூற்றாண்டை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட #முத்தமிழறிஞர்_100 -யில் பங்கெடுத்த அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி...நன்றி...
'தமிழ் வெல்லும்' 💪🖤❤️
வாழ்க #கழகத்தலைவர்
வெல்க #இளந்தலைவர்
@arivalayam | @mkstalin | @Udhaystalin
இயக்கத்தின் இதயமாம் இளைஞரணிக்கு இன்று 44 வயது. 44-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin-க்கும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கும் இளைஞரணியின் ஆற்றல்மிகு இளைஞர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் தோன்றிய காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணியாகும். அதே பங்களிப்பை வருங்காலங்களிலும் வ���ங்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.
உதயநிதி பொறுப்பேற்ற பின் நடத்திய #DravidianModel பாசறைக் கூட்டங்கள் நமது கொள்கையை ஊட்டும் வகுப்புகளாக அமைந்திருந்தன. இயக்கத்தை நோக்கி வரும் இளைஞர்களை ஈர்க்கும் கூட்டங்களாக மட்டுமல்ல, கொள்கை எதிரிகளுக்குப் பதிலளிக்கும் கூட்டங்களாகவும் அமைந்திருந்தன. இத்தகைய பாசறைக்கூட்டங்களை வருங்காலத்திலும் தொடரக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவைக் காக்க���ம் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன். கழக அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் பரப்புரை செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் தேர்தல் பணி என்பது திட்டமிட்டுச் செய்ய வேண்டியது ஆகும். அந்த தேர்தல் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இளைஞரணிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனை��ர்க்கும் கற்றுத்தர வேண்டும். இதற்கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்களுக்கும் வழங்குமாறு இளைஞரணிச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.
எந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புடனும் இளைஞரணியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் இனமானப் பேராசிரியர் அவர்களும் தொடக்கி வைத்தார்களோ அதே எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் நான் இருக்கிறேன். உங்களால் முடியும்! உங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துகள்!
இளைஞர்களை ஒன்றிணைத்து இயக்கமாக்கி, தமிழர் உரிமை காக்கும் பேராயுதமாக கழகத்தை உருவாக்கினார் பேரறிஞர் அண்ணா. அவர் காட்டிய வழியில் உடன்பிறப்புகளுக்குக் கொள்கை உணர்வூட்டி கழகத்தை வளர்த்தெடுத்தார் ��ுத்தமிழறிஞர் கலைஞர்.
அவர்களின் நீட்சியாக, இயக்கத்திற்கான எதிர்காலம் குறித்த பெருங்கனவோடு, லட்சக்கணக்கான இளைஞர்களை அரசியல்மயப்படுத்திடும் பாசறையாக, நம் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் முன்னெடுப்பில் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இதே நாளில்தான் @dmk_youthwing தொடங்கப்பட்டது.
இத்தகைய வரலாற்றுப் பெருமைகள் நிறைந்த இளைஞர் அணியின் செயலாளராக அதன் பணிகளை ஒருங்கிணைப்பதில் பெருமை கொள்கிறேன��.
கலைஞர் நூற்றாண்டில் உள்ளோம், நமக்கான கழகப் பணிகள் காத்திருக்கின்றன.
உண்மையான புதிய இந்தியாவை விடியச் செய்ய, கழகத் தலைவரின் கரங்களுக்கு 2024- தேர்தல் வெற்றியைக் கொண்டு சேர்த்திடும் வகையில் அயராது உழைத்திட இந்நாளில் உறுதியேற்போம்!
#DMKYouthwing
மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரி��்து, உடல்நலத்துடன் கூடிய கல்வியை உறுதி செய்ய, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் செயல்படுத்தி வரும் கனவு திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம்.
அங்கு வழங்கப்படும் உணவை மாணவச் செல்வங்களுடன் அமர்ந்து சாப்பிட்ட போது, பள்ளியிலேயே வழங்கப்படும் காலை உணவு சிறப்பாக இரு���்கிறது என மாணவர்கள் கூறியது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது.
பசி நீக்கி அறிவு புகட்டும் இத்திட்டம் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்யும்!
@Anbil_Mahesh
கோடிக்கணக்கான தமிழர்களின் வாழ்வை மேம்படுத்த, ஆயிரக்கணக்கான திட்டங்களைத் தந்த நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பணிகளை போற்றும் விதமாகவும், மக்களுக்கான மகத்தான மருத்துவ கட���டமைப்பாகவும் கிண்டியில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'!
மதுரையில் ஒற்றை செங்கலோடு நிற்கும் #AIIMS போல் இல்லாமல், திராவிட மாடல் ஆட்சியின் சாட்சியாக அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் மருத்துவமனையை உருவாக்கி இன்று திறந்து வைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி.
ஏழை - எளியோரின் மருத்துவத் தேவைகளுக்கு துணை நிற்கவுள்ள 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை' திறப்பு விழாவில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறோம். #கலைஞர்100 @evvelu @Subramanian_ma
#நங்கவள்ளி_ஒன்றியம்
தோரமங்கலம் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் நேற்று காற்றுடன் கூடிய கனமழை காரணமாக பல்வேறு வீடுகள் சேதம் அடைந்ததை #நங்கவள்ளி_ஒன்றிய_கழகச்_செயலாளர் இரா.அர்த்தனாரி ஈஸ்வரன் அவர்கள் நேரில் செ���்று ஆய்வு செய்தார்
உடன் கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்