திருமணமான ஆறு நாட்களில் அந்த பெண்ணுக்கு இது போன்ற ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் பெற்றோரை விட அதிகமாக எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது
இது போன்ற சம்பவங்களால் எங்களது உணவுக்கு/ வருமானத்திற்கு கேடு ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் நாங்கள் அதற்காக கண்ணீர் சிந்தவில்லை. எங்கள் பூமியில் இது போன்ற ஒரு துயரம் நேர்ந்து விட்டது என்பதற்காக நான் கண்ணீர் சிந்துகிறேன்
- கோடை விடுமுறை துவங்கி விட்டது. மிக அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று நம்பி பலரும் கடன் வாங்கி தொழில் துவங்கியுள்ளனர். இந்த சூழலில் ஜிகாதி தீவிரவாதிகளால் மதம் என்ன என்று கேட்டு மிகப்பெரிய கொலை சம்பவம் நடந்தேறியுள்ளது. எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன
காஷ்மீரி மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதுவே இப்போது கண்ணீராக வருகிறது.
அழுவது வயிற்றுக்காக என்றாலும் தீவிரவாதிகளில் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் நேரடியாக ஆர்ப்பாட்டம் செய்வது காஷ்மீரில் இது முதல் முறை.