Dear friends
My journey in #X formerly #Twitter
started in the year 2009
I thank everyone of you
for your support and encouragement for my tweets
Today, I’m writing with mixed emotions
as I bid farewell to a place
that has been more than just a community
Good bye Friends
@periyakulam Janaki iya, I am very sorry that you have decided to leave . You were an inspiration to many tweeps including me. I am not happy that you leave, but I respect your decision. I am sure you took the decision after enough thought. You are always welcome back if you decide to do so.
@periyakulam நான் உங்களைவிட கொஞ்சம் ஜுனியர் 2010. நானும் 99% டுவிட்டரிலிருந்து விலகிக்கொண்டேன் . சிலநேரங்களில் தொலைபேசி மூலம் பேசி அகமகிழ்ந்துள்ளேன் . நேரில் காணும் வாய்ப்புகள் பல வந்தும் சில காரணங்களால் ஈடேறவில்லை . பைக் , கார் ஓட்டக்கூடாது என்ற தடை வேறு .உங்கள் நலனுக்காகவேண்டிக்கொள்கிறேன்
@periyakulam உங்களின் பல மறக்கமுடியாத கீச்சுகள் . 2009 முதல் அடுத்து ஒரு பத்து வருடங்கள் ஒரு பொற்காலம் . யதார்த்தமான கேலி கிண்டல்கள் , ஆழமான நட்புகள் , டுவீட்டப் கூட்டங்கள் என்று எவ்வளவோ அனுபவித்து வந்துள்ளோம் . சந்து எவ்வளவோ உஷ்ணமாக இருந்தாலும் நீங்கள் எப்பொழுதும் கூல்தான் 🙏
Dear friends
My journey in #X formerly #Twitter
started in the year 2009
I thank everyone of you
for your support and encouragement for my tweets
Today, I’m writing with mixed emotions
as I bid farewell to a place
that has been more than just a community
Good bye Friends
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
முன்பு #Twitter இப்போது #X
என்ற இந்த தளத்தில் நான் சேர்ந்து
11 வருடங்கள் உருண்டோடி விட்டது
முகமறியாத ஏராளமான நண்பர்கள்
சாதி மத பேதம் பாராமல் அன்புடன் பழகியவர்கள்
சிந்தனைக்கு விருந்தளித்த
பல நண்பர்களின் சமூக அரசியல்
பற்றிய கருத்தாழமிக்க பதிவுகள்
சிறந்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள்
சினிமா விமர்சனங்கள்
மதவாத அரசியலை கடுமையாக
விமர்சனம் செய்யும் சிறந்த பதிவுகள்
தமிழ் மொழி இலக்கியம் பற்றிய பதிவுகள்
என பல வகைகளில்
என்னை ஆட்கொண்ட இந்த தளத்திலிருந்து
விடைபெறும் நேரம் வந்து விட்டதாக உணர்கிறேன்
என்னை அவரகளது குடும்பத்தில் ஒருவராக
இணைத்துக் கொண்ட ஏராளமான நண்பர்களுக்கு நன்றி
என்னுடைய பதிவுகளை நேசித்த
நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி
தோழனாகவும் நண்பனாகவும்
சகோதரனாகவும் தந்தையாகவும் தாத்தாவாகவும்
எண்ணி என்னிடம் அன்பு காட்டிய சகோதர சகோதரிகள்
அனைவருடமிருந்தும் விடை பெறுகிறேன்
தமிழ் மொழியில் கூடியவரை பிழையில்லாமல்
எழுத எனக்குப் பயிற்சிக் களமாக இருந்த
இந்த தளத்திற்கு நன்றி
எனக்கு ஆசானாக நான் கருதிய
பல மூத்த சகோதர சகோதரிகளுக்கு
என்னுடைய பணிவான வணக்கங்கள்
மறக்க இயலாத பல அனுபவங்களை
எனக்கு அளித்த இந்த X தளத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்
பிரிவு மிகுந்த வருத்தமளித்தாலும்
உங்கள் அனைவருடனும் பழகிப் பெற்ற
இனிமையான அனுபவங்களை மனதில் கொண்டு
விடை பெறுகிறேன் நண்பர்களே
என்றும் அன்புடன் உங்கள் @saattooran
நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம்
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்று போல்
இளமையுடன் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் நண்பனே
-
அது காலம் செய்த கோலமடா
கடவுள் செய்த குற்றமடா !
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
-
#தீபாவளி
அன்று மகிழ்ச்சியாக இருப்போம்
தாய் தந்தை மனைவி +
குடும்பத்துடன் அன்பு செலுத்தி மகிழ்வோம்
முக்கியமாக,
மாமனார்..மாமியார் ->> தந்தை தாய்க்குச் சமம்
அவர்களிடமும் அன்பு செலுத்தி மகிழ்வோம்
உறவுகளுடனும் நட்புகளுடனும் கொண்டாடுவோம்
விருந்தாளிகளிடம்
பேசிக் கொண்டே இணையத்தில்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆழ்ந்து விடாதீர்கள்
வீட்டுக்கு வந்த விருந்தினருடன்,
கனிவு + கவனம் +மரியாதையுடனும்
நேசத்துடனும் உரையாடுங்கள்
#தீபாவளி ஒரு சமுக விழா.
சாதி,மதம்,இனம் கடந்து
மனித நேயத்துடன் கொண்டாடுங்கள்
இளைஞர்கள் ஆட்டம் போடுவதில் தவறில்லை.
அளவிற்கு மீறாமல் .. பிறருக்கு இடையூறு இல்லாமல்
உங்கள் வீட்டில்
வேலை செய்யும் பணியாளர்களுக்கு
உங்களது சக்திக்கேற்றவாறு
முடிந்த அளவு பண உதவி செய்யுங்கள்.
ஆங்கோர் எழைக்குத்
துணிமணிகளும்,உணவும், அன்புடன் வழங்குங்கள்
முதியோர்களுக்கு
இடையூறு இல்லாமல் கொண்டாடுங்கள்
தெருவில் திரியும்
வாயில்லா உயிர்களுக்கும்,
வான் பறவைகளுக்கும்,
தொந்தரவு தராமல் #தீபாவளி கொண்டாடுங்கள்.
நண்பர்களே
உங்களது சுற்றுப்புறத்தை மாசு படுத்தாதீர்கள்.
நண்பர்கள் அனைவருக்கும்
என்னுடைய இனிய #தீபாவளி_வாழ்த்துக்கள்
@periyakulam Good morning Janaki iya. Only this moment is certain. Before I finish this sentence, that moment is lost. Nobody can be certain of anything.
இழிவுபடுத்த வேண்டாம்... விட்டுவிடுங்கள்!!""
♦ஒரு தம்பதி 50வயதில் குழந்தை
பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦ஒரு பெண் பலகாலம் சென்று
திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦திருமணம் முடிந்து 5ஆண்டுகள்
ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்
கொள்ளவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறானா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும்,தன் கணவனோடு
கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவள் கல்விக்காக வெகுதொலைவில் சென்று தனியே
தங்கியிருந்து படிக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
♦அவரவர் அவர் விரும்பியவாறு
வாழ்ந்து கொள்ளட்டும்..அவர்களுக்கு
வெளியில் சொல்லமுடியாத
உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.
அவர்களைக்கண்டால்,கொஞ்சம்
புன்னகையுடன் உரையாடுங்கள்.
முடியாவிட்டால்,மௌனமாக
கடந்துவிடுங்கள்..
அது போதும்..
உங்களது வாழ்க்கை உங்களுக்கானது..
அவர்களது வாழ்க்கை
அவர்களுக்கானது..
புறம் பேசி அலைவதைவிட, அமைதியான மனநிலை அமையப் பெற்றால்
நாம் தான் உயர்ந்தவர்கள்..!
நற்காலை வணக்கம்🙏🏻