தேனிசைத் தென்றல் தேவா நம்மை விட்டுப் பிரிந்த பின்னர் அடிக்கடி நினைவில் தோன்றும் பாட்டு,
உலகத்தின் பூக்களே உயி���ிலே பூத்ததே
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்...
https://t.co/yDrbcnSh8u
வாய் அனிச்சையாகப் பாடவும், மனம் இசை மீட்டிக் கொள்ளும்.
அது போலவே
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்....
https://t.co/HcC3YHNV6o
பரந்து விரிந்த நெடுஞ்சாலை வெளிதனிலே நீண்ட நெடும் பயணத்தில் போகுமாற்போலொரு கடுகதி உணர்வை எழுப்பும்.
தென்றல் எந்தன் நடையைக் கேட்டது
தத்தோம் தகதோம்
தாழம்பூவின் வாசம் கேட்டேன்
தித்தோம் திகிதோம்
https://t.co/n2Xlnvj6a2
“இனியவளே” படத்தில் இப்படியொரு அழகிய அறிமுகமாகத் தேனிசைத் தென்றல் தேவா இசையில் கிடைத்தவர் கவிஞர் தாமரை.
தமிழ்த் திரையிசையில��� பெண் பாடலாசிரியர்கள் அவ்வப்போது முளைத்தாலும், தாமரை நீண்ட கிளை விரித்துப் பரவியவர்.
அதனால் தான் தேவாவில் தொடங்கித் தமிழ்த் திரையுலகின் அத்தனை முன்னணி இசையமைப்பாளர்களிடமும் அவரின் கவி வரிகள் இன்னிசையில் தோய்ந்தது.
தர்புகா சிவா போன்ற இளம் இசையமைப்பாளருக்கெல்லாம் “மறு வார்த்தை பேசா��ே” பாடலெல்லாம் ஆகப் பெரிய கவனிப்பைக் கொடுக்க அந்தப் பாடல் தாங்கிய வரிகளே முதற்காரணம் என்பதை மறு பேச்சில்லாமல் எல்லோருமே ஒப்புக் கொள்வர்.
புதுசு புதுசாக வரும் பாடலாசியர்களின் தலை “எழுத்து” பாடல்கள் எஸ்.ஏ.ராஜ்குமாரிடமும் வந்து போகும் ஆத்ம பந்தம் தாமரைக்கும் வாய்த்தது “மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா” (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்) வழியாக.
ஹாரிஸ் ஜெயராஜ் – தாம��ை – கெளதம் வாசுதேவமேனன்
என்ற அழுத்தமானதொரு கூட்டணி “மின்னலே” வழியாகப் பிறந்தால் தமிழ் திரையிசையில் தமிழ் “பிழையற” நிற்க வழிகோலியது ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் அடுத்த தலைமுறையும் தாமரையின் வரிகளை உள்வாங்கி மனப்பாடம் செய்தது இன்னொரு புறத்துப் பெருமை மிகு தருணங்கள்.
சொல்லப் போனால் ஈராயிரத்தில் இன்னும் தொடரும் தாமரையின் திரையெழுத்து இன்றைய காலத்தவரையும் ஈர்க்கத்தகு வ���ீகரம் என்பதே முன் சொன்ன கூட்டணி தாண்டிய தனித்துவம்.
தமிழைக் கஷ்டப்படுத்தாமல் மெட்டில் உட்கார வைத்தவர் தாமரை.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஒரு தொகை மெல்லிசை மெட்டுகளோடு தாமரையின் பாடல்களைச் சிலாகித்து மகிழ முடியும். அவையெல்லாம் அந்தக் கவிவரிகளுக்குச் சாமரம் வீசும் இசை என்றாலும், ஒரு சவாலான மெட்டில் சுகமான சவாரி செய்ய வைத்த
“நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே”
https://t.co/AqbAw2lB0Q
எனக்கு மிகவும் பிடித்தமானதொன���று.
“உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தைக் காட்டச் சொல்லு”
https://t.co/UprpaMXq7Z
கேட்கும் தோறும் “கண்”மாய் நிறைந்து வழியும். இலக்கியா பக்கத்தில் இல்லாத நேரத்தில் இந்தப் பாடலையே கேட்காமல் தவிர்த்த இன்ப அவஸ்தை என் “சுய”புராணத்தில் இருக்கும்,
தனக்குப் பிடித்ததைக் கொடுப்பவர்களைப் தன் “அகத்தில்” வைக்கும் குழந்தை போலே, கவிஞர் தாமரை நம் பெருமைக்குரிய சொத்து.
உலகமே காலடியில்
கரைந்ததே ஓர் ��ொடியில்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன���புச் சகோதரி & கவிஞர் தாமரைக்கு ❤️
கானா பிரபா
10.11.2026
மலேசிய எழுத்தாளர் சண்முகம் எழுதிய “சயாம் மரண ரயி��்” என்ற புகழ்பெற்ற நாவல் வாங்கி வைத்திருக்கிறேன். அந்த உண்மைச் சம்பவத்தை அடியொற்றி இந்தப் படம் வருகிறது போல.
சயாம் மரணரயில்பாதை: (1942-1943) 'சயாம் மரண ரயில்' எனப் பொதுவாக அழைக்கப்படும் தாய்லாந்து - பர்மா இரயில் பாதை. இது இரண்டாம் உலகப்போரில் போது (செப்டம்பர் 16, 1942 - அக்டோபர் 17, 1943) கட்டப்பட்ட 415 கி.மீ(258 மைல்கள்) நீளமுள்ள ரயில்பாதை. தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் நோக்கத்தில் ஜப்பானியர��களால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் ஏறக்குறைய 1,80,000 லிருந்து 2,50,000 ஆசியத் தொழிலாளர்களும், 60,000-க்கும் மேற்பட்ட போர்க்கைதிகளும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். மிகக்கடுமையான வேலைச்சூழல், போதிய உணவு இல்லாமை, நோய், வன மிருகங்களின் தாக்குதல் மற்றும் ஜப்பானியர்கள் விதித்த மிகக்கடுமையான தண்டனை காரணமாக சுமார் 90,000 ஆசியத் தொழிலாளர்களும் 12,000-க்கும் மேற்பட்ட போர்க்கைதிகளும் இறந்து போயினர். (தகவல் விக்கி தளம்)
The Bridge on the River Kwai என்ற புகழ்பூத்த நாவல், ஆங்கிலப் படமாகவும் உருவானது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ….
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆராரிரோ….
இசையமைப்பாளர் ஒருவர் இன்னொரு இசையமைப்பாளரிடம் பாடுவது ஒன்றும் புதுமை அல்ல.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞ��னி இளையராஜா போன்ற ஜாம்பவான்களோடு நீண்டு செல்லும்.
அந்த இரு சாதனையாளர்களோடு இணைவது பெருமையாகவும் உணர்வார்கள்.
ஆனால், கங்கை அமரனைப் போலவே ஒரு தோழமை உணர்வோடு நெருங்கி அழைத்துப் பாடக் கேட்டிருப்பார்கள் என்றே தேனிசைத் தென்றல் தேவாவை நினைப்பேன்.
“உனக்கென்ன குறைச்சல்
நீயொரு ராஜா…”
என்று வெள்ளி விழா படத்தில் வி.குமார் இசையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அது போலவே அணுகு���ேன் “மாமன்னன்” படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “மாமன்னன்” படத்தில் தேவா பாடிய “நெஞ்சமே நெஞ்சமே” பாடலைக் கேட்குந்தோறும்.
ஒரே காலகட்டப் பகுதியில் நடிகர் மணிவண்ணனுக்காக “ஐயா வூடு தெறந்து ��ான் கிடக்கு” என்று இசைஞானியார் பாடியது போன்ற ஒரு பக்கம், இன்னோர் பக்கம் தேவாவும் அச்சொட்டாகப் பிரதிக் குரலாக “கோகுலத்துக் கண்ணா”, “மனிஷா போலிருப்பாளா” என்று தன் இசையில் பாடியது மட்டுமல்ல, சிற்பி அவர்களின் இசையில் கூட “உதவிக்கு வரலாமா” படத்தில் பாடியிருக்கிறார் அந்தப் பாடல்
நீதான் நீதான்
https://t.co/bxIpo5gzed
காதல் மன்னன் படத்தில் “மெட்டுத் தேடித் தவிக்குது” மெல்லிசை மன்னர், “திலோத்தமா” பரத்வாஜ், இவர்களோடு “மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா”
https://t.co/jHuKlzcaeE
என்று கவலைப்படாதே சகோதரா என்று அஜித் படத்தில் முன்பே அதே சூழலில் கொடுத்த தேவாவையும் களமிறக்கி இருக்கிறார்.
இதே காலகட்டத்தில் இயங்கிய ஆதித்யனும் தேவாவுக்கானது என்று சப்பா சப்பா
https://t.co/pfQyEQZsTA
பாடலை “கலர் கனவுகள்” படத்துக்காகப் பாட வைத்திருக்கிறார்.
இங்கே ஒரு சிறப்பு இருக்கிறது, ஒரு காலத்தில் தேவா பக்திப் பாடல்களுக்கு இசையமைத்த சூழலில் அவருக்காகப் பாடிய கே.பி.சுந்தராம்பாளை நினைவுபடுத்தும் கோ��ை கமலாவும் இணைந்து பாடியுள்ளார்.
தேவா இசையில் ஹரிஹரன் குரல் தனித்துவமானது. அது குறித்து முழு நீளக் கட்டுரையே வரைந்துள்ளேன். இங்கே ஹரிஹரன், லெஸ்லி, லூயிஸ் கூட்டணியில் மோதி விளையாடு (மோதி விளையாடு)
https://t.co/5MsDWsSlyT
என்று கூட்டணியில் ஒருவராகப் பாடினார்.
தேவாவின் குரலை வேறு பரிமாணத்தில் கொண்டு போன முக்கியமான பாடல் வரிசை உண்டு.
அதில் வாழ் திரைப்படத்துக்காக பிரதீப்குமார் இசையில் இவர் பாடிய
Feel Song (வாழ் ) – பிரதீப் குமார்
https://t.co/5POo5F1iJZ
பாடலைக் கேட்டுப் பாருங்கள். புதுமையாக இருக்கும்.
தேவாவை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜனரஞ்சகமாக அடையாளப்படுத்தியவர் ஜி.வி.பிரகாஷ்குமார். தெறி படத்துக்காக
ஜித்து ஜில்லாடி
https://t.co/HxlXjlQXo3
தெறிக்க விட்டது. பின்னர் கேப்டன் மில்லரிலும் பாட அழைத்தார்.
இளையராஜா தன் புதல்வர்கள் இசையில் பாடியது போலவே தேவாவும் தன் மகன் ஶ்ரீகாந்த் தேவா இசையில�� “வள்ளியம்மா வள்ளியம்மா”
https://t.co/5w0N7m6reU
பாடலை “தீ” படத்துக்காகப் பாடியிருக்கிறார்.
இளைய தலைமுறை ��சையமைப்பாளர்களில் தேவா மீது நேசமும் பாசமும் கொண்டவர் அநிருத். அவரும் மான் கராத்தே படத்தில்
Open The Tasmac
https://t.co/zAsFM6U6dM
பாடலுக்காக இவரை அழைத்தார்.
கர்ணன் படத்துக்காக சந்தோஷ் நாரயணன் இசையில்
மஞ்சனத்தி புராணம்
https://t.co/cPfhWlGZBx
இன்னொரு முக்கியமான பாடல். இதில் நாட்டுப்புறத் தெம்மாங்குக் குரலாய் ஒலித்திருப்பார்.
தேவாவுக்கு இன்னொரு அழகான பக்திப் பாட்டு “சாமி குலசாமி” (மூக்குத்தி அம்மன்) – கிர��ஷ் கோபாலகிருஷ்ணன்
https://t.co/tqyszK8nAg
ரஹ்மானுக்கு மெல்லிசை மன்னர் குரலுக்குப் பிரதியீடாக தேவாவை நினைத்திருப்பார் போல, “லால் சலாம்” படத்தில் “அன்பாளனே” என்று மீண்டும் அழைத்தார்.
மேலும் தமன், கோபி சுந்தர், ஹிப் ஹாப் தமிழா, ஷான் ரால்டன், ஜிப்ரான் என்று நீண்டு செல்கிறது புதுப் புது இசையமைப்பாளர் இசையில் தேவாவின் குரலில் ஒலித்த பாடல்கள்.
இவ்விதம் நீண்டு செல்லும் பாடகர் தேவா இன்னொருவருக்காகப் பாடிய பாடல்களில் சமீபத்தில் வெளிவந்த ஈழத்துத் திரைப்படம் “போராட்டம்” படத்தில் “சோறு தான் முக்கியம்”
https://t.co/2q1m2YzEJy
என்ற பாடலைத் துள்ளிசையாக ஈழத்து இசை இளவல் மதீசன் இசை வழங்கப் பாடியிருக்கிறார். இன்றைய கணக்கில் தேவா பாடி திரைக்கு வெளிவந்த இறுதிப் பாடல் இதுதான்.
ஒரு “கானா” பாடகரை எல்லாவித பரிமாணங்களிலும் அலங்கரித்துப் பாட வைத்திருக்கிறார்கள்.
அதற்குக் காரணம் அவரது நெகிழ்வுப் போக்கு அவர்தம் குரலிலும் மிளிர்ந்ததே.
❤️❤️❤️
இந்தப் பதிவை இன்று காலை ரயில் பயணத்தில் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இலக்கியாவைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போகும் காரில் ஏறும் போது “நெஞ்சமே நெஞ்சமே” பாடலை முணுமுணுத்தேன்.
“அப்பா! எனக்கு இந்தப் பாட்டுப் பிடிக்கும் காரில் போகும் போது போடுங்கோ” என்றார் இலக்கியா
பிறகென்ன வழி நெடுக
நெஞ்சமே…நெஞ்சமே… தான்
❤️❤️❤️
அன்பு தான் வெல்லுமே
எந்த நாளும்
ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆரீரோ…❤️
கா���ா பிரபா
20.10.2026