கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாகர்கோவில் சிறையில் போலீசாரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட விசாரணைக் கைதி சபரி வர்மனின் இல்லத்திற்கு இன்று பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நேரில் சென்று, அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.
தந்தையின் மரணத்தை புரிந்து கொள்ளக் கூட முடியாத வயதில் இருக்கும், சபரி வர்மனின் சிறுவயது மகனையும், வாழ வேண்டிய வயதில் மகனை இழந்து தவிக்கும் அவரது வயதான பெற்றோர்களையும், கனவுகள் கலைந்து இன்று தனிமரமாக நிற்கும் அவரது மனைவியையும் பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போனது. அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும் ஓர் அழகான குடும்பத்தை எப்படியெல்லாம் சிதைத்து விடும் என்பதற்கு, அவலச் சான்றாக நிற்கும் இக்குடும்பத்தை, அரசு எப்பொழுதும் கைவிட்டு விடக் கூடாது. இனியொரு முறை இதுபோன்ற லாக்-அப் மரணம் நிகழவும் அனுமதிக்கக் கூடாது!
குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பும், கடமையும் நீதிமன்றங்களுக்கே உண்டு என்பதை தமிழகக் காவல்துறைக்கு முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் அழுத்தமாக உணர்த்த வேண்டும்! தமிழகக் காவல்நிலையங்களில் தொடரும் தனிமனித உரிமை மீறல்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் இந்த தருணத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்கள், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் திரு. தமிழ்செல்வன் அவர்கள் அனைவரும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
தேச நலனையே தன் உயரிய இலட்சியமாகக் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக தன்னலமின்றி அர்ப்பணிப்புடன் உழைத்த பாஜக முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள், இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று.
அர்ப்பணிப்பு மிக்க தலைவராகவும், ஆற்றல்மிக்க பேச்சாளராகவும், அயராத உழைப்பாளராகவும் விளங்கிய அவரின் சேவையும், தியாகமும் என்றும் நினைவுகூரப்படும்.
அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் வீரத் தியாகத்திற்கு எங்கள் ஆழ்ந்த மரியாதையை செலுத்தி, அவரை நினைவு கூர்ந்து புகழ்வணக்கம் செலுத்துவோம்.
திருவள்ளுவரின் உடை விஷயத்தில் ஆர்வம் காட்டிய நீங்கள், தமிழக மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் திரு. @arunraajkg அவர்களே?
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகியான 19 வயது ஆகாஷ் என்பவருக்கு பாம்பு கடித்ததாகவும், சிகிச்சைக்காக அவரை வி.கே.புதூர் அரசு மருத்துவமனை, ஆலங்குளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற போது கதவைக் கூட திறக்காமல் ஊழியர்கள் காட்டிய அலட்சியத்தால் ஆகாஷ் அநியாயமாக உயிரிழந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதறச் செய்கின்றன.
தமிழகத்தில் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, அரசு மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பொருட்படுத்தாமல், நீங்களும் உங்கள் முதல்வரும் திருவள்ளுவரின் மதத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு.
நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், அரசு அமைச்சர்கள் எல்லாம் இனி அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம் என வீராப்பாக வசனம் பேசினீர்களே, இதுவரை எத்தனை அமைச்சர்கள் எந்த அரசு மருத்துவமனையில் எம்மாதிரியான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார்கள் என்ற அறிக்கையை வெளியிட முடியுமா? அப்படி ஏதாவது ஒரு அமைச்சர் அரசு மருத்துவமனையின் பக்கம் தலை காட்டியிருந்தால் கூட, இந்நேரம் அவற்றின் தரம் ஓரளவு உயர்ந்திருக்கும்.
இனியாவது, எளிய மக்களின் உயிர்களை அலட்சியப்படுத்தாதீர்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு தரமான சிகிச்சைகளுக்கு வழிவகுங்கள்!
தமிழக பாஜக சார்பில் மாநிலத்திலிருந்து மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேர்கள் ஒவ்வொரு அமைப்பு மாவட்டத்திற்கும் சென்று இரண்டு நாட்களில் சுமார் 13 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுற்றுப்பயணம் சென்று கட்சி பணி செய்ய மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்களால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது..
அதனடிப்படையில், எனக்கு தேனி மாவட்டம் ஒதுக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.P.M.ராஜேந்திரன் அவர்கள் கடலூர் திரு.M.A.மனோகர் ராஜன் அவர்கள் ஆகியோருடன், இன்று காலை இச்சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக, தேனி மாவட்டம் உத்தமபாளையம் தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தோம்..
உடன் மாவட்டத்தலைவர் திரு.@RajapandiyanBJP, மாவட்ட பொதுச்செயலாளர் திரு.வினோத் குமார், மண்டல் தலைவர் திரு.நாகவேல் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாநில செயலாளர் திரு.@vasbalaji மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்..
திருக்காளாத்தீஸ்வரர் அருள் செய்யட்டும்,
உலகம் நலம் பெறட்டும்.
#வெல்க_பாஜக
@ThanthiTV செம்பரம்பாக்கம் ஏரிய எனக்கு தெரியாம திறந்து விட்டாங்க என்று பொங்கிய பழைய பெரும்பத்தூர் எம்எல்ஏ க்கு இது தெரியுமா? அல்லது செல்வபெருந்தொகை அவருக்கு கிடைத்து இருக்குமா?
முதலாம் ராஜராஜ சோழரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய சின்னமாக கருதப்படும் "ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்களை" நெதர்லாந்து அரசிடம் இருந்து மீட்டு, மீண்டும் நமது தாயகத்திற்கு கொண்டு சேர்த்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சோழர்களின் வம்ச அடையாளத்தையும், நமது தென்னிந்திய வணிகத் தொடர்புகளையும், சோழ மன்னர்கள் பிற மதத்தினருடன் நட்பு பாராட்டியதையும் குறிக்கும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "ஆனைமங்கல செப்புப்பட்டயங்கள்", மீண்டும் நமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியான தருணம் மட்டுமன்றி, உணர்வுப்பூர்வமான ஓர் அற்புத நிகழ்வு.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் (MHAA) தலைவராக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு. @RCPK_Official அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சிறந்த தலைமையும் வழிகாட்டுதலும் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மேலும் பல சாதனைகளைப் படைத்து, புதிய உயரங்களை எட்டும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
The prayers offered by Shri @AmitShah ji at the powerful abode of Lord Shiva at Mylapore will be answered! Al fingers point thirds a massive @BJP4India victory at West Bengal and NDA at Tamilnadu! Waiting 🔥🔥
இன்றைய தினம், நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ஆசீர்வாதத்துடன், சாத்தூர் தொகுதியில் @BJP4TamilNadu சார்பில் வெற்றி வேட்பாளராக களமிறங்கும் எனக்கு, சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு ஆந்திர பிரதேச முதலமைச்சர் திரு. @ncbn அவர்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெரும் உற்சாகத்தை அளித்தது.
இந்த இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை பேரணியில் மக்கள் அளித்த உற்சாகமான வரவேற்பு, அன்பான அணுகுமுறை, மேலும் நம் தாமரை சின்னத்திற்கான வலுவான ஆதரவு இவை அனைத்தும் வெற்றிக்கான தெளிவான அறிகுறிகளாக வெளிப்பட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தோழமைக்கட்சிகளும் ஒன்றுபட்டு, தமிழக மக்களின் பேராதரவுடன் இந்த விடியா திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, நல்லாட்சியை நிறுவுவோம் என்ற உறுதியுடன் நாம் முன்னேறி வருகிறோம்.
(1/2)
Honourable Prime Minister Thiru. @narendramodi Avl has always placed India’s sovereignty and national security above all else, and through decisive actions such as #OperationSindoor and other bold measures, has ensured the safety and security of our nation.
The remarks made by Congress President Mallikarjun Kharge about the Honourable Prime Minister of India, Thiru. Narendra Modi Avl, are strongly condemnable.
The Honourable Prime Minister stands today as a defining identity of India on the global stage. Using such language against him reflects the mindset of the Congress party.
Does Thiru. @mkstalin agree with the remarks made by his alliance partner,
Mr. Kharge? Do these statements reflect
M. K. Stalin’s own views as well?
As someone who has taken an oath under the Constitution, Thiru. Stalin has a duty to answer these questions before the people of this nation.
@kharge
இன்றைய தினம் மாலை சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் வாக்கு சேகரிப்பு பயணம் எனக்கு அளவற்ற உற்சாகத்தையும் உறுதியான நம்பிக்கையையும் அளித்தது.
தூங்காரெட்டியப்பட்டி, கிருஷ்ணாபுரம், கீடிச் செல்லையாபுரம், கோவில் செல்லையாபுரம், பழைய ஏழாயிரம் பண்ணை, சிவசங்குபட்டி, ஈரெட்டியபட்டி, இ.ராமநாதபுரம், ஊத்துப்பட்டி, சங்கரபாண்டியாபுரம், சத்திரம், சிப்பிபாறை, ஆவரம்பட்டி உள்ளிட்ட ஒவ்வொரு கிராமத்திலும் மக்களிடம் இருந்து கிடைத்த பேராதரவு எங்களை ஆழ்ந்த மகிழ்ச்சியிலும் பொறுப்புணர்விலும் ஆழ்த்தியது.
ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் மனதில் பதிந்திருக்கும் கோரிக்கைகள், அன்றாட சிக்கல்கள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகளை நேரில் சந்தித்து கவனமாக கேட்டறிந்து, அவற்றை முறையாக பதிவு செய்தோம். மக்கள் குரல் எங்களுக்குப் பிரதானம் என்பதையும், அவர்கள் எதிர்பார்ப்புகள் எங்கள் செயல் திட்டத்தின் மையமாக இருக்கும் என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டோம்.
நமது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், இக்கிராம மக்களின் அனைத்து குறைகளும் முன்னுரிமையுடன் எடுத்துக்கொள்ளப்பட்டு, விரைவாகவும் திறம்படவும் தீர்வு காணப்படும் என்பதை உறுதி அளிக்கிறேன்.
(1/3)