நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் சீமான் இன்று 59-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!
@Seeman4TN
பாரதிய ஜனதாகட்சியின் தேசியத் துணைத் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளருமான @PandaJay வைஜயந்த் பாண்டா எம்.பி. அவர்கள் சென்னையில் இன்று என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, திரு @draramadoss அவர்களுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் தங்களது மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
எனது பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி திரு. பழனிச்சாமி @EPSTamilNadu அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த த.மா.கா. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு ஜி.கே.வாசன் @GK__Vasan அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல உயிர்களைக் காக்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் என்கின்ற சிறப்புமிக்க திட்டத்தை இந்திய நாடு முழுவதும் அறிமுகப்படுத்திய முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பாமக கட்சியின் தலைவர் மதிப்பிற்க்குரிய மருத்துவர் @draramadoss அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன், பொது வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
சென்னை - வண்டலூரில் நடைபெற்ற, செங்கல்பட்டு மத்திய மாவட்டம், மேலக்கோட்டையூர் கோ.இராஜேந்திரன் - இரா.சாந்தி தம்பதியரின் அன்பு மகனும், காட்டாங்குளத்தூர் ஒன்றிய பாட்டாளி சமூக ஊடகப் பேரவை செயலாளருமான இரா.சிவா - ஜ.கோட்டீஸ்வரி இணையரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப் பட்டதில் மகிழ்ச்சி: தற்கொலைகளும், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கும் முடிவு கட்டப்படும் !
பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. அதனால், தமிழகத்தில் இரு முறை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டும் அதனால் பயன் இல்லை. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை சூதாட்டம் அல்ல, அவை திறன் விளையாட்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த சூதாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திமுக அரசு இன்னும் விசாரணைக்கு கொண்டு வராததால், ஆன்லைன் சூதாட்டங்களையும் தடுக்க முடியவில்லை; அதனால் நிகழும் தற்கொலைகளையும் தடுக்க முடியவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் 96 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றையும் சூதாட்டம் என்று அறிவித்து அவற்றை தடை செய்வதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதுடன், உச்சநீதிமன்றத்திலும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும், பலர் தற்கொலை செய்து கொள்வதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும்.
#banonlinegambling