26 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (4.07.2000) அன்று, நவீன தமிழகத்தின் தந்தை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள Tidel Park எனும் மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் திறந்துவைத்த நாள் இன்று!
“எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று என் MLA பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்”
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு . அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.
கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் IREL நிறுவனத்தின் அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டிருக்கும் த.வெ.க. அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
-சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar@drtkprabhu_TVK@TVKHQITWingOffl@Seeman4TN@NaamTamilarOrg
#IREL #Mining #Kanyakumari #seeman #tvkgovt #Poovulaginnanbargal
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் 15 ஆண்டுகள் முழங்கியவர் திமுகவின் திரு. ஏ.கே.எஸ்.விஜயன்.
ஆனால், த.வெ.க முன்னிறுத்துவதோ பெங்களூருவைச் சேர்ந்த, விஜய்யின் ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணாவை.
சொந்தப் படத் தயாரிப்பாளருக்கு அரசியல் அங்கீகாரம் கொடுப்பதுதான் மாற்று அரசியலா? சினிமா விசுவாசத்தைக் காட்ட தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பயன்படுத்துவதா.?
#WATCH | மருத்துவ பரிசோதனைக்கு தயாரா?
“ஒரு வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மாத்திரை கொடுப்பது வழக்கமல்ல. அப்படி இருக்கையில் அந்த மாத்திரை யார் கொடுத்தது? குழந்தை அருகில் இல்லாதது ஏன்? அமைச்சர் சரத்குமார் அளிக்கும் விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தான் கூறுவது உண்மை என்றால், மருத்துவ பரிசோதனை மூலம் அதை நிரூபிக்க வேண்டும். மேலும், செய்தியாளர்கள் முன்னிலையில் மொபைல் மூலம் மாத்திரையை எவ்வாறு பொடியாக்க முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.”
– முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்.
#GeethaJeevan | #DMK | #TVKFailed | #Sarathkumar | #KalaignarSeithigal
இன்னைக்கு தமிழ்நாட்டுடைய சட்டம் ஒழுங்கு எந்த அளவுல இருக்குன்னு உங்களுக்குத் தெரியும். ஒரு அதலபாதாளத்துல படுகுழியில இன்னைக்கு இந்த ஆட்சியாளர்கள் தள்ளி இருக்காங்க.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
நான் 1967 ல் பிறந்தவன். ஏறக்குறைய 60 வயதை நெருங்குகிறேன். நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரத்தில் அன்றைய காலத்தில் சுற்றிச்சுற்றி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டக் காலம்.
இதுவரை எவ்விதப் போதைப் பழக்கத்திற்கும் நான் ஆளாகியதில்லை. அதை ஒருமுறை கூட தொட்டுப் பார்த்ததில்லை. அதற்கு முக்கிய காரணம் 17 வயதிலேயே மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் கற்கத் தொடங்கியது தான். ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க நம்மால் இயன்ற பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற மாற்றம் குறித்த விழிப்புணர்வு உருவாகியது தான்.
நடிகரின் 69 திரைப்படங்களும் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவான காட்சிகள், போதைக் காட்சிகளில் தோன்றி, குடிகாரன் என்று இழிவாகப் பார்த்த சமூகத்தையே வீக்கெண்ட் பார்ட்டி என்று நார்மலைஸ் செய்ததில் முக்கியப் பங்குண்டு.
நடிகனின் நிஜ வாழ்விலும் கூட எப்போதும் போதையில் இருக்கிறார் என்று விமானப் பயணம் முதல் கார் ஓட்டும் காட்சிகள் வரை செய்திகள் வந்துள்ளது. போதை பயன்படுத்தாதவர்கள் போதை ஒழிப்பு பேசுவதைவிட, போதையைப் பயன்படுத்துபவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாட்டுக்கும், வீட்டுக்கும், தியாகத்தலைவி திரிஷாவுக்கும் நல்லது. பாராட்டுக்குரியது.
நடிகரின் அரசியல் பேச்சு முழுவதும் போதை, போதை என்றே இருக்கிறது. போதையில் தமிழ்நாடு தள்ளாடுகிறது என்ற தவறான தோற்றத்தை உருவாக்குகிறார். புள்ளி விபரப்படி அது முழுமையான பொய். ஊடகவிலாளர் அரவிந்தாக்ஷன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வுத்துறை அமைச்சகம் "Magnitude of Substance Use in India" என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிடுகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம்,
ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம்,
மயக்க மருந்துகள் 0.3 சதவீதம்,
உள்ளிழுக்கும் மருந்துகள் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடும் புழக்கமும் இல்லை என்று கூறவில்லை, இருக்கிறது. ஆனால்,போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலமாகவே தமிழ்நாடு எப்போதும் இருக்கிறது.
குறிப்பாக தொழில்முறையாக கஞ்சா பயிரிடுவது, காவல்துறையின் நடவடிக்கையால் தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.
மேலே கூறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும்
National Drug Dependence Treatment Centre (NDDTC), All India Institute of Medical Sciences (AIIMS) இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள்
ஆனால்,,
தமிழ்நாட்டில் தாறுமாறாக போதைப்பொருள் பரவியுள்ளது என நடிகன் சட்டமன்றத்தில் கூறியது எந்த தரவுகளின் அடிப்படையில் ?
எந்த ஆதாரங்களும்/தரவுகளும் இல்லாமல் மாநிலத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்.
இந்த குற்றசாட்டை எதிர்க்கட்சிகள் வைத்தாலும்,தமிழ்நாடு அரசு மறுக்க வேண்டும்.ஆனால், நடிகன் இந்த விஷயங்களைப் பேசும் போது அமைச்சர்களும்,சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரும் ரசிக்கின்றனர். உண்மையில் மிகவும் வருத்தமாக உள்ளது
சில கேள்விகள் ?
1.எத்தனை பேரிடம் ஆய்வுகள் மேற்கொண்டு தாறுமாறாக போதைப்பொருள் நடமாட்டம் பரவிக்கிடப்பதை முதலமைச்சர் அலுவலகம் கண்டுபிடித்தது ?
2)ஆய்வை நடத்தி ஆதாரங்களை முதலமைச்சர் அலுவலகத்திற்கு வழங்கியது காவல்துறையா ? சுகாதாரத்துறையா ?
3)வயது வாரியாக ஆய்வு மேற்கொண்டு,தாறுமாறாக போதைப்பொருள் பரவியிருப்பது கண்டறியப்பட்டதா ?
4)எந்தெந்த மாவட்டத்தில் போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?
5)எத்தனை மாவட்டங்களில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ளது ?
6)என்ன வகையான போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?
7)மதுபானம் தவிர்த்து தமிழ்நாட்டில் அதிகமாக பரவியுள்ள போதைப்பொருள் எது ?
8.கஞ்சாவா,மாத்திரைகளா,சிந்தெட்டிக் வகைகளா,ஓபியம் மூலம் தயாரிக்கப்படும் போதைப்பொருளா? மூக்கு வழியாக உள்ளிழுக்கும் பவுடர் மருந்துகளா? எது அதிகம் பரவியுள்ளது ?
இக்கேள்விகளுக்கு நடிகரிடம் பதில் இருக்கிறதா? இப்படியான போதை உளறல்களை நடிகர் தவிர்ப்பது மிகவும் நல்லது.
தமிழ்நாடு தனிநாடு அல்ல. இந்தியாவின் ஒரு மாநிலம் தான். போதையில்லாத இந்தியா என்ற முழக்கத்தை நடிகன் சொல்ல தயாரா? உலகமயக் கொள்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. உலகச்சரக்கு முழுவதும் இங்கு வருவதை தடுக்க இயலாது.
தமிழ்நாடு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. இங்கிருக்கும் குறைந்தபட்ச போதை பழக்கத்தை ஒழிக்க அனைவரும் போராடுவோம். போதையில்லாத இந்தியாவை உருவாக்க இணைந்து செயல்படுவோம். வடக்கில் இருப்பவர்களுக்கு அன்பான வேண்டுகோள். வாயில எதையோ வச்சு கொதிப்பிட்டு புளிச்சின்னு பொது இடத்தில் துப்பி, இந்தியாவை காவிமயமாவதை நிறுத்துங்கடே!
கோயம்புத்தூரில் இப்போது இருக்கிறேன். பல சுவர்கள் காவிமயமாயிருப்பதைக் காண்கிறேன்.
சூர்யா சேவியர்
26-06-26
பெண் பாதுகாப்பு போதைப்பொருள் விவகாரம்
இந்தியாவுலேயே ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில்தான் கம்மியாக இருந்தது
மோஷமாக இருந்தது என்று கட்டமைத்தது எல்லாம் விஜய் சொன்ன பொய்
இன்னிக்கு கூட்டணில இல்லாதனால பொய் சொல்ல மாட்டேன்
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
#BhagyaRaj
திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய கடனை விட தவெக அரசு குறைவாக கடன் வாங்கினால் நான் வகிக்கும் பொறுப்பில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என்பதை சவாலாக சொல்கிறேன்.
- முன்னாள் நிதியமைச்சர் திரு @TThenarasu அவர்கள்
#TVKFails