#கோவன்வேளாளர் கோயன் என்ற இருளர் தலைவன் பெயர் ஓரிடத்தில் வருவதை வைத்துக் கொண்டு அவர் பெயரால் கோவன்புத்தூர் என ஏற்பட்டுக் கோயம்புத்தூராக மாறிற்று என்று கூறுவர். ஆனால் கொங்கு வேளாளர் பெருமக்கள் பலருக்குக் கோவன் என்ற பெயர் இருந்துள்ளதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.#வெள்ளாளரே_வேளாளர்
Best Tamil Film Promo👌🔥
"பத்து தலைமுறை ஆயிருக்கு, பள்ளிக்கூடம் அனுப்ப என்னடி ஆட்டக்காரி வேஷம் போட்டுக்கிட்டு இருக்க"👌💥
#thaikelavi |#ThaaiKizhaviFromFeb27
13.02.2026 ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் திருஉருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது திருவருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது.!
(13.2.2026) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் 2 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களுக்கு மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கம், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் இந்தித் திணிப்பினை எதிர்த்துப் போராடி முதன் முதலில் உயிர்த் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமி அவர்களுக்கு அரங்கம், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள குதிரையின் மேல் அமர்ந்தபடி உள்ள தீரன் சின்னமலை அவர்களின் வெண்கலச் சிலை, கரூர் மாவட்டம், எல்லைகாட்டு ராமச்சந்திரபுரம் கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கரூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.முத்துசாமி அவர்களுக்கு திருவுருவச் சிலை ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
#MKStalin #UdhayStalin #MPSaminathan #DMKforTN
எங்கள் சொந்த ஊரான நாமக்கல்லில் டாக்டர் சுப்பராயனை அங்கீகரித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி. சில ஆண்டுகளுக்கு முன்பு, முதலமைச்சர் சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் டாக்டர் சுப்பராயனின் சிலையைத் திறந்து வைத்தார். டாக்டர் சுப்பராயனின் நினைவாக அவர் செய்த அனைத்து நற்பணிகளுக்காகவும் என் குடும்பத்தின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
(12.02.2026) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலை பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டோம்.
#MKStalin#UdhayStalin #MPSaminathan #KangeyamConstituency #DMKforTN
🌾 Remembering S. K. Paramasivan—born Sinniampalayam Kumaraswamy Paramasivan of proud Kongu Vellala Gounder heritage. Farmer-leader, freedom supporter & MP for Erode (1962–67). Pioneer of Aavin dairies—Paalvalatha Thanthai. 🥛Original #வேளாளர்#VellalarUnity
"காலிங்கராயன் தினம்"
பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ள திரு.காலிங்கராயன் மணிமண்டபத்தில் காலிங்கராயன் தினத்தை முன்னிட்டு நதிநீர் இணைப்பிற்கு முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து,மலர்தூவி மரியாதை
செலுத்தப்பட்டது.
தை 5ஆம் நாள் நடைபெறும் காலிங்கராயன் தின விழாவை முன்னிட்டு, தை மாதம் 4ஆம் நாள் இன்று, ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் GRK மஹாலில் நடைபெற்ற காலிங்கராயன் கால்வாய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தேன்.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் மூலம், காலிங்கராயன் கால்வாயின் வரலாற்று சிறப்பும், விவசாய வளர்ச்சியில் அதன் முக்கியத்துவமும் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
@mkstalin
#KEPrakash #DMK #Erode #ErodeMP
தமிழகத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே, பவானி, நொய்யல் நதிகளை இணைத்து கால்வாயை உருவாக்கியதன் மூலம், உலக நாடுகளுக்கே, நதிநீர் இணைப்பை செயல்படுத்துவதில் முன்னோடியாக என்றென்றும் திகழும் மன்னர் காலிங்கராயர் தினம் இன்று.
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு, பல நூற்றாண்டுகளாக வரப்பிரசாதமாக அமைந்துள்ள 90 கிமீ நீளம் கொண்ட காலிங்கராயர் கால்வாயை தனது சொந்த செலவில் வெட்டி, அதை மக்களுக்காக அர்ப்பணித்த தினமான இன்று, மன்னர் காலிங்கராயர் அவர்களின் பெருமைகளை போற்றி வணங்குகிறோம்.
பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் படைத் தளபதியாக இருந்தவரும், தனது விடா முயற்சியாலும் நம்பிக்கையாலும்,
கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது, 90கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து,
வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்து, சுமார் 800ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சியை தமிழ்நாட்டில் மேற்கொண்டவருமான காலிங்கராயன் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் தை 5ஆம் நாளான காலிங்கராயன் தினத்தில், அவர்தம் தியாகத்தையும் புகழையும் போற்றி வணங்குவதுடன்...
கடந்த 2018ஆம்ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
@AIADMKOfficial
கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் வைக்க முடிவு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
#Arasiyalpanchayat |#CMMKStalin |#Coimbatore
கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு!
ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள்.
அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.