தமிழ் இனத்தின் தனிப்பெரும் தலைவன், ஈரேழு போர்க்களத்தில் வாளோடு வெற்றி கண்ட வேங்கையின் மைந்தன், பதினாறு பட்டங்களுடன் பரந்து விரிந்த "முத்தரையர் நாடு"எனும் பெருந்தேசம் ஆண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 சதய திருநாளில் ராஜ முறைப்படி பூஜித்து மகிழ்ந்தோம்!
#முத்தரையர்_சதயவிழா
தேசிய ஜனநாயக கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு வேட்பாளர் முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து "பலாப்பழம்" சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்திட வேண்டி இன்று மண்டபம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டேன்
உங்களால், அரசியல் பேச முடிகிறது இப்போது! பொது மேடைதனில் சரிநிகராக அமர முடிகிறது இப்போது! விழுந்தாலும் எழ முடிகிறது இப்போது! விமர்சனங்களையும் எதிர்கொள்ள முடிகிறது இப்போது! தனுஷ்கோடி முதல் தலைநகரம் வரை குரல் ஒலிக்கிறது இப்போது! கொடி பறக்கிறது இப்போது!
#KKSsupportNDA@narendramodi
தேசிய ஜனநாயக கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.தேவநாதன் யாதவ் அவர்கள் தமிழர் தேசம் கட்சியின் மேலான ஆதரவு வேண்டி நேரில் வந்திருந்து தற்போதைய மக்களவைத் தேர்தல் மற்றும் தொகுதி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்
பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இடம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகள் என்ற நிபந்தனையுடன் தேசிய ஜனநாயக கூட்டணியினை உறுதி செய்துள்ளோம். கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்திடுவோம்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கைப் பந்தயத்தை துவக்கி வைத்து கலந்து கொண்ட மகிழ்மிகு நிகழ்வுகள்!...
நேற்றைய தினம் பேராவூரில் தமிழர் தேசம் கட்சி நடத்திய இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாட்டிற்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினேன்.
#இராமநாதபுரம்_மாநாடு
புதுக்கோட்டை
பொன்னமராவதி வட்டம்,
கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற
அருள்மிகு ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பெருவிழா,
ஆதித்தமிழர் இனமான முத்தரையர்களின் வீர அடையாளமான
வளரி காட்சிப்படுத்துதல் பெருவிழா மற்றும்
அன்னதான விழாவில் கலந்து கொண்டேன்..
நேற்றைய தினம்,
புதுக்கோட்டையில்......
வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து #சமநீதிபோராளி_அண்ணன்_KKS அவர்கள் தலைமையில் #மாநில_நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த போது......
இலங்கை அமைச்சர் திரு.ஜீவன் தொண்டமான் அவர்கள் இன்று (02.01.2024)நேரில் தேமுதிக தலைமை கழகத்தில் கேப்டன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு,சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
நேற்றைய தினம்,
முத்தரையர்களின் தலைநகராம் திருச்சி மாநகருக்கு வருகை தந்திருந்த மாண்புமிகு பாரத பிரதமர் #Narendra_Modi ஜி அவர்களை #அண்ணன்_KKS மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்றபோது.......
கொடை வள்ளலாக...
கோடிபேர் இதயங்களில் இடம்பிடித்தவர்!!! - கேப்டன்
தேமுதிக தலைவர் #திரு_விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். - KKS
காலம் உள்ளவரை புரட்சிக் கலைஞரின் கொடை நிலைத்து நிற்கும்!!!!!
#Vijayakanth#RIPVijayakanth#விஜயகாந்த்
இந்திய சுதந்திரத்திற்காக
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152-வது பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்..
#வஉசி#வஉசிதம்பரம்பிள்ளை#VOC