பாசிசமா பாயாசமா என்று கேட்டவர்கள் பாயசத்தை குடித்து விட்டு பாசிசத்தை நிலை நிறுத்த பார்க்கிறார்கள்.
#விஜய் என்ற பிம்பம் மிக மோசமான சூழலை தமிழகத்தில் உருவாக்கி கொண்டு இருக்கிறது.
ஒரு பக்கம் ஊதி பெரிதாக்க பட்ட பிம்ப தலைவர், மறுபுறம் என்ன செய்கிறோம் என்று koodal தெரியாது ஒரு போதை பித்து ஏறிய நிலையில் #Tvk தொண்டர்கள்.
இது தான் deadly combination, தமிழக மக்களே உஷாராக இருங்கள்.
#அறிவோம்_தவெக
துணை குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் ,
DYFI தலைவர் மீது அதிகார அத்துமீறல்..!
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க வந்த து.குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில், அந்த பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற சக மாணவர்களுடன் அமர்ந்திருந்த, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் ஆனந்த் அவர்களுக்கு அருகிலேயே சீருடை இல்லா காவலரை அமர வைத்து கண்காணிப்பு என்ற பெயரில் ஏதோ ஒரு தீவிரவாதியை நடத்துவது போன்று அத்துமீறி அவரது சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது
காவல்துறை ...!
மேலும்,கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தோழர் ஆனந்த் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் விசாரணை என்ற பெயரில் கடுமையான நெருக்கடி அளிக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு காவல்துறை,தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் எதிராக செயல்படக்கூடிய பாஜகவின் தலைவர்களுக்கு பாதுகாப்பு தருகிறோம்..!
என்று சங்க நிர்வாகிகளை அச்சுறுத்துவது தான் காவல்துறையின் கடமையா...?
யாரை குளிர்விக்க இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது தமிழக காவல்துறை..!
தேனியில் இன்று நடைபெற்ற போராட்டம்.
மலைகளில் வாழும் மக்களை வெளிய துரத்த ஆளும் வர்க்கமும் அதன் நிர்வாக அமைப்பான நீதிமன்றமும் தயாரான நிலையில் அதை எதிர்த்து @tncpim தலைமையில் நடைபெற்ற போராட்டம்.
பழனியில் தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலம், மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. More: https://t.co/1J1UYnhkaW
சோனம் வாங்சுக் உண்ணாநிலை போராட்டம்... கண்கொள்ளாத ஒன்றிய அரசுக்கு #CPIM கண்டனம்! தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் #CPIM#NEET#NEETScam#NEETPaperLeak#ExamScam More : https://t.co/kXOv8L2MYE
(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் 2026 ஜூலை 11 முதல் 13 வரை நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்)
ஏழைகளை மேலும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்குள் தள்ளும் வகையில் உணவு ‘தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை திருத்த’ உள்ளது மோடி அரசு.
ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் புதிய ‘தேசிய உணவுப் பாதுகாப்பு திருத்த மசோதா’, கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
இத்திருத்தமானது குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் 35 கிலோ ரேஷன் உணவு அளவை, நபர் ஒருவருக்கு வெறும் 7 கிலோவாகக் குறைக்க பரிந்துரைக்கிறது. இத்துடன், ஒரு குடும்பத்திற்கான அதிகபட்ச வரம்பை 35 கிலோவாகவே முடக்கியும் வைத்துள்ளது.
சிறிய மற்றும் பெரிய குடும்பங்களுக்கு இடையே சமமான விநியோகத்தை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை என அரசு கூறுகிறது. அது உண்மையில்லை இது ஒரு அப்பட்டமான ஏமாற்று வேலை.
தற்போது அமலில் உள்ள 2013-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டமே பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை உணவுக்கான கோட்டா, இன்னும் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துவிட்ட சூழலில், முறையான தரவுப் புதுப்பித்தல் இல்லாததால், சுமார் 10 கோடிக்கும் அதிகமான தகுதியான ஏழைகள் பொது விநியோகத் திட்டத்திலிருந்து (#PDS) முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார அறிஞர்களான ரீத்திகா கேரா, ஜீன் ட்ரெஸ் மற்றும் மேக்னா முங்கிகர் ஆகியோரின் 2021-ஆம் ஆண்டு ஆய்வு எச்சரித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணிக்கு வறுமை, பசி, உணவுப் பாதுகாப்பு குறித்த எவ்வித அடிப்படைப் புரிதலும் இல்லை. தங்களின் வாக்கு வங்கிக்கான திட்டங்களை மட்டுமே இலக்கு வைக்கும் இந்த அரசின் லட்சணம், தேசிய குடும்ப சுகாதாரக் கணக் கெடுப்பு (#NFHS 2019-21) தரவுகளில் அம்பலமாகியுள்ளது.
இந்தியாவில் 35.5% குழந்தைகள் முறையான வளர்ச்சியின்றியும், 32.1 % குழந்தைகள் குறைந்த எடையுடனும், 6-59 மாதங்களுக்குட்பட்ட 67.1 % குழந்தைகள் கடுமையான ரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான கலோரி உணவுகள் மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் சூழலில், பொது மக்களின் வரிப் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாராளமாக வாரி இறைப்பதற்காக ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலை அனுமதிக்க முடியாது.
இத்தகைய சூழலில் புதிய விதியின்படி, 5 உறுப்பினர்களுக்கும் மேல் உள்ள ஏழைக் குடும்பங்களில், தலா 7 கிலோ என்ற கணக்கீட்டின்படி பார்த்தால் ஒட்டுமொத்தப் பங்கு மிகக் கடுமையாகக் குறையும். ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக்கி மேலும் பட்டினியில் தள்ளுவது தான் மோடி அரசின் இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
ஏற்கெனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (#ICMR) பரிந்துரைகளின்படி, ஒரு மனிதரின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மாதத்திற்கு தலா 14 கிலோ உணவு தானியங்கள் தேவை என வரையறுக்கப்பட்டுள்ளது. ஊட்டச் சத்து நிபுணர்களும், மருத்துவ வல்லுநர்களும் தற்போதைய 35 கிலோ அளவே போதாது என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில், கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கும் மோடி அரசு, ஏழைகளுக்கான உணவு மானியத்தை வெட்டிச் சுருக்கப் பார்ப்பது அதன் அப்பட்டமான வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.
தற்போது நாடு முழுவதும் 236.9 லட்சம் ‘அந்த்யோதயா’ (#AAY) குடும்பங்களைச் சேர்ந்த 939.4 லட்சம் ஏழை மக்கள் தங்களின் உயிர்வாழ்விற்காக இந்த ரேஷன் திட்டத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் பெரும்பாலோர் முறைசாரா தொழிலாளர்கள், பாரம்பரியக் கைவினைஞர்கள், விவசாயத் தொழிலாளர்கள், நிலமற்ற கூலிகள், தலித்துகள், ஆதிவாசிகள், முதியவர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வீடற்ற விளிம்பு நிலை மக்கள் ஆவர். பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் முறையான மருத்துவ வசதியோ, நிரந்தர வேலை வாய்ப்போ, சமூகப் பாதுகாப்போ இல்லாத இந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு வேளை கஞ்சி கிடைப்பதற்கான ஒரே வாழ்வாதாரமாக விளங்கும் ரேஷன் அரிசியைப் பறிக்க ஒன்றிய அரசு சூழ்ச்சி செய்கிறது.
#FoodSecurityLaw
என்எல்சி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை ஒன்றிய பாஜக அரசு விற்பனை செய்ததைக் கண்டித்தும், அதை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், என்எல்சி நிறுவனத்தைத் தொடர்ந்து பொதுத்துறையாகப் பாதுகாக்கக் கோரியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக் கோரியும் #CPIM#CPI#CPI(ML)L ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், நெய்வேலி எட்டு ரோட்டில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்கள் சந்திப்பு
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்றக் கோரி #CPIM கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில், கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சி.சுரேஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் நானும் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டோம்.
போராட்டத்தின் விளைவாக மாவட்ட ஆட்சியர் வழங்கிய முக்கிய உறுதிமொழிகள்:
•சுங்கச்சாவடி மாற்றம்: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சின்னார் பகுதிக்கு மாற்றப்படும்.
•கட்டணமில்லாப் பயணம்: அதுவரை (செப்டம்பர் வரை) கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களின் வாகனங்கள் சுங்கக் கட்டணமின்றி அனுமதிக்கப்படும்.
•காத்திருப்புத் தவிர்ப்பு: சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் வாகனங்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்படும்.
•விதிமுறை ஆய்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 கி.மீ இடைவெளிக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.