வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 29 கழக மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட சந்திப்பு, வரும் 14-12-2025 ஞாயிறு மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
திருவண்ணாமலையில் ஒன்று கூடுவோம், 2026-ல் மீண்டும் வெல்வோம், வரலாறு படைப்போம்!
@dmk_youthwing
#NewsUpdate | கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில், பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் வாழ்வைத் தொடர அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர்
குழந்தைகளின் தாயார் வசந்தா 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கூலித் தொழிலாளியான தந்தை கமலக்கண்ணன், கல்லீரல் பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார்
குடும்பச் சூழலால் மூத்த மகள் லாவண்யா முதலாம் ஆண்டுடன் பொறியியல் படிப்பை நிறுத்திவிட்டு, கோவையில் வேலை செய்கிறார். 10 மற்றும் 8ம் வகுப்புடன் ரீனா, ரீஷிகா இருவரும் படிப்பை நிறுத்திவிட்டனர். கடைசி மகன் அபினேஷ் மட்டும் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவருகிறார்
தந்தை கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்ய, இறுதிச் சடங்கிற்கு கூட பணம் இல்லாததால் ஊர் மக்கள் ஒன்று கூடி பணம் திரட்டி, இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
#SunNews | #Kallakurichi | @CMOTamilnadu | @collector_kki | @Anbil_Mahesh | @arasan_malai
அறம்-பொருள்-இன்பம் எனத் தமிழர் வாழ்வியல் நெறியுரைத்த வள்ளுவத்திற்கு, குறளோவியம் கண்ட தலைவர் கலைஞர் எழுப்பிய ‘வள்ளுவர் கோட்ட’த்தில், கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் வழிநின்று செயல்படும் தமிழர்களின் தனிப்பெரும் தலைமை இயக்கமாம் @arivalayam-த்தின் #திமுக75_அறிவுத்திருவிழா!
நம் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டலில்,
தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத் தளங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்கள் குறித்து, கழக இளைஞரணி சார்பில் @muthamilarignar பதிப்பகம் வெளியிடும் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீடு, `இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் இருநாள் கருத்தரங்கம், அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக் காட்சி’ ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை @dmk_youthwing `அறிவுத்திருவிழா’வாகக் கொண்டாடவிருக்கிறது.
🗓️நவம்பர் 8 அன்று கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, இருநாள் கருத்தரங்கத்தையும் முற்போக்குப் புத்தகக் காட்சியையும் தொடங்கிவைக்கிறார்.
🗓️நவம்பர் 8 மற்றும் 9-ல் நடைபெறும் இருநாள் கருத்தரங்கத்தில், கழக முன்னோடிகளும் தமிழின் முக்கியச் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.
🗓️நவம்பர் 8 முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சும் நடைபெறவுள்ளன.
🖤❤💙 நவீன தமிழ்நாட்டைச் செதுக்கி, செழுமைப்படுத்திய முற்போக்கு இயக்கங்களின் அரசியலை அறியவும்; அரசியல் உணர்வு பெறவும் அறிவுத்திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்! #DMK75
சென்னை தெற்கு மாவட்ட @dmk_youthwing துணை அமைப்பாளர் சகோதரர் விநாயகமூர்த்தியின் தங்கையும் - சென்னை மாநகராட்சியின் 174-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ம.ராதிகா - சீனிவாசன் ஆகியோரின் அன்பு மகள் நிவேதா - ரா.கலைவாணன் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருவான்மியூரில் இன்று பங்கேற்றோம்.
மணமக்கள் இருவரும் திராவிடமும் - சமூக நீதியும் போல, கலைஞரும் - கழகமும் போல, நம் முதலமைச்சர் அவர்களும் - வெற்றிகளும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Subramanian_ma@DrKanimozhiSomu@GanapathyK@PrabhakarRaja88
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் எண்ணூர் சிற்றோடைக்கு வந்து, பின் கடலில் சேருகிறது.
உபரி நீர் கால்வாய் வருகின்ற வழியெங்கும், குடியிருப்புப் பகுதிகள் – தொழிற்கூடங்கள் வெளியேற்றும் கழிவுகள் – குப்பைகளால், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடைய உத்தரவின் பேரில் ரூ.40 லட்சம் மதிப்பில் செங்குன்றம் உபரி நீர் கால்வாயை தூர்வாரி – ஆழப்படுத்தும் பணியை அமுலவாயல் கிராமத்தில் இன்று ஆய்வு செய்தோம். @Avadi_Nasar@SUDHARSANAM_S@DrKalanidhiV@KPShankarMLA
கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர் - அண்ணன் @nrelango_dmk MP அவர்களின் அன்பு மகள் இராகவி இளங்கோ - சச்சிந்தர் இணையரின் திருமணத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நீலாங்கரையில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
வழக்கறிஞராக மட்டுமின்றி தேர்தல் நடைமுறைகளை உடன்பிறப்புகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியராக கழகத்திற்கு பெருமைச் சேர்க்கும் அண்ணன் இளங்கோவின் பணிகளைப் போற்றி உரையாற்றினோம்.
இல்வாழ்வில் இணைகின்ற இராகவி - சச்சிந்தர் இணையர், கழகமும் - கலைஞரும் போல, முதலமைச்சர் அவர்களும் - வெற்றிகளும் போல பல்லாண்டு வாழ்க!
தி.மு.கழகத்தின் தலைவராக நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று 8-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள்!
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஏந்திய இலட்சியச் சுடரை மேலும் உயர்த்திப் பிடித்து, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்கும் போர்க்களத்தில் உறுதியுடன் நம்மை வழிநடத்துகிறார்கள் .
கடும் சோதனை காலத்தில் தலைமைப் பொறுப்பேற்று - ஓய்வறியா களப்பணியாலும் - தொடர் வெற்றிகளைத் தந்த தேர்தல் வியூகத்தாலும் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை நம் தலைவர் அவர்கள் இந்தியாவில் விதைத்துள்ளார்கள்.
தலைவர் அவர்களின் கட்டளையைச் செயலாக்குவோம். கழகத்தை 2026-இல் மீண்டும் அரியணை ஏற்றுவோம்! #DMK
திருப்பூர் தெற்கு- திருப்பூர் கிழக்கு மாவட்டங்களில் காலியாக உள்ள இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு, விண்ணப்பித்திருந்தவர்களை மாநில துணைச் செயலாளர் சகோதரர் @keprakashdmk முன்னிலையில், இன்று காலை நேர்காணல் செய்தோம்.
அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப் பணிகள் குறித்து கேட்டறிந்து, கொண்டுவந்திருந்த புகைப்படத் தொகுப்பு- மினிட் புத்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, பணி சிறக்க வாழ்த்தினோம்.
@dmk_youthwing #கழக_இளைஞர்_அணி
திருப்பத்தூர், ஈரோடு மாவட்டங்களில் காலியாக உள்ள இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை மாநில துணைச் செயலாளர்கள் @Prabhugajendran, @pssrinivasandmk ஆகியோர் முன்னிலையில் இன்று மாலை நேர்காணல் செய்தோம்.
அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்து, கொண்டுவந்திருந்த ஆவணங்களை பார்வையிட்டு, உற்சாகமாக கழகப் பணியாற்றுமாறு வாழ்த்தினோம்!
@dmk_youthwing #கழக_இளைஞர்_அணி @Vadivel42729915@thiruurthozhan@AThiruvengadm
வயிற்றுப்பசியோடு, அறிவுப்பசி போக்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்று அடுத்தக்கட்டத்தை எட்டி இருக்கிறது!
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் @BhagwantMann அவர்கள் முன்பாக, நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், மயிலாப்பூர் புனித சூசையப்பர் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவளித்து தொடங்கி வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம்.
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் பயனாளிகளான மாணவச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
#CMBreakfastScheme
சென்னையில் அண்மையில் நடைபெற்ற 64th National Inter State Athletics Championship-இல் 11 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களோடு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று நம் தமிழ்நாட்டு அணியினர் சாதனை படைத்துள்ளனர்.
இச்சிறப்புக்குரியப் போட்டியில் பதக்கங்களைக் குவித்து தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள நம் வீரர் - வீராங்கனையரை வாழ்த்தி மகிழ்ந்தோம். @SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS