பல உயிர்களைக் காக்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் என்கின்ற சிறப்புமிக்க திட்டத்தை இந்திய நாடு முழுவதும் அறிமுகப்படுத்திய முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பாமக கட்சியின் தலைவர் மதிப்பிற்க்குரிய மருத்துவர் @draramadoss அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன், பொது வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
சார் யாருன்னு தெரியுதா Zoom meeting ல் host செய்த ஒரே காரணத்திற்காக PSMF தலைவர் பதவி அய்யாவிடம் வாங்கியவர் !!
சிறிது நாட்களுக்கு முன்பு மருத்துவர் அய்யாவால் கட்சி பின்னடைவு சந்தித்தது என்று பேசியவர்
இவரின் சொந்த தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக பின்னடைவு சந்தித்தது.
“வீண் பழிகளை சுமத்தி வருவது மன்னிக்க முடியாத குற்றம்“
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அவர்களும், அவருடன் பிரச்சாரம் செய்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியினரும், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையினரும் முழுநேரம் தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், சமூக நீதி பெறவும் உழைத்து வருகிறார்கள்.
அவ்வாறு இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே கிண்டல், கேலி போன்றவற்றை செய்து வரும் சேலம் பவர் ஸ்டார் + ஆயா பேரவை + கத்திக்குத்து கந்தன் பேரவை ஆகியோர் பணத்திற்காக இனத்தை காட்டிக் கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு முதலாளி ஆயா யார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.
முதலாளி கொடுக்கும் உத்தரவை ஏற்று, சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக எழுதுவது, அவதூறு பரப்புவது போன்றவற்றை பேக் ஐடிகள் மூலம் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இவர்களே குற்றங்களைச் செய்துவிட்டு, உண்மையாக பாட்டாளி மக்களுக்காக உழைக்கும் பாமகவினர்மீதும், பட்டாளி சமூக ஊடகப் பேரவையினர்மீதும் வீண் பழிகளை சுமத்தி வருவது மன்னிக்க முடியாத குற்றம். இவர்களை இந்த இனம் கண்டிப்பாக தண்டிக்கும்.
#PMK #CyberCrime #DMKFails #Police
நானும் எதுவும் பேசக்கூடாது என்று பார்த்த இந்தச் சின்ன பகவதி குழு ஏன் இப்படி இருக்கிறது?
முதல் கேள்வி:
மாவீரன் காடுவெட்டியை நான் போகும் கூடத்திற்கும், நான் பங்கேற்கும் கூட்டத்திற்கும் தலைமை ஏற்கக் கூடாது என்று சொன்ன நாய் எந்த நாய்?
இரண்டாவது கேள்வி:
பாமக வேறு, வன்னியர் சங்கம் வேறு. பாமகவில் இருந்தால் நான் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும், இல்லையெனில் வெளியே போகச் சொல்லுங்கள் என்று சொன்ன நாய் யார்?
மூன்றாவது கேள்வி:
இன்று அய்யாவுக்கும் மாவீரனுக்கும் துரோகம் செய்துவிட்டு, "யார் வளர்த்தால்தான் வளர்ச்சி பாதிக்கும்" என்று சொன்னவனோடு இன்று சந்தோஷமாக இருக்கும் வைத்தி அண்ணன் அறியவில்லையா?
கவின் கொலை வழக்கில் தவறுதலாக கைது செய்யபட்டுள்ள பெண்ணின் பொற்றோர் காவல் ஆய்வாளரான சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணவேணிக்கு தேவையான சட்ட உதவிகளுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் உடனிருக்கும்.
காவல்துறை முறையான விசாரணை நடத்த வேண்டும்
தலித் வெறிக்கு ஆதரவாக கூடாது
#JusticeForKavinkumar
1987 செப் 17-23 போராட்டம், சமூக மாற்றத்திற்காக எப்படி ஒன்றிணைந்து, உறுதியுடன் போராட வேண்டும் என்பதை வருங்காலத் தலைமுறைகளுக்குப் போதிக்கும் ஒரு சரித்திரப் பாடம். டாக்டர் அய்யாவின் தலைமை அதைச் சாத்தியமாக்கியது. #DrAyya87#இனமானக்காவலர்87
பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் !
#DrAyya87#இனமானக்காவலர்87
மூத்த அரசியல் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா.ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளில் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.ஐயா அவர்களின் சமூக சேவை,மருத்துவ சேவை பணிகளும்,நாட்டுபணியும் தொடர நீண்ட ஆயுளுடனும்,உடல் நலத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@drramadoss
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்ட கொள்கையில் துளியளவும் சமரசமின்றி அரசியல் களத்தில் பயணிக்கும் மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @drramadoss