பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தமிழ்த் தாயை பின்னுக்குத் தள்ளியது தான் புதிய மாற்றமா?
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது!
தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகள் வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும்.
#TVKFails
தமிழ்நாடு 10 லட்சம் கோடி கடன்ல இருக்கு..
CM Sir..
அதைதான் 2026 TN பட்ஜெட்ல பிப்ரவரி 17, 2026 லயே வெளியிட்டாங்களே, அதுக்கு அப்புறம் தானே நீங்க 2500 ரூ திட்டம், தாய்மாமன் திட்டம், அண்ணன் சீர் திட்டம் எல்லாம் அறிவிச்சீங்க..?
10 லட்சம் கோடி கடன்னா எதுக்கு இதெல்லாம் அறிவிச்சீங்க?!
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
14.சுய உதவிக் குழுக்கள்
15.பெண்குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி
16.மக்களைத் தேடி மருத்துவம்
17.அன்புச்சோலை மையங்கள்
18.கலைஞரின் கனவு இல்லம்
19.தாயுமானவர் திட்டம்
20.அன்புக் கரங்கள் திட்டம்
21.கல்லூரி கனவுத் திட்டம்
22.சமூகநீதி விடுதிகள்
23.அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி
24.சிறகுகள் திட்டம்
25.பாலின வள மையம்
26.இல்லம் தேடிக் கல்வி
27.கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
28.அகழ்வாராய்ச்சிகள், அருங்காட்சியகம்
29.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
30.திருக்கோயில்களில்குடமுழுக்கு (4180)
31.மதநல்லிணக்கம்
32.பெண்கள் பாதுகாப்பு
33.மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
34.தமிழ்நாடெங்கும் டைடல் & மினி டைடல் பூங்கா
35.சிப்காட் தொழிற்பூங்காக்கள் (30)
36.திசைதோறும் திராவிடம் திட்டம்
37.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை
38.கலைஞர் நூற்றாண்டு நூலகம்
39.உள்ளடக்கிய கல்வி திட்டம்
40. உள் ஒதுக்கீடு 7.5%
41.கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம்
42.விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம்
43.விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
44.சிறுதானிய திருவிழாக்கள்
45.சிறுதானிய உணவுப் போட்டிகள்
46.மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.6000
47.தொல்குடித் திட்டம்
48.தமிழ்நாடு ஹஜ் இல்லம்
49.முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
50.இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48
51.ஊட்டச்சத்தை உறுதி செய்
52.மாபெரும் தமிழ்க் கனவு
53.விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு
54.அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
55.கலைஞர் கைவினைத் திட்டம்
56.நலம் கக்கும் ஸ்டாலின்
57.உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
58.முதல்வரின் முகவரி திட்டம்
59.முதலமைச்சர் சிறு விளையாட்ரங்கம்
60.மாவட்டத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி
61.வேர்களைத் தேடி திட்டம்
62.தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்
63.கலைஞர் சர்வதேச குத்துச்சண்டை மையம்
64.ஒலிம்பிக் அகாடமி
65.நம்ம ஊரு விளையாட்டுத் திடல்
66.சிற்பி திட்டம்
67.முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை (CMRF) திட்டம்
68.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
69.ஆலயங்களில் அன்னைத் தமிழ்
70.அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள்
71.பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்
72.பரவலான வளர்ச்சி
73.டைடல் & மினி டைடல் பூங்காக்கள்
74.முதலீடுகள்12 இலட்சம் கோடி
75.வேலைவாய்ப்பு
36 இலட்சம் நபர்களுக்கு
76.பொருளாதார வளர்ச்சி 11.19%
77.முதலமைச்சர் கோப்பை போட்டிகள்
78.கோவை செம்மொழி பூங்கா
79.மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம்
80.விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை
81.அத்திக்கடவு - அவினாசி நீரேற்றும் திட்டம்
82.பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
83.மாதிரிப் பள்ளிகள்
84.மாணவர் சிறப்பு பேருந்து திட்டம்
85.பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
86.நமக்கு நாமே திட்டம்
87.கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
88.TABCEDCO குழுக் கடன் திட்டம்
89.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
90.தீவனப் பயிர் சாகுபடி முன்னோடித் திட்டம்
91.நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
92.பிங்க் ஆட்டோ
https://t.co/1zkwU8w2Q9 வகுப்பறைகள்
94.தொல்குடி திட்டம்
95.மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு
96.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை
97.உணவுப்பூங்கா
98.மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி
99.அறிவுசார் நகரம்
100.நீங்கள் நலமா திட்டம்
இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களும்- வளர்ச்சியும் தொய்வின்றி தொடரவேண்டும்.!!
💥 தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆகத்தான் எங்களுக்கு வாக்களித்தார்கள்.
🧨 அவர்களுக்கு எதிராக 2 கோடிக்கும் மேலான வாக்குகள் அளித்துள்ளார்கள் மக்கள்.
⚡️ஆம், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.பிள்ளைகள்தான்!
🎇 நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோமே தவிர, இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
அடி ஒவ்வொண்ணும் வேற மாறி 🔥🔥🔥 அதான் அண்ணன் ❤️🖤💙
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த அவலநிலை இல்லை!
மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு 'வந்தே மாதரம்' ஒலிக்கவில்லை.
ஆனால், இங்கே 'மாற்றம்' என்று வேடமிட்டு வந்தவர்கள், வந்தே மாதரம், தேசிய கீதத்திற்குப் பிறகு, தமிழர்களின் உயிர்மூச்சான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' மூன்றாம் பட்சமாக நிறுத்தித் தமிழ்த்தாயின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்!
மரபுகளைச் சிதைத்துத் தமிழை அவமதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா?
முதல் நாளிலேயே தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நேர்ந்த அவமானம்!
#TVKFails
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!