இவரை போன்ற தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என பண்பாட்டு வரலாறு அறியாதவர்களுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியுள்ளது. சில விவரங்களை சொல்ல இதை வாய்ப்பாக பயன்படுத்தலாம்
பிரியாணி கடையில் விநாயகர் படம் வைத்த தமிழனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
எந்த சாமானியனும், மனம் புண்பட்டதென புகார் கொடுக்கவில்லை. ஆனால், சங்கிகள் கொடுத்த புகாரின் பேரில் சிறைப்படுத்தப்பட்டார் அவர்.
வெறும் பேனர் வைத்ததற்காக சிறை. ஏன் இது நடந்தது? இது எங்கு இட்டு செல்லும்? என யோசித்தால், நாளை இறைச்சி உணவு வைத்ததற்காக வடநாட்டில் நடப்பது போன்று அடித்தே கொல்லப்படுவோம். ஆட்டிறைச்சி வைத்திருந்தற்காக இதுவரை நூற்றுக்கணக்கானோர் சங்கிகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை அரசியல் தமிழ்நாட்டில் துளிர் விட்டதன் அடையாளமே நெல்லையில் நடந்த கைது.
தமிழர்களுக்கு இறைச்சி உணவு எதிரானதா அல்லது பார்ப்பனர்களுக்கு எதிரானதா?
சைவ உணவு யாரின் அரசியல்?
அனைத்து தமிழர்களும் இறைச்சி உணவை ஏற்பவர்கள். விநாயகர் சதூர்த்திக்கு இறைச்சி எடுக்காதவர்கள் யார்? எப்போதிருந்து இந்த வழக்கம் வந்தது? இந்து மத பண்டிகைக்கு அசைவம் தடை செய்யப்பட்டதெனில், தீபாவளிக்கு கசாப்புகடைகள் ஏன் நிரம்புகின்றன? பிரியாணி கடைகள் தீபாவளிக்கு எப்படி கல்லா கட்டுகின்றன?
தமிழர்களுக்கு விழா எனில் இறைச்சி இல்லாமல் கொண்டாட்டம் அமையாது. விநாயகர் சதூர்த்தி தமிழரின் விழா அல்ல, அது வட இந்திய பார்ப்பன-பனியா கூட்டத்தின் கும்பல் கலாச்சாரம், இசுலாமியர்களுக்கு எதிரான சங்கிகளின் வன்முறைக்கான வடிகால். இதை வெகுசமீப காலம்வரை தமிழ்நாடு கொண்டாடியதில்லை. விநாயகர் சதூர்த்தி போன்றவற்றை நாம் விடுமுறைநாளாக மட்டுமே கடந்து சென்றதுண்டு. கொழுக்கட்டையும், கறிசோறும் இயல்பாக எடுத்துக் கொண்டுள்ளோம் நாம்.
இன்றைக்கு, இந்த பண்டிகையெல்லாம் வணிகமயமாக, இந்துத்துவ மயமாக மாற்றி நம் மீது திணித்துள்ளனர். இதை நாம் கேள்வி எழுப்பினால், 'இந்து மதத்தை புண்படுத்தி, மத கலவரத்தை உருவாகும்' என சங்கிகள் சொல்வதை இந்த நபர்கள் வேறுவகையில் சொல்கிறார்கள். இவர்கள் பேசுவது மதசகிப்புத்தன்மையல்ல, மாறாக, மென்மையான-சங்கித்தனம்.
சனாதன-இந்துத்துவ அரசியலை கேள்வி கேட்டால், 'முஸ்லீமை கேட்பாயா, கிருஸ்துவத்தை கேட்பாயா' என கூப்பாடு போடுகிறார்கள். இந்த மதத்தை சார்ந்தவர்கள், இறைச்சி உணவிற்காக, (பன்றி இறைச்சிக்காக, மாட்டு இறைச்சிக்காக) மற்றவர்களை அடித்துக் கொலை செய்வதில்லை, ஆட்சி அதிகாரம் செய்வதில்லை, சட்டம் இயற்றுவதில்லை. அப்படி செய்வார்களெனில் அச்சமயம் இவர்களை நாம் எதிர்த்து நிற்கத்தான் செய்வோம்.
இது 'இந்து தேசம்' என்பதால் இறைச்சி சாப்பிடாதே என்கிறார்கள் சங்கிகள், அந்த கும்பலுக்கு ஒத்து ஊதுகிறார்கள் இந்த அரைவேக்காடுகள்.
இது 'தமிழ்தேசம்' என்பதால், உணவை அரசியலாக்கதே என்கிறோம் நாம். ஏனெனில் நாம் தமிழ்த்தேசியவாதிகள், சனநாயகவாதிகள்.
தமிழர் உணவு என்பது இறைச்சி உணவு. எங்கள் சாமிகள் இறைச்சியை ஏற்கும்.
ஆரிய பார்ப்பன சனாதனிகள் உணவு வெஜிட்டேரியன் உணவு. சனாதன சாமிகள் இறைச்சியை மறுக்கும்.
இறைச்சி உணவு அவமானமல்ல, தீட்டல்ல, தீண்டத்தகாததல்ல, கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதல்ல. இதுவே தமிழர் பண்பாடு. தமிழன் நிலத்தில் தமிழர் பண்பாட்டிற்கே முன்னுரிமை.
Caste and Brhaminist supremacy theory is the biggest corruption in mankind. Brahminical system looted innocent peasants, artisans and kings in the name of God &Manusmriti. Go cleanse yourself of the caste shit, before commenting on others.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
திமுக கட்சி தலைவர்கள் இன்னும் அதிகமாக யாரோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றால் அது பெரியாரிய இயக்க தோழர்களோடு.
காசு இல்லாமல் எந்த NGO ஆதரவும் இல்லாமல் இயக்கத்தை நடத்தி வரும் பெரியாரிய இயக்கங்கள் தான் எந்த தடுமாற்றமும் இல்லாமல் திமுகவுடன் தான் இருக்கிறோம் என்கிறார்கள்.
திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பெரியாரிய இயக்கம் , பெரியாரிய இயக்கங்கள் தான் உங்கள் பங்காளிகள்.
ஏனைய இசங்கள் எல்லா முகமூடியோடு வரும் காலம் பார்த்து நம்மை விட்டு ஓடிவிடும்.
@mkstalin@Udhaystalin