தாய்த்தமிழ்தேசத்தில்
அன்னைத் தமிழுக்கே முதலிடம். அன்னிய மொழிச்சடங்குகளை அனுமதியோம்.
ஆளுநர் எனும் கங்காணியினை கண்டிக்க ஒன்றுதிரள அழைக்கிறோம்..
'வேடிக்கை பார்க்கும் தமிழினமே,
வீதிக்கு வந்து போராடு!'
எனும் முழக்கத்துடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு போராட்டத்தில் இணைவீர்.
இடம்: சைதை, பனகல் மாளிகை அருகில்
நேரம்: காலை 10:00 மணி
நாள் : 31-05-2026
"பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதிலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருப்பார்" எனும் மாநில உரிமையை போராடி பெற்றோம்.
இந்த உரிமையை மறுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து அமைச்சரான திரு.விஸ்வநாதன் பேசி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
மாநில உரிமைகளை நசுக்கிய வரலாறைக் கொண்ட இந்தியாவின் முதல் கட்சி காங்கிரஸ்.
நேரு, சாஸ்திரி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், சோனியா, மன்மோகன் என அக்கட்சியின் மாநில உரிமை விரோத நடவடிக்கைகள் பாஜக-மோடி ஆட்சியை போல பிரசித்தமானவை. அந்த வரலாறுகளை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார் இன்றய உயர்கல்வித்துறை அமைச்சர்.
காங்கிரஸ் ஒருபுறம் "..காவிரியில் மேகதாது அணை கட்டி தமிழனுக்கு தண்ணீர் பஞ்சம் கொண்டுவருவது தன்னுடைய உரிமை.." என்கிறது, மறுபுறம், "..பல்கலைக்கழகங்களை பாஜகவின் ஆளுநர் வசம் ஒப்படைப்பேன்.." என்கிறது.
'மேகதாது அணை, பல்கலைக்கழக வேந்தர் உரிமை' குறித்து
த.வெ.க அரசு என்ன சொல்லப்போகிறது?
வாய்மூடி மெளனம் காக்கப்போகிறதா? அல்லது அமைச்சரை மாற்றப்போகிறதா?
காங்கிரஸ் கட்சியின் தமிழின விரோத செயல்கள் தொடருமெனில், கடுமையான எதிர்ப்புகளை தமிழர்களிடத்தில் எதிர்கொள்ள நேரிடும்.
தமிழினத்தின் மாபெரும் துயரத்தை நினைவேந்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு எமது மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாபெரும் தமிழினத்தின் பெருநிலப்பரப்பான தாய்த் தமிழகத்தில் இருந்து ஆட்சியாளர்களின் ஆதரவு குரல் எழுவது நம்பிக்கையளிக்கிறது.
நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு இலங்கை அரசால் நிகழ்ந்த 'இனப்படுகொலை', 'போர்க்குற்றம்', 'மானுடகுலத்திற்கு எதிரான குற்றம்' எனும் சர்வதேசக்குற்றங்கள் குறித்து பல அறிக்கைகள், ஆவணங்கள் வெளியாகியுள்ளது. அவை,
** ஐ.நாவின் மூவர் குழுவான தருஸ்மன் அறிக்கை,
** ஐ.நாவின் தோல்வி குறித்து நடந்த உள்ளக விசாரணையான 'சார்லஸ் பெட்ரி' அறிக்கை,
** 2011ல் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயம்,
** 2013ல் ஜெர்மன் நாட்டில் ப்ரேமன் நகரில் நடந்த, முன்னாள் ஐ.நா துணைத்தலைவர் தலைமையில் நடந்த தீர்ப்பாயம்,
**சர்வதேச நீதிமான்கள் அமைப்பு,
** ஐ.நாவின் சிறப்பு செயலர்கள் (special rapporteur-independent human right experts),
** யாஸ்மீன் சூக்கா ஆகியோர் தலைமையிலான @itjpsl உள்ளிட்டவர்களின் விசாரணைகள், தீர்ப்புகள், அறிக்கைகள் இந்த குற்றங்களை ஆவணப்படுத்தி விளக்கியுள்ளன. இவற்றின் அடிப்படையில் 2011-2014காலத்தில் அன்றய மரியாதைக்குரிய மறைந்த ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான அதிமுக அரசு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்களை நிறைவேற்றியது. இதன் பின்னர் அவை எவ்வித முன்னேற்றமும் காணவில்லை.
2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எங்களது மே17 இயக்கம் சட்டமன்ற தீர்மானத்தை தமிழ்நாடு நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தது. இதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு முதலாக தமிழ்நாட்டில் 'நினைவேந்தல்', ' நினைவுச்சின்னம்' ஆகியவற்றை பலியான அப்பாவி ஈழத்தமிழ் மக்களுக்காக உருவாக்க வேண்டுமெனும் கோரிக்கையை இன்றளவும் முன்வைத்து வருகிறோம்.
இவையனைத்தையும் உள்ளடக்கி, தங்களது அரசு பின்வரும் கோரிக்கைகளை சட்டமன்றத் தீர்மானமாகவும், அரசின் பணிகளாகவும் நிறைவேற்றக் கோரிக்கை வைக்கிறோம்.
1. 'ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலையே' எனவும்
2. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் 1948-2009வரையிலாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை, வன்முறைகளைக் குறித்து சர்வதேச சுதந்திர விசாரணை (International Independent investigation) மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,
3. தொடர்ந்து நடக்கும் வன்முறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தமிழர்களுக்கு ஐ.நா அவையின் சாசனத்தின் இரண்டாம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள Right-To-Selfdetermination எனும் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் வகையில், சர்வதேச கண்காணிப்புடன் கூடிய 'பொதுவாக்கெடுப்பு' என்பதை புலம்பெயர் உள்ளிட்ட அனைத்து ஈழத்தமிழர்களிடத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும்,
4. ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் இனவெறியோடு தாக்குதல் நடத்தி படுகொலை செய்யும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை கொண்டுவரும் வகையிலும்
தீர்மானங்களை சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும்,
எங்களது மே17 இயக்கத்தின் கோரிக்கை மட்டுமல்லாமல், அனைத்து சனநாயக ஆற்றல்களின் வேண்டுகோளாக
1.தமிழீழ இனப்படுகொலைக்கான 'நினைவேந்தல் நிகழ்வை' தமிழ்நாடு அரசே ஏற்று,
தமிழர் கடற்கரையில் நடத்திடவும்,
2. இந்தப் பேரவலத்தை நினைவுகூறும் வகையில், யூத-ஆர்மீனிய-ருவாண்டா-செர்பிரெனிக-பொஸ்னிய இனப்படுகொலைகளை நினைவுகூறும் நினைவுச் சின்னங்களுக்கு ஒப்ப, தமிழ்நாட்டில் மாபெரும் நினைவுச்சின்னம் எழுப்பப்பட வேண்டும்
என வேண்டுகோள் வைக்கிறோம்.
வரலாற்று சிறப்பு மிக்க இக்கோரிக்கைகளை குறித்து கடந்த 16-மே-2026ல் மே17 இயக்கம் ஊடக சந்திப்பின் வாயிலாக கோரிக்கை வைத்தது.
தமிழினத்தின் வரலாற்று விருப்பமாக உள்ள இக்கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றித்தர வேண்டுகோள் வைக்கிறோம். நன்றி.
இங்ஙனம்
*திருமுருகன் காந்தி*
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்.
உலகநாடுகளின் துணையோடு சிங்கள இலங்கை பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதிக்காக தமிழீழத் தேசிய இனத்தின் விடுதலை கோரிக்கையை வென்றெடுக்க பெசண்ட் நகர் கடற்கரையில் ஒன்றுகூடுவோம்..
விடுதலை கோரிக்கையை உயர்த்திபிடிப்போம்
#வெல்லும்_தமிழீழம்
என்னடா இப்படி இறங்கிட்டீங்க
அட தற்குறீங்களா எது வரலாறுனே தெரியாம பொய்ய பேசுறானுங்க
காளிமுத்து அந்த தீர்மானத்தை ஆதரித்தது வரலாற்று பிழைனு சொல்லும் போது இந்த ஆமைகுஞ்சுகள் சங்கி லெவலுக்கு இறங்கிட்டானுங்க
என்ன @idumbaikarthi இதெல்லும்
பாசிச எதிர்ப்பு பாஜக எதிர்ப்பதுதான் விசிக கம்யூனிஸ்டுகளின் நோக்கம் என்றால் பாசித்தால் பந்தாட நிக்கின்ற விஜயின் பக்கம் இவர்கள் நிற்பதுதான் அறம்..
இதுல துரோகம் சந்தர்ப்பவாதம் எதுவுமில்லை கொள்கை நிலைபாடு சார்ந்தது இந்த முடிவு
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்.
இந்த படத்தில் வரும் காட்சிகள் யாவும் உண்மையே. இதில் காட்டப்படும் காட்சிகள் இந்தியாவில் நடந்த நிஜ சம்பவங்களே. இது நம்மைப் பற்றிய படம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பார்க்க வேண்டிய படம். அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
இந்தியாவில் ஆளும் பாஜகவின் அரசியல் இதுதான்..இதுநடந்த உண்மையான சம்பவங்கள் இவர்களை தமிழ்நாட்டுக்குள் நுழையவிட்டால் தமிழ்நாடும் இப்படிதான் மாறும்..
தமிழ்நாட்டிலிருந்து வடநாட்டு கட்சியான பாஜகவை துரத்தி அடிப்போம்
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்.
இந்த படத்தில் வரும் காட்சிகள் யாவும் உண்மையே. இதில் காட்டப்படும் காட்சிகள் இந்தியாவில் நடந்த நிஜ சம்பவங்களே. இது நம்மைப் பற்றிய படம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பார்க்க வேண்டிய படம். அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.