அனைவரும் அவசியம் காண வேண்டிய திரைப்படம் 'ஹபிபீ'..
இதுவரை கண்டிராத ஒரு திரை வாழ்வியல் அனுபவத்தை நிச்சயம் உணர்வீர்கள். ஓரிரு நாட்களாவது ஹபிபீயின் கதாப்பாத்திரங்கள் உங்களோடு பேசிக்கொண்டே இருக்கும்..இதுபோன்ற திரைக்காவியம் மிக அரிதாகவே தோன்றியுள்ளது. அரிய படைப்பை தன் வாழ்நாள் உழைபைச் செலுத்தி செதுக்கியுள்ளார் இயக்குனர் மீரா கதிரவன். தமிழில் நல்ல சினிமா வளரவேண்டுமென விரும்பும் அனைவரும் கண்டு-ஆதரிக்க வேண்டிய திரைப்படம். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம். நம் தந்தை, தாய், சகோதரன், சகோதரி, ஊர் உறவினர்கள் குறித்து நம் குழந்தைகளிடத்தில் என்ன சொல்ல வேன்டுமென நினைத்தோமோ அதைக் காட்டும் திரைப்படம்.
வாழ்த்துகள் தோழர் மீரா கதிரவன். வெற்றியடையட்டும் 'ஹபிபீ'
இயக்குனர் இமயம் அருந்திறல் தமிழர் ஐயா பாரதிராஜா மறைந்தார். தமிழ்க் கலை உலகின் தனிப்பெரும் ஆளுமையாய் விளங்கயவர். படித்த, நகரத்தன்மையான கதைகள், புராண இதிகாச கதைகள், மேற்குலக கதைகளின் தாக்கத்தில் உருவான கதைகள் என மூழ்கி இருந்த தமிழ்த்திரையுலகை சாமானிய- தமிழர்களின் வாழ்வியலை கதை மாந்தர்களாக, கதை களனாக மாற்றிய மாபெரும் ஆளுமை அவர்.
'என் இனிய தமிழ் மக்களே!' எனும் அவரது கரகரத்த குரல் தமிழ் மக்கள் மீதான பேரன்பில் அவரிடமிருந்து ஒவ்வொரு படைப்பின் போதும் நம்மை அரவணைக்கும். கிராமப்புற கதைகள் மட்டுமல்லாமல், நவீன, நகரமயமான கட்டமைப்புகளுக்குள் நிலவும் முரண்களையும் அவர் படைப்புகள் பேசின. அவர் அனைத்துவிதமான கதைகளையும் கையாளும் தனித்திறமை கொண்ட படைப்பாளியாக மிளிர்ந்தார். அவரைப் பின்பற்றி அவரது மொழிநடையில் தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையான பண்பாட்டு அடுக்குகளை தமது படைப்புகளில் அவரது வழியில் பலர் வெளிக்கொணர்ந்தார்கள்.
கிராமப்புற, பண்ணையார் காலத்து பிற்போக்கு சடங்குகள், நம்பிக்கைகள், அடக்குமுறைகள் மீது அவரது கதாபாத்திரங்கள் தாக்குதலை நடத்தின. மக்களின் சிந்தனையில் மதம், சாதி குறித்த பிடிப்புகள் மீது அவர் கடுமையான விமர்சனங்களை தமது படைப்பின் மூலமாக வெளிப்படுத்தினார். பலர் தொடத்தயங்கிய கதைக்களங்களையும், கதை மாந்தர்களையும் படைத்து வெற்றிகரமான படைப்புகளை உருவாக்கினார்.
திரையுலகிற்கு வெளியே, தமிழர்களுக்கான தனித்துவமான சங்கங்களை உருவாக்க பெருமுயற்சி எடுத்தார். காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட பலவேறு புரட்சிகர போராட்டங்கள் அவரால் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த் திரையுலக கலைஞர்களை தமிழினப் போராட்டங்களுக்கு அழைத்து வந்த பெருமை அவருக்குண்டு. தமிழீ*ழ விடுதலைப் போராட்டத்திற்கும், புலிகளுக்கும் வெளிப்படையான ஆதரவை வழங்கியவர். 2009 இனப்படுகொ**லை போரின் பொழுது தனக்களிக்கப்பட்ட இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதினை திருப்பியளித்தவர். இலங்கையோடு கைகோர்த்து போரை நடத்திய இந்திய அரசிற்கு ஐயா.பாரதிராஜாவின் போர்க்குரல் கடும் நெருக்கடியை கொடுத்தது. போர் குறித்த செய்திகளை தணிக்கை செய்த இந்திய அரசின் சதிகளை இவரது அறிவிப்பு அம்பலப்படுத்தியது.
தமிழ்த் திரையுலகின் இயக்குனர்கள், ஆளுமைகள், நடிகர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு இராமேஸ்வரத்தில் அவர் தலைமையில் நடந்த கண்டனப்போராட்டம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
அன்றய காங்கிரஸ் அரசின் தலைமையாக இருந்த சோனியா காந்தி அம்மையார் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது அவருக்குக் கருப்புகொடி காட்டினார். இதனால் அவர் முன்னனி இயக்குனர்களோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் இனப்படுகொ**லைக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியை கடுமையாக அவர் எதிர்த்த காரணத்தினால் அவரது அலுவலகம் காங்கிரஸ் குண்டர்களால் கடுமையாக தாக்கி சேதப்படுத்தப்பட்டது. 2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப்பரப்புரையை மேற்கொண்டார். பல இடங்களில் காங்கிரஸ் தோல்வியை எதிர்கொண்டதற்கு அவரது போராட்டம் மிகமுக்கிய காரணியாக அமைந்தது.
2011ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியால் திணிக்கப்பட்ட ராஜீவ்கொலையில் குற்றசட்டப்பட்ட அப்பாவி 3 தமிழர்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ய குரல்கொடுத்தார். 2011ல் முல்லைப்பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க மே17 இயக்கம் சென்னையில் நடத்திய பேரணியில் பங்கெடுத்தார். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அலைகடலென திரண்டு நின்ற அப்பேரணி, முழக்கப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார். ஐயா வைகோ, தோழர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள், ஓவியர் வீரசந்தானம் போன்ற கலைஞர்களோடு அவரும் அப்பேரணியில் எழுச்சியுரையை பதிவு செய்தார்.
2017ம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொ**லைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட மே17 ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் விடுதலைக்காக துணிந்து குரல் கொடுத்தவர் ஐயா பாரதிராஜா. தனது இறுதிக்காலம் முழுவதும் தமிழ் கலையுலகிற்காகவும், தமிழின உரிமைக்காகவும் அயராது குரல் எழுப்பியவர் இயக்குனர் இமையம் ஐயா பாரதிராஜா. தமிழினத்தின் உயர்விற்கு பங்களித்த அவரது வாழ்வை போற்றும் விதமாக 2026 மார்ச் மாதத்தில் மே17 இயக்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதான 'அருந்திறல் தமிழர்' பட்டத்தை வழங்கி பெருமை கொண்டது.
தமிழினத்தின் அழகியலை தனது திரைக்காவியங்கள் வழியே படைத்து, தமிழினத்தின் உரிமைக்காக அயராது போராடி ஒடுக்குமுறை எதிர்கொண்ட மாபெரும் கலைஞன், தமிழினத்தின் ஒப்பற்ற படைப்பாளி ஐயா பாரதிராஜா அவர்களுக்கு எமது இறுதி மரியாதையையும், வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம்.
இன்று காலை, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைகட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து, ஐயா வைகோ அவர்கள் தலைமையில், மதிமுக ஒருங்கிணைப்பில் பலவேறு உழவர் இயக்க பொறுப்பாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கெடுத்த ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது. பல நாட்களுக்குப் பின்னர் ஐயா வைகோ அவர்கள் தமிழ்நாட்டின் உரிமை சார்ந்து பல்வேறு சனநாயக அமைப்புகளை ஒன்றிணைத்து நடத்திய போராட்டம் மனநிறைவைக் கொடுத்தது. உரிமைகளுக்கான போராட்ட களத்தில் முதன்மையாக நிற்பவர் அவர். மட்டுமல்லாமல், அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் உரிய இடத்தையும், மரியாதையையும் கொடுப்பவர் அவர். அனைவரையும் தம்மைவிட சிறப்பாக இயங்குங்கள் என உற்சாகப்படுத்தியே நான் களத்தில் அவரைக் கண்டிருக்கிறேன். யார் மீதும் போட்டி உணர்வை வளர்த்துக் கொண்டதாக அவரைச் சொல்ல இயலாது. அனைத்து அமைப்புகளையும் வளரச் செய்யும் சனநாயகக் குணமுண்டு. உரிமையுடன் அவர்களை முன்னிலைப்படுத்தவும் செய்வார். கடந்த 17 ஆண்டுகளாக அவருடைய அனைத்துப் போராட்டங்களிலும் நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம். மிக இளையோர்களாக இருந்த போதிலும் எமக்கான இடத்தைவிட உயரிய இடத்தையே கொடுத்துள்ளார்.
எங்களைப் போல பலரை அவர் முன்னகர்த்தியும் உள்ளார். போராட்டங்களுக்கான ஏற்பாடும், உழைப்பும், பொருட்செலவும் அவர் அமைப்பினுடையதாக இருந்தாலும் அந்த போராட்டத்தின் பெருமையை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை அவர் தொடங்கிய போது 2014ல் தஞ்சை லெனின் அவர்களை கூட்டமைப்பில் இணைத்துக்கொண்ட ஐயா வைகோ, தோழர் லெனின் மறையும் வரையில் தன்னுடைய அனைத்து நிகழ்விலும் தவராது இணைத்துக்கொண்டு மரியாதை செய்தார். நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம் குறித்து பேசும் போதெல்லாம், தோழர் லெனின் குறித்து தவறாமல் நெகிழ்வுடன் அவரது பெயரை இன்றளவும் சொல்லி, அவரது பங்களிப்பை நினைவுகூர்வார். பி.ஆர்.பாண்டியன், பூவுலகு நண்பர்கள், புகழேந்தி தங்கராஜ், வீரசந்தானம், வெள்ளையன், கிவே பொன்னையன். வே , கண.குறிஞ்சி, கோவை இராமகிருட்டிணன் என பலரை அவர் மறக்காது சுட்டிக்காட்டி பங்களிப்பை குறித்து பதிவு செய்வார். இன்று நடந்த போராட்டத்திலும் தோழர்கள் தனியரசு, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன்,
SDPI ஏ.கே.கரீம், மஜக பொறுப்பாளர்,
கொங்குப்பகுதி உழவர் அமைப்பாளர் ஈசன், உழவர் சங்க மணிகண்டன், லீக் கட்சியின் பொறுப்பாளர், என பலரையும் அழைத்திருந்தார். இந்த பெயர் பட்டியலில் கிட்டதட்ட அனைவரும் அரசாங்க ஒடுக்குமுறையால் சிறைசென்றவர்கள். தோழர் ஈசன், தோழர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கொடும் சிறைத்தண்டனை திமுக ஆட்சிகாலத்தில் பெற்றவர்கள். நாகை திருவள்ளுவன், பொன்னையன் போன்றோர் கடந்த அதிமுக காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள். இதே போல தோழர் தனியரசும் சிறையை எதிர்கொண்டவர். அனைவரின் விடுதலைக்காகவும் முதல் குரல் எழுப்பியவர் ஐயா வைகோ. ஆகவே மக்கள் இயக்கஙகளோடு நெருங்கிய தோழமையும், உறவும், அன்பும் அவருக்குண்டு. இவ்வகையில் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு போராட்டம் நிச்சயம் ஐயா.வைகோ தலைமையில் வெற்றியை நோக்கி நகரக்கூடிய அளவில் பெருந்திரள் மக்கள் போரட்டமாய் மாறும் எனும் நம்பிக்கையுண்டு.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில், " காவிரி மீது அணைகட்ட கர்நாடகத்திற்கு உரிமை உண்டென இந்திய அரசு சொல்லுமானால், நெய்வேலி நிலக்கரி சுரங்கமும், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையும், ஆவடி பீரஙகி தொழிற்சாலையும், பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலையும் தமிழ்நாட்டுக்கு சொந்தமானதாக தமிழர்கள் கைப்பற்ற நேரிடும்.." என சுட்டிக்காட்டினார். தமிழ்த்தேசிய இனத்தின் உயிர்நாடியான காவிரி உரிமை மீட்க களம் காண்போம் வாரீர்.
முன்னுக்குப் பின் முரணாக எழுதியுள்ளார்.
திருவள்ளுவர் 'பதி பசு பாசம்' எனும் கோட்பாட்டு வகையில் சைவராகவே திருக்குறளை படைத்துள்ளார் என்கிறார். மேலும் திருவள்ளுவரின் காலத்தை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்கிறார். உண்மை வரலாறு என்னவென பார்ப்போம்.
'பதி பசு பாசம்' எனும் கோட்பாடு சைவ சித்தாந்தத்திற்குரியது. சைவ சித்தாந்தத்தின் காலம் கி.பி 5ம் நூற்றாண்டு முதலாக 15ம் நூற்றாண்டு வரையான காலகட்டம். திருமூலரின் நூலான திருமந்திரம் சைவத்தின் முதன்மை நூலாகக் கொண்டால், அவரது காலத்தை கி.பி 5ம் நூற்றாண்டு என்கிறார்கள்.
பதி பசு பாசம் குறித்தான சைவ சித்தாந்தத்தின் தத்துவார்த்த நூலான மெய்கண்டார் எழுதிய 'சிவஞான போதம்' படைத்தளித்த காலம் 13ம் நூற்றாண்டு. இந்தக் காலத்திலேயே சைவத்தின் ஆகச்சிறந்த 14 மெய்கண்ட சாத்திரங்கள் 12-14ம் நூற்றாண்டு காலத்தில் படைக்கப்பட்டன. சைவ சித்தாந்தத்தின் 'தத்துவார்த்த முறைப்பாட்டு காலம்' என்பதே 12-14ம் நூற்றாண்டுகளே.
உண்மை நிலை இவ்வாறிருக்க, சைவ சித்தாந்ததின் நூலாக எப்படி திருக்குறள் அமைந்தது என்கிறார் எனபுரியவில்லை. மேலும் சைவத்தின் தோற்றக்காலம் 5ம் நூற்றாண்டு. ஆனால் திருக்குறளின் தோற்றம், (இவர் சொல்வதை கணக்கிலிட்டால், 2000 ஆண்டுகளுக்கு முன்) சைவ தோற்றக்காலமான 5ம் நூற்றாண்டுக்கும் வெகுகாலத்திற்கு முற்பட்டது. ஆகவே இவரது கூற்று உண்மையல்ல.
மேலும் 'பதி-பசு-பாசம்' என்பது சனாதனத்தின் கீழாக வருவதில்லை. இது சைவ சித்தாந்தத்தின் தனித்துவமான கொள்கை. சனாதனம் வேதாந்தத்தின் கீழாக வருவது, சித்தாந்தத்தின் கீழானது அல்ல.
ஆக, இவர் ஒருபுறம் திருவள்ளுவரையும், மறுபுறம் சைவத்தையும் குழப்பி சேர்த்துக்கொண்டுபோய் பார்ப்பன-சனாதனத்திடம் ஒப்படைக்க விரும்புகிறார்.
திருக்குறளும், திருவள்ளுவரும் இவர்களது சதிகளுக்கு கீழாக அடக்கப்படக்கூடியவர் அல்ல. ஏனெனில் அவர் அற உணர்வைப் பாடியவர். இந்த சங்கிக்கும்பலுக்கும் அறத்துற்கும் தொடர்பே கிடையாது. இவர்கள் கர்மத்தின் கீழாக வருபவர்கள். கர்ம கோட்பாட்டிற்கு அறம் என்பது அடிப்படையல்ல.
நாம் அனைவரும் இந்நிலத்தில் விவாதிக்கப்பட்ட சமய-கோட்பாடுகளை புரிந்துகொள்ளாவிடில், நமது வரலாறை இழந்துவிடுவோம்.
இதற்காகத்தான் ஆண்டுகளாக 'தமிழ்த்தேசியப் பெருவிழா' நிகழ்வை கடந்த 3 ஆண்டுகளாக மே17 இயக்கம் நடத்தி வருகிறது. இதில் பலவேறு தமிழ் அறிஞர்கள் நமது அறிவுச் செல்வத்தை நம்மிடம் எளிய வகையில் பகிர்கிறார்கள். அடுத்தமுறையாவது இம்மாநாட்டில் நீங்கள் பங்கெடுத்தால், இந்த திரிபு அரசியலை புரிந்துகொண்டு அம்பலப்படுத்த இயலும்.
அதாவது பாஜக அரசின் அமைச்சகத்தை கேள்விகேட்கிறாராம் vlog அண்ணாமலை.
"..3 மொழிகளை ஒரு குழந்தை ஏன் கற்க வேண்டும்?.." என்பதுதான் மாணவர்களின் நியாயத்தை பேசும் உண்மையான கேள்வி. அதை கேட்கமாட்டார் vlog-அண்ணாமலை.
மூன்று மொழி கோமாளித்தனத்தின் உண்மைத்தன்மையை பார்ப்போம். மூன்று மொழி கற்றல் என்பது,
1. மாணவனின் தாய்மொழி
2. ஆங்கிலம்/ப்ரஞ்ச் போன்றவை
3. ஏதேனும் ஒரு இந்திய மொழி
"..நாங்கள் 'இந்தி'யை மட்டும் கற்க சொல்லவில்லை, எந்த இந்திய மொழியையும் கற்கலாம் எனச் சொல்கிறோம்.." என்கிறது அண்ணாமலை &கோ கம்பெனி.
இதில் மூன்றாவதாக, இந்தியை தவிர வேறு என்ன மொழிகளை சொல்லித்தர வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன?. அசாமி, வங்காளி, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, சந்தாலி, ஒடியா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எதையாவது 3வது மொழியாக தேர்ந்தெடுக்க ஆசிரியர் நியமனம் நடந்துள்ளதா?
தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பள்ளிக்கூடம் இப்படி ஆசிரியர்களை நியமனம் செய்ததா? தமிழக பள்ளிக்கூடங்களில் 'இந்தி' ஆசிரியரை தவிர வேறு எந்த மொழி ஆசிரியரும் நியமனம் செய்யப்படவில்லை?
இதை எப்படி உறுதியாக சொல்கிறாய் என Vlog அண்ணாமலை கேட்கலாம்.
அவருக்கான பதில், "...தமிழ் மொழியை கற்றுக்கொடுப்பதற்காக எத்தனை தமிழ் ஆசிரியர்களை பாஜக ஆளும் மாநிலங்களில் பணிநியமனம் செய்துள்ளார்கள்?.."
உதாரணமாக,
உ.பி, மகாராஷ்டிரா, பீகார், ம.பி, ஹரியானா, குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களின் பள்ளிகளில் எத்தனை நம்மூர் தமிழ் ஆசிரியர்கள் 3வது மொழியாக தமிழை கற்றுத்தர நியமிக்கப்பட்டுள்ளார்கள்? அப்படியான நியமனம் நடந்த நினைவு யாருக்காவது உண்டா.
NEPபுதிய கல்விக்கொள்கையின் இலக்கின் படி 30:1 எனும் விகிதத்தில் 30 மாணவருக்கு ஒரு ஆசிரியர் எனும் இலக்கை கொண்டுள்ளதை வைத்து கணக்கிடுவோம்.
இந்தி பேசும் மாநிலங்களில் மொத்த மாணவர் எண்ணிக்கை 11.5 கோடி. இதில் 30:1 என்பதை 300:1 என வைத்துக்கொண்டால் கூட ~3,82,000 தமிழ் ஆசிரியர்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே தேவைப்படுவார்கள். இந்த ஆசிரியர்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா என 6 மொழி ஆசிரியர்களாக பிரித்தால் கூட, தமிழ் மொழி ஆசிரியர்களாக ~64,000 தமிழாசிரியர்கள் உடனடியாக தேவை .
இத்தனை தமிழ் ஆசிரியர்களை வட இந்தியாவில் நியமனம் செய்திருக்கிறார்களா? அல்லது இத்தனை தமிழ் படித்த ஆசிரியர்களுக்கு வேலைகிடைக்கும் என உத்திரவாதப்படுத்துவாரா vlog அண்ணாமலை?
தமிழ் மொழியை வளர்க்கிறார் மோடி என ஒப்பாறி வைக்கும் சங்கிகள், ஏன் தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை?
உண்மையில்,
இந்தி பேசும் மாநிலங்களில் 3வது மொழி என எதுவும் நடக்கப்போவதில்லை. தமிழக மாணவன் 3 மொழி என இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும். ஆனால் வடமாநிலத்தவனுக்கு எவ்வித கட்டாயமுமில்லை. தாய்மொழியும், ஆங்கிலமும் கற்றுக்கொண்டு வசதியாக மதிப்பெண் பெற்றுவிடுவான்.
3 மொழி கற்பது என்பதெல்லாம், இந்தியை திணிக்கும் முயற்சி மட்டுமே.. இதை தற்போதே திணிப்பதைவிட 3 ஆண்டு கழித்து திணித்துக்கொள்ளுங்கள் என்கிறார் vlog அண்ணாமலை.
பாஜக பித்தலாட்ட கூட்டத்தில் அண்ணாமலை மட்டும் வேறுமாதிரி இருப்பாரா என்ன?
3 ஆண்டுகளுக்கு முன்பே 2023ல் காங்கிரஸ்-ராகுல் தலைமை, அவர்களின் பாஜக எதிர்ப்பின் மீதான கேள்வி, காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் அதீத ஆதரவு குறித்து கேள்வி எழுப்பியது மே17 இயக்கம்..
எமதருமைத் தோழர் வன்னி அரசு அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்தோம்.
கடந்த 16 ஆண்டுகளாக மே17 இயக்கத்தின் நிகழ்வுகளின் பங்கேற்பாளர், போராட்டக் களங்களில் சகதோழர் என நீண்ட அரசியல் பயணம் தோழர் வன்னிஅரசு உடன் எங்களுக்குண்டு. எத்தனையோ போராட்டங்களில் பங்கெடுத்து காவல்துறை அடக்குமுறைகளை எதிர்கொண்ட நிகழ்வுகள் ஏராளமுண்டு. ஏழு வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இரட்டை ஆவணப்படுகொலை நிகழ்வினைக் கண்டித்த பேரணியில் காவல்துறையின் அடக்குமுறைகளை மீறிச் சென்று பலியானவர்களுக்கு மரியாதை செய்த நிகழ்வு, சென்னை ஸ்வாதி கொலையில் அப்பாவியாக சேர்க்கப்பட்டு படுகொ*லையான ராம்குமாரின் சடலத்தை வைத்து வழக்கு பதிய ராயப்பேட்டை பிணவறையின் முன் மறியல், காவிரி உரிமைப் போராட்டம், 7 தமிழர் விடுதலை, இலங்கை அலுவலக முற்றுகை என நினைவுபடுத்தி எழுத ஏராளமான சம்பவங்களுண்டு. போராட்டக்களத்தில் முழங்கியவற்றை நடைமுறைப்படுத்த, கோரிக்கைகளை நிறைவேற்ற தோழர் வன்னிஅரசுவிற்கு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பொழுது, தமிழ் அடையாளம், தமிழீ**ழம் வெல்க என்று உணர்வெழுச்சியுடன் முழங்கினார். அவரது அமைச்சர் பொறுப்பு தீர்க்கப்படாத பலசிக்கல்களை தீர்த்து வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவருமென நம்புகிறோம்.
பெரும்போராட்டக் களத்திற்கு சொந்தக்காரரான தோழர் வன்னி அரசுவிற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள், தோழர்களுக்கும் எங்கள் மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.
அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்றவும், பங்களிக்கவும் மே17 இயக்கம் என்றென்றும் துணை நிற்கும்.
@VCKofficial_@VanniTamizhVCK@thirumaofficial
2009ல் துரோகம் செய்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி மட்டுமல்ல, அன்றய எதிர்கட்சியாக இருந்த பாஜக இந்த கூட்டணியோடு கைகோர்த்துக்கொண்டு இனப்படுகொலையை ஆதரித்தீர்கள். விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் தனது மூத்த மகனுக்கு சார்லஸ் ஆண்டனி என (போராளியின் நினைவில் பெயரை வைத்ததை மறைத்து,)கிருத்துவ பெயரை வைத்ததால் விடுதலை புலிகள் இயக்கம் கிருத்துவ இயக்கம், கிருத்துவ மிஷனரிகள் ஆதரவுடன் நடத்தப்படும் இயக்கம் என பரப்புரை செய்தது ஆர்.எஸ்.எஸ் -பாஜக. மேலும், 2014ல் மோடி பதவி ஏற்றவுடன், விடுதலைபுலிகள் மீது விசாரணை கொண்டு வர வேண்டும் என ஐ.நாவில் தீர்மானத்தை திருத்தியது பாஜக. அதன்பின் 2014-2026 ஆண்டுகள் வரையில் 12 ஆண்டுகள் இலங்கையின் ராஜபக்சே, ரணில், மைத்ரிபால, கோத்தபய முதல் தற்போதைய அனுரா அரசு வரை தமிழர்கள் மீதான இனபப்டுகொலை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் மீது சர்வதேச விசாரணை நடக்காமல் தடுத்து வைத்திருப்பவர் பாஜகவின் மோடி அரசு என்பதை உங்களால் மறுக்க இயலுமா மரியாதைக்குரிய @VanathiBJP அவர்களே.
இன்றுவரை இலங்கையில் தொடரும் தமிழர் மீதான தாக்குதலை பாஜக-மோடி-நயினார்-அண்ணாமலை என எவரேனும் உங்கள் கட்சியிலிருந்து கண்டித்திருக்கிறீர்களா?
இந்தியராக இருக்கும் தமிழ்நாட்டு மீனவரை கொலை செய்யும் போதுகூட 'இந்தியரை, இந்துவை கொலை செய்த' இலங்கையை கண்டிக்காமல் எதிரி நாடான இலங்கையை ஆதரித்த தேசதுரோகிதானே உங்கள் கட்சியினர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பங்களாதேச நாடுகளின் 'இந்து'க்களுக்கு குடியுரிமை கொடுக்கலாம், ஆனால் இந்துக்கள் என நீங்கள் சொல்லும்
ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது என CAA சட்டத்தில் வரையறை செய்தாரே மோடி, அதற்கு பதில் சொல்ல இயலுமா?
இலங்கை அரசின் மீதான கொள்கையில் உங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான வேறுபாடுகளை சொல்ல இயலுமா?
தமிழர்களை பொறுத்தவரை காங்கிரஸை போல, சிங்கள இனவாதிகளோடு கைகோர்த்து இன்றும் செயல்படும் துரோகியாகத்தானே உங்களை பார்க்கிறார்கள்.
உங்கள் டில்லி தலைமையின் நிலைப்பாடுகளை மாற்ற இயலாத அடிமையாக எத்தனைக் காலம் தமிழர்களுக்கு துரோகம் செய்யப்போகிறீர்கள்?
தமிழினத்தின் மாபெரும் துயரத்தை நினைவேந்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு எமது மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாபெரும் தமிழினத்தின் பெருநிலப்பரப்பான தாய்த் தமிழகத்தில் இருந்து ஆட்சியாளர்களின் ஆதரவு குரல் எழுவது நம்பிக்கையளிக்கிறது.
நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு இலங்கை அரசால் நிகழ்ந்த 'இனப்படுகொலை', 'போர்க்குற்றம்', 'மானுடகுலத்திற்கு எதிரான குற்றம்' எனும் சர்வதேசக்குற்றங்கள் குறித்து பல அறிக்கைகள், ஆவணங்கள் வெளியாகியுள்ளது. அவை,
** ஐ.நாவின் மூவர் குழுவான தருஸ்மன் அறிக்கை,
** ஐ.நாவின் தோல்வி குறித்து நடந்த உள்ளக விசாரணையான 'சார்லஸ் பெட்ரி' அறிக்கை,
** 2011ல் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயம்,
** 2013ல் ஜெர்மன் நாட்டில் ப்ரேமன் நகரில் நடந்த, முன்னாள் ஐ.நா துணைத்தலைவர் தலைமையில் நடந்த தீர்ப்பாயம்,
**சர்வதேச நீதிமான்கள் அமைப்பு,
** ஐ.நாவின் சிறப்பு செயலர்கள் (special rapporteur-independent human right experts),
** யாஸ்மீன் சூக்கா ஆகியோர் தலைமையிலான @itjpsl உள்ளிட்டவர்களின் விசாரணைகள், தீர்ப்புகள், அறிக்கைகள் இந்த குற்றங்களை ஆவணப்படுத்தி விளக்கியுள்ளன. இவற்றின் அடிப்படையில் 2011-2014காலத்தில் அன்றய மரியாதைக்குரிய மறைந்த ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான அதிமுக அரசு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்களை நிறைவேற்றியது. இதன் பின்னர் அவை எவ்வித முன்னேற்றமும் காணவில்லை.
2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எங்களது மே17 இயக்கம் சட்டமன்ற தீர்மானத்தை தமிழ்நாடு நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தது. இதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு முதலாக தமிழ்நாட்டில் 'நினைவேந்தல்', ' நினைவுச்சின்னம்' ஆகியவற்றை பலியான அப்பாவி ஈழத்தமிழ் மக்களுக்காக உருவாக்க வேண்டுமெனும் கோரிக்கையை இன்றளவும் முன்வைத்து வருகிறோம்.
இவையனைத்தையும் உள்ளடக்கி, தங்களது அரசு பின்வரும் கோரிக்கைகளை சட்டமன்றத் தீர்மானமாகவும், அரசின் பணிகளாகவும் நிறைவேற்றக் கோரிக்கை வைக்கிறோம்.
1. 'ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலையே' எனவும்
2. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் 1948-2009வரையிலாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை, வன்முறைகளைக் குறித்து சர்வதேச சுதந்திர விசாரணை (International Independent investigation) மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,
3. தொடர்ந்து நடக்கும் வன்முறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தமிழர்களுக்கு ஐ.நா அவையின் சாசனத்தின் இரண்டாம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள Right-To-Selfdetermination எனும் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் வகையில், சர்வதேச கண்காணிப்புடன் கூடிய 'பொதுவாக்கெடுப்பு' என்பதை புலம்பெயர் உள்ளிட்ட அனைத்து ஈழத்தமிழர்களிடத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும்,
4. ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் இனவெறியோடு தாக்குதல் நடத்தி படுகொலை செய்யும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை கொண்டுவரும் வகையிலும்
தீர்மானங்களை சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும்,
எங்களது மே17 இயக்கத்தின் கோரிக்கை மட்டுமல்லாமல், அனைத்து சனநாயக ஆற்றல்களின் வேண்டுகோளாக
1.தமிழீழ இனப்படுகொலைக்கான 'நினைவேந்தல் நிகழ்வை' தமிழ்நாடு அரசே ஏற்று,
தமிழர் கடற்கரையில் நடத்திடவும்,
2. இந்தப் பேரவலத்தை நினைவுகூறும் வகையில், யூத-ஆர்மீனிய-ருவாண்டா-செர்பிரெனிக-பொஸ்னிய இனப்படுகொலைகளை நினைவுகூறும் நினைவுச் சின்னங்களுக்கு ஒப்ப, தமிழ்நாட்டில் மாபெரும் நினைவுச்சின்னம் எழுப்பப்பட வேண்டும்
என வேண்டுகோள் வைக்கிறோம்.
வரலாற்று சிறப்பு மிக்க இக்கோரிக்கைகளை குறித்து கடந்த 16-மே-2026ல் மே17 இயக்கம் ஊடக சந்திப்பின் வாயிலாக கோரிக்கை வைத்தது.
தமிழினத்தின் வரலாற்று விருப்பமாக உள்ள இக்கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றித்தர வேண்டுகோள் வைக்கிறோம். நன்றி.
இங்ஙனம்
*திருமுருகன் காந்தி*
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்.
The BJP's National Testing Agency NTA which conducts NEET is nothing but a Mafia. They do all kinds of malpractices in exams including NEET, NIFT etc..
BJP projected NEET is to abolish all kinds of malpractices. But in practice, NEET helped all kind of malpractices.
NTA officials do all sort of harassments to reduce the student from TN to get adequate seats in medical colleges. Students were harassed by exam officials for silly things, so as to demoralise the students just before appearing exams. By doing so they want to demoralise the students. Aim of BJP -RSS is to reduce the percentage of South Indian students (esp. TN ) not to get seats in MBBS.
Similar kind of harassments are regularly being done in NIFT entrance exams. This academic year for preliminary exam, in chennai, NTA posted exam center very far from city center. That center was in a pathetic condition without proper air circulation, and many students had dehydration. The location was in an industrial area, where, dust & pollution was high. All the students were packed into one small hall without proper air-conditioning and ventilation. The hall was half the size of the student capacity, with all sides were covered with wall- without windows. They are solely depend on AC, but that didn't worked. The exam was for 6 hours in two shifts (GAT+CAT). Imagine the students have to sit there for 6 hours with 30 mins in advance.
Parents couldn't have any shelter or restroom facilities & have to stand under scorching sun from morning 9:00 to 6:00 (who were appearing for two kind of exams). Imagine the situation of a parent, who to travel from south TN or outside chennai. There wasn't even a hotel in vicinity. Some of the students have to take lunch and continue for second session. This was the condition for female student aspirants.
The torture didn't just stop there.
Second level exam center was posted 25kms away to avadi. There too exam invigilators behaved inhumanly for the parents. The exam center was not sophisticated center to conduct such an exam.
Worst things followed.
In that Practical exam, the students were asked to design a model for particular problem, and they were supplied by materials that can be fixed in the prototype. But when they opened the box the key material was in Hindi.. (For ex- to build a resturent model they have to paste names of food items in menu. For that they have to cut and paste from a news paper which has the food item names. But Hindi News paper was supplied..)
This happened to NIFT aspirants in TN.. Check with other exams. Parents need to riseup to challenge.
Someone have to investigate how NTA conducts exams.
மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பெரியாரிய கொள்கை வழி செல்லட்டும் த.வெ.க ஆட்சி!
திராவிடர் இயக்க சமூகநீதி சிந்தனைகள் வலுப்பெற ஆட்சி நடத்திட வாழ்த்துகள்.
ஒன்றிய பாஜக அரசு திணித்திட முயலும் இந்தி, சமஸ்கிருதம், சனாதனம், சாதியம், பார்ப்பனியம் நிறைந்த சட்டங்களையும், கொள்கைகளையும் தடுத்து நிறுத்தி தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றை காத்திட போராட வாழ்த்துகள்.
@TVKVijayHQ@actorvijay