நாளை மறுநாள் (ஏப்ரல் 16) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படுகிறது. மோடி அறிவிப்பது 33% மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த கூட்டம் என்று. ஆனால் உண்மையில் தமிழ்நாட்டின் எம்.பி. விகிதத்தை குறைக்கும் நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பை தொடங்குவதற்கான கூட்டம் இது.
+
ஒருவேளை இது வேறு மாநிலத்திலோ, வேறு நாட்டிலோ நடந்திருந்தால் இது இன்னேறம் உலகச் செய்தியாகி இருக்கும். கேட்பவர்கள், வாசிப்பவர்கள் நெஞ்சை உலுக்கும் காணொளியாக, செய்தியாக நிரம்பியிருக்கும்.
ஆனால் தமிழ்நாட்டில் இது ஒருவரி செய்தியாகக் கூட எந்த ஊடகத்திலும் வரவில்லை. பொதுசமூகத்தில் பெரிய மனிதர்களாக, நன்கு அறியப்பட்ட்டவர்களாக இருப்பவர்களில் நடிகர் சத்யராஜ் அவர்களை போல ஓரிருவரே நேரில் சந்தித்து பேசியது போல் அல்லாமல், ஒட்டுமொத்த சிவில்-பொதுச்சமூக ஆளுமைகளும் பேசி இருப்பார்கள்.
இதுபோன்ற உரையை மேற்கத்திய போர்க்களங்களில் கண்ட வரலாறை சிலாகித்து வாசித்திருப்போம். புறநானூற்று வரிகளில் வெளிப்பட்ட சங்ககால வீரத்தைக் கண்டு சிலிர்த்து கொண்டாடி இருப்போம்.
முதல்நாள் இரவுவரை பேசி மகிழ்ந்த காதல் கணவரின் உயிரற்ற உடலை, மூலகொத்தளம் மொழிப்போர் ஈகியர் திடலில் கிடத்தி வைத்து, தலைவர்கள் துயரத்தில் துவண்டு இருக்க, தலை நிமிர்ந்து, படபடப்பில்லாமல், துயரத்தின் ஈரம் படியாமல், தடுமாற்றமில்லாமல் கணீரென தோழர் இசைமொழியின் குரல் எழுந்தது,
"... மொழிக்காகவே என் கணவர் உயிர்கொடுத்தார். என் கணவனாக அவரது பிரிவு துயரத்தைக் கொடுத்தாலும், என் மொழிக்காக உயிர்கொடுத்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்..நம் மொழிக்காக வீதிக்கு வரமாட்டீர்களா? " என்று பேசிய தோழர் சிவா திலீபன் அவர்களின் இணையர் தோழர் இசைமொழி நிகழ்த்திய உரை வரலாற்று சிறப்பு மிக்கது. இனிவரும் காலமெல்லாம் பேசப்படும் காதலும், வீரமும் கலந்த புறநானூற்று பதிவு இது.
இது எந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை. எந்த யூட்யூப் சேனலிலும் பதிவு செய்யபப்டவில்லை. எந்தவொரு கவனமும் பெறாமல் குழிதோண்டி புதைக்கப்பட்ட வீரவணக்க உரை இது.
சிவா திலீபனை விதைத்து ஒருவாரம் ஆகிறது. ஆயினும் தோழர் இசைமொழியின் இந்த உரையை கேட்கும் துணிவு எனக்கு மீண்டும் வரவில்லை. இந்த உரையை திராவிடம்-பெரியாரியம் என பேசிய ஊடகத்தினர் பதிவு செய்யவில்லை. பெண்ணியம் பேசியவர்கள் பதிவு செய்யவில்லை. தூய தமிழ்த்தேசியம் என வீராப்பு பேசியவர்கள் பதிவு செய்யவில்லை. எந்தவொரு ஊடகத்தாரும் இது குறித்து சிறு பதிவைக் கூட செய்யவில்லை. இதைவிட வெட்கக்கேடான நிலையை எந்த மொழியிலும், மாநிலத்திலும், நாட்டிலும் காண முடியாது.
தோழர் சிவா திலீபன் உயிர் கொடுத்து உயர்ந்து நின்றார். அவரது இணையர் துயரத்திலும் துவளாது போராட அழைப்பு விடுத்து அதைவிட ஒருபடி உயர்ந்து நிற்கிறார். வாழ்விணையர் என்பது இதுதான். வாழ்வில் எதை பேசினார்களோ, எதை நேசித்தார்களோ, அதற்காகவே வாழ்கிறார்கள். இப்படியான இணையர்களை நாம் எப்போது கண்டோம். இதற்கு முன் எப்போது உலகம் கண்டது? கணவனின் உடல்முன் போராடுவதற்கு உறுதியேற்க அழைக்கும் மனைவியின் எழுச்சி உரையை கேட்டதுண்டா.. கேளுங்கள்.. உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள். இந்த உரையை மூடி மறைத்த ஊடகத்தினரின் முகத்தில் உமிழட்டும் உலகம்..
29மார்ச் மாலை 4 மணிக்கு அடையாறு முத்தமிழ்ப்பேரவையில் மொழிப்போர் ஈகி சிவா திலீபனிற்கு நினைவேந்துகிறோம். சுயமரியாதை உடையோர் அவசியம் பங்கேறக வாருங்கள் ்.
ஓங்குக சிவா திலீபன் புகழ்.
வெல்லட்டும் அவரின் முழக்கம்.
நமக்காய் சென்றவரின், குடும்பத்தோடு நாம் நிற்க வேண்டிய தருணம்..!
தோழரின் ஈகத்தை போற்ற, அவர் கோரிக்கை சுடரை ஒன்றுகூடி உயர்த்தி பிடிக்க தமிழினமே திரண்டு வா..!
மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுடைய படத்திறப்பு
தன்னெழுச்சியாக பல இடங்களில் தோழர் சிவாதிலீபன் ஈகத்திற்கு வீரவணக்க நிகழ்வு நடந்துள்ளது. எதை எதிர்பார்த்து தன்னுயிர் ஈந்தாரோ, அந்த இலக்கு நடக்கிறது. கோவை, கோபி, காங்கேயம், சென்னிமலை, மயிலாடுதுறை, சீர்காழி,பேராவூரணி, கும்பகோணம், சிதம்பரம் என பல ஊர்களில் சிவா திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு நடந்துள்ளன. சனநாயக அமைப்புகள் தோழரின் நோக்கத்தையும், அரசியலையும் அங்கீகரித்து நிகழ்வுகளை நடத்தியுள்ளார்கள். தோழர்
சிவாதிலீபனின் வீரவணக்க பேரணி எழுச்சி முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்க நடந்தது. இவை ஒருவரி செய்தியாக கூட எந்த அச்சு ஊடகத்திலும் பதிவாகவில்லை. சிவாதிலீபனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றி.
சிவா திலீபன் முடிவு உணர்ச்சி வசமான முடிவு, தேவையற்றது எனும் கருத்துகளை ஒதுக்கிவிட்டு, போராட்டக்காரனாய் எதை முன்வைத்தாரோ அதை புரிந்துகொள்ளும் அரசியல் அனுபவம் கொண்ட ஆளுமைகள் வீரவணக்க நிகழ்வை நடத்தியுள்ளனர்.
'விதியே விதியே என் செய்ய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை' என முத்துகுமார் எழுப்பிய முழக்கம் அனைவரையும் போராட்ட களத்திற்கு அழைத்தது. 'முத்துகுமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியது போல என் உடல் தமிழகத்தை எழுப்பட்டும்' என உறங்கி கிடந்தோரை போராட்டத்திற்கு கொண்டு சென்றார் தோழர் செங்கொடி. இவையெல்லாம் தற்கொலையல்ல, உணர்ச்சிவயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளல்ல.
போராடாமல், அணிதிரளாமல் இருக்கிற மக்களை போராட வைக்கவே இவர்கள் ஈகம் செய்தார்கள். முத்துக்குமார், செங்கொடி இருவரும் புரட்சிகர அமைப்பில் அரசியல்வயப்பட்டவர்கள். போராட்ட களத்திற்கு சொந்தக்காரர்கள். செங்கொடியை காஞ்சி மக்கள் மன்றத்து தோழர்களுடன் போராட்ட களத்தில் பார்த்தவன் நான். சிவா திலீபன் 13 ஆண்டாக தோளோடு தோள் நின்று போராடிய தோழன்.
'உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கிறார்கள்' என்பதை புறந்தள்ளி, முத்துகுமார், செங்கொடி, சிவாதிலீபன் ஆகியோரின் 'கோரிக்கை என்ன' என்பதை புரிந்து கொண்டால் இழப்புகளை தடுக்கலாம். அரசியல் அமைப்பின் ஊடாக வளர்ந்த செங்கொடி எச்சமயத்தில் ஈகத்திற்கு தயாராகினார்? அரசியல் ஆழமிக்க கட்டுரையை நாட்கணக்கில் எழுதி, இந்திய அரசின் வாயிலில் வீசியெறிந்து தன்னுயிர் கொடுக்கும் முடிவை முத்துக்குமார் எச்சூழலில் எடுத்தார்? லண்டனில் இருந்து ஜெனீவா சென்று ஐ.நா முன் தன்னை சுடராக்கிய முருகதாசன் ஏன் ஐ.நாவை நோக்கிய அதிஉன்னதமான கட்டுரையை தன் மரண சாசனமாக்கினார்? இவர்கள் உணர்வினால் தான் முடிவெடுத்தார்களா? சிவா திலீபன் கணப்பொழுதில் முடிவெடுக்கவில்லை என அவரது இணையர் இசைமொழி தனது கணவரின் வீரவணக்க உரையில் பகிரங்கமாக பதிவு செய்தாரே.
இவர்கள் அனைவருக்கும் ஒர் ஒற்றுமை உண்டு. போராட்ட களத்திற்கு மக்கள் வரவேண்டும், தமது உரிமைகளை மீட்டிட போராட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். தன்னுடைய கோரிக்கையில் அழுத்தமான பிடிப்பு கொண்டவர்கள். தமது கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்தே முடிவுகளை எடுத்தவர்கள். அரசியல் வயப்பட்டவர்கள் உணர்ச்சிவயப்பட்டு சாவதில்லை. அரசியல்களத்தில் இவ்வாறு தன்னை கொடையாக கொடுப்பவர்களை, தனிமனித வாழ்க்கையில் கடன், தோல்வி, ஏமாற்றம், விரக்தி, நம்பிக்கையின்மை, அவமானம் ஆகியவற்றிற்காக தற்கொலை செய்பவரோடு ஒப்பிடுவது அநாகரீகம். இவையிரண்டும் ஒன்றல்ல. தனிமனித தோல்விகளுக்காக தற்கொலை செய்பவர்களுடன், அரசியல் கோரிக்கைக்காக ஈகம் செய்பவர்களை ஒப்பீடு செய்வது அவர்களை மலினப்படுத்துவதாகும். அரசியல் களங்களில் எவரும் விரும்பி தன்னை அழிப்பதில்லை.
பலநூறு போராட்டங்களில் பங்கெடுத்த சிவாதிலீபன் ஏன் இம்முடிவை இப்போது எடுத்தார் என்பதை துயரத்தின் இடையே அவரது மனைவி, மகள்களால் புரிந்ததால், அனைவரின் முன்னிலையில் மேடையில் பகிரங்கமாக அதை பேசினார்கள். அவர்கள் உங்களிடத்தில் கழிவிரக்கத்தை கேட்கவில்லை. போராட்ட களத்தில் பங்கெடுங்கள் என கேட்கிறார்கள். சமூகவளைதளங்களில் சிவா திலீபனின் ஈகத்தை உணர்ச்சிவயப்பட்டது என்பது முதலாக எழுதப்படும் அறிவுரைகள், அவதூறுகளை அவர் மகள் வாசிக்கவே செய்கிறார். இவை அவரை நிலைகுலைய செய்யவில்லை. அவரது அரசியலும், போராட்ட உறுதியும் மாறவில்லை. கணவனை, தந்தையை இழந்த அக்குடும்பம் வெறுமையோடு வலியை சுமக்கவில்லை. 8 நாட்கள் மரணத்தோடு போராடிய சிவாதிலீபனின் அருகிலிருந்து துயரத்தை எதிர்கொண்டவர்கள். வன்மமும், அவதூறும் அவர்களை மேலும் உறுதியானவர்களாக மாற்றியதை மூலக்கொத்தளம் இடுகாட்டில் சிவா திலீபன் இறுதி நிகழ்வில் அவர் மனைவியும், மகளும் நிகழ்த்திய உரையை கேட்டவர்கள் அறிவார்கள். சிவா திலீபன் கட்டுரை-புத்தகம் எழுதுபவரல்ல. அவர் இணையர் இசைமொழி மேடைபேச்சாளர் அல்ல. அவர் மகள் கோகிலா அரசியல் பேசி நாங்கள் கேட்டதில்லை. ஆனால் மூவரும் வெவ்வேறு வார்த்தைகளில் 'தமிழினமே எழு, தமிழ்மொழிக்காக , தமிழருக்காக போராடு' என்கிறார்கள்
#மொழிப்போர்ஈகி_சிவாதிலீபன் அவர்களுக்கு சென்னை, சாலிகிராமம் பகுதியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு தோழருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிவா திலீபன்
தாய்மொழி தமிழை காக்க ஆதிக்க இந்திக்கு எதிரான போராட்டத்தில் தன்னுயிரை ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய வீரவணக்க உரை.
யூடியூப் இணைப்பு:
https://t.co/bxTPCe8ejX
மே பதினேழு இயக்கம்
9884864010
கவின் ஆணவப்படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய் எனும் முழக்கத்துடன் மே17 இயக்கத்தினரின் சாலைமறியலில், தன் மகள் காவலர்களால் இழுத்துச் செல்லப்படுகிறார். எந்த ஒரு தந்தைக்கும் இது வருத்தத்தை, கோபத்தை கொடுத்திருக்கும். தன் மகள் ஏன் போராட்டத்தில் இறங்கி அல்லல் படவேண்டுமென ஆதங்கம் வரும். ஆனால் சிவா திலீபன் அப்படியெல்லாம் கோபம் கொள்ளவில்லை. "மறியல் போராட்டத்திற்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள்?" என்கிறார். இருநூறுக்கும் சற்று குறைவாக வந்திருந்தார்கள். கால அவகாசம் குறைவு, வேலைநாள் அதனால் திரட்ட இயலாமல் போய்விட்டது என்ற காரணத்தை அவரால் ஏற்க இயலவில்லை. பெருந்திரளாய் தமிழர்கள் திரளாமல் தீர்வு எப்படி கிடைக்கும் என அங்கலாய்த்தார். அந்த சாலை மறியல் சிவா திலீபன் அன்பு மகளான கோகிலாவின் திருமண காலகட்டத்தில் நடந்த போராட்டம். அதில் மகள் காயம்பட்டதெல்லாம் அவருக்கு கவலையளிக்கவில்லை.
சாதியொழிப்பு போராட்ட களத்தில் முன்னனியில் தன்மகள் நிற்பதில் அவருக்கு பெருமை. தன் மகளுக்கு சாதி-மறுப்பு திருமணத்தை சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணமாக செய்து, ஓராண்டு கூட முடியவில்லை.
தொடர்ச்சியாக நடந்த தூய்மைப்பணியாளர் போராட்டத்தில் அன்றாடம் மாலை முதல் இரவுவரை சிவா திலீபனின் இணையர் இசைமொழி பங்கெடுத்து நேரம் கழித்தே வீடுதிரும்புவார். மனைவி போராட்ட களம் சென்று வருவது அவருக்கு மனத்தடையை கொடுத்ததில்லை. எத்தனை பேர் ஆதரித்து வருகிறார்கள் என கேட்பார். பால-ஸ்*தீன ஆதரவு பேரணியே அவர் மிக மகிழ்வுடன் பங்கெடுத்த நிகழ்வு. ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கெடுத்த பேரணியில் பெருமையுடன் நடந்து வரும் படங்களை காணலாம். மாஞ்சோலை, அனகாபுத்தூர் வீடு இடிப்பு என நடந்த போராட்டங்களில் போதுமான மக்கள் பங்கேற்பு இல்லை என்பது அவருக்கு சோர்வை கொடுத்தது. பாசிஸ்டுகளை எதிர்த்த போராட்டங்களில் பெருந்திரளாய் தோழர்கள் பங்கெடுப்பதில்லை என்பது அவரை துன்புறுத்தியது. இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆளுனர் எதிர்ப்பு போராட்டம், நீட் எதிர்ப்பு என எவையும் கூர்மையடையவில்லை என்பதை பேசி வந்திருந்தார்.
ரயில்வேயில் தமிழ் தொழிலாளர்களுக்கு வேலைகிடைப்பதில்லை என்பது குறித்து 2015ம் ஆண்டில் ஐ.சி.எப் அப்ரண்டிஷ் போராட்டத்திற்கு மே17 தோழர்களுடன் சிவா பங்கெடுத்துள்ளார். இரு ஆண்டுகளாக நடந்த போராட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் முன் தீக்குளித்து இறந்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கபப்ட்டு நடந்த போராட்டத்தில் மே17 பங்கெடுத்திருந்தது. இவையனைத்தையும் சிவா திலீபன் அறிந்தவர். இதேபோல ஆவடி தொழிற்சாலையில் தமிழர் வேலை பறிபோவது குறித்த போராடங்களில் அவர் பங்கெடுத்துள்ளார்.
பெருதிரளாய் தமிழர்கள் திரளாமல் போராட்டம் வெல்லாது என்பார். தமிழுக்காக தமிழன் திரளமாட்டானா என கவலைகொண்டார். சிவா திலீபன் இறுதி ஊர்வலத்தில் அவரது இணையர் சொன்ன வார்த்தைகள் இதை சுட்டிக்காட்டும், " நம் மொழிக்காககவாவது வர மாட்டீர்களா..." என கேட்டார். சிவா திலீபனின் மகள் கோகிலா, தன் தந்தை பாசிசத்தை வெல்வதற்காக, போலி தமிழ்த்தேசியவாதிகளை அம்பலப்படுத்த தன்னுயிர் ஈகம் செய்திருக்கிறார் என்றார்.
இபப்டியான ஒரு சிந்தனையாளனுக்கு, களப்போராளிக்கு, குடும்ப தலைவனுக்கு, தமிழ் மொழி நேயனுக்கு, மொழிப்போர் கண்ட பெருவீரனுக்கு நினைவேந்தல் நிகழ்வும், படத்திறப்பும் நடக்க இருக்கிறது.
இந்நிகழ்வில் பங்கெடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஒரு தன்னலமற்ற போராளிக்கு தமிழினம் மரியாதை செய்ய வேண்டிய நிகழ்வு. இந்நாளிலும் உங்களுக்கு தனிப்பட்ட பணிகளே முக்கியமென நீங்கள் நினைத்தால், உங்களை போன்றோரின் பங்கேற்பற்ற நிலையை எண்ணி வருந்தியே சிவா திலீபன் உயிர்விட துணிந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை பெருந்திரளாய் போராட்டங்களில் பங்கெடுத்திருப்பீர்களென்றால், சிவா திலீபன் நம்மோடு இன்று உரையாடி கொண்டிருப்பார். எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள் நடத்திய சமயத்தில் அதுகுறித்து பதிவுகளையோ, பகிர்வையோ கூட செய்யாத பலர் சிவா திலீபன் மரணம் தேவையற்றது, இறந்து சாதிக்க இயலாதென என்றெல்லாம் எழுதி பார்க்க முடிந்தது, 'குடும்பம் உள்ளது, ஆகவே உயிர்விடாதீர்கள்' என பதிவு எழுதியவர்கள், இதே போல, போராட்ட நிகழ்வுகளையும் ஆதரித்து பதிவு செய்து, களத்தில் பங்கெடுத்திருந்தால் சிவா திலீபன் தன் குடும்பத்தோடு அன்றாட வாழ்வை தொடர்ந்திருப்பார். இதுவரை போராட்டங்கள், நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்காமல் அன்றாட வாழ்வில் மூழ்கி இருக்கும் நண்பர்களே, உங்களுக்காகவும் சேர்த்தே தனது வாழ்வை கொடுத்திருக்கிறார் சிவா திலீபன். அத்தகைய உன்னத மனிதனுக்கு மரியாதை செய்ய வாருங்கள்.
நாள் :29-03-2026 ஞாயிறு
மாலை 4:00
இடம்: முத்தமிழ்பேரவை, அடையாறு பாலம் அருகில், அடையாறு-ஆர்.ஏ.புரம்
இச்செய்தியை பகிர வேண்டுகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு வீரவணக்க கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை ஒசூரில் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நடத்தியுள்ளன. முன்னதாக கோவையில் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் கோவையின் முற்போக்கு இயக்கங்கள் நடத்தின. மயிலாடுதுறையில் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் தலைமையில் நிகழ்வு நடத்தப்பட்டது. முனைவர் ஜீவா பேராவூரணியில் செய்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் தோழர் கந்தசாமி, தோழர் கி.வே.பொன்னையன் கி.வே.பொன்னையன் மற்றும் பெரியாரிய, விவசாய அமைப்பு தோழர்கள் நடத்தினர். காங்கேயத்தில் பெரியாரின் பெண்கள் அமைப்புடன் புரட்சிகர இளைஞர் முன்னனி நடத்தியது. சீர்காழியில் தோழர் பெரியார் செல்வம் ஒருங்கிணைப்பில் நடந்தது. கும்பகோணத்தில் தோழர் குடந்தை அரசன், விடுதலை தமிழ்ப்புலிகள் சார்பில் நடத்தப்பட்டது. மேலதிகமாக நடந்த செய்திகளை/ தகவல் விவரங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழர் சிவா திலீபன் எதை எதிர்பார்த்தாரோ அந்த எழுச்சிக்கு உரம் சேர்க்கும் வகையில் இவை அமைந்துள்ளது என்பது நம்பிக்கையளிக்கிறது.
தமிழ் வெல்லும்.
தாய்மொழி தமிழை காக்க ஆதிக்க இந்திக்கு எதிரான போராட்டத்தில் தன்னுயிரை ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் தோழர் சிவா திலீபன் அவர்களின் மகள் தோழர் கோகிலா அவர்கள் ஆற்றிய வீரவணக்க உரை.
மே பதினேழு இயக்கம்
9884864010
தாய்மொழி தமிழை காக்க ஆதிக்க இந்திக்கு எதிரான போராட்டத்தில் தன்னுயிரை ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் அவர்கள் ஆற்றிய வீரவணக்க உரை.
யூடியூப் இணைப்பு:
https://t.co/AuDNcxTuMj
மே பதினேழு இயக்கம்
9884864010
துணிச்சல், கம்பீரம் எங்களை விட்டு சென்று விட்டது.
என்ன சொல்வது அண்ணா, அப்பா தோழர்...
எல்லாவுமாய் பழகி விட்டுச் செல்ல எப்படி மனசு வந்தது💔💔💔😭😭
வீரவணக்கம் அண்ணா
வீரவணக்கம் தோழர்
தீ பரவும்...
தமிழ் வெல்லும்...
தமிழீழம் வெல்லும்...
இந்தி அழிப்புப் போராட்டம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சவுத் பீட் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
முழுமையான நேர்காணல்:
https://t.co/JrpkLiuLkW
மே பதினேழு இயக்கம்
9884864010