எழுத்தாளர் பூமணியின் படைப்புகள் என்னுடைய கல்லூரி காலங்களில் அறிமுகமாகின. 'பிறகு', மற்றும் 'வெக்கை' ஆகிய படைப்புகளின் வழியே அவரது படைப்புலகம் எனக்கு புதுகதவுகளை திறந்தன. அவரை நேரில் சந்திக்க வேண்டுமெனும் விருப்பமிருந்தாலும், இயலாது போயிற்று. மாணவப்பருவத்தில், சமூகம் குறித்த ஆழமான புரிதலைக் கொடுத்து பண்படுத்திய படைப்புகள் அவருடையவை.
தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான படைப்பாளியாக மிளிர்ந்த தோழர் பூமணிக்கு எனது தலைதாழ்ந்த மரியாதையையும், புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
18 மாதங்களாக எழுதிய அறிக்கையை ஒவ்வொரு 15 நாளும் Zoom Meeting போட்டு பேசி ஒப்புதல் பெற்றுதான் அதை எழுதினார்கள். எழுதிய அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அதற்குப் பிறகு அந்த அறிக்கை அவர்களுக்கு பிடிக்காமல் போனது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளவே மறுத்தார்கள்.
https://t.co/ZOZHdRjLj5
சாராயக்கடையை துரத்துவதற்கு மாணவர் படை எழுகிறது, சாராயக்கடையை காப்பதற்கு காவல்துறை வருகிறது.
எத்தனை வலியை அனுபவித்திருந்தால் மாணவர்கள் தன்னெழுச்சியாக சாராயக்கடையை அகற்ற களமிறங்கி இருப்பார்கள். அரியலூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியாளர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இந்த மாணவர்களின் கோரிக்கைக்காக ஆதரவு களம் காணாத சட்டமன்ற உறுப்பினரும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்..
மாணவர்களை போராட்டத்திற்கு தள்ளிய அரசு நிர்வாகிகள் வெட்கி தலைகுனிய வேண்டும். அவர்களது குழந்தைகள் இதுபோன்ற சூழலில் பள்ளி கல்வி கற்கஅனுமதிப்பார்களா?
தவெக அரசு பள்ளி, மருத்துவமனை அருகே இருக்கும் சாராயக் கடைகளை மூடுவதாக அறிவித்ததே என்னவாயிற்று? இந்த சம்பவங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
அண்ணாமலையின் இரட்டைவேடம்
கரூர் மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் கோவில் சொத்துக்கள் என்றபெயரில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் (விவசாய+நகர்புற) கையகப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில் கவனம் எடுக்க வேண்டியதென்பது, இந்த நிலங்கள் இனாம் நிலங்கள் வகைப்பட்டதாகும். கோவில் சொத்துக்கள் ஒருபுறமாகவும், இனாம் வகை சொத்துக்கள் மறுவகையாகவும் அடையாளமாகி இருந்தாலும், இனாம் நிலங்களை கையகப்படுத்துவதற்குரிய பணியை சேகர்பாபு முன்னெடுத்தார். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், விவசாயிகள், சாமானிய வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இனாம் நில ஒழிப்புச் சட்டம் 1963 காலத்தில் கொண்டுவரப்பட்டது. இனாம்தார், ஜமீந்தார் நில உடமைக்கு எதிராக அறிஞர் அண்ணா தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. கம்யூனிஸ்டு கட்சின் போராட்டம் தீவிரமாக இருந்தன. அறிஞர் அண்ணாவின் இனாம் ஒழிப்பு நூல் புகழ்பெற்றது. அதில் இனாம்தார் வகையறாக்கள் வாயிலாக பார்ப்பனர்கள் பெறும் வசதி-வாய்ப்புகளை விவரித்திருப்பார். லட்சக்கணக்கான இனாம் பட்டங்கள் வாயிலாக தமிழகத்தின் பெரும் உழவு நிலங்கள் பார்ப்பனர் பயன்பாட்டில் இருப்பதை சுட்டிக்காட்டுவார். இந்த பின்னனியை நிராகரித்துவிட்டு திரு சேகர்பாபு இனாம் நிலங்களையும், கோவில் சொத்துக்கள் என கையகப்படுத்தினார். இவ்வகையில் இந்த நிலங்களின் மதிப்புகள் பூஜ்ஜியமாக்கப்பட்டு, விற்பனைக்கோ, மாறுதலுக்கோ தகுதியற்றதாக மாற்றப்பட்டன. வீடுகள், இடிக்கப்பட்டன, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. சென்னையில் திருநீர்மலை அருகில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கூட இவ்வகையில் சேர்க்கப்பட்டு மதிப்பிழந்தன. கொங்குப்பகுதியில் விவசாயப் போராட்டங்கள் தீவிரமாகின. ஈரோட்டில் ஈழத்தமிழர் குடியிருப்பு கூட இவ்வகையில் நீக்கப்பட இருந்தது. சென்னை எம்.ஜி.ஆர்.நகர், ராமாபுரம் பகுதிகளில் கார்ணீஸ்வரர் கோவில் நிலங்களென்று ஏழைகளின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டன.
ஆனால் இவையெல்லாம் இனாம் வகைப்பட்டவை என இல வகைப்பாட்டில் இன்றளவ வரையறை செய்யபப்ட்டுள்ளவை. இனாம் ஒழிப்பிற்கு பின்னர் இவை தனியார் சொத்துகளாக மாறியவை. விவசாய நிலங்களாக, குடியிருப்புகளாக மாறியவை.
இவற்றினை கையகப்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் சென்னையில் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த சமயத்தில் மே17இயக்கமும் பங்கெடுத்தது. தோழர் ஈசன் உள்ளீட்ட பல தோழர்களின் ஒருங்கிணைப்பில் பல நூறு விவசாயிகள் பங்கெடுத்த போராட்டம் ஒடுக்கப்பட்டது. பின்னர் தேர்தலுக்கு குன்பு ஈசன் கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இச்சமயத்தில் மே17இயக்கம் தனித்து இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்தது. இதற்கான ஊடகச் சந்திப்பு, பரப்புரையை செய்தது. திமுகவிலிருந்த சனநாயக ஆற்றல்கள் சிலருக்கும் இந்த விவரங்களை அறிக்கையாக அனுப்பி இந்த நடவடிக்கைகளை தடுத்த கோரிக்கை வைத்தோம். எவையும்நடைமுறையாகவில்லை.
இதற்கும் அண்ணாமலையின் பதிவிற்கும் என்ன தொடர்பென நீங்கள் கேட்கலாம்?
போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அண்ணாமலை பாஜகவின் துணையோடு இந்த கையகப்படுத்தலை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தார். பாஜக-இந்துமுன்னனி-RSS அழுத்தத்தினால் சேகர்பாபு இவ்வாறான மக்கள் விரோத நடவெடிக்கையை மேற்கொண்டாரா என்பது தெரியாது, ஆயினும், இதையேன் அவர் இந்துத்துவ ஆற்றல்களுக்கு ஆதரவாக செய்யவேண்டுமெனும்கேள்விய எழும்பியது.
அண்ணாமலையின் இரட்டைவேடம் இச்சமயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். சேகர்பாபு நிலங்களை கையகப்படுத்தியபோது வரவேற்றவர், தோழர் ஈசன் கைதானபோது கண்டிக்காதவர்., தற்போது நல்லவரைப்போல அறிக்கை வெளியிடுகிறார்.
தற்போதும் கரூர் மாவட்டத்தை மட்டும் கவனமெடுக்கும் இவர் திண்டுக்கல், ஈரோடு, நாகை, என இதர மாவட்டங்களை குறித்து பேசவில்லை. அண்ணாமலைக்கு கரூர் மாவட்ட அரசியல் அவசியமானது. மற்றபடி அவருக்கு விவசாயிகள் மீதோ, இனாம்நில உரிமையாளர் மீதோ அக்கறையோ அல்ல. கடந்த ஆண்டு ஒரு நிலைப்பாடு, இவ்வாண்டு எதிர் நிலைப்பாடு என இரட்டை வேடம் கொண்ட அண்ணாமலையை இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சாமானிய மக்களைவிட கோவில்களோ, அதன் சொத்துக்களோ முக்கியமல்ல. தமது உழைப்பினால் சாமானிய மக்கள் இந்த இனாம் நிலங்களை பொருளாதார மதிப்புடையதாக மாற்றி இருக்கிறார்கள். இதற்கு கோவில்-சாமி எனும் பெயரில் உரிமை கோருவது நேர்மையற்றது. கோவிலை உருவாக்கியவன் உழைப்பாளி தமிழன். குடியான தமிழனின் சொத்தின் மீது சொந்தம் கொண்டாட எந்தக் கடவுளுக்கும் உரிமையில்லை.
(அண்ணாமலைக்காக சில போலி திராவிட ஐடிக்கள் கிளம்பி வரலாம்.. :) )
அண்ணாமலையின் இரட்டைவேடம்
கரூர் மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் கோவில் சொத்துக்கள் என்றபெயரில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் (விவசாய+நகர்புற) கையகப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில் கவனம் எடுக்க வேண்டியதென்பது, இந்த நிலங்கள் இனாம் நிலங்கள் வகைப்பட்டதாகும். கோவில் சொத்துக்கள் ஒருபுறமாகவும், இனாம் வகை சொத்துக்கள் மறுவகையாகவும் அடையாளமாகி இருந்தாலும், இனாம் நிலங்களை கையகப்படுத்துவதற்குரிய பணியை சேகர்பாபு முன்னெடுத்தார். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், விவசாயிகள், சாமானிய வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இனாம் நில ஒழிப்புச் சட்டம் 1963 காலத்தில் கொண்டுவரப்பட்டது. இனாம்தார், ஜமீந்தார் நில உடமைக்கு எதிராக அறிஞர் அண்ணா தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. கம்யூனிஸ்டு கட்சின் போராட்டம் தீவிரமாக இருந்தன. அறிஞர் அண்ணாவின் இனாம் ஒழிப்பு நூல் புகழ்பெற்றது. அதில் இனாம்தார் வகையறாக்கள் வாயிலாக பார்ப்பனர்கள் பெறும் வசதி-வாய்ப்புகளை விவரித்திருப்பார். லட்சக்கணக்கான இனாம் பட்டங்கள் வாயிலாக தமிழகத்தின் பெரும் உழவு நிலங்கள் பார்ப்பனர் பயன்பாட்டில் இருப்பதை சுட்டிக்காட்டுவார். இந்த பின்னனியை நிராகரித்துவிட்டு திரு சேகர்பாபு இனாம் நிலங்களையும், கோவில் சொத்துக்கள் என கையகப்படுத்தினார். இவ்வகையில் இந்த நிலங்களின் மதிப்புகள் பூஜ்ஜியமாக்கப்பட்டு, விற்பனைக்கோ, மாறுதலுக்கோ தகுதியற்றதாக மாற்றப்பட்டன. வீடுகள், இடிக்கப்பட்டன, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. சென்னையில் திருநீர்மலை அருகில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கூட இவ்வகையில் சேர்க்கப்பட்டு மதிப்பிழந்தன. கொங்குப்பகுதியில் விவசாயப் போராட்டங்கள் தீவிரமாகின. ஈரோட்டில் ஈழத்தமிழர் குடியிருப்பு கூட இவ்வகையில் நீக்கப்பட இருந்தது. சென்னை எம்.ஜி.ஆர்.நகர், ராமாபுரம் பகுதிகளில் கார்ணீஸ்வரர் கோவில் நிலங்களென்று ஏழைகளின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டன.
ஆனால் இவையெல்லாம் இனாம் வகைப்பட்டவை என இல வகைப்பாட்டில் இன்றளவ வரையறை செய்யபப்ட்டுள்ளவை. இனாம் ஒழிப்பிற்கு பின்னர் இவை தனியார் சொத்துகளாக மாறியவை. விவசாய நிலங்களாக, குடியிருப்புகளாக மாறியவை.
இவற்றினை கையகப்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் சென்னையில் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த சமயத்தில் மே17இயக்கமும் பங்கெடுத்தது. தோழர் ஈசன் உள்ளீட்ட பல தோழர்களின் ஒருங்கிணைப்பில் பல நூறு விவசாயிகள் பங்கெடுத்த போராட்டம் ஒடுக்கப்பட்டது. பின்னர் தேர்தலுக்கு குன்பு ஈசன் கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இச்சமயத்தில் மே17இயக்கம் தனித்து இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்தது. இதற்கான ஊடகச் சந்திப்பு, பரப்புரையை செய்தது. திமுகவிலிருந்த சனநாயக ஆற்றல்கள் சிலருக்கும் இந்த விவரங்களை அறிக்கையாக அனுப்பி இந்த நடவடிக்கைகளை தடுத்த கோரிக்கை வைத்தோம். எவையும்நடைமுறையாகவில்லை.
இதற்கும் அண்ணாமலையின் பதிவிற்கும் என்ன தொடர்பென நீங்கள் கேட்கலாம்?
போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அண்ணாமலை பாஜகவின் துணையோடு இந்த கையகப்படுத்தலை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தார். பாஜக-இந்துமுன்னனி-RSS அழுத்தத்தினால் சேகர்பாபு இவ்வாறான மக்கள் விரோத நடவெடிக்கையை மேற்கொண்டாரா என்பது தெரியாது, ஆயினும், இதையேன் அவர் இந்துத்துவ ஆற்றல்களுக்கு ஆதரவாக செய்யவேண்டுமெனும்கேள்விய எழும்பியது.
அண்ணாமலையின் இரட்டைவேடம் இச்சமயத்தில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். சேகர்பாபு நிலங்களை கையகப்படுத்தியபோது வரவேற்றவர், தோழர் ஈசன் கைதானபோது கண்டிக்காதவர்., தற்போது நல்லவரைப்போல அறிக்கை வெளியிடுகிறார்.
தற்போதும் கரூர் மாவட்டத்தை மட்டும் கவனமெடுக்கும் இவர் திண்டுக்கல், ஈரோடு, நாகை, என இதர மாவட்டங்களை குறித்து பேசவில்லை. அண்ணாமலைக்கு கரூர் மாவட்ட அரசியல் அவசியமானது. மற்றபடி அவருக்கு விவசாயிகள் மீதோ, இனாம்நில உரிமையாளர் மீதோ அக்கறையோ அல்ல. கடந்த ஆண்டு ஒரு நிலைப்பாடு, இவ்வாண்டு எதிர் நிலைப்பாடு என இரட்டை வேடம் கொண்ட அண்ணாமலையை இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சாமானிய மக்களைவிட கோவில்களோ, அதன் சொத்துக்களோ முக்கியமல்ல. தமது உழைப்பினால் சாமானிய மக்கள் இந்த இனாம் நிலங்களை பொருளாதார மதிப்புடையதாக மாற்றி இருக்கிறார்கள். இதற்கு கோவில்-சாமி எனும் பெயரில் உரிமை கோருவது நேர்மையற்றது. கோவிலை உருவாக்கியவன் உழைப்பாளி தமிழன். குடியான தமிழனின் சொத்தின் மீது சொந்தம் கொண்டாட எந்தக் கடவுளுக்கும் உரிமையில்லை.
(அண்ணாமலைக்காக சில போலி திராவிட ஐடிக்கள் கிளம்பி வரலாம்.. :) )
மோதுவது என முடிவு செய்துவிட்டால் உடைத்து நொறுக்குவது தானே உத்தமம்.
DMK ITWing ஆரம்பிக்கலாமா?
வியாபாரம் என்றால் விஜய் படத்தை தொடர்ந்து தயாரிப்பார்கள்..ஆட்சி தோல்வி பற்றி கவலை இல்லாமல் சன் டிவில எல்லா ஞாயிறும் விஜய் படத்தை போட்டு TRP ஏற்றுவார்கள்..
எத்தனை பகுத்தறிவு தொடர்கள் சன் டிவி ஒளிபரப்பு செய்திருக்கு? சர்வதேச அளவில் சாம்ராஜ்யம் கட்டியவர்களுக்கு எது தடையாக இருக்கு?
அனைத்து ஒப்பந்தங்களிலும் ஊழல், கார்ப்பரேடுக்கு தூபம் போடுவது, அரசு நிறுவனங்கள் தனியார்மயம், சொந்த மக்கள் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குவது, தூய்மை பணியாளர்களை குப்பையாக வீசி எறிந்தது என உழைக்கும் மக்களுக்கு எதிராக குறிப்பாக சொல்லணும்னா பெரியாரின் பாட்டாளி திராவிடத்துக்கு எதிராக அனைத்தையும் செய்தார்கள்.
தற்போது தோல்வியடைந்த காரணத்தை தேடாமல் கூட்டணி கட்சிகளின் நம்பிக்கை இழந்து அடிச்சு சேர்த்த சொத்துகளை தங்கள் வாரிசுகள் வழியே தவெகவில் தஞ்சம் புகுந்து காப்பாற்றவது என மலிலான கீழ்தரமான அரசியலை செய்துவருகிறார்கள்.
இவற்றை பற்றி தோழர் திருமுருகன் கேள்வி கேட்டால் ஆதவ் கிட்ட பணம் வாங்கிட்டார்னு திமுக ஐடி விங் வெச்சு அவதூறு பரப்புறானுங்க.. ஏற்கனவே யூடியூப் அடிமைகளை வெச்சு பார்ப்பன மருதையன் பேச்சு கேட்டு நடு தெருவுல நிக்குறது பத்தாதுனு மறுபடியும் பாழும்கிணத்துக்கு தயாராகி வருகிறது திமுக.
அதுசரி திமுகவுக்கே படியளந்தது மார்ட்டின் குடும்பம் தான் என ஆவணங்கள் இருக்கே..திமுக இணைய கூலிப்படைக்கு தெரியுமா? ஓனரை எதிர்த்து பேச பயமா?
பெரியாரை இழிவாக பேசிய சீமானுடன் கொஞ்சி குலாவுவது அறுவுறுப்பாக இல்லையா.. மானம் அறிவுள்ள ஒருவன் இப்படி கீழ்த்தரமாக நடக்க முடியுமா? அதிமுக கூட்டணிக்கே நூல் விட்ட யோக்கிய சிகாமணிகளாச்சே நீங்கள்..
இதை எல்லாம் கண்டும் காணாமல் இருக்க திருமுருகன் காந்தியோ மே17 இயக்கமோ திமுக போடும் எலும்புத் துண்டுக்கு வாலாட்டுற மருதையன்களோ சீமான்களோ கிடையாது.
பெரியாரின் உழைக்கும் மக்களுக்கான திராவிடத்தை தாங்கி பிடிப்பவர்கள்.. திராவிட கைத்தடியின் மீது தமிழ்த்தேசிய இலக்கை அடைய துடிப்பவர்கள். கட்சி திமிரெல்லாம் எங்ககிட்ட வேணாம் வாலை சுருட்டிகிட்டு இருப்பது நல்லது.
கீழடியை சுற்றி நடக்கும் சதிகளை விவரிக்கிறார் மூத்த ஆய்வாளர் ஐயா சாந்தலிங்கம். கடந்த ஞாயிறு மே17 இயக்கம் நடத்திய மதுரை கருத்தரங்கில் ஐயா சாந்தலிங்கத்தின் விரிவான உரை.
அனைத்து தமிழர்களும் அறியவேண்டிய சதிகளை விவரிக்கிறார்.
தமிழினமே கண்விழித்துப் பார் எனும் வகையில் நடக்கும் ஆரிய சதிகளை உடைத்து, தமிழின் தொல்லியல் சொத்துக்களைப் பாதுகாக்க வாரீர்!
காணொளி- https://t.co/bwXnODC2Yb
இன்றய நாளிதழ்களில் 'சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் சங்கமாக இருக்கும் க்ரெடாய் CREDAI விடுத்த அறிக்கை பிரதான செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அது என்ன சொல்கிறது?
பள்ளிக்கரணையை ஒட்டி இருக்கும் சதுப்பு நிலப்பகுதிகளின் ராம்சர் நிலப்பரப்பினை பாதுகாக்கும் வகையிலான அறிவிப்பை திரும்பப்பெற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது. பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நிலப்பகுதி சென்னையின் சூழலியல் கட்டமைப்பின் முகமுக்கியமான அங்கம். சென்னை வெள்ளம், சென்னையின் நீர்பிடிப்பு, சென்னைக்கான சூழலியல் பாதுகாப்பு, சர்வதேச பறவைகள் வாழிடம், சதுப்பு நில உயிரிகளுக்கான தனித்துவமான நிலப்பரப்பு என எண்ணற்ற காரணங்களைக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு பள்ளிக்கரணை ராம்சர் பகுதி.
ஏற்கனவே இப்பகுதியின் பெரும்பாலான நிலப்பரப்புகள், நீர்பிடிப்பு பகுதிகள், நீர் வெளியேற்ற பகுதிகள் 'ரியல் எஸ்டேட்' கம்பெனிகளால் சூறையாடப்பட்டன. ஒன்றிய அரசின் கடல்சார் ஆய்வுக்கழகம், பறக்கும் ரயில்-மெட்ரோ ரயில் திட்டம், குப்பைகள் சேமிக்கும் கழிவு கிடங்கு என இந்த அற்புதமான, தமிழ்நாட்டிலேயே தனித்துவமான நிலப்பரப்பு அழிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய நிலத்தையாவது காக்க வேண்டியப்பெரும்பொறுப்பு நமக்குண்டு. இந்நிலையில் இந்த ஈகோ-சென்சிடிவ் பகுதியில் பலமாடி கட்டிடங்களையும், பெரும் முதலீடுகள் கொண்ட கம்பெனிகளுக்கான கட்டிடங்களை கட்ட பெருநிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது
கடந்த மாதம் இந்த அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த இடத்தில் பெரும் முதலீடு செய்து லாபமீட்ட திட்டமிட்டிருந்த Brigade-Morgan Heights அதிஆடம்பர வீடுகட்டும் திட்டத்திற்கு அனுமதி ரத்தானது. தவெக அரசின் இந்த அறிவிப்பினால் பள்ளிக்கரணையின் பாதுகாக்கப்பட்ட பகுதி இந்த பன்னாட்டு நிறுவனத்தின் 2000கோடி திட்டத்தின் கீழே சீரழிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வளர்ச்சிக்கான திட்டமல்ல, மாறாக, தனியார் பன்னாட்டு நிறுவனத்தின் லாபநோக்கத்திற்கான திட்டம். ஏற்கனவே காஸாக்ராண்ட் நிறுவனத்தினால் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சீரழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக இப்பகுதியில் ஐ.டி கம்பெனிகள் அமைக்க OMR IT corridor எனும் பெயரில் பெருவாரியான சதுப்பு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் சென்னையின் தட்பவெட்ப நிலைகள் மாறுபாடும் கண்டது. இந்த வகையில் தற்போது ப்ரிகேட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தடை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த பின்னனியில் CREDAI அமைப்பு வெளியிட்ட அறிக்கையை 'தி இந்து' நாளிதழ் உள்ளிட்டவை முன்னனி செய்தியாக்கியுள்ளன. இந்த க்ரெடாய் அமைப்பு 'பிரிகேட் நிறுவனத்திற்கு சாதகமாகவும், 75,000 கோடி ரூபாய் வணிகம் செய்ய தகுதியான நிலம் இந்த தடையின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புலம்பியுள்ளது. சூழலியல் குறித்து எவ்வித அக்கறையும், அதற்கான எவ்வித பங்களிப்பும் செய்யாத ரியல் எஸ்டேட் பெருநிறுவன கம்பெனிகளின் ஒப்பாறிகளை முன்னனி ஊடகங்கள் செய்தியாக்கியுள்ளன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் கொள்ளையிடப்படும் சூழலியல் சிதைப்பு திட்டங்கள் குறித்து மாண்பமை நீதிமன்றங்கள் அக்கறை காட்டியதில்லை. இதே ராம்சார் சதுப்பு நிலத்தில் தனக்கான வணிகத்தை செய்வதற்கு ஒப்புதல் கொடுத்த அதிகாரிகள், அதே பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதியில் இருக்கும் ஏழைமக்களின் வீடுகளை இடிப்பதற்கு நீதிமன்ற தீர்ப்புகளை பெற்றுள்ளது. ஏழைகளின் வீடுகளை இடிக்க நீதிமன்றம் வெட்கப்படுவதில்லை. அதேசமயம், சதுப்பு நிலத்தை பாதுகாக்க கோரும் பொதுநல வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது. இந்த கட்டிட அனுமதிக்கு சூழலியல் அனுமதியை 2025ல் கொடுத்த 3 நாட்களில் CMDA அனுமதியை கொடுத்ததும் இத்தனை விரைவாக CMDA வேலை செய்வது ஆச்சரியமான விடயம் தான். லஞ்சலாவண்யத்திற்கு பேர்போன CMDA பள்ளிக்கரணை சதுப்பு நிலம்குறித்தெல்லாம் அக்கறை கொள்வதில்லை. இந்த அதிகாரவர்க்கத்தின் கூட்டு கொள்ளைக்கு ஆட்சியாளர்களும் பங்குதாரர்கள்.
இச்சமயத்தில் ஒன்றை நினைவுகூறுவோம். கடந்த ஆண்டு அனகாபுத்தூரில் வீடுகளை இடிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தது. போதுமான ஆவணங்களை அதிகாரிகள் சமர்பிக்காமல் நழுவினர். ஏழைகளின் வீடுகளை இடிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு தருவதற்கு டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வந்த செய்தியை மேற்கோள் காட்டினார் நீதியரசர். இந்த பத்திரிக்கையில்,' ஆக்கிரமிப்பு வீடுகளை அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில பலம்வாய்ந்த மாபியாக்கள் நடத்திவருகிறார்கள். இவர்கள் வாடகைகளை வசூலித்து பெரும் தொழிலாக நடத்துகிறார்கள். இந்த நில ஆக்கிரமிப்பு மாபியாக்களை அகற்ற வேண்டுமெனில், ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட வேண்டுமென ' செய்தி வெளியிட்டது. இந்த செய்திக்கு எவ்வித ஆதாரத்தையும் TimesOfIndia வெளியிடவில்லை. ஆயினும் இந்த செய்தியை முன்வைத்து நீதியரசர்கள் (தொடர்ச்சி அடுத்த இழையில்)++
கடந்த வாரம் விமான நிலையத்தில் வைத்து திமுக எம்.பி ஆ.ராசாவின் காலை தொட்டு தொண்டர்கள் வணங்குவதை கண்டு எரிச்சல் வந்ததை போல தான்...
"மாற்றம்" என்று வந்த தவெகவினரும் காலில் விழும் கலாச்சாரத்தை தொடங்குவதை கண்டால் எரிச்சல் வருகிறது.
3வது தலைமுறையை கண்ட திமுகவில் பெரியார் கொள்கை குட்டி சுவரானது. ஆனால், ஒரு தலைமுறை கூட தொடங்காத தவெகவிற்கு கொள்கை ஏதாவது இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது.
"கடவுள் மறுப்பு" கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று விஜய் கூறினார். ஆனால், பெரியார் "சுய மரியாதை" கொள்கையிலும் உடன்படாதவர்களை போல தான் தவெக அமைச்சர்கள் நடக்கிறார்கள்.
ஒன்று தவெக கட்சிக்குள் பெரியாரை சொல்லி கொடுங்கள். இல்லை, பெரியார் படத்தை பயன்படுத்தாதீர்கள். வெறும் ஓட்டு கேட்கும் விளம்பர படமாக பெரியாரை பயன்படுத்தும் மற்றுமொரு "மாற்று" கட்சி தமிழ்நாட்டிற்கு தேவையில்லை!
தமிழீழ பகுதியில் அரசியல் களப்போராட்டங்களை நடத்தி வரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் உடன் சந்திப்பு நடந்தது. த.தே.ம.மு தலைவர் மரியாதைக்குரிய தோழர், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் இதர தோழமைகளான ஐயா ஐங்கரநேசன், தோழர் கஜேந்திரன், தோழர் காண்டீபன், தோழர் சுகாஷ் உள்ளிட்ட ஆளுமைகளுடனான சந்திப்பு நிகழ்ந்தது. தமிழீழ தேசத்தின் இன்றய நிலை, தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகள், நடமுறைத்தேவைகள், ஜெவிபி அரசின் பேரினவாத நடவடிக்கைகள், ' ஏக்கிய ராஜ்ஜியா' எனும் ஒற்றை அரசை சிங்களவர்கள் மட்டும் அதிகாரத்தை கையகப்படுத்தும் வகையில் இலங்கை அரசியல் சாசனத்தை திருத்தியமைக்கும் முயற்சிகள் ஆகியவை குறித்து கவலைகளையும் பகிர்ந்தார்கள்.
உலகத்தமிழினத்தின் தாய்மடியாக விரிந்திருக்கும் தமிழ்நாட்டு தமிழர்கள், ஈழத்தமிழினத்திற்கான ஆதரவை வழங்குவதன் மூலமாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்குவது வரலாறு. மாபெரும் தமிழ்த்தேசிய இனமாக இந்திய துணைக்கண்டத்தில் ஆளுமையோடும், பொருளாதார பலத்தோடும் இயங்கும் தமிழினம் தனது தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களின் அரசியல், பொருளியல், பண்பாட்டியல் உரிமைக்கான போராட்டத்தில் தோள்கொடுத்துவருவது நீண்டகால வரலாறு. இந்த ஆதரவை தொடர்ந்து வழங்கிடவும், பேரினவாதத்தை நிலைநிறுத்த முயலும் இலங்கையின் புதிய முயற்சிகளை முறியடிக்க மே17 இயக்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதை உறுதிகூறினோம்.
சிங்கள பெளத்த பேரினவாதத்தை வீழ்த்திட ஒன்றுபடுவோம்.
தமிழரின் தாகம்
தமிழீழத்தாயகம்
மே பதினேழு இயக்கம்
05-07-2026.
கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கிறது பாஜக. மாற்றாக, தானே ஒரு சங்கிக்குழுவை அனுப்பி பாஜகவிற்கு சாதகமான அறிக்கையை தயார் செய்ய முனைகிறார்கள். இதற்கான ஆய்வுக்குழுவை டில்லியில் இருந்து அனுப்ப இருக்கிறார்கள்.
தமிழர்கள் விழிப்போடு இருந்து இந்த சதிகளை முறியடிக்க வேண்டிய காலமிது. கீழடிக்கு நடக்கும் அநீதி குறித்தும், கீழடியின் சிறப்பம்சங்கள், நமது கடமைகள் ஆகியன குறித்து நம்மிடையே ஆய்வறிஞர்கள், அரசியல் ஆளுமைகள் பேச இருக்கிறார்கள். இந்நிகழ்வில் பங்கெடுத்து 'கீழடி' பெருமையை காக்க முன்வாருங்கள்.
கருத்தரங்கில் பங்கெடுப்பதன் மூலமாக உங்களின் ஆதரவை வெளிப்படுத்துங்கள். அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தோழர் திருமுருகன் காந்தி
கரூர் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தவெக பொறுப்பாளர்களே!
அச்சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள்ளாக கள ஆய்வினை செய்ததில் நாங்கள் கண்டறிந்த உண்மைகளை முன்வைத்தோம். அன்று காலை 8 மணி முதலாக காத்திருந்த மக்களுக்கான குடிநீர் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் தவெக பொறுப்பாளர்களால் செய்துதரப்படவில்லை என்பதை அன்றே ஊடகச் சந்திப்பில் வெளிப்படுத்தினோம். சம்பவ இடத்தில் கொட்டிக்கிடந்த செறுப்புகளுக்கு மத்தியில் தண்ணீர் பாட்டில்கள் எவற்றையும் போதுமானதாக காண முடியவில்லை என்பதைச் சொன்னோம். இந்த வசதிகளை செய்து கொடுத்திருந்தால் பல இழப்புகளை தடுத்திருக்க இயலும். இதுபோல பல தவறுகள் நடந்திருந்ததை அங்கிருந்த மக்கள் வாயிலாக அறிந்ததை பதிவு செய்துள்ளோம்.
மேலதிக விசாரணைகள் நடந்தால் பல விவரங்களை அனைவரும் அறிய இயலும். இந்த சம்பவம் குறித்து அன்றய ஆட்சியாளர்களான திமுக மீது குற்றம் சாட்டுவது முறையல்ல. அப்படியான குற்றச்சாட்டை வைப்பதெனில் உரிய விளக்கங்கள், ஆதாரங்களோடு வைப்பதுதான் ஆட்சியிலிருக்கும் தவெக கட்சிக்கு அழகாகும். அவ்வாறான முழுமையான விசாரணை நடத்தி நாங்கள் அறியாத தகவல்களை ஒருவேளை தவெக அரசு அறிந்திருந்தால் வெளிப்படுத்துங்கள். மாண்புமிகு அமைச்சரின் மேலோட்டமான குற்றச்சாட்டு ஏற்புடையதாக அமையாது.
தமிழ்நாட்டுக்கான 'ஆளுனர்' இன்று வைகை ஆற்றில் தண்ணீர் இல்லையென்பதை பார்த்தாராம், ஆகவே வைகையில் தண்ணீர் வரவைக்க முயற்சியை தமிழ்நாடு செய்யவில்லையெனில் ஆளுநர் மாளிகை நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்யும் என உணர்ச்சிவயத்தோடு பேசி இருக்கிறார்.
ஏன் வைகையில் தண்ணீர் இல்லை?
இவ்வாண்டு எல்-நினோ தட்பவெப்ப நிலை காரணமா இந்தியா முழுவதும் மழையின் அளவு மிகக்குறைந்தது. இதனால் வைகை அணை உள்ளிட்ட தென்னிந்திய அணைகளில் கொள்ளளவு மிகவும் குறைந்துள்ளது.வைககை அணையின் கொள்ளளவில் 50%க்கும் குறைவான நீர் உள்ளது. 71 அடி கொள்ளளவில் கிட்டதட்ட 32அடி அளவில் தான் நீர் உள்ளது. இதில் குடிநீருக்காக மிகக்குறைந்த அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணைக்கு நீர் கொடுக்கும் முல்லைப்பெரியாறு அணையிலும் மிகக்குறைந்த கொள்ளளவு உள்ளதால், வைகை ஆற்றில் கோடை காலத்தில் நீர் குறைவாகவே வரும்.
இந்த உண்மை மதுரையில் ஓடும் வைகை ஆற்றில் மூட்டை தூக்கும் கழுதைக்குக் கூட தெரியும். கழுதைக்கு தெரிந்த விடயம் , தமிழ்நாட்டிற்கு தண்ணீர்கேன் போட வந்தவருக்கு தெரியாதா? அது தெரிந்தால் அவர் ஏன் சங்கியாக இருக்கப் போகிறார்.
பீகாரில் இதேபோல தண்ணீர் ஓடாத ஆற்றில் ஓடவைத்த விடயம் மாண்புமிகு ஆளுநருக்கு தெரியுமாம். அதை வைகையில் செய்து காட்டப்போகிறாராம்.
நல்லது, மதுரை வைகை ஆற்றின் நடுவே உள்ள கல்மண்டபத்தில், 'மாண்புமிகு ஆளுநரை' உட்கார வைத்து இந்த நற்காரியத்தைசெய்ய வைப்போம். கோடைகாலத்தில் வைகை ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடும் வரை 'ஆளுநர்' கல்மண்டபத்தில் குடியிருக்க வேண்டும் எனும் கோரிக்கையை தாழ்மையுடன் முன்வைக்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர்கேன் போட வந்தவர், ஆற்றில் தண்ணீரை கொண்டுவருகிறேன் என்கிறார். வரவேற்போம்.
தோழர் திருமுருகன் காந்தி
அண்ணாமலைக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படும் திராவிட ஸ்டாக்கிற்கு,
எதிர்தரப்பு சமாதானமாக போனதென்றால், அண்ணாமலை உங்கள் கட்சி மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளான 'திமுக பைல்ஸ்' குறித்து வருத்தம் தெரிவித்தாரா அண்ணாமலை?
அல்லது அந்த குற்றச்சாட்டுகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு அவதூறு வழக்குகளை வாபஸ் வாங்குகிறீர்களா?
அண்ணாமலையின் வழக்கறிஞர் வழக்கை வாபஸ் பெறச் சொல்லி கேட்டாராம், அதனால் வழக்கை திரும்பபெருகிறார்களாம். என்ன நாடகம் இது, யாரை ஏமாற்றும் நாடகம் இது. குருமூர்த்தியின் கபடவேடதாரியாக அரிதாரம் எடுத்திருக்கும் அண்ணாமலையிடம் நீங்கள் காட்டும் இந்த சமரச மனநிலை எங்கிருந்து, எதனால் எழுகிறது?
அண்ணாமலை மீது போட்ட வழக்கை வாபஸ் பெற்ற திமுக, எங்கள் மீது பதிவு செய்த 9 வழக்குகளை ஏன் வாபஸ் பெறவில்லை, ஏன் திராவிட இயக்கத்தவர் மீது பதிந்த வழக்குகளை வாபஸ் பெறவில்லை? எங்களுக்கு குருமூர்த்தியின் பின்புலம் இல்லை என்பதால் எங்கள் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெறவில்லையா? விளக்கமளிக்க முடியுமா?
மதவெறி-சாதிவெறி கொண்ட அண்ணாமலையிடம் காட்டும் அரசியல் அறத்தை, ஏன் பெரியாரிஸ்டுகளிடத்தில் திமுகவால் காட்ட முடிவதில்லையே ஏன்?
மேலும், என் மீது அதிமுக எடப்பாடி அரசால் பொய்யாக போடப்பட்ட விசாரணையினை உங்களது திமுக அரசு ஜரூராக நடத்தியது. அந்த வழக்கின் போதே நாங்கள் நிதி பெற்றோமா இல்லையா என உங்கள் கட்சியின் அமைச்சரிடம் கேட்டு, பொதுவெளியில்'திராணி இருந்தால்' நிரூபியுங்கள். ஆனால், அதே லாட்டரி நிறுவனம் electoral bonds ஆக எவ்வளவு உங்கள் கட்சிக்கு கொடுத்தார்கள் என்பது செய்தியாகவே வெளியாகி உள்ளது. உங்களைப் போன்ற முகம் காட்ட அஞ்சித்திரியும் முதுகெலும்பற்ற கோழைகளால் தான் உங்கள் கட்சிக்கு பெரும் நெருக்கடி உண்டானது. இதன் மேலும் எங்களை குறித்து குற்றச்சாட்டு வைப்பதாக இருந்தால் உங்களது உண்மையான பெயர், முகம் தெரியும்படி எழுதுங்கள், விளக்கமளிக்கிறோம்.
காஸாக்ராண்ட் கம்பெனிக்காரன் அடையாறு ஆற்றை அடைத்து கட்டும் கட்டிடங்களுக்கு மட்டும் எப்படி அனுமதியும், பாதுகாபும் கிடைக்கிறது. அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் ஒருபுறமிருந்தாலும் ஏழைகள் மீதான அதிகாரிகளின் காழ்ப்புணர்வு மிகமிக வன்மமானது. அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பின் போதே இதை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது அறிந்தவை இவை. இந்த அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமிக்க ஆட்சியாளர்கள் எவரும் இந்த அநியாயங்களை தட்டிக்கெட்டதில்லை. காஸாக்ராண்ட் கம்பெனி அடையாறுஆறு கரையில் பல வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது. தவெக அரசு உடனடியாக வீடு இடிப்புகளை தடுத்து நிறுத்திட வேண்டும். தவறும்பட்சத்தில் மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொள்ளும்..
'கீழடி' ஆய்வறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கையளித்து 10 ஆண்டுகளாகியும், அதை வெளியிடாமல் தடுத்து வைத்திருக்குறது ஒன்றிய அரசு. தமிழர் நாகரீகத்தின் தொன்மையை கி.பி 2600 ஆண்டுகள் எனுமளவில் செல்வதை ஏற்க மறுக்கிறது ஆரிய அரசு.
இந்நிலையில் புது அறிக்கையை தயார் செய்து. வெளியிட பாஜகவின் சனாதன அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கென தனியே விசாரணை ஆய்வறிக்கை குழுவை உருவாக்கி அனுப்புகிறது. இவர்கள் வாயிலாக தாம் விரும்பும் ஆய்வறிக்கையை எழுதிக்கொள்ள விரும்புகிறது பாஜக மோடி அரசு.
இவ்வாறு கீழடி ஆய்வறிக்கையை குழிதோண்டி புதைப்பதை தமிழர்கள் ஏற்க இயலாது. இச்சூழலில், கீழடியை பாதுகாப்பது நமது இன்றியமையாத கடமை என்பதை குறித்து விவாதிக்க 'கீழடி பாதுகாப்பு அரங்கம்' ஒன்றை மே17 இயக்கம் உருவாக்குகிறது. இதற்கான தொடக்க நிகழ்வு வரும் ஜூலை 5ம் தேதி மதுரையில் அரங்கல்கூட்டமாக நடக்க இருக்கிறது. இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுத்து ஊக்கமளிக்கவும், பாதுகாக்கவும் குரல் கொடுக்க முன்வாருங்கள் என மே17 இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.
மதுரையில் சந்திப்போம். நிகழ்விடம், சிறப்புரை ஆற்ற இருப்பவர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
----------
*கீழடி புதைக்கப்படும் வரலாறு*
*கீழடி பாதுகாப்பு*
*கருத்தரங்கம்*
*சூலை 05, 2026*
*ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு*
*மதுரையில்*
*அனைவரும் வருக*
தோழர் திருமுருகன் காந்தி
மகிழ்ச்சி நிறைந்த இந்த இளையவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நாம் பதறவில்லையெனில், நாம் மனிதராக வாழ இயலுமா?
பார்த்தீபன்-திவ்யதர்சினி ஆகிய காதலர்கள் படுகொலையாகி உள்ளார்கள்...
பார்த்தீபனின் உடலில் குருதி வழிந்திருக்கிறது என்கின்றனர். பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டார் பார்த்தீபன். சில மணிநேரத்தில் திவ்யதர்சினியும் தூக்கில் பார்த்திபனோடு தொங்குகிறார் என்றால் இது தற்கொலையா? காவல்துறை தற்கொலை எனச் சொல்வதாக தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை தற்கொலையெனில் தூண்டியது யார் என அறிவது காவல்துறை வேலையில்லையா?
காயத்துடன் இருக்கும் பார்த்தீபன் கொலை செய்யப்படவில்லையென சொல்ல முடியுமா?
சொந்த மகளை, மகனை படுகொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகிறது சாதி.
இந்த சாதியை குடி என்கிறது போலித்தமிழ்த்தேசியக் கூட்டம். சாதி சொன்னால் தான் தமிழனா இல்லையா என்பேன் என்கிற இந்த போலிகள், தற்போது வாய்மூடி கள்ளமெளனத்தோடு கடந்து செல்வார்கள். இந்தக் கொலைகளையும் தெலுங்கு சதி என எழுதி வைப்பார்கள். இவர்களுக்குள்இருக்ககும் சாதிவெறிதான், மனச்சிதைவு நோயாக ஆணவபப்டுகொலையாக வெளியாகிறது.
போலித்தமிழ்த்தேசியம் ஏன் மிக ஆபத்தானது என்பதை இந்த சமயங்களில் புரிந்து கொள்ள இயலும்.
இதுவே விடுதலைப் புலிகள் ஆண்ட தேசமாயிருந்தால் சாதிய வன்மத்தை பரப்புபவர்களை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
கேடுகெட்ட இந்திய சனநாயகத்தில், அதிகாரவர்க்கமே சாதியாக விஷமேறிக்கிடக்கிறது.
புலிகளின் ஆட்சியில், சாதியற்ற தமிழன் தமிழீழத்தை நிர்வாகம் செய்தான் , சாதி அங்கே ஒழிந்தது. இங்கே இந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் கீழ் சாதி வளர்த்தப்படுகிறது. இதனால் தான் இந்தியா இருக்கும்வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை சாதி இருக்குமென்றார் தந்தை பெரியார். பெரியாரை நிராகரித்தவனும், அண்ணலை மறுத்தவனும் மிருகமான சாதியவாதியாக அலைகிற நாடாகிப்போனது தமிழ்நாடு.
சாதி ஒழிந்த தமிழ்த்தேசம் படைக்க ஒன்றாவோம்.. இளைஞர்களை கொன்றழிக்கும் சாதியவாதிகளை வேரறுப்போம்
.
Will you speak about Genocide, State terrorism of Srilankan Govt and expansionism of Indian hegemonical interest in suppressing Tamil resistance?
@vijayprashad You are complicit in Tamil Genocide, because you and your party CPIM maintained silence in 2009 war until when US got openly involved in massacre. Your CPIM party Polit Bureau didn't raise any objection despite you were having strong presence in Indian Parliament. The massacre took place while your Tamilnadu wing was actively campaigning against the Tamil resistance. And your party didn't recognise the pain suffered by Tamil despite International condemnation to Srilanka. So far 400+ skeleton remains were excavated from a massacre site at Chemmani. If possible address all these at your speech, else, if you try to push Indian agenda of brahmincal supremacist agenda of denying Right to self determination of Tamils, you will face strong criticism from Tamil intelligentsia and activists. Its high time for you to recognise right to self determination and liberation of Eelam Tamils.
@heritage_tamil@itjpsl@JDSLanka@TamilGuardian@TYOSwiss@GGPonnambalam@meenakandasamy@declassifiedUK