#WATCH | ஏழை, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் அன்புமணி - செளமியா அன்புமணி எடுத்து வைத்த கருத்துகள்
#SunNews | #SowmiyaAnbumani | #AnbumaniRamadoss
அன்பிற்கினிய திருமதி @Sowmiyanbumani அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இறைவனின் அருளால் தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மனநிறைவுடனும், குடும்ப மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, சமூகப் பணிகளிலும் மக்கள் நலப் பணிகளிலும் தொடர்ந்து சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐🎉 #HBDSowmiyaAnbumani #JCD #JCDPrabhakar
இன்றைய தினம் பிறந்த நாள் காணும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. @draramadoss அவர்களின் துணைவியார் @Sowmiyanbumani அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் மேலும் பல ஆண்டுகள் சிறந்த ஆரோக்கியத்துடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களைச் சந்தித்தனர்.மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவது, தமிழ்நாட்டின் நீர்வளத்தை மேம்படுத்துவது ஆகியவை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துரையாடினார்கள்.
”பா.ம.கவுக்கு இங்க வேலையே கிடையாது, அவங்க வெறும் எம்.எல்.ஏ மட்டும்தான்.. ஆட்சி எங்க கிட்டதான் இருக்கு.. நாங்க சொல்றதை கேக்கணும்”.. அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை த.வெ.க மாவட்ட செயலாளர் மிரட்டும் தொனியில் பேசியதாக பரவும் பரபரப்பு வீடியோ.!
#Viluppuram | #PMK | #TVK | #PolimerNews
பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில்
இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும்
எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.
த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்?
அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.
ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது.
@TVKVijayHQ
மாவீரன் ஜெ.குரு உடலால் மறைந்தாலும், நமது உள்ளங்களில் வாழ்கிறார்; அவரது கனவை நனவாக்க கடுமையாக உழைப்போம்!
எனது மரியாதைக்கும், அன்புக்கும் உரிய அண்ணன் மாவீரன் ஜெ.குரு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இந்த நாளில் நான் அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறேன். அவரது எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
மாவீரன் ஜெ.குரு அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், அவர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மறைந்தது முதல் இன்று வரையிலான 8 ஆண்டுகளில் அவரை நினைக்காத நாளில்லை. அந்த நினைவுகள் தான் அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
கட்சியும், சமூகமும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கனவு. அதை நோக்கித் தான் அவர் உழைத்தார். அவரது கனவை நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.
கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் சார்ந்த வாக்குகளை
அவர்கள் சார்ந்த கூட்டணி கட்சிகளுக்கு
சிந்தாமல் சிதறாமல் செலுத்தி,
கூட்டணி தர்மத்தை வெற்றிகரமாக நிலைநாட்டிய பெருமை பாமகவை சாரும்
PMK votes were transferred without pilferage to their Alliance.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @EPSTamilNadu அவர்கள் உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து பொதுவாழ்வுப் பணியாற்ற எனது வாழ்த்துகள்!
பாமக தலைவர் அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணியை அக்கரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்.
#CMVijay | #Anbumani | #SowmiyaAnbumani
Heartiest congratulations to Dr.@Sowmiyanbumani on taking oath as the MLA of #Dharmapuri constituency. Your vision for sustainable development and your deep-rooted commitment to social justice will bring a phenomenal transformation to the lives of the people.
Wishing you a successful and impactful tenure.
#தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகப் பதவியேற்றுள்ள திருமதி.சௌமியா அன்புமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் சமூக நீதிச் சிந்தனையாலும், மக்கள் மீதான தீராத அக்கறையாலும் தருமபுரி தொகுதி புதிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.
உங்கள் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay