தமிழகத்தில் இன்று வெளியாகியுள்ள 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்ற மற்றும் சவால்களை எதிர்கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளும், பகிர்வுகளும்!
உங்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் திட்டமிட்ட படிப்பு இன்று அழகான வெற்றியாகக் கனிந்திருக்கிறது. இந்தத் தருணம் உங்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நீங்கள் கொடுத்திருக்கும் மிகச்சிறந்த பரிசு.
உயர்கல்வியில் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து சாதனைகள் புரிய வாழ்த்துகள்.
இது உங்கள் பயணத்தின் ஒரு மைல்கல் மட்டுமே, எல்லைக் கோடு அல்ல. இன்னும் பல சிகரங்கள் உங்களை எதிர்நோக்கி இருக்கின்றன!
எதிர்பார்த்த முடிவு கிடைக்காத, மாணவச் செல்வங்களே!..
ஒரு தேர்வுத் தாள் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட முடியாது. தோல்வி என்பது சிறிய "தடைக்கல்லே" தவிர "முடிவல்ல".
உலகில் சாதனை படைத்த பல மனிதர்கள் பள்ளிக் கல்வியில் சறுக்கியவர்கள்தான்.
உடனடித் தேர்வுகள் மூலம் உங்கள் மதிப்பெண்களை உயர்த்தவும், தேர்ச்சி பெறவும் இன்னும் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்துவமான திறமை ஒளிந்திருக்கும். மதிப்பெண்கள் மட்டுமே ஒருவனின் அறிவை அளவிடும் கருவியல்ல.
"விழுவதெல்லாம் எழுவதற்குத் தான்; தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி!"
எனது அருமை பெற்றோர்களே!..
மதிப்பெண்கள் குறைவாக எடுத்த அல்லது தேர்ச்சி பெறாத பிள்ளைகளைத் தயவுசெய்து மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். இந்த நேரத்தில் அவர்களுக்குத் தேவை உங்களின் ஆறுதலும், அரவணைப்பும் மட்டுமே. அவர்களின் தன்னம்பிக்கை சிதையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் மீண்டும் எழுந்து வரத் தோள் கொடுங்கள்.
நமது மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்!
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நத்தம் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்குகளை அளித்த வாக்காளர்களுக்கும், எனது வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் முடிவுகள் நமக்குச் சாதகமாக அமையவில்லை என்றாலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறீர்கள். அந்த ஒவ்வொரு வாக்குக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன். மக்களின் தீர்ப்பை நான் முழு மனதுடன் ஏற்கிறேன். வெற்றி தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்; ஆனால் மக்களுடனான எனது பிணைப்பு நிரந்தரமானது.
வெயில், மழை பாராமல் வீதி வீதியாகச் சென்று நீங்கள் செய்த பிரச்சாரம் வீண் போகாது. இந்தத் தோல்வி ஒரு தற்காலிகமான பின்னடைவே தவிர, நமது லட்சியப் பயணத்தின் முடிவல்ல.
தோல்வியிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்வோம்; இன்னும் வீரியத்தோடு மக்கள் பணியாற்றுவோம்.
"விழுவது என்பது வீழ்ச்சியல்ல... மீண்டும் எழுவதே எழுச்சி!"
என்றும் உங்களுடன்...
தேர்தல் முடிந்தது, ஆனால் இந்த மண்ணுக்கான எனது கடமை இன்னும் முடியவில்லை. சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக, மக்களின் குரலாக நான் எப்போதும் களத்தில் நிற்பேன். உங்களின் இன்ப துன்பங்களில் நான் என்றும் ஒரு பங்காளியாக இருப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன்.
நமக்கு வாக்களித்தவர்களுக்கும், மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்கும் சேர்த்து உழைப்பதே நமது அறம். கண்ணியமான முறையில் தேர்தல் பணிகளை மேற்கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளை உரித்தாக்குகிறேன்!...
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கட்டனார்பட்டியில், வனஜா ஃபயர் வொர்க்ஸ் என்கின்ற பெயரில், இயங்கிவந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், சேர்வைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 25 நபர்கள் உயிரிழந்தனர்!
இதனையடுத்து, அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று, சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழர் தேசம் கட்சி வழிவகை செய்யும் எனவும் உறுதியளித்தேன்!..
இன்றைய தினம் 16.04.2026, வியாழக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.காதர்பட்சா (எ) முத்துராமலிங்கம் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
நேற்றைய தினம் 14.04.2026,செவ்வாய்க்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குளித்தலை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.சூரியனூர்.சந்திரன் அவர்களை ஆதரித்து, அய்யர்மலை பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
சமூகநீதியை நிலைநாட்ட, வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
இன்றைய தினம் 15.04.2026, புதன்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.ஏ.எம். ஷாஜகான் அவர்களை ஆதரித்து, ஏணி சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
மதவாத சக்திகளுக்கு எதிராக, வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
இன்றைய தினம் 15.04.2026, புதன்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.கா.அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராக, வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
#தமிழர்_தேசம்_கட்சி
நிறுவன தலைவர் @KKSelvakumaroff அவர்கள்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார சுற்றுபயணம் மேற்கொள்ள திமுக தலைமைக் கழக அறிவிப்பு வெளியிட்டுள்ளது...
இன்று @KKSelvakumaroff
அவர்களின் பிறந்த நாளில் அவரின் களப்பணிகளான
👉 மக்கள் சேவையில்
👉 சமூக முன்னேற்றத்தில்
👉 நீதிக்கான போராட்டத்தில்
என்றும் அண்ணனுடன் நிற்போம்! 🙌
இன்னும் பல ஆண்டுகள்
மக்களுக்கு சேவை செய்யும் வல்லமை கிடைக்க
நாம் எல்லோரும் பிரார்த்திக்கிறோம் 🙏
மக்களே நம் பலம்! மாற்றமே நம் இலக்கு!
இன்று 07.04.2026,செவ்வாய்க்கிழமை - @arivalayam மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின், மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin பேராதரவு பெற்ற, நத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராகிய நான், நமது நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 45-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தேன்.
செல்லுமிடமெல்லாம் தாய்மார்கள் எடுத்த ஆரத்தி, பெரியவர்களின் ஆசி, இளைஞர்களின் எழுச்சிமிகு வரவேற்பு என நத்தம் தொகுதி முழுவதும் உதயசூரியன் ஒளியால் நிறைந்திருக்கிறது.
"வெற்று வாக்குறுதிகள் அல்ல... உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் முன்னேற்றத்திற்காக உழைக்கக் காத்திருக்கிறேன்!"
மறக்க முடியாத வரவேற்பளித்த எனது இரத்தத்தின் ரத்தமான உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
நத்தம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் விடியலுக்காகவும் உங்களின் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து பெருவெற்றி பெறச் செய்திட அன்புடன் வேண்டுகிறேன்!....
#வெல்வோம்_ஒன்றாக