பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ விசாரணைக்கு ��ாற்றப்பட்டது வரவேற்கத் தக்கது. அனைவரும் ஓரணியில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டிய இந்த விவகாரத்தில், அநாகரிகமான அரசியல் செய்யும் சக்திகளுக்கு இது சரியான பதிலாக அமையும்!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகில் திரைப்படம் பார்க்க பணம் தராத தந்தை பெட்ரோல் ஊற்றி எரித்தான் மகன் என்ற செய்தியைக் கேட்டதும் உடல் நடுங்கியது. திரைப்பட மாயை நமது இளைஞர்களை எந்த அளவுக்கு பொறுப்பற்றவர்களாகவும், வெறி பிடித்தவர்களாகவும் மாற்றியிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்!
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க ���ேண்டும்!
புத்தாண்டுக்கு ரூ.300 கோடிக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு: செய்தி - தமிழகத்தில் மது விற்பனை செய்வதை தவிர வேறு எந்த வேலையும் உருப்படியாக நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் நடப���பது மக்களாட்சி அல்ல... மது வணிகர்களின் ஆட்சி!
தமிழினத்தை வட இந்திய பனியாக்களின் ஆதிக்கத்திலிருந்து காப்பது எவ்வளவு முக்கியமோ..
அதே அளவு திராவிட கம்பெனிகளிடமிருந்து தமிழினத்தை காப்பதும் முக்கியம்.. ;)
தமிழ்நாட்டில் புரட்சியாளர்களுக்கு பஞ்சமில்லை. புதிது புதிதாக புரட்சியாளர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் வேலையில்லாத பொறியாளர்களின் எண்ணிக்கையை முறியடிக்க வேண்டும் என்றால் அது வெட்டி வேலை செய்யும் புரட்சியாளர்களால் தான் சாத்தியம் ஆகும்!
@DrTamilisaiBJP@narendramodi@BJP4India@PMOIndia@BJP4TamilNadu ஒரு பக்கம் இருக்கின்ற விவசாய நிலங்கள், மரங்களை அழிச்சி ராேடு பாேடுரிங்க இன்னொரு பக்கம் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா சாதனையின்னு சாெல்லுரிங்க ஒரு வேள பிளாஷ்டிக்கா இருக்குமாே!
ரா���தாஸ் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும்;
நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்கும் வரை தமிழிசைக்கு எதிரான பாமக போராட்டம் தொடரும்
பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தல்
அட டைரக்டர் ஆயிரம் சொல்வான், இந்தாளுக்கு எங்க போச்சி புத்தி? தன் ரசிகர்களுக்கு சிகரெட் பிடிக்க கற்று கொடுப்பவன் ஒரு நல்ல நடிகனே அல்ல 😏
#Sarkar#SmokingCausesCancer#SmokingKills
காலா படத்தை திரையிட அனுமதி கோரி கர்நாடகத்துக்கு கன்னடத்தில் ரஜினி வேண்டுகோள்: செய்தி - ஆபத்து வந்தால் தாய்மொழியில் தான் கத்துவ��ர்கள் என்பது இதுதானோ? அதுசரி... ரஜினியின் தாய்மொழி கன்னடமா.... மராட்டியமா?
“தங்கர் பச்சான் கதைகள்” என்ற பெயரில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள எனது அனைத்து சிறுகதைகள் இப்போது Amazon Kindle மூலமாக ஈ புக் (e Book) வடிவில் கிடைக்கிறது.
ஏற்கனவே பல பதிப்புகள் பல ஆயிரம் படிகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில் ஈ புக்காகவும் வாசகர்களை சேர்வதில் மகிழ்ச்சி.