விஜயின் reaction பார்க��க சட்டமன்றத்தில் ஒரு எண்ணியல் திரை வைக்க வேண்டும் - தவெக சட்டமன்ற உறுப்பினர்
தமிழ்நாட்டின் சாபக்கேடு - எங்கள் தேசம் வலைக்காட்சி நேர்காணலில் இடும்பாவனம் கார்த்திக் பேட்டி
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
அன்பிற்கினிய #நாம்தமிழர் சொந்தங்களுக்கு...
“ஒரு இடத்தில்கூட ஜெயிக்கவில்லை” — இந்த ஒற்றை விமர்சனத்தை வைத்துக்கொண்டு, இத்தனை ஆண்டுகளாக நாம் செய்த ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளையும், நாம் முன்வைத்த கொள்கைகளையும் மலிவாகப் பேசும் சமூக வலைதளப் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் நாம் பதிலளிக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் கிடையாது.
அவர்களிடம் சென்று சண்டையிடுவதோ, நாம் செய்தவற்றைப் பட்டியலிட்டுப் புரிய வைப்பதோ, நமது கொள்கையை மீண்டும் மீண்டும் விளக்கிக் கொண்டிருப்பதோ தேவையற்றது.
சவுக்கு சங்கரும், சவுக்கு மீடியாவில் இருப்பவர்களும் எத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தி நம்மை விமர்சித்தாலும், காயப்படுத்தினாலும், அந்த மலிவான வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காமல் நமது பயணத்தை நாம் தொடர வேண்டும்.
சவுக்கு சங்கரின் காணொளிகளை ஒரு சினிமாவைப் பார்ப்பதுபோலப் பாருங்கள். 20 நிமிடம், 30 நிமிடம் — சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கும்; சில ஒருதலைப்பட்சமான கருத்துகள் இருக்கும்; சில அவரது சொந்த அனுமானங்களாக இருக்கும். நகைச்சுவையாகவும் ஆவேசமாகவும் பேசுவார்.
அவ்வளவுதான். படம் முடிந்த உடன் சுமாராக இருந்தாலும் பரவில்லை என்று சொல்லி வெளியே போவதில்லையா.. அதே போல் அவரின் காணொளி முடிந்தவுடன் அதையும் அங்கேயே விட்டுவிட்டு நகர்ந்துவிடுங்கள்.
ஒரு மோசமான சினிமாவைக்கூட பாப்கார்னுடன் மூன்று மணி நேரம் சுவாரஸ்யமாகப் பார்த்துவிட்டு வெளியே வந்து, “படம் நல்லாவே இல்ல மச்சா!” என்று சொல்லிவிட்டுப் போகிறோம் அல்லவா? அதே அளவில்தான் இவர்கள��ு காணொளிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் காலம் மாறும்.
இன்று நம்மை விமர்சிக்கும் அதே குரல், நாளை அரசியல் சூழல் மாறும்போது நமக்குச் சாதகமாகவும் பேசலாம். ஏனென்றால் இவர்களை போல வாயை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் கூடம் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
சீமான் அண்ணன் நமக்கு காட்டியிருக்கும் பாதை குறுகிய பாதையல்ல. அது நீண்ட நெடிய அரசியல் பயணம். இலக்கு வெகுதூரத்தில் இருக்கலாம். ஆனால் அதற்காக ஒவ்வொரு கல்லிடமும் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தால் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாது.
காலச்சக்கரம் ஒரே இடத்தில் நிற்பதில்லை.
மேலே இருப்பது கீழே வரும்; கீழே இருப்பது மேலே செல்லும்.
அதுதான் வரலாறு.
இன்றைய வரலாற்றில் நமது பெயர் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நாளை எழுதப்படப்போகும் வரலாற்றில் நமது பெயர் இருக்க வேண்டும். அதற்கான ���ேலையை இன்றில் இருந்து செய்வோம், செய்துகொண்டே இருப்போம்.
தேவையற்ற சண்டைகளைப் புறக்கணிப்போம்.
கொள்கையைப் பேசுவோம்.
களத்தில் நிற்போம்.
பயணத்தைத் தொடர்வோம்.
ஒருநாள் இ��்தத் தேசத்தில் நமது குரலும் வலிமையாக ஒலிக்கும்.
நாம் தமிழர்! @Seeman4TN @_ITWingNTK
அண்ணன் சீமான் அவர்களை ஆதரித்து, திருமாவளவன் அவர்களை விமர்சித்துப் பேசியதற்காக, ராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த சகோதரர் குபேந்திரன் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியுள்ளனர். தற்போது அவர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராகுல்காந்தி பிரதமர் ஆகவேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் அரங்கில் இருக்கவும்..
ஜோசப் விஜய் பிரதமர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் எழுந்து வெளியே செல்லவும் என்று மாணிக்கம் தாகூர் கூறியதும் அனைவரும் எழுந்து வெளியே சென்றனர்..
இவ்வளவு பெரிய தமிழ்நாட்டில் இவ்வளவு தமிழர்கள் இருந்தும் இத்தனை தமிழ் முதலாளிகளின் நகைக் கடைகள் இருந்தும் தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழ்நாட்டு மருத்துவமனையில் பிறந்தத் தமிழ் குழந்தைகளுக்கு போடும் மோதிரத்தை செய்துகொடுக்க இரண்டு மலையாளிகளின் நகைகடைதான் கிடைத்ததா?
தமிழ்நாட்டில் தமிழர்களைத் தவிர எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது..
தவெக இன்னொரு திராவிட கட்சி தான்!
சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது? இதுதான் தவெக அரசு மாநில உரிமை��ளைக் காக்கும் முறையா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குப்பூரில் அரசு மேல்நிலை மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை ஆ��ிரியர்களாக நியமனம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?
யாருடைய உத்தரவின் பேரில் அரசுப் பள்ளியில் வட மாநிலத்தவர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்?
தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் மாணவர்களுக்குப் புரிதல் குறைபாடு ஏற்பட்டு அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா?
நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தபோதே நம் நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமென்று அமெரிக்க முதலாளிக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது? என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அதைப்போலவே தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திய அளவிலான போட்டித் தேர்வில் வெல்ல வ��ண்டும் என்று வடமாநிலத்தவருக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது?
அண்மையில் இப்பள்ளியில் பயின்ற 5 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நிலையில், அதனைக் கெடுப்பதற்காகவே வட மாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் தருவதாகக் கொடுத்த வாக்குற��தியையும் நிறைவேற்றவில்லை இப்பொழுது அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக நடத்துநர்கள் நியமனம் தொடங்கி ஆசிரியர் பணி நியமனம் வரை வெளிமாநிலத்தவர்களுக்குக் கொடுத்துப் பறிப்பது என்ன நியாயம்?
தமிழ்நாட்டில் இத்தகைய தேர்வு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவும், திறனும் வாய்ந்த ஆசிரியர் பெருமக்களே இல்லையா? பல இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று, பல ஆண்டுகளாக வேலையின்றி வீதியில் போராடிக் கொண்டிருக்கும்போது, வட மாநிலத்தவரை தமிழ்நாட்டில் ஆசிரியர்களாக நியமிப்பது ஏன்?
தூய்மைப்பணியாளர்கள், நடத்துநர்கள், ஆசிரியர்கள் என்று அடுத்தடுத்து அரசுப் பணியிடங்கள் அனைத்துமே தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்படுவார்கள் என்றால் அரசுத்துறைகளின் வேலைதான் என்ன? அனைத்துமே தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள் எனில், அரசுக்கு பொதுப்பணி, போக்குவரத்து, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என்று தனித்தனி துறைகள் எதற்கு? தனித்தனி அமைச்சர்கள் எதற்கு? இது என்ன மாதிரியான மாற்று?
ஏற்கனவே, முதலமைச்சரிடம் முதன்மையாக எந்தத் துறைகளும் இ��்லை. அனைத்து முக்கியத் துறைகளும் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரும் மூன்று நான்கு முதன்மையான துறைகளை வைத்துள்ளார்கள். எல்லாத் துறைகளையும் அமைச்சர்களிடம் அளித்துவிட்டால் முதலமைச்சரின் வேலை என்ன? ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிடுவது மட்டும்தானா?
வேளாண்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் விளையாட்டுத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். போக்க���வரத்துத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். நீர்வளத்துறைப் பற்றிக் கேள்வி கேட்டால் அறநிலையத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். சுற்றுலா குறித்த கேள்விக்குச் சுற்றுச்சூழல் அமைச்சர் பதில் சொல்கிறார். யாருக்கு எந்த அமைச்சகம்? யார் எந்தத்துறையின் அமைச்சர் என்பதே இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படவில்லை. இப்போது அமைச்சர்களுக்கும் எந்��� வேலை இல்லை என்ற அளவிற்கு, அனைத்து துறைகளின் பணிகளுமே தனியார் நிறுவனம் மூலம் வடமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் பணிநியமனங்கள் அனைத்தும் வடமாநிலத்தவரைக் கொண்டு நிரப்பப்படுவதை, தமிழிளம் தலைமுறைப்பிள்ளைகள் இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இத்தகைய கொடுமைகள் தொடர்ந்தால் விரைவில் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.
- செந்தமிழன் சீமான்
த��ைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அநீதிகளுக்கு எதராக சமரசமின்றி சுழல துணை நிற்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி !🙏
For subscribe :
https://t.co/mi9N6MoHPU
#sattaiduraimurugan#saattai
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினையா? இல்லை தனிநபர் துதிபாடலா?
முதல்வரின் சேவையைப் பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால் இந்தியாவின் கடனையே அடைக்கலாம்!
– சட்டமன்றத்தில் அமைச்சர் பேசிய பேச்சை வெளிச்சம் போட்டுக் காட்டும் அரசியல் விமர்சக���் அருள்மொழிவர்மன்!
🔗 https://t.co/qdFZwh3NG5
#TamilNaduAssembly #TNGovt #TVK #ArulmozhiVarman #PoliticalSatire #TNPolitics #TamilNews
விஜய் தலைமையிலான தவெக அரசின் 100 நாள் ஆட்சி சாதனையா?? சறுக்கலா ??
சொன்னதை செய்தாரா விஜய் ??
100 க்கு எத்தனை மதிப்பெண் தரலாம் ??
போர்த்தொழில் வழங்கும் காணொளி.
https://t.co/zyw9NUWCN5
Behindwoods விவாதத்தில் வெடித்த சர்ச்சை! நாஞ்சில் சம்பத்தின் பேச்சு & தமிழக அரசியல் களேபரம்!
விவாத அரங்கில் நடந்தது என்ன?
கொள்கை நிலைப்பாடு மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் முன்வைக்கு��் விமர்சனங்கள்!
🔗 https://t.co/JkJnH6nKFv
#TamilNaduPolitics #NanjilSampath #IdumbavanamKarthik #BehindwoodsDebate #EngalDesamOfficial
அன்னைத் தமிழ்நிலத்தைக் காக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெற்கட்டான் செவ்வலில் போரிட்ட முதல் விடுதலைப் போராட்டவீரர் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் படையணியில் வீரமும், தீரமும் மிக்க படைத்தளபதிகளுள் ஒருவ���ாகத் திகழ்ந்தவர்.
எதிரிகளின் படைமுகாமிற்குள் ஒற்றை ஆளாகச் சென்று, அனைவரையும் அழித்து, வெற்றிவாகைச் சூடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் 'ஒண்டிவீரன்' என மக்களால் போற்றப்பட்டவர்.
பல போர்களில் வென்று வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, போர்க்களத்திலேயே வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட மாவீரர்!
விடுதலைப் போராட்ட மாவீரர் வீரப்பெரும்பாட்டன் ஒண்டிவீரன் அவர்களின் வீரப்பெரும்புக��் போற்றுவோம்!
நாம் தமிழர்!