எல்லா மதமும் நம்மதம்! 🙏
நமது தேமுதிக நிறுவனத் தலைவர், பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், அனைத்து மதங்களையும் நேசித்து, அனைவரையும் சகோதர சகோதரிகளாக அரவணைத்தவர்.
கேப்டன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று விருதாச்சலத்தில் அனைத்து மத சகோதர, சகோதரிகளையும் நேரில் சந்தித்து, அவர்களுடன் கேப்டன் பிறந்தநாள் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.
மதங்களைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்திய கேப்டன் அவர்களின் வழியில், ஒற்றுமையுடனும் அன்புடனும் அனைவரும் இணைந்து பயணிப்போம்.
கேப்டன் பிறந்தநாள் திருவிழா – மனிதநேயத்தின் திருவிழா!
#CaptainVijayakanth #DMDK #CaptainBirthday #எல்லாமதமும்சம்மதம் #கேப்டன்பிறந்தநாள்
போதை ஒழிப்பு நடிகர் விஜய் உறுதிமொழி ஏற்கிறார்..
😂😂😂
ஆனால் அவர்களுடைய கட்சி அமைச்சர் ஐபிஎல் மேட்சில் போதையில் நுணுங்குகிறார்..
#தவெகவின் எம்எல்ஏ BEER பாட்டிலுடன் ஆட்டம் போடும் காட்சி..
என்னா கட்சி..😍😍😍
#WATCH | "கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் மேகதாது, காவிரி பிரச்னைகளில் எப்படி தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசுவார்?" -செல்வப்பெருந்தகை
#SunNews | #VenkatNarayana | #Vijay | #TVK
இரங்கல் செய்தி!
பன்முகத் திறமைகளால் தமிழ் திரையுலகில் தனித்துவமான முத்திரை பதித்த திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான திரு. கே. பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற தரமான படைப்புகளை வழங்கி, தனது தனித்துவமான திரைக்கதை அமைப்பு, வசன நடை மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மறைந்த கே. பாக்யராஜ் அவர்களுக்கும், நமது கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் நீண்டகால அன்பும் நட்பும் நிலவியது. குறிப்பாக 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை. கேப்டன் அவர்களின் கலைப் பயணத்தில் பாக்யராஜ் அவர்கள் வகித்த நட்பும் பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
– பிரேமலதா விஜயகாந்த்
பொதுச் செயலாளர், தே.மு.தி.க.
சட்டமன்ற உறுப்பினர்
வைகோ 2 MLA க்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, தனிச் சின்னத்தில் போட்டியிட்டால், 2 தொகுதிகளிலும் மதிமுகவை படுதோல்வி அடையச் செய்து, திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க தேமுதிக இன்றிலிருந்தே சூளுரைக்கிறது தேமுதிக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் எல்.வெங்கடேசன் அறிவிப்பு!
@mkstalin
உலகப் புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இளம் கிராண்ட்மாஸ்டர் செல்வன் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக செஸ் அரங்கில் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் தனது திறமை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்த மகத்தான சாதனையைப் படைத்திருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமை அளிக்கிறது.
இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக விளங்கும் பிரக்ஞானந்தா அவர்கள், எதிர்காலத்திலும் மேலும் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்று நாட்டின் புகழை உயர்த்திட வாழ்த்துகிறேன்.
விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக அரங்கில் தொடர்ந்து சாதனைகள் படைக்க இந்த வெற்றி ஒரு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் உருவாக்கியுள்ளது. பிரக்ஞானந்தா அவர்களின் சாதனைக்கு தேமுதிக சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@rpraggnachess
#WATCH | "மூடாத கடையை மூடியதாக சொல்லி சுயலாபத்திற்காக வீடியோ போட்டிருக்காங்க..
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் கடைகளை மூடுவது வழக்கம். ஆனா, இந்தக் கடையை மூடுவதற்கு இப்ப வரை அறிவிப்பு வரல.."
தியாகராயர் நகரில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டதாக பரவிய தகவல்.. அக்கடையின் பொறுப்பாளர் அளித்த விளக்கம்..
#SunNews | #TASMAC | #Chennai