கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி
வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவரும் முதுபெரும் கவிஞருமான திரு.புவியரசு அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
தமிழ்மீது கொண்ட பற்றின் காரணமாக ஜெகநாதன் என்ற தம் இயற்பெயரைப் புவியரசு என்று மாற்றிக் கொண்டவர். ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, ரவீந்திரநாத் தாகூர், காசி நஸ்ருல் இஸ்லாம் என உலகின் பெரும் கவிகள், எழுத்தாளர்களின் இறவாக் காவியங்களைத் தமிழில் ஆக்கியளித்துப் பங்காற்றியவர்.
இருமுறை சாகித்திய அகாதெமியின் விருதினையும், 2008-ஆம் ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருதினையும் வென்றவர்.
தம் வாழ்வே தமிழ் வாழ்வாக வாழ்ந்து மறைந்துள்ளார் கவிஞர் புவியரசு அவர்கள். அன்னாரை இழந்து வாடும் தமிழ் கூறும் நல்லுலகத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு (வடக்கு) மாவட்டம் - புன்செய்ப் புளியம்பட்டி நகரம்
32 ஆண்டுகால நில வகைப்பாடு பிரச்சனைக்கு தீர்வு - காந்திநகர்
புல.எண்.136-ல் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றைக்கும் மக்களின் குரலாகவும், அவர்களுக்கு துணை நிற்கும் ஒரே இயக்கம் திமுகழகம் !!!
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
கழக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
’’பத்திரிகை நண்பர்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிதாக ஆட்சி அமைந்த பிறகு, முதன்முறையாக நம் ஆளுநர் இராஜேந்திர அர்லேகர் அவர்கள், இன்றைக்கு சட்டமன்றத்துக்கு வருகை தந்து, ஆளுநர் உரையினை வாசித்திருக்கிறார். பொதுவாக ஆளுநர் உரை என்பது ஆளுநருடைய ஒரு தனிப்பட்ட உரை கிடையாது. அது அரசு தயாரித்துக் கொடுக்கக்கூடிய உரை, அரசின் `பாலிசி நோட்’ போன்ற ஒரு `ப்ளூ பிரிண்ட்’.
சுயதம்பட்டம் - சுயபுராணம்
இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள், அதையெல்லாம் எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு எல்லாம் எப்படிச் செய்யப்போகிறார்கள் என்பதை, முன்கூட்டியே சொல்லக்கூடிய ஒரு பாலிசி நோட்டாகத்தான் எப்பொழுதுமே ஆளுநர் உரை இருக்கும்.
ஆனால், இன்றைக்கு ஆளுநர் உரையை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அதில் இருக்கக்கூடியவை ஆளுங்கட்சியினர் `ரீல்ஸ்’ போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது. அந்த அளவுக்கு முதலமைச்சர் அவர்கள் தன்னைப் பற்றியும், தன் கட்சியைப் பற்றியும் ஒரு சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளக்கூடிய, ஒரு சுயபுராணம் பாடிக்கொள்ளக்கூடிய ஒரு உரையாகத்தான் இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.
இன்னும் குறிப்பாகப் பார்த்தால், கடந்த ஐந்து வருடங்களாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கும்போது, எங்களுடைய முதலமைச்சர், எங்களுடைய அரசு தயாரித்துக் கொடுக்கக்கூடிய எந்த உரையையும் ஆளுநர் முழுமையாகப் படித்ததே கிடையாது. அதில் பல திருத்தங்களை ஆளுநர் செய்வார். ஆனால், இந்த முறை ஆளுநர் அவர்கள் இந்த அரசு என்ன தயாரித்துக் கொடுத்திருக்கிறதோ, அதை அப்படியே ஒரு வரி மாற்றாமல், ஒரு எழுத்து மாற்றாமல் அப்படியே வாசித்திருக்கிறார். இதிலிருந்தே இந்த அரசுக்கும், ஒன்றிய ஆளுங்கட்சியான பா.ஜ.க.விற்கும் ஒரு இணக்கமான ஒரு சூழ்நிலை, ஒரு கனெக்சன் ஏற்பட்டுவிட்டதோ என்கிற எண்ணம் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கிறது.
திராவிட மாடல் அரசின் திட்டங்கள்-சாதனைகள்
அவர்களுடைய சொந்த சுய புராணத்தை எல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தீர்கள் என்றால், `ஒலிம்பிக் மையங்கள்’, `திறன் பயிற்சி மையங்கள்’ `69 சதவிகித இட ஒதுக்கீடு’, `இருமொழிக் கொள்கை’, `தேசிய கல்விக் கொள்கை- 2020 எதிர்ப்பு’, `நிலுவையில் இருக்கக்கூடிய கல்வி நிதி கேட்டுக் கோரிக்கை’, `வறுமையில்லா தமிழ்நாடு’, `உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி’, `சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை’, `கீழடி உள்ளிட்ட அகழாய்வுகள்’, `இந்தியாவிலேயே அதிகமாக நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு’ இப்படி எங்கள் அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகளைத்தான் மீண்டும் இவர்கள் படித்திருக்கிறார்கள்.
இப்படி கடந்த திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மேல் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, இவர்கள் ஆட்சியின் தோல்விக்கான பழியைத் தூக்கி மீண்டும் திராவிட மாடல் அரசின் மீது, தி.மு.க அரசின் மீதே இவர்கள் போட்டிருக்கிறார்கள். மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடன் இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் நம் பெருமை
இரண்டு, மூன்று இடங்களில் ஆளுநர் உரையில் `சென்ற அரசினுடைய நிர்வாகம் சரியில்லை’ என்று குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள், சொல்லியிருக்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அப்படி ஆட்சி நிர்வாகம் சரியில்லாமல் இருந்திருந்தால், எப்படி இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிற மாதிரி பல திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றிக் காட்டியிருக்கும்?
உதாரணத்துக்கு, சென்ற வாரம் நம் முதலமைச்சர் அவர்கள் டெல்லிக்குப்போய் நிதி ஆயோக் கூட்டத்தில் நம் தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு திட்டங்களைச் செய்திருக்கிறோம், எவ்வளவு சாதனைகளைச் செய்திருக்கிறோம், இன்றைக்கு இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசியிருக்கிறார். அதெல்லாம் அவருடைய ஒரு மாத ஆட்சியினுடைய சாதனைகளா? கிடையாது.
காப்பி பேஸ்ட் அரசு!
முன்னாள் முதலமைச்சர், எங்களுடைய தலைவர், எங்களுடைய திராவிட மாடல் அரசினுடைய சாதனைகளைத்தான் போய் டெல்லியில் நம் முதலமைச்சர் அவர்கள் வாசித்துவிட்டு வந்திருக்கிறார். அந்த வகையில், மொத்த முரண்பாடுகளுடைய உருவமாகத்தான் இன்றைக்கு இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது. இந்த அரசு அமைந்து 38 நாட்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கென்று சொல்வதற்குச் சாதனைகள் எதுவுமே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே எங்களுடைய திராவிட மாடல் அரசின் திட்டங்கள்தான், அதனுடைய நீட்சிதான். இந்த அரசு வெறும் ஒரு காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்கர் அரசாகத்தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு திட்டங்களை இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தத் திட்டங்களை எல்லாம் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்று ஒரு ப்ளூ பிரிண்ட்டாக, ஒரு முன்னோட்டமாக, ஒரு ட்ரைலராகத்தான் இன்றைக்கு இந்த உரை இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். மக்களும் அதை எதிர்பார்த்தார்கள்.
இவர்களுடைய அறிவிப்புகளை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்று இந்த ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டும் என்று நாங்கள் எல்லாம் நினைத்தோம், ஆனால் ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
ஒரு வெற்று அறிக்கை
சொன்ன வாக்குறுதிகளில் இருந்து எப்படி எல்லாம், என்ன காரணம் எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் என்பதற்காக நேற்று முன்தினம் அதற்கு ஒரு முன்னோட்டமாக ‘வெள்ளை அறிக்கை’ என்று சொல்லி ஒரு வெற்று அறிக்கையை நேற்று முன் தினம் வெளியிட்டார்கள். அதைப்பற்றி நேற்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நிதி அமைச்சர், அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார். அதற்கு கேள்விகளும் கேட்டிருக்கிறார், அதற்கு எந்த பதிலும் இதுவரைக்கும் இல்லை.
இப்படி மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், இது எல்லாத்துக்கும் மேல் சட்டம் ஒழுங்கு இன்றைக்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சிகளில் நீங்களே ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறீர்கள். ஒரு சின்ன புள்ளிவிவரத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எப்படியெல்லாம் டயலாக் பேசினார், வீர வசனம் பேசினார் என்று தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள், நீங்கள் அத்தனை பேரும் பார்த்திருப்பீர்கள்.
என்ன சொன்னார்? ‘பச்சை பிள்ளைகள், படிக்கிற பிள்ளைகள், சின்ன பொண்ணுங்க, வீட்டில் இருக்கிற பொண்ணுங்க, வேலைக்குப் போகிற பொண்ணுங்க, இவர்கள் எல்லாருக்கும் நடக்கிற கொடுமையைச் சொல்ல முடியவில்லையே சிஎம் சார்’ என்று எங்கள் தலைவரைப் பார்த்து, அப்போது இருக்கக்கூடிய முதலமைச்சரைப் பார்த்து, இன்றைய முதலமைச்சர் அவர்கள் வீர வசனம் பேசினார். இன்றைக்கு அவர்களுடைய ஆட்சியில் தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய இந்த கொடுமைகள் எல்லாம், குற்றங்கள் எல்லாம் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்தில் வரும் அல்லவா, ‘சார், கண்ணாடியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் சார்’ என்கிறஅந்த நிலைமையை இன்றைக்கு முதலமைச்சர் ஏற்படுத்தி இருக்கிறார். அதுவும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக இன்றைக்கு நடக்கக்கூடிய அனைத்து குற்றங்களிலும் யார் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தீர்கள் என்றால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், அவர்களின் கட்சியினரே அந்த குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு?
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் ஆளுநர் உரையில் எந்தவிதமான ஒரு குறிப்பும் கிடையாது. அதேபோல, ஏற்கனவே நன்றாக இருக்கக்கூடிய திட்டங்களைக் கெடுப்பதை, எதிர்க்கட்சிகள் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நேற்று கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், எங்கள் திராவிட மாடல் அரசு கொண்டு வந்த ஒரு திட்டம், அரசின் முத்திரை திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்கி இருக்கிறார்கள், பெயரை மாற்றி இருக்கிறார்கள். அது எங்களின் தலைவர் பெயரில் இருக்கக்கூடிய திட்டமும் கிடையாது, டாக்டர் கலைஞருடைய பெயரில் இருக்கக்கூடிய ஒரு திட்டமும் கிடையாது, ஒரு நல்ல திட்டம். ஏன் நீக்கி இருக்கிறார்கள் என்றால், ‘நான் முதல்வன்’ என்று சொன்னாலே, ‘முதல்வன்’ என்று சொன்னாலே மக்களுக்கு எங்கள் தலைவர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பெயர்தான் மக்களுக்கு ஞாபகம் வரும் என்று, அப்படிப்பட்ட ஒரு குறுகிய எண்ணத்தோடு அந்த திட்டத்தின் பெயரையே நீக்கி இருக்கிறார்கள். அந்த திட்டத்தின் அச்சீவ்மென்ட்ஸ் வீடியோஸ் எல்லாம் சோசியல் மீடியாவில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகள். ஆனால் எத்தனை பிரச்சனை நடந்து கொண்டு இருந்தாலும், ‘இன்றைக்கு முதலமைச்சர் கோட் சூட் போட்டு இருக்கிறார்’, ‘இன்றைக்கு முதலமைச்சர் வேட்டி சட்டை கட்டி இருக்கிறார்’, ‘இன்றைக்கு முதலமைச்சர் டிபன் பாக்ஸில் லஞ்ச் எடுத்துக்கொண்டு வந்து சாப்பிடுகிறார், கோட்டையிலேயே சாப்பிடுகிறார், அவர் வாயில் அவரே வைத்துச் சாப்பிடுகிறார்’ என்று அவர்கள் கட்சியின் விர்ச்சுவல் அபியூசர்ஸ் (Virtual abusers) எல்லாம் இப்படிப்பட்ட கண்டன்ட்களை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி என்றைக்கு நம் முதலமைச்சர் வாயைத் திறப்பார் என்று கேட்பதற்காகத்தான், இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ‘தயவு செய்து வாயைத் திறங்கள் சிஎம் சார், பதில் சொல்லுங்கள் சிஎம் சார்’ என்பதற்காகத்தான் இன்றைக்கு இந்த பேட்ஜை நாங்கள் அணிந்து கொண்டு வந்திருக்கிறோம். எங்களின் எதிர்ப்பை, எங்களின் எண்ணங்களைத் தெரிவித்து இருக்கிறோம்.
அதுவும் எப்போதாவது பேசுகிற முதலமைச்சர் பார்த்தீர்கள் என்றால், அப்பொழுதும் தான் முதலமைச்சர் என்பதை மறந்து, இன்னும் பிரச்சார மோடிலேயே பேசிக் கொண்டிருக்கிறார். சிஎம் தான் அப்படி இருக்கிறார் என்று பார்த்தீர்கள் என்றால், அவர்களின் ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் முழுக்க முழுக்க ரீல்ஸ் வெறியிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே அவர்களுக்குக் கன்டென்ட். எல்லாமே ரீல்ஸ்தான். இதையெல்லாம் பற்றி முதலமைச்சர் கவலைப்படுகிற மாதிரி துளியும் தெரியவில்லை. அவரின் ஒரே சிந்தனை இந்த ஆட்சியை எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்கிற அந்த கவலையில்தான் அவர் இருக்கிறார்.
பீரோ புல்லிங் என்று சொல்வார்கள். அது மாதிரி இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள் அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் எம்.எல்.ஏ புல்லிங் செய்துக் கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் ‘பேனிக் பையிங்’ (Panic Buying) என்று ஒரு வார்த்தை இருக்கிறது. திடீரென்று ஒரு பேரிடர் காலமோ, இல்லை ஒரு கடையடைப்போ நடக்கும் போது, மக்கள் எல்லாம் அவசர அவசரமாக சென்று வீட்டிற்குத் தேவையான சாப்பாடு பொருட்கள், வண்டிக்குத் தேவையான பெட்ரோல், டீசல் எல்லாம் போட்டு வைத்துக் கொள்வார்கள். அதற்குப் பெயர் பேனிக் பையிங் என்பார்கள். ஒரு ஆர்டிபிஷியல் டிமாண்ட் கிரியேட் செய்வது. அது மாதிரி இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம், ஆட்சி அமைந்த நாளில் இருந்து இன்றைக்கு வரைக்கும் தன் ஆட்சியைப் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் பேனிக் பையிங் செய்துகொண்டிருக்கிறார்.
மாற்றம் மாற்றம் என்று சொல்லிவிட்டு இன்றைக்கு இந்த ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்றைக்குப் பொதுமக்கள் என்னவென்று சொல்கிறார்கள்? இது மாற்றம் இல்லை. மாட்டிக்கொண்டோம் நாம் எல்லாம் சேர்ந்து இவர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்று புலம்ப வைத்திருக்கிறது இன்றைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த அரசு. எனவே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் என்று யாருடைய பாதுகாப்புக்கும், எந்த ஒரு வலிமையான திட்டங்களும் புதிய ஆளுநர் உரையில் நிச்சயம் இல்லை. அதனால் கடந்த ஆட்சியின் மேல், காழ்ப்புணர்வை மட்டுமே வெளிப்படுத்துகின்ற இந்த ஆளுநர் உரையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கேள்வி: ஆளுநர் உரையை முழுமையாக வாசித்துவிட்டுப் போயிருக்கிறார். தி.மு.க ஆட்சியின்போது ஆளுநர் பாதியிலேயே கிளம்பிப் போய்விடுவார். இந்த நிகழ்வை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: ஏற்கனவே சொன்ன மாதிரிதான். கடந்த ஐந்து வருடத்தில் ஒரு முறை கூட ஆளுநர் அவர்கள் தி.மு.க அரசு கொடுத்திருக்கக்கூடிய உரையை முழுமையாகப் படித்ததே கிடையாது. மாற்றம் செய்வார். ஆனால் மாற்றம் செய்யும்போது அப்பொழுது இருந்த எங்கள் முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த முறை பார்த்தீர்கள் என்றால், ரொம்ப அபூர்வமாக முழு உரையும் ஒரு வார்த்தை, ஒரு கமா, ஒரு ஃபுல் ஸ்டாப் கூட எடுக்காமல் வாசிக்கும் போதே, உங்களுக்குத் தெரியும். நம் ஆட்சியாளர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தாருக்கும், பா.ஜ.க-விற்கும் ஒரு பெரிய அண்டர்ஸ்டாண்டிங் வந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது.
கேள்வி: சட்டப்பேரவையில் மரபு மாற்றப்பட்டு, இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : மிகப்பெரிய ஆச்சரியங்கள், அதிசயங்கள் இப்போது இங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. மரபு மீறப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் எப்போதுமே தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் வாசிக்கப்படும். முடியும் போது ஆளுநர் கிளம்புவதற்கு முன்பு தேசிய கீதம் ஒளிபரப்பப்படும். ஆனால் இந்த முறை இரண்டு முறை தேசிய கீதத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள் என்றால், மீண்டும் சொல்கிறேன், பா.ஜ.க-வும், இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும், ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கிற்கு வந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
நன்றி, வணக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
ஈரோடு (வடக்கு) மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டி
நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில ஜூன்-3 நூற்றாண்டு கண்ட தரணி போற்றும் தன்னிகரில்லா காவியத் தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இன்று காலை 10 மணி அளிவில் நகர கழக செயலாளர்- நகர்மன்ற துணைத் தலைவர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், நகர அவைத்த்லைவர் திரு எஸ்.ஏ.சாகுல் அமீது அவர்களின் தலைமையில், மாநில் பொதுக்குழு உறுப்பினர் திரு வெ.ஜெயராஜ் அவர்களின் முன்னிலையில் நகர கழக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைக்கபட்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தோழர் திரு பி.எல்.சுந்தரம் அவர்கள் பங்கேற்று தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழக முன்னோடிகளும், மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளும், வார்டு நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, சார்பு அணியினரும் மற்றும் பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழை போற்றி வணங்கி சிறப்பித்தனர்.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி
தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்! அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்!
“ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.
இஸ்லாமிய சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழத்தையும், மேன்மையையும், உண்மையான பிணைப்பையும் கொண்டது. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை, இந்த நன்னாளில் மேலும் உறுதிசெய்ய விரும்புகிறேன்.
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
கழக முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு அவர்கள் அறிக்கை
மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர்.
மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் கழகத் தலைவர் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்.
மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்!
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறித் தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது - ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்.
இப்போதாவது - இதற்காகவாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 20.04.2026
நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 17-ல் (பாகம் எண்: 268,269) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
புன்செய்ப் புளியம்பட்டி நகரத்துக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் 20 பாகங்களிலும் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணி நிறைவடைந்தது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் தோழர் பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு ஆதரவாக இன்று மதியம் புன்செய்ப் புளியம்பட்டி உட்பட்ட பள்ளிவாசல்கள் முன்பு இஸ்லாமிய சகோதரர்களிடம் நகர திமுகழக செயலாளர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முன்னிலையில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
அமைதியை விரும்புவதுதான் தமிழ்நாட்டின் D.N.A.! அதைச் சிதைக்க வேண்டும் என்று துடிப்பதுதான் NDA!
தமிழ்நாடு அரசின் பணமெல்லாம் நேரடியாக மக்களுக்குதான் போகிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசுக்கு கட்டும் வரிப்பணம் எல்லாம் எங்கே போகிறது? பியூஷ்கோயல் பதில் சொல்ல முடியுமா?
- கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு @mkstalin அவர்கள் இன்று (05-04-2026) மாலை, மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:
அன்புக்கும் - பண்புக்கும் - விருந்தோம்பலுக்கும் - பெயர்பெற்ற ஊர்! பாசாங்கு இல்லாத பாசமிக்க மனிதர்கள் வாழும் ஊர், நம்முடைய மதுரை! தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர்! எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஊர், மதுரை! ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இரவு 12 மணிக்கு கூட ஆவி பறக்க சுடச்சுட இட்லி கிடைக்கும். அதனால்தான் தூங்கா நகரம் என்று சொல்கிறோம்! தமிழ் இலக்கியத்தில் சிறப்பான இடம் கொண்ட ஊர்! கண்ணகி நீதி கேட்டு முழங்கிய மதுரைக்கு தமிழ்நாட்டை வஞ்சிப்பவர்களை தண்டித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கு வெற்றியைக் கேட்டு வந்திருக்கிறேன்! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். தலைநிமிர்ந்த தமிழ்நாடு, புது உயரங்களை அடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, உங்களின் பொன்னான வாக்குகளை கேட்டு வந்திருக்கிறேன். இப்போது நம்முடைய வெல்லும் வேட்பாளர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.
முதலில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள். மதுரையில் மூர்த்திக்கு அறிமுகம் தேவையா? என்னுடைய அன்பை மட்டுமல்ல, உங்கள் எல்லோருடைய அன்பையும் பெற்றவர்தான் மூர்த்தி! அமைச்சராகப் பணியாற்றி, மாபெரும் சாதனைகளைச் செய்தவர்! தன்னுடைய துறையில் முத்திரைப் பதித்தவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி. நம்முடைய வெல்லும் வேட்பாளர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்கள். நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவரான, பி.டி.ராசன் அவர்களின் பேரன், பண்பாளர் கழகத்தின் மாண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் அவர்களின் அருமை மகன் நம்முடைய பி.டி.ஆர்! சிந்தனையிலும் சரி, விவாதங்களிலும் சரி, பி.டி.ஆரை வீழ்த்துவது முடியாத செயல்! அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி. நம்முடைய வெல்லும் வேட்பாளர் கோ. தளபதி அவர்கள். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வருபவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் சேடப்பட்டி மணிமாறன் அவர்கள். கழகத்தின் மூத்த முன்னோடியான சேடப்பட்டி முத்தையா அவர்களின் அருமை மகன். மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். திருமங்கலத்தில் இந்த முறை கழக வெற்றிக்கொடியை நிச்சயமாக ஏற்றப் போகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஆ. வெங்கடேசன் அவர்கள். கிளைக் கழகச் செயலாளராக இருந்து உயர்ந்த செயல்வீரர். ஆதி திராவிடர் நலப்பிரிவு அமைப்பாளராக இருந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக உழைத்தவர். கடந்த முறை வெற்றி பெற்று சிறப்பாக தொகுதிக்கு பணியாற்றியவர். தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்தவர். மீண்டும் உங்கள் ஆதரவைக் கோரி நிற்கிறார். அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி. நம்முடைய வெல்லும் வேட்பாளர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பூமிநாதன் அவர்கள். என்னுடைய ஆருயிர் அண்ணன் வைகோ அவர்களின் அன்பைப் பெற்றவர். பொடா சட்டத்தில் கைதாகி, அண்ணன் வைகோ அவர்களுடன் 19 மாதங்கள் சிறையில் இருந்த தியாகத்திற்குச் சொந்தக்காரர். ‘உறங்கா புலி’ மூக்கையாத் தேவருக்கு மணிமண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் வழக்கறிஞர் ரகு பாலாஜி அவர்கள். சட்டக் கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் இருந்து கழகப் பணியாற்றி வரும் கொள்கைப் பற்றாளர். வழக்கறிஞர் அணி – இளைஞரணி என்று வளர்ந்து, இன்றைக்கு வடக்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி. நம்முடைய வெல்லும் வேட்பாளர் திருமதி கிருத்திகா தங்கபாண்டி அவர்கள். மாவட்டக் கவுன்சிலராக இருந்து, மகளிரை தொழில்முனைவோர் ஆக்கும் முன்னெடுப்புகளை செய்து கொண்டிருக்கிறார். மகளிருக்கு மருத்துவ முகாம்கள், கட்டணமில்லா ஓட்டுநர் பயிற்சி உள்ளிட்ட சமூக சேவைகளை அதிகமாக செய்யும் அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி. என்னுடைய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் நம்முடைய வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணக்குமார் அவர்கள். விடுதலைக்காக போராடிய குடும்பத்தில் பிறந்தவர். காந்திய உணர்வு கொண்ட இளைஞர். அவருக்கு கை சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மேலூர் சட்டமன்றத் தொகுதி. என்னுடைய அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் இன்று மாலை அறிவிக்கப்பட்டிருக்கும் நம்முடைய வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் அவர்கள். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, மக்கள் பணியாற்றியவர். மதுரையில் குடியிருக்கும் அவருக்கு, மேலூர் தொகுதி மக்கள் கை சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
இங்கு மேடையில் நிற்கும் 10 பேரின் வெற்றியையும், நீங்கள் உறுதி செய்துவிடுவீர்களா? வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி. வெற்றி உறுதி ஆகிவிட்டது. வேட்பாளர்கள் உட்காரலாம்.
மாமதுரையின் வளர்ச்சி என்றாலே தி.மு.க.தான்! நம்முடைய ஆட்சிக்காலங்களில் செய்யப்பட்ட முத்தாய்ப்பான சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால்,
1971-இல் மதுரை மாநகராட்சியாக ஆனது!
மாவட்ட நீதிமன்றம்!
மதுரை முத்து மேம்பாலம்!
ஆண்டாள்புரம் மேம்பாலத்திற்கு பசும்பொன் திருமகனார் பெயர்!
தியாகி என்.எம்.ஆர். சுப்புராமன் மேம்பாலம்!
மானம்காத்த மருதுபாண்டியருக்குச் சிலை!
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்போது திராவிட மாடல் அரசில் இரண்டு முக்கியமான அமைச்சர்கள் மதுரைக்கு கிடைத்த காரணத்தினால், கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளில் ஹைலைட்டான சிலவற்றை இப்போது சொல்கிறேன்.
தென்தமிழ்நாட்டின் அறிவு ஆலயமாக மாறி, நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் படித்து முன்னேற துணையாக இருக்கும், கலைஞர் நூற்றாண்டு நூலகம்! பெருமையோடு சொல்கிறேன்… கடந்த ஆண்டு மட்டும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்து, 24 பேர் TNPSC-இல் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த நூலகத்தின் பயன் என்னவென்று போட்டித் தேர்வில் தேர்ச்சி செய்த அவினாஷ் என்ற மாணவன் சொன்னதை நான் சொல்கிறேன், “இது மாதிரியான திறன் மேம்பாட்டு படிப்புகளை படிக்க வேண்டும் என்றால், ஒரு இலட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகும். ஆனால், கலைஞர் நூலகத்தால் எந்தச் செலவும் இல்லாமல் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுவிட்டேன்” என்று அவினாஷ் சொல்லியிருந்தார். அதேபோன்று, பழங்காநத்தத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சகோதரர் ஸ்ரீகாந்த் அவர்கள், இங்கு இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி, படித்து, வங்கி உதவி மேலாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் என்ன பேட்டி கொடுத்தார் தெரியுமா, “என்னுடைய கனவுக்கு கை கொடுத்தது கலைஞர் நூற்றாண்டு நூலகம்” என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். இந்த மாதிரி நம்முடைய இளைஞர்கள் சாதனை படைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு திட்டங்களையும் சாதனைத் திட்டங்களாக நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்!
அடுத்து, நம்முடைய பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்று அலங்காநல்லூர் கீழக்கரை பகுதியில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்!
அதுமட்டுமல்ல, மேலமடையில் மிக நீளமான வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்!
சமீபத்தில் என்னால் திறக்கப்பட்ட கோரிப்பாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம்!
திருமங்கலம் - கள்ளிக்குடி இடையிலான வீரபாண்டிய கட்டபொம்மன் மேம்பாலம்!
உலக தரத்தில் ஹாக்கி விளையாட்டரங்கம்!
தினமும் 10 ஆயிரம் மக்கள் வந்து மகிழும் புனரமைக்கப்பட்ட வண்டியூர் பூங்கா! மதுரை மக்கள் இப்போது அந்தப் பார்க்கை பார்த்து என்ன சொல்கிறீர்கள்… ‘குட்டி மெரினா போன்று மதுரைக்கு கிடைத்திருக்கிறது’ என்று பேசுகிறீர்கள்.
வைகை வடகரை சாலை மேம்பாடு,
சிட்கோ தொழிற்பூங்கா,
காவிரி குடிநீர் திட்டம்!
இதுவரை இல்லாத அளவிற்கு மதுரை மாவட்டத்தில் மட்டும், 1 இலட்சத்து 22 ஆயிரத்து 680 பேருக்கு இ-பட்டாக்கள்!
செல்லூர் கண்மாயிலிருந்து வைகை ஆறு வரை சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணி என்று ஏராளமான பணிகளை செய்திருக்கிறோம்!
அதுமட்டுமா,
செல்லூரில் பந்தல்குடி மேம்பாலம்,
கள்ளழகர் திருக்கோயிலில் 40 கோடி ரூபாயில் பக்தர்களுக்கான வசதிகள்,
திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் வசதி ஆகிய பணிகள் தொடங்கப் போகிறது.
பிப்ரவரி கடைசியில் நான் மதுரைக்கு வந்தது உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கிறதா?
ஆயிரத்து 536 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
கரிமேட்டில் அறிவியல் மையம்.
மதுரை எல்காட்டில் பினக்கிள் நிறுவனத்தின் உலகளாவிய சிறப்பு பொறியியல் மையம் விரிவாக்கம்.
நம்முடைய மதுரை இளைஞர்களுக்கு பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் என அந்தப் பயணம் அமைந்தது.
அப்போது, ஆங்கில பத்திரிகைகள் எல்லாம் என்ன எழுதினார்கள் தெரியுமா? “மதுரையைத் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். அதற்கான திட்டங்களை நிறைய கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறார்” என எழுதினார்கள். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-இல் இந்தச் செய்தி வந்திருக்கிறது.
இப்படி மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல்தான் திராவிட மாடல்! மகளிரை முன்னேற்றும் மாடல்! இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் மாடல்! முதியோர்களுக்கு அன்புக்கரம் நீட்டும் மாடல்! எல்லாவற்றிற்கும் மேல், அனைத்து மக்களும் மதநல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான, மகத்தான மாடல்!
ஆனால், N.D.A. முன்வைப்பது வளர்ச்சியைக் கெடுக்கும் ஆரிய மாடல்! மதநல்லிணக்கத்தை கெடுக்கும் ஆரிய மாடல்! மக்களைப் பிளவுபடுத்தும் ஆரிய மாடல்! இன்னும் சொன்னால், மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் வன்முறை மாடல்!
அண்ணன் தம்பியாக - அக்கா - தங்கையாக உறவுமுறையோடு பாசமாக பழகும் மதுரை மக்கள் மிகவும் புத்திசாலிகள்! அதனால்தான், கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் சதியை சிறப்பாக முறியடித்தீர்கள். அதற்காக உங்கள் பாதங்களையெல்லாம் தொட்டு நான் நன்றி கூறுகிறேன்.
மதுரைக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? கறிதோசை, பரோட்டா என்று நன்றாக சாப்பிட்டோமா, வெயிலுக்கு இதமாக ஒரு ஜிகர்தண்டாவை குடித்தோமா, தெப்பகுளம் பக்கமாக காலார நடந்தோமா, கோயில் திருவிழாக்களை கொண்டாடினோமா என அமைதியை விரும்புகின்றவர்கள் நீங்கள். இதுதான் தமிழ்நாட்டின் D.N.A.!
ஆனால், இதைச் சிதைக்க வேண்டும் என்று NDA துடிக்கிறார்கள். அவர்களின் அடிமைகளாக அ.தி.மு.க.வை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியிருக்கிறார் பழனிசாமி! அமைதியையும், வளர்ச்சியையும், சகோதர பாசத்தையும் முன்னிறுத்தும் தமிழ்நாட்டின் D.N.A.-வுக்கு மாறாக, சொந்த மண்ணுக்கும் - சொந்த மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கட்சியாக NDA இருக்கிறது. இவர்கள்தான், டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று தமிழ்நாட்டுக்குள் வர நினைக்கிறார்கள்.
இவர்களின் இலட்சணம் என்ன? மதுரைக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று எய்ம்ஸ் மருத்துவமனையை, 2015 பட்ஜெட்டில் அறிவித்தார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அடிக்கல் நாட்டினார்கள். அதற்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தது; 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது; இப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது! ஆனால், எய்ம்ஸ் மட்டும் வரவே இல்லை! மதுரை எய்ம்ஸ் பேப்பரில் இருக்கிறதே தவிர; நிஜத்தில் இல்லை! இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூரில், 2017-இல் அடிக்கல் நாட்டி, 2022-இல் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க முடிந்த அவர்களால், மதுரை எய்ம்ஸை ஏன் உருவாக்க முடியவில்லை?
இதுவே நம்முடைய திராவிட மாடலில் அடிக்கல் நாட்டி ஒன்றரை வருடத்தில் இதே மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாகிவிட்டது. ஒன்றரை வருடத்தில் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை உருவாகிவிட்டது! ஒன்றரை வருடத்தில் கோவையில் செம்மொழிப் பூங்கா உருவாகிவிட்டது! கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் அமைத்து திறந்து வைத்துவிட்டோம். கோவையில் பெரியார் அறிவுலக நூலகம். திருச்சியில் காமராசர் நூலகம். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் நிகழ்ச்சியாக அதைத்தான் நான் திறக்கப் போகிறேன்.
ஏன் பா.ஜ.க.வால் நம்மை மாதிரி வேகமாக செயல்பட முடியவில்லை? ஏன் என்றால், அவர்களுக்கு தமிழ்நாடு மேல் இருக்கும் வெறுப்பு அப்படிப்பட்டது. அதனால்தான் கீழடி நம் தாய்மடி என நாம் கொண்டாடும் கீழடி ஆய்வறிக்கையை, இப்போது வரை வெளியிட மறுக்கிறார்கள். இரும்பின் பயன்பாடு தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்கியது என அறிவியல்பூர்வமாக நாம் நிரூபித்திருக்கிறோம். அந்த ஆய்வு முடிவை வெளியிட்டதற்கு பிரதமர் மோடி அவர்களோ, பா.ஜ.க. அரசோ ஒரு வாழ்த்து கூட இது வரை சொல்லவில்லை.
அண்மையில்கூட நம்முடைய மதுரைக்காக மெட்ரோ ரயில் திட்டத்தை கேட்டோம். ஆனால், ஆக்ரா, போபால், பாட்னா போன்ற நகரங்களுக்கு கொடுத்தார்களே தவிர, மதுரைக்கும் - கோவைக்கும் மறுத்துவிட்டார்கள்! இப்படிப்பட்ட துரோக கூட்டணிதான் N.D.A! தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் செயல்படும் N.D.A.வின் சதித்திட்டங்களை வென்று, வளர்ச்சிப் பாதையில் நம்முடைய சாதனை பயணத்தை தொடர வேண்டும்!
பத்தாண்டுகாலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீரழித்தது அ.தி.மு.க.! அதற்கு துணை போனது பா.ஜ.க.! நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்! 2021-இல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு, இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாடல் திராவிட மாடல்தான் என்று சொல்லும் அளவுக்கு மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம்!
ஆட்சிக்கு வந்து முதல் நாள் முதல் கையெழுத்திலேயே மகளிர் எல்லோரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டேன். அதைத் தொடர்ந்து, திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களை நான் இப்போது தலைப்புச் செய்திகளாக சொல்லப் போகிறேன்…
ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை வழங்கிக் கொண்டிருக்கும், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”. இனி, உங்களின் உரிமைத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயரப் போகிறது!
அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குச் செல்லும் மாணவ - மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம்! இனி இந்தத் தொகை, ஆயிரத்து 500 ரூபாயாக உயரப் போகிறது!
இதே மதுரையில் ஆரம்பிக்கப்பட்டு, ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 19 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு சூடாக - சுவையாக சத்தான உணவை வழங்கும் “காலை உணவுத் திட்டம்”! இந்தத் திட்டத்தை இப்போது எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப் போகிறோம்!
பல இலட்சம் உயிர்களைக் காக்கும் “மக்களைத் தேடி மருத்துவம்!”
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பல்லாயிரம் பேரின் உயிர்களையும், குடும்பங்களையும் காப்பாற்றிய இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48.
பாதம் பாதுகாப்போம்!
இதயம் காப்போம்!
சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டம்!
ஒன்றிய அரசே பின்பற்றப் போவதாக சொல்லியிருக்கும், தோழி விடுதி!
ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு!
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்!
கலைஞர் கனவு இல்லம்!
இப்படி நாள் முழுவதும் என்னால் பட்டியலிட முடியும்!
நான் இவ்வளவு நேரம் நாம் நிறைவேற்றி வரும் எத்தனையோ திட்டங்களை சொன்னேன். நிறைய சொல்லாமலும் விட்டிருக்கிறேன். புதிய வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கிறேன். இந்தியாவிலேயே அதிக திட்டங்களை தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசுதான் செயல்படுத்துகிறது!
இது தெரிந்தும், மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், எதுவும் தெரியாத மாதிரி நேற்று பேசியிருக்கிறார். பியூஷ் கோயல் அவர்கள் என்ன பேசினார்? “தமிழ்நாட்டில் எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அரசின் பணம் எல்லாம் எங்கே போகிறது? கடன்சுமை அதிகரித்துவிட்டது, தமிழ்நாடே திவால் ஆகப் போகிறது” என்று எந்தப் புரிதலும் இல்லாமல் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை, எங்கள் திட்டங்களுக்கெல்லாம் பெயரை மட்டும் மாற்றி அறிக்கை வெளியிட்டிருக்கும் பழனிசாமியிடம் கேளுங்கள். அவர் சொல்வார்.
தமிழ்நாடு அரசின் பணமெல்லாம் எங்கே போகிறது என்று கேட்கிறீர்களே… எல்லாமே நேரடியாக மக்களுக்குதான் போகிறது. ஒரு மாதம் முன்னால் கூட எல்லோருக்கும் 5 ஆயிரம் போனதே! உங்களுக்கு தெரியாதா? அது இங்கு இருக்கும் பயனாளிகள் எல்லோருக்கும் தெரியும்.
நாங்கள் கேட்பது, தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசுக்கு கட்டும் வரிப்பணம் எல்லாம் எங்கே போகிறது? தமிழ்நாட்டிற்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. கோயல் அவர்களே, அப்படியே, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு எவ்வளவு நிதியை கொடுத்திருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து சொல்லுங்கள். அப்போதுதானே, தமிழ்நாட்டை நீங்கள் எந்தளவுக்கு வஞ்சிக்கிறீர்கள் என்று தெளிவாக புரியும்!
தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசியிருக்கிறீர்களே… நேற்று உங்கள் அமைச்சரவை நண்பர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு ஒரு சவால் விட்டேன். இன்று உங்களுக்கு ஒரு சேலஞ்ச் செய்கிறேன்.
தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுக்கும், ஒரு ரூபாய்க்கு பதிலாக திரும்ப எங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது? அதுவே, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது? இந்த கம்ப்பேரிசனை வெளிப்படையாக அறிவிக்க உங்களால் முடியுமா? சொன்னால் உங்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்.
நான் உண்மையை உடைத்து சொல்லவா? பா.ஜ.க. ஆளும் வடமாநிலங்களுக்கு தரும் அதே அளவு நிதிப் பகிர்வை தமிழ்நாட்டிற்கும் நீங்கள் வழங்கினால், தமிழ்நாட்டுக் கடனே அடைந்து, நமக்கு நிதி நெருக்கடியே இருக்காது. எங்கள் பணத்தையே வாங்கிக்கொண்டு, எங்களிடமே பணம் எங்கே போகிறது? என்று கேட்கிறீர்களே… இது நியாயமா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்லுவார்களே… அது இதுதானா!
பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மீதான கோபம் மட்டுமல்ல, அவர்களுக்கு தமிழ்நாடு மேலேயே வெறுப்புதான். இத்தனை நிதி நெருக்கடியை கொடுத்தும், பொருளாதார வளர்ச்சியில், ஜி.டி.பி. வளர்ச்சியில், தனிநபர் வருமானத்தில், ஆடை, காலணிகள், மின்னணு பொருள் ஏற்றுமதியில், இப்படி எல்லாவற்றிலும் நாம் நம்பர் ஒன் ஆக இருந்தால் வெறுப்பு வரத்தானே செய்யும்! அதற்காக, இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலத்தை பார்த்து, திவால் ஆகிவிடுவோம் என்ற ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்வது ரொம்ப ‘டூ மச்’!
பார்த்துக் கொண்டே இருங்கள். N.D.A.-தான் தமிழ்நாட்டில் திவால் ஆகப் போகிறது! நிதி நிர்வாகம் பற்றி தமிழ்நாட்டுக்கு இவ்வளவு அக்கறையாக பாடம் எடுக்கிறீர்களே… பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என்ன? ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அப்படியே தூக்கி நிறுத்திவிடுவோம் என்று வாய்கிழிய பேசினீர்களா இல்லையா? இன்று, என்ன நிலைமை? வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு பா.ஜ.க. ஆட்சியில் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாளில் செஞ்சுரி போடப் போகிறது! சென்று முதலில் அதை எப்படி தடுப்பது என்று பாருங்கள். பரீட்சையில் தோல்வி பெற்ற மாணவன் வந்து எல்லா பாடப் பிரிவிலும் டாப்பராக இருக்கும் எங்களுக்கு அட்வைஸ் பண்ணலாமா? முதலில் நீங்கள் ‘பாஸ்-மார்க்’ ஆச்சும் பெற்றுவிட்டு வந்து அதன் பிறகு தமிழ்நாட்டு கதையை பேசுங்கள்.
2021-இல் திராவிட மாடல் ஆட்சிக்காக, மக்களின் ஆதரவைக் கேட்டு வரும்போதே, அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாக கொடுத்துவிட்டுதான் வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில், திராவிட மாடல் என்பது, 2.0 ஆட்சியில், எதிர்கால தமிழ்நாட்டை கட்டமைக்கப் போகும் செயல்திட்டம் அடங்கிய தேர்தல் அறிக்கையை ‘சூப்பர்ஸ்டாராக’ களமிறக்கியிருக்கிறோம்! இந்த தேர்தலின் சூப்பர்ஸ்டார் யார்? நம்முடைய தேர்தல் அறிக்கை! இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பான்!
நம்முடைய இல்லத்தரசி திட்டம்தான், டாக் ஆஃப் த டவுன்! இப்போதே வீட்டுக்கு என்ன புது பொருள் வாங்கலாம் என்று பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்! இந்தத் திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப்போகிறோம்! எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் பண்ணி புது பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்டை வாங்கிக் கொள்ளலாம்!
அடுத்து, 20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சார பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!
உயர்கல்வி முடித்த 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.
2030-ஆம் ஆண்டுக்குள் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.
தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, ஆயிரம் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கப் போகிறோம்.
கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இது நிறைவேறும்போது தென்மாவட்டங்களில் மருத்துவ வசதிகள் மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரிய புரட்சி நடந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
இதுபோக, மதுரைக்காகவே பல சிறப்பு வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறோம். பார்த்தீர்களா? மதுரைக்காக என்னவெல்லாம் இருக்கிறது என்று சொல்லவா?
மதுரையில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அதிக செலவு ஏற்படும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள சிறப்பு ஆய்வகம் மதுரையில் தொடங்கப்படும்.
நான் முதல்வன் 2.0 திட்டத்தில் மதுரை பகுதியைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு மருத்துவம் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
உலகத்தரம் மிக்க Global Talent Gateway மதுரையில் அமைக்கப்படும். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உயர்தர திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 500 GCC மையங்கள் அமைக்க வழிவகை செய்யப் போகிறோம். அதில், மதுரையிலும் பரவாலன திறன் மையங்கள் அமைக்கப்பட தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவோம்.
மதுரையில் உணவு பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும்.
நவீன பண்பாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
மதுரைக்கு அருகில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்!
நாங்கள் சொன்னால், சொன்னதைச் செய்வோம்! நான் கலைஞரின் மகன்! சொன்னதை மறக்கவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன்! தமிழ்நாட்டை தலைநிமிர வைப்பதுதான் நம்முடைய கொள்கை!
இந்தியை திணிப்பதற்காக நம்முடைய குழந்தைகளின் கல்வி நிதியைக்கூட நிறுத்தி வைத்திருக்கும் பா.ஜ.க.வும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வும் வைத்திருக்கும் இந்தத் துரோகக் கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் தண்டனை தரப் போகும் நாள்தான், ஏப்ரல் 23.
எனவே, மதுரை கிழக்கு தொகுதியில் – பி. மூர்த்தி அவர்களுக்கும், மதுரை மத்தி தொகுதியில் – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்களுக்கும், மதுரை வடக்கு தொகுதியில் – கோ. தளபதி அவர்களுக்கும், திருமங்கலம் தொகுதியில் – சேடப்பட்டி மணிமாறன் அவர்களுக்கும், சோழவந்தான் தொகுதியில் – ஆ. வெங்கடேசன் அவர்களுக்கும், மதுரை தெற்கு தொகுதியில் – பூமிநாதன் அவர்களுக்கும், மதுரை மேற்கு தொகுதியில் – ரகு பாலாஜி அவர்களுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியில் – கிருத்திகா தங்கபாண்டி அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
அதேபோல், உசிலம்பட்டி தொகுதியில் – காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார் அவர்களுக்கும், மேலூர் தொகுதியில் – விஸ்வநாதன் அவர்களுக்கும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் மதுரை மக்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு அணியா… டெல்லி அணியா… என்ற இந்த ஜனநாயக போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாடு அணியை நீங்கள் ஆதரிக்க வேண்டும்! தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சியே தொடர்ந்திட, தமிழ்நாடு வளர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
நன்றி! வணக்கம்!
***
#VoteForDMK
புதுக்கோட்டை கழக கோட்டையாகத் திகழ எதிர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை சட்டமன்றத் தொகுதியிலும் கழகம் வெல்ல வேண்டுமென தொகுதிவாசிகளிடம் சொல்லி, வெற்றி வேட்பாளர் அண்ணன் @kkchellapandian அவர்களுக்கு வாக்கு சேகரித்தோம்.
நிதி உரிமைகளை மறுத்து, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கத் துடிக்கும் டெல்லி அணியான பா.ஜ.கவுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் பாடம் புகட்ட கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான தமிழ்நாடு அணி வெல்ல வேண்டுமென உரையாற்றினோம்.
ஆதிக்கவாதிகளுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லுட்டும்
தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
❓ தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
❓ நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
❓ கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
❓ இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
❓ கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!
அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA!
இதற்கு அப்படியே எதிராக, வன்முறை - வஞ்சகம் - கலவரம் என்பதுதான் NDA!
மெட்ரோ உள்ளிட்ட மதுரைக்கான திட்டங்களை நிராகரித்த NDA-வை, மதுரையும் பதிலுக்கு நிராகரிக்கும்!
தென்தமிழ்நாட்டின் வளர்ச்சி மையமாக மதுரையை நிலைநிறுத்தப் பாடுபடும் #DravidianModel அரசுதான் தமிழ்நாட்டில் தொடரவேண்டும் எனச் சொல்லி ஆதரவு கேட்டேன்.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கோரிக்கைக்கு மதுரை மக்கள் Instant Approval கொடுத்து விட்டனர்! 🌄
#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் - புன்செய்ப் புளியம்பட்டி
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் தோழர் திரு .பி.எல்.சுந்தரம் அவர்களின் வேப்புமனு தாக்கலில் பங்கேற்க நகர கழக செயலாளர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில் நகர திமுகழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்கள்.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
அவிநாசி மண்ணின் குரலாக... மக்களின் நம்பிக்கையாக...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி MBBS அவர்களின் வெற்றி உறுதி!🖤❤️
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! ☀️
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு!🌄
#Avinashi#DrKokilamaniDMK#StalinVoice #DMKFamily #Elections2026 #RisingSun #TamilNadu #VoteForDMK @mkstalin@Udhaystalin@dmkitwing@tup_dineshkumar@DmkAvinashi