நல்ல குணமிருந்தால் போதும் நிறைய உறவுகளை சம்பாதிக்கலாமென நினைத்திருந்தேன்...
என் கன்னத்தில் பளாரென அறைந்து பளிச்சென சொல்லியது காலம்...
நிறைய பணமிருந்தால் தான் நீ நினைத்தபடியே உறவுகளை சம்பாதிக்க முடியுமென...! 💜
உலகத்துல யார் எப்டி இருந்தாலும் சரி. நீ எப்புட்றா இப்புடி இருக்கன்னு ஒரு ஆச்சரியம் கலந்த கேள்விக்குறியோட அன்பக் கொட்டிட்டு வாழ்ந்துட்டு போய்றனும். எனக்கு மெய்யழகன் ரொம்ப புடிச்சிருக்கு.
மெய்யழகன்! ❤
அதென்ன என்னை எல்லோரை விடவும் முக்கியமான ஓர் உயிர் என்கிறாய். உலகில் இன்னபிற மனிதர்கள் மீதெல்லாம் உனக்கென்ன அப்படியொரு அசௌகரியம் என்கிறாள்.
அப்படி உன்னோடு ஒப்புமை செய்தால் எனக்கு என்னோடே அசௌகரியம் இருக்கக் கூடும்..! ♥
கவலைகள் கடலளவு இருந்தாலும் கண்மூடிக் கொண்டு வேலையை பார்க்கிறேன். மனதிலுள்ள அத்தனை பாரத்தையும் மனம் திறந்து சொல்ல வைக்கும் மகிமையை நீ மட்டுமே தருகிறாய்.❤️