சோர்ந்து போய் அமைதியாக
அமர்வதாக இல்லை.
தோற்பதாக இல்லை.
நீங்கள் வெல்லும் வரை உங்களை விட்டு விலகுவதாக இல்லை.
நான் உங்களோடு வருகிறேன்.
I will travel along with you till our vision is achieved.
என்ன சார் இது நியாயமா?
‘அவதூறு’ன்னு அறிக்கை விட்டுட்டு இவ்வளவு பெரிய உண்மைகளை மறைக்கப் பார்க்கிறீங்களே @nainarbjp?
பழைய பல்லவியையே இன்னும் எத்தனை நாளைக்கு பாடுவீர்கள்?
நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட பழைய புகார்களைப் பேசும் உங்களுக்கு, தற்போதைய CAG அறிக்கைகள் அம்பலப்படுத்திய துவாரகா எக்ஸ்பிரஸ்வே, ஆயுஷ்மான் பாரத் முறைகேடுகள் பற்றிப் பேச ஏன் நா எழவில்லை?
தமிழக மக்கள் செலுத்தும் ஒவ்வொரு ₹1 வரிக்கும் வெறும் 29 பைசாவை மட்டும் திருப்பித் தரும் நிதி அநீதிக்கு என்ன பதில் இருக்கிறது?
கிராமப்புற ஏழைகளின் 100 நாள் வேலைத் திட்டத்தை (MGNREGA) முடக்கிவிட்டு, அதற்குப் பதிலாக கொண்டு வந்துள்ள 'VBGRAM' திட்டத்தில் மத்திய-மாநில நிதிப் பகிர்வை 90:10 என்ற விகிதத்திலிருந்து 60:40 ஆக மாற்றி, தமிழகத்தின் மீது கூடுதலாக ₹5,000 கோடி நிதிச் சுமையைச் சுமத்துவது தான் நீங்கள் கூறும் 'அனைவருக்குமான வளர்ச்சியா'?
பக்தி என்ற போர்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் அரங்கேறிய நில முறைகேடுகளும், லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கை திருட்டும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
இது ஊழல் இல்லையா?
மாநில உரிமைக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும்!
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பெ. விஸ்வநாதன் அவர்கள் நாளை (8.7.2026) புதன்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சத்தியமூர்த்தி பவன் முதல் தளத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.
The news of the landslide in Wayanad is deeply distressing. My heartfelt condolences to the families who have lost their loved ones. My thoughts and prayers are with everyone affected.
Relief and rescue operations are underway, and every possible effort is being made to reach those still trapped. I appeal to all Congress and UDF workers to extend any assistance in this time of need.
Wayanad has shown remarkable resilience in the face of adversity before, and together, we will stand by every affected family through this tragedy.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பெ. விஸ்வநாதன் அவர்கள் நாளை (8.7.2026) புதன்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சத்தியமூர்த்தி பவன் முதல் தளத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.
VIDEO | On Tamil Nadu CM Vijay writing to PM Modi urging the withdrawal of proposed NFSA amendments, Tamil Nadu Congress chief Manickam Tagore (@manickamtagore) says, "That is the legitimate right of Tamil Nadu...Tamil Nadu's interest should not be sacrificed. The BJP government, particularly (PM) Modi, always takes away Tamil Nadu's rights."
(Full video available on PTI Videos - https://t.co/bIyFWTfmBd)
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதாரம், சமத்துவம் மற்றும் ஆலய வழிபாட்டு உரிமைக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து போராடி சீரிய சேவையாற்றிய மாவீரர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் 167-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள், கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநிலத் தலைவர் திரு. எம்.பி. ரஞ்சன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் திரு. ஜோதி பொன்னம்பலம், திரு. டி. விஜய்சேகர், திரு. கே.வி. திலகர், திரு. எம்.எம்.டி.ஏ. கோபி, திரு. கராத்தே ஆர். செல்வம், திரு. ஜெ. டில்லிபாபு, திருமதி மதாரம்மா கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு. ரூபி ஆர். மனோகரன், பொதுச் செயலாளர் திரு. சிரஞ்சீவி, தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி (OBC) பிரிவு தலைவர் திரு. டி.ஏ. நவீன் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
திருத்தப்பட்ட பத்திரிகை செய்தி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களின் ஒப்புதலுடன், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் 15.07.2026 அன்று ‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்" என்ற ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்பான பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைக்க கீழ்க்கண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக திரு செங்கம் ஜி.குமார் அவர்கள் செயல்படுவார்.
1. திரு. ஏ.எம். முனிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ.,
2. திரு. டி.பி.ஜே. ராஜாபாபு, முன்னாள் எம்.எல்.ஏ.,
3. திரு. ஜி. சுரேஷ்குமார், தலைவர், வேலூர் மத்திய மாவட்டம்
4. திரு. வாஹித்பாஷா, தலைவர், வேலூர் மாநகர் மாவட்டம்
5. திரு. ஜெ. விஜய் இளஞ்செழியன் தலைவர், திருப்பத்தூர் மாவட்டம்
6. திரு. நரேஷ்குமார், தலைவர், ராணிப்பேட்டை மாவட்டம்
7. திரு. எம்.சி. ரகு, தலைவர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
8. திரு. ஜெ. பொன்னையன், தலைவர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
9. திருமதி. ஜெ. கிருஷ்ணவேணி, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர்
10. திரு. பி. டீக்காராமன், முன்னாள் மாவட்டத் தலைவர், AICC உறுப்பினர்
11. திரு. சி. பஞ்சாட்சரம், முன்னாள் மாவட்டத் தலைவர்
12. திரு. ச. பிரபு, முன்னாள் மாவட்டத் தலைவர்
13. திரு. நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர்
14. திரு. எல். சுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவர்
15. திரு. எம். வசந்தராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர்
16. திரு பாலவரதன், முன்னாள் மாவட்டத் தலைவர்
17. திரு. டி.வி.எஸ். குப்புசாமி, ஐ.என்.டி.யு.சி. செயல் தலைவர்
18. திரு. ஜெ. அஸ்லம்பாஷா, சிறுபான்மைத்துறை முன்னாள் தலைவர்
19. திரு. எஸ்.என். காசிலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்
20. திரு. அகா. கிருஷ்ணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்
21. திரு. டி. ஏகம்பவாணன், மாநில பொதுச்செயலாளர்
22. திரு அரக்கோணம் பி. ராஜ்குமார், மாநில பொதுச்செயலாளர்
23. திரு ஜெ.எஸ். ஆறுமுகம், ஊத்தங்கரை முன்னாள் சேர்மன்
திரு ஆ. கோபண்ணா
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு.செ.ராஜேஷ் குமார், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு பெ. விஸ்வநாதன் ஆகியோர் விடுக்கும் கூட்டறிக்கை
மக்கள் தீர்ப்பை ஏற்று சிறந்த எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்பட வேண்டும்
இல்லையெனில் அடுத்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது
'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால், கடந்த மே 4-ம் தேதி தமிழ்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பை தி.மு.க.வினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை அவர்களது சமீபத்திய பேச்சுகளும், எழுத்துகளும் காட்டுகின்றன. ஜனநாயக நாட்டில், தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது. தேர்தலில் வென்றால் முழு பதவிக்காலமும் நல்லாட்சியை தர வேண்டும். வெற்றியை தவற விட்டால், அதற்கான காரணங்களை கண்டறிந்து, சரி செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். இதுதான் மக்கள் நலனுக்காக இயங்கும் அரசியல் கட்சியின் நோக்கமாக இருக்கும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கட்சி தொடங்கிய 27 மாதங்களில் 108 இடங்களில் வென்று 'தமிழக வெற்றிக் கழகம்' ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. த.வெ.க. தலைவர் திரு. ஜோசப் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு. ஆட்சி அமைக்க 10 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், 43 இடங்களில் வென்ற அ.தி.மு.க. ஆதரவுடன் த.வெ.க. எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், தி.மு.க. தலைமையிலான, 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி'யில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவோடு த.வெ.க . ஆட்சி அமைத்துள்ளது. இது,
ஜனநாயகம், சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகிய கொள்கைகளில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு, இருக்கும் உறுதியான நிலைப்பாட்டை காட்டுகிறது. காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும் இருக்கும் இடத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜக இருக்காது. மதவாதத்திற்கு இடமிருக்காது. மதச்சார்பின்மைக்கு எந்த ஆபத்தும் நேராது. மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்.
மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் த.வெ.க.வுக்கு துணை நிற்பது காங்கிரஸின் கடமை. இதை செய்ததற்காகத்தான் காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவர்களையும் தி.மு.க.வினர் எல்லை மீறி வசைபாடி வருகின்றனர். தி.மு.க. தொண்டர்களின் உழைப்பால் வென்று விட்டு, த.வெ.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்து விட்டதாக திமுகவினர் சுடு சொற்களால் விமர்சித்து வருகின்றனர். தி.மு.க. தயவால் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு, காங்கிரஸ் தயவால் தி.மு.க. வெற்றி பெற்றது என்பதும் உண்மை. 1967-ல் காங்கிரசில் இருந்து வெளியேறிய மூதறிஞர் இராஜாஜியின் சுதந்திரா கட்சி, 1971-ல் அன்னை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், 1996-ல் காங்கிரஸில் இருந்து வெளியேறி திரு. ஜி.கே.மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ், 2006, 2021-ல் காங்கிரஸ் என ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் தயவில் தான், தி.மு.க., ஆட்சி அமைத்தது. 1989-ல் கூட தி.மு.க. தனி செல்வாக்கில் வெல்லவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க.வின் இரு அணிகள், காங்கிரஸ் என நான்கு முனை போட்டியால் தான் தி.மு.க. வென்றது.
ஒரு தேர்தலில் கூட கூட்டணி இல்லாமல் வெல்ல முடியாத தி.மு.க, ஒருமுறை கூட கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்தது இல்லை. 2006-ல் 100இடங்களைக் கூட தி.மு.க. தொடவில்லை. காங்கிரஸ் தயவில்தான் ஆட்சி அமைத்தது ஆனாலும். காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தி.மு.க.வுக்கு மனம் வரவில்லை. கூட்டணி கட்சிகளின் தயவில் வென்று ஆட்சி அமைத்துவிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும், தி.மு.க, கூட்டாட்சி பற்றி பேசுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க., தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், "கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டுக்கு சரிபட்டு வராது" என்றார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்த ஒரு கட்சியின் தலைவரிடம் இருந்தும் இது போன்ற வார்த்தைகள் வராது.
ஆனால், இப்போது 108இடங்களில் வென்றுள்ள த.வெ.க, ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளை தந்துள்ளது. தலா இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை வழங்கியுள்ளது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவையில் சேர விரும்பியிருந்தால் அவர்களுக்கும் தலா ஒரு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். இப்படி ஆட்சி அமைக்க உதவிய கட்சிகளுக்கும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவது தான் உண்மையான கூட்டாட்சி. அதை தான் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் செயலில் காட்டியிருக்கிறார்.
த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. சதித் திட்டம் தீட்டியது. அதற்கு தி.மு.க. தலைமையும் உடன்பட்டது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற சக்திகள் உறுதியுடன் நின்று எதிர்த்ததால் பா.ஜ.க.வின் சதித் திட்டம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தமிழ்நாட்டை மறைமுகமாக ஆள பா.ஜ.க. முயற்சிப்பதை தடுக்க, மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள காங்கிரஸ் த.வெ.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இது மதச்சார்பின்மையை உயிர்மூச்சாக கொண்டுள்ள காங்கிரசின் கடமையும்கூட.
இதற்காக காங்கிரஸ் கட்சியையும், இந்தியாவின் ஒரே நம்பிக்கையான, மதவெறி கொண்ட பாசிச பாஜகவை உறுதியுடன் எதிர்க்கும் வலிமை கொண்ட ஒரே தேசிய தலைவரான திரு ராகுல் காந்தி அவர்களையும் தி.மு.க. வரம்பு மீறி விமர்சித்து வருகிறது. துரோகம் செய்துவிட்டார், கூட இருந்தே குழி பறித்து விட்டார் என்றெல்லாம் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி' தினந்தோறும் வார்த்தைகளை அள்ளி வீசுகிறது. இன்னும் பல மோசமான, கொச்சையான வார்த்தைகளை எல்லாம் தி.மு.க.வினர் பயன்படுத்தி வருகின்றனர். தி.மு.க.வினரை விடவும் கடுமையான, மோசமான வார்த்தைகளால் எங்களாலும் பேச முடியும். எழுத முடியும். முரசொலியில் கிறுக்குபவர்களை விடவும் எங்களால் திமுகவை நோக்கி வசை சொற்களை வீச முடியும். ஆனால், நாங்கள் வளர்ந்த கட்சி, எங்களை வளர்த்த தலைவர்கள் அரசியல் எதிரிகளை நாகரிமாக எதிர்கொள்ள கற்றுத் தந்திருக்கிறார்கள். அந்த நாகரிக எல்லையைத் தாண்ட நாங்கள் விரும்பவில்லை. இனியும் தி.மு.க.வினரின் வரம்பு மீறல் தொடர்ந்தால், நாங்களும் வரம்பு மீற வேண்டியிருக்கும். தி.மு.க.வின் வழியிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம். அந்த நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
காங்கிரஸ் கட்சியை எப்படி விமர்சிக்கலாம் என்பதை விட்டு விட்டு, தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை தி.மு.க. முழுமையாக கண்டறிய வேண்டும். சிறுபான்மை மக்களும், பட்டியலின மக்களும் ஏன் தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பதை முதலில் கண்டறியுங்கள். அதை விட்டுவிட்டு கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி, கொச்சையாக விமர்சித்துக் கொண்டே இருந்தால் தி.மு.க. இனி எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படும். சிறுபான்மை மக்களும், பட்டியலின மக்களும் நிரந்தரமாக தி.மு.க.வுக்கு 'குட்பை' சொல்லிவிடுவார்கள். எனவே மக்கள் தீர்ப்பை ஏற்று, சிறந்த எதிர்க்கட்சியாக தி.மு.க. தனது பணியை தொடர வேண்டும். இல்லையெனில் இனி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது. அரசியலில் தன்னிலை மறந்து, தலைகனத்துடன் ஆட்டம் போடுபவர்கள் மக்கள் தரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
𝐋𝐨𝐏 𝐒𝐡𝐫𝐢 @𝐑𝐚𝐡𝐮𝐥𝐆𝐚𝐧𝐝𝐡𝐢'𝐬 𝐦𝐞𝐬𝐬𝐚𝐠𝐞 𝐭𝐨 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐲𝐨𝐮𝐧𝐠 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧 𝐢𝐧 𝐈𝐧𝐝𝐢𝐚👇
"Today, in our country, hard work is not rewarded; instead, dreams are demolished.
Every paper leak, every cancelled examination, every incomplete recruitment process is not just a failure of the system; it is an attack on the dreams of millions of young people.
I know you are exhausted. I know you are angry. But remember: when a government refuses to listen, we must raise our voices louder.
That is why I am calling on all of you to join me on 17 June in Kota for the 'Chhatron Ki Goonj' Mega Rally.
Let us come together and create a roar that cannot be ignored.
The movement begins in Kota, and from there, it will reach every corner of the country.
This is a fight for your future. And I stand with you."
Register here:
https://t.co/X1k3AbIXkx
🗓️ 17 June | Chhatron Ki Goonj | Kota Mega Rally
#ChhatronKiGoonj
இந்தக் காணொளி என்னை உலுக்கி விட்டது.
இவர்கள் தான் இந்தியாவின் ஆதரவற்ற இளைஞர்கள்.
பெருநிறுவன நண்பர்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி வழங்கும் அரசு, இந்தியாவின் மாணவர்களுக்கு பாதுகாப்பான ஒரு பயணத்தைக் கூட ஏற்பாடு செய்து தர முடியாத நிலை.
தேர்தல் வந்தால், இதே அரசு முழு ரயில்களையே ஏற்பாடு செய்ய எல்லா வளங்களையும் பயன்படுத்துகிறது.
ஆனால் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு கிடைப்பது என்ன?
நெரிசல்...
மூச்சுத்திணறல்...
மற்றும் முழுமையான ஆதரவற்ற நிலை.
மோடி அரசுக்கு மாணவர்களின் குரலைக் கேட்கும் எண்ணமே இல்லை என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேறு என்ன இருக்க முடியும்?
ஆனால் நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன்.
இந்த மாணவர்களின் குரலை, கேட்க மறுக்கும் அந்த செவிடான காதுகளுக்கு நிச்சயமாக கொண்டு சேர்ப்போம்.
ஒவ்வொரு மாணவருக்கும் உரிய நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்.
ஜூன் 17, கோட்டா.
இனி இந்த எதிரொலி வெறும் குரலாக இருக்காது.
இது ஒரு போராட்ட முழக்கமாக மாறும்.
- திரு @RahulGandhi
#மாணவர்களின்_குரல்
#ChhatronKiGoonj ✊🏻🇮🇳
மோடியை மகிழ்விக்கும் இன்னொரு முயற்சி.
மோடியையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தொடர்ந்து எதிர்த்து நிற்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மீது மீண்டும் ஒரு தலையங்கத் தாக்குதல்.
அவர்கள் எவ்வளவு தாக்கினாலும் ஒரு உண்மை மட்டும் தெளிவாகிறது ..
இன்று திரு.மோடிக்கு மிக வலுவான அரசியல் சவாலாக இருப்பவர் திரு.ராகுல் காந்திதான்.
கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையையும் பேரதிர்ச்சியையும் அளிக்கிறது.
இந்த மனிதத்தன்மையற்ற, மிருகத்தனமான குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை விரைவாகக் கைது செய்து, சட்டத்தின் மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.
அதே நேரத்தில், குற்றவாளிகளைத் தண்டிப்பது மிகவும் அவசியம்,இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதும் மிக முக்கியம். நமது பெண் குழந்தைகளின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், நீதி கிடைக்கும் வரை நம்முடைய ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரணியல் அருகே இரணியல்கோணம் குளத்தில் நேற்று இரவு ஒரு நபர் தவறி விழுந்துவிட்டதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு படையினர், பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டோம்.
இன்று காலை உயிரிழந்த அவரின் உடல் மீட்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் அரசு நலத்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் தலைமையில், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. வ. மோகனச்சந்திரன் இ.ஆ.ப., நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வை. செல்வராஜ், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். முரசொலி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கே. கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க. மாரிமுத்து, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். காமராஜ் மற்றும் கூடுதல் ஆட்சியர் /திட்ட இயக்குநர் செல்வி. பல்லவி வர்மா இ.ஆ.ப., அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், வேளாண்மை, பொதுப்பணித்துறை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டு, மக்களின் நலனுக்கான திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், சமூகநீதித் துறை மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ), வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, ரூ.1 கோடியே 16 இலட்சத்து 74 ஆயிரத்து 273 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தி, பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் தடையின்றி சென்றடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் தகுதியான பயனாளிகளுக்கு விரைவாக சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
#Tiruvarur #WelfareSchemes #TamilNaduGovernment #HigherEducationMinister #PublicService
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் ஊராட்சியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கூரை வீடுகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
இச்சம்பவம் தொடர்பாக மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. மோகனச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வை. செல்வராஜ் அவர்கள், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க. மாரிமுத்து அவர்கள் மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். காமராஜ் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் ஆட்சியரும், திட்ட இயக்குநருமான செல்வி. பல்லவி வர்மா இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.
#Tiruvarur #Mannargudi #ReliefMeasures #TamilNaduGovernment