சென்னை பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெதேல் நகரில் கழுத்தளவு மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகளில் சிக்குண்டு உணவு, உடை, குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஏதுமின்றியும், மின்சாரம் இல்லாமல் இருளிலும், நோயை உண்டாக்கும் கொசு மற்றும் நச்சு பூச்சிகளின் அச்சுறுத்தலிலும் கடந்த நான்கு நாட்களாக கொடுந்துயரில் தவித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை படகின் உதவியுடன் இன்று 07-12- 2023 மாலை நேரில் சந்தித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், சமையல் மசாலா பொருட்கள், குடிநீர் போத்தல்கள், பிஸ்கட்கள் ஆகியவை அடங்கிய சிறு தொகுப்பை வழங்கி, ஆறுதல் கூறினோம்.
https://t.co/ArVraBoYa0
பெருவெள்ளப் பேரழிவில் இருந்து நம் மக்கள் மீண்டுவர, தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் ஓடோடி வந்து உதவிடுவோம்!
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 18-11-2023, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் பாட்டனாரின் திருவுருவச்சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தியபோது,
https://t.co/hGiF0er72i
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றிடுக! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு' சார்பாக இன்று 17-11-2023 சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் நடைபெற்ற தொடர் முழக்கக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று சிறப்புரையாற்றியபோது,
https://t.co/4kY0QBS81U
எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கும், திரைத்துறை ஆளுமைகளுக்கும், காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பு உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், அரசியல் மற்றும் திரைத்துறை உறவுகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என் நலன் விரும்பி உளமார வாழ்த்திய தாய்த்தமிழ் உறவுகளுக்கும் எனது உளம் நிறைந்த மகிழ்வோடு பேரன்பினையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரன்பின் நெகிழ்வோடு,
உங்கள்
சீமான்