மக்களின் முடிவு கொண்டாட்டங்களை கொடுப்பது போல் பல போராட்டங்களையும் கொடுக்கும் அதில் சீமான் எனும் பெருநெருப்பு 🔥 அணைந்து போவதில்லை மாறாக மக்களின் துயரங்களில் போராட்ட வடிவில் பற்ற வைத்துக்கொண்டே இருக்கும்!!!
#Forever4Seeman@Seeman4TN@NaamTamilarOrg
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது.
கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!
தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.
தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு!
மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு!
“ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்,
கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்,
உன்னத கொடையாம் குருதிக்கொடை!”
என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldBloodDonorDay
ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்!
அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
”பா.ம.கவுக்கு இங்க வேலையே கிடையாது, அவங்க வெறும் எம்.எல்.ஏ மட்டும்தான்.. ஆட்சி எங்க கிட்டதான் இருக்கு.. நாங்க சொல்றதை கேக்கணும்”.. அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை த.வெ.க மாவட்ட செயலாளர் மிரட்டும் தொனியில் பேசியதாக பரவும் பரபரப்பு வீடியோ.!
#Viluppuram | #PMK | #TVK | #PolimerNews
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.
‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கவர்ச்சி என்றால் என்ன?
கவர்ச்சி என்பதை பற்றிய முதல்வரின் புரிதல் என்னை வியப்புக்கும் முக சுளிப்பிற்கும் உள்ளாக்கியது.
கவர்ச்சி என்பது உடல் அல்லது அரை குறை ஆடையால் சுட்டுவது மட்டுமே என்ற புரிதலில் அவர் இருக்கிறாரா?
அண்மையில் நான் மாலை முரசு விவாத நிகழ்வில் கூட இந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்தேன் கவர்ச்சியின் மீது கட்டப்பட்ட கட்சி தவெக என்று. அதன் பொருள், கதாநாயக பிம்ப கவர்ச்சி என்பதே. அதிமுகவும் அப்படியாக உருவான கட்சி தான். எனில், கவர்ச்சி என்பது ஒரு வகையிலான ஈர்ப்பு. அவ்வளவே!
அந்த கவர்ச்சி ஒருவரது பேச்சால், ஆளுமைத் திறனால், கோட்பாட்டு வலிமையால் என்று பல வகைகளில் உருவாகலாம். அப்படியாக திரைக் கவர்ச்சி என்ற அடித்தளம் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று கூறுவதில் என்ன பிழை உள்ளது என புரியவில்லை. அது அநாகரிகமான ஒன்றும் இல்லை. மக்களை கொச்சைப் படுத்துவதும் இல்லை.
ஆனால், முதல்வரோ "வாயில நல்லா வந்துடும் ", "கவர்ச்சியாம்..இங்க என்ன..." என்றெல்லாம் பேசுகிறார். இப்படியான உடல் மொழியை கட்சி தலைவராக பேசியிருக்கலாம். இன்றோ அவர் வாக்களித்த, வாக்கு அளிக்காத எல்லோருக்குமான முதல்வர். ஒரு முதல்வராக அவரது பேச்சில் முதிர்ச்சி இல்லை என்பதையே இது காட்டியுள்ளது.
@TVKVijayHQ@TVKPartyHQ
விஜய் அரசே! விஜய் அரசே!
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் போராட்டம்.
பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கூறி திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு பேரணி.
சமத்துவம், சமூக நீதி, தன்மானம், சுயமரியாதை எனும் எல்லா சொல்லாடல்களுக்கும் எதிரானது அடிமைத்தனம்!
இங்கு ஒரு தம்பி, 'கொத்தடிமை' எனும் வார்த்தையை மிக எளிதாக Normalize செய்கிறார். அந்தத் தம்பி, என்ன Contextல் வேண்டுமானாலும் பேசட்டும். "இது கொத்தடிமைக்கூட்டம்" என்பதைக் கேட்டு, எப்படி கூடியிருக்கும் கூட்டத்தினர் கைதட்டுகிறார்கள்? எனப் புரியவில்லை.
"இது கொத்தடிமைக்கூட்டம்தான். We Are Proud கொத்தூஸ்" எனப் பேசுகிறபோது கூட்டம் ஒரு நொடி நிசப்தம் ஆகியிருக்க வேண்டும். 'சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர்களை எப்படி கொத்தடிமைக்கூட்டம் எனக் கூறலாம்?' என அதிர்ச்சி ஆகி, அமைதியாகியிருக்க வேண்டும்.
மாறாக, மொத்தக் கூட்டமும் கைதட்டுகிறது; ஆர்ப்பரிக்கிறது; விசிலடித்துக் கொண்டாடுகிறது.
மொத்தத்தில், இன்பநிதியைத் தலைமையேற்க ஒரு சேனை அறிவாலயத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துகள் கொத்தூஸ்!
இறைத்தூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி, மனநிறைவோடு வறியவர்களுக்கு உதவி, ஈகைத்திருநாளாம் பக்ரீத் பெருநாளினைக் கொண்டாடும் என்னுடைய பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
திமுக, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு 25 கோடிக்கு மேல் செலவு செய்துதான் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்கள்.
அப்படி ஆன அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 25 நாட்களுக்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்து, ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் சேருகிறார்கள் என்றால், பிரதிபலன் இல்லாது சேருவார்களா? என்ன தருவதாகப் பேரம் பேசி, அவர்கள் கட்சிக்குள் இணைக்கப்பட்டார்கள்?
அதிமுக எனும் ஊழலில் புரையோடிப் போயிருக்கும் கட்சியிலிருந்து ஆட்களை இழுப்பதே கேவலம். அதிலும் விலைபேசி குதிரைபேரத்தின் மூலம் ஆட்களைத் தூக்குவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்!
Worst ப்ரோ! @TVKVijayHQ