திமுக இளைஞர் அணிச் செயலாளரும்,தமிழ்நாடு சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, 07/09/2026 எனது பிறந்தநாளையொட்டி அவரது அன்பான வாழ்த்துகளைப் பெற்றது, என் வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும் மகிழ்வான தருணமாக அமைந்தது. 💐
❤️ அன்பே அடையாளம்… தளபதியார்! ❤️
இன்று 07/09/2026 என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தளபதியார் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, அவரிடம் 05/09/2026 அன்று பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்த அந்த இனிய தருணம், 💐🙏
தஞ்சை தெற்கு மாவட்டக்கழக தொண்டரணி துணை அமைப்பாளர் சகோதரர் பொன்.ரமேஷ் - முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் உஷாராணி இணையர், பட்டுக்கோட்டை நயினாங்குளம் பகுதியில் கட்டியுள்ள புதிய இல்லத்தை இன்று திறந்து வைத்தோம்.
புதிய இல்லத்தில் அவர்களின் வாழ்வு மென்மேலும் செழித்தோங்க வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@Anbil_Mahesh@KannaduraiDMK
#PalanivelDMK
எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த மெட்ராஸ் மாநகரம்,
இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.
வந்தவர் அனைவருக்கும் இடமளிக்கும் சகோதரத்துவமும், பேதங்கள் கடந்த பன்மைத்துவமும் நிறைந்த சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம்.
சென்னை நாள் வாழ்த்துகள்!
#ChennaiDay
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
100 நாள் சாதனை என இந்த அரசு பெருமை பேசும் இதே நேரத்தில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு இந்த 100 நாளில் எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி! 👇
#LawAndOrder#நாசமாகும்தமிழ்நாடு#TVKVijayFails
தவெக அமைச்சர் ஒருவர் ஐபிஎல் போட்டியின் போது பவுடர் நுணுக்கிவிட்டு, மாத்திரையை நுணுக்கியதாக கதை விட்டார். அவரிடம் காவல்துறை ஏதேனும் விசாரணை நடத்தியதா? தவெக அரசு ஏதும் நடவடிக்கை எடுத்துருக்கிறதா?
#TNAssembly#TVKVijayFails
ஊரான் வீட்டு நெய்ல உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க சார்.!
தி.மு.கழக ஆட்சியில் டிசம்பர் 31 அன்று அடிக்கல் நாட்டி, பணிகள் முடிந்த நிலையில் கல்வெட்டை மட்டும் வைத்து விளம்பரம் தேடியுள்ளது டம்மி த.வெ.க அரசு!
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்" என்ற வள்ளுவ நெறியே என் நெறி!
இல்லம் வந்து இன்மொழியால் மனம் நிறைத்திட்ட விடுதலைப் போராளியும் அகவை நூறு கடந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பெருமதிப்பிற்குரிய திரு. லட்சுமி காந்தன் பாரதி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் நன்றி.
கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி!
அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!
தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.
அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க!
#முரசொலி85 #Murasoli
கொலைகளின் தலைநகரமாக மாறுகிறதா கோவை?
10 நாட்களில் 4 உயிர்கள் பறிப்பு தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் குற்றவாளிகளுக்குப் பயமில்லாத சூழல் நிலவுகிறது!
நவீன், அமுதன், அஸ்வின், சாந்தி இவர்கள் வெறும் பெயர்கள் அல்ல, சீர்குலைந்த சட்ட ஒழுங்கின் சாட்சிகள்!
இன்று #ConversionConclave-இல் மாண்புமிகு @TNIndMin தம்பி @TRBRajaa அவர்கள் சொன்ன ஒவ்வொரு டேட்டாவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகள் பரப்புவோருக்கான பதில்!
அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்க Team-இன் ஐந்தாண்டுகால கடுமையான உழைப்புக்கான நம்பர்!
இதனை ஊடகங்கள் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்!
Each data point presented today by Hon’ble @TNIndMin Thiru. @TRBRajaa at the #ConversionConclave is a direct answer to those who, unable to accept Tamil Nadu’s growth, continue to spread misinformation.
Each number he shared reflects five years of relentless hard work by our team.
We request the media to take these facts widely to the people.