அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
ஆன்மீக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
வள்ளலார் பெருமான் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
We The Leaders சார்பில்....நமது சகோதரர் திரு.திவேக்குமார் இல்ல விழாவில் ...தலைவர் அண்ணமலையின் அன்பு சகோதரர் திரு விஷ்ணுபிரசாத் அவரகள் வழங்கிய மகிழ்ச்சியான தருனம்... நமது நிர்வாகிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் தருணம் 🌼 🌸 🌻 🌹 @WeTheLeadersMDU
சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.
Heartiest birthday greetings to our Hon. PM Thiru Narendra Modi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
இந்திய சுதந்திரப் போரில், முதன்முதலாக ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, வீரத்துடன் போரிட்ட மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் பல போர்களில் வெற்றி பெற்றவர். தமது மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் சுமார் பத்து ஆண்டுகள் போரிட்டு இறுதி வரை தீரத்துடன் போராடியவர்.
வீரத்திற்கும், தியாகத்திற்கும் அடையாளமாகத் திகழும் மாவீரர் பூலித்தேவர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
கல்லூரி மாணவர்கள்....We The Leaders...நமது அமைப்பில்... இனைத்து செயல்பட சகோதரர் விஷ்ணுபிரசாத் முன்னிலையில் இனைந்த தருணம்....அவர்களை வரவேற்ப்போம்....@k Annamalai
Madurai, Tamil Nadu: Special prayers were held in Madurai for the success of the 'We the Leaders' conference in Pollachi. Supporters also broke 101 coconuts in the name of K. Annamalai. The move comes after Annamalai launched his new movement, 'We the Leaders,' following his resignation from the BJP
TN:
Annamalai's 'We The Leaders' Madurai team offers special prayers in Nehru Alala Vinayagar temple ahead of their first conference in Pollachi on July 12.
ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
இன்று கடினமாக இருக்கும்.
நாளை இன்னும் மோசமாக இருக்கும்.
ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளியாக இருக்கும். ☀️🔥
#மாறுவோம்_மாற்றுவோம்