ஒரு நடிகன் 100 படங்கள் நடித்தால் கிடைக்கும் பேரையும் புகழையும், இந்த ஒரு படத்திலேயே தந்து, உங்கள் மனங்களில் மாறா அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து அளித்து வரும் என் உயிரோடு உயிரான தமிழக மக்களாகிய உங்கள் அனைவரின் பொற்பாதம் வணங்குகிறேன்.
"கரகாட்டக்காரன் 38"
கொண்டாடி தீர்த்த மீடியாத்துறையினர்/தமிழக மக்கள் /ரசிகர் மன்றத்தினர் /வாழ்த்துக்களை வழங்கி உற்சாகப்படுத்திய உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த ஆயிரமாயிரம் நன்றி!
நீங்களின்றி நானில்லை
- ராமராஜன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் தரமான படங்களையும் தகுதியான இயக்குனர்களையும் எண்ணற்ற கலைஞர்களை அறிமுகம் செய்து பலரை வாழவைத்த R. B. சௌத்ரி அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை தருகிறது- நடிகர் ராமராஜன் Ex MP
#Actorvijay
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில்
மக்களின் பேராதரவைப் பெற்று தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் என் திரைத்துறை சகோதரர் திரு. விஜய் அவர்களுக்கு இந்த அண்ணனின் அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
#May - 1
உன்னத உழைப்பை ஒவ்வொரு வடிவில் தந்து
பல மாயங்கள் செய்து விவசாயம் முதல் விஞ்ஞான வளர்ச்சி வரை ஏற்றம் தந்த
வியர்வையையும் இரத்தத்தையும் கலந்து பாடுபட்டு ஊரும் நாடும் உலக அரங்கில் கம்ப��ரமாய் நின்றிட கடமையாற்றும் பாட்டாளி பங்காளர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
யுகாதி பெருவிழா காணும்
தெலுங்கு, கன்னட சான்றோர் பெருமக்கள்,
சகோதர சகோதரிகள்
அனைவருக்கும்
யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்!
தங்கள் எல்லோர் இல்லங்களிலும் வசந்த நாள் தொடங்கி வைபவ சுபம் கண்டு
அன்பு, நலம், மனிதநேயம்,
வளர்ச்சி தழைத்தோங்க என் வளமான வாழ்த்துகள்!
- நடிகர் ராமராஜன் Ex. MP.
கடந்த 80 ஆண்டுகள் இடைவிடாத எண்ணற்ற மக்களுக்கான போராட்டம், உழைக்கும் வர்க்கத்தினருக்கான உரிமைக்குரலாய் விளங்கிய தகைசால் தமிழர், ஐயா தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு செவ்வணக்க அஞ்சலி #Nallakannu