கொஞ்சம் கொஞ்சமாய்
குளம் வற்றுதல்
மிகக் கொடிது...
நீர் குறைந்து சேறாகி
மண்குழம்பாய்
மாறிப் போகையில்
நீந்தி திரிந்தன
நிலை தடுமாறி
மூச்சுக்காய் போராட்டம்
முடியாத கையறு நிலை..
வருணனே..
எப்போதும் கொஞ்சமேனும்
அருள்மழை பொழியுமய்யா...
வியக்க என்ன
இருக்கிறது?
தசையும் குருதியும்
என்பும் கலந்த
உடலழகா..
மாறிப் போகும்
அறிவும் திறனும்
பெற்றுத்தரும்
பாராட்டா..
கணப்பொழுதில்
காணாது போகும்
செல்வ மிடுக்கா..
எல்லாம் சில காலம்..
அறுசுவை உணவுருசி
வெறும் நாக்குவரைதான்.
இது ஒரு மீள்பதிவு
( A Long Thread )
இளையராஜா அவர்களின் இசையே சுவாரஸ்யமானது தான்…
கிராமங்களில் பட்டித் தொட்டியெல்லாம் மச்சானைப் பார்த்தீங்களா என்று ஜானகி அவர்களின் குரல் கேட்க வைத்த அதே படத்தில் அமைதியாக சொந்தமில்லை பந்தமில்லை என்று சுசீலாவின் குரலையும் ஒலிக்க செய்தார். (1/21)
உதிரும் இலை
துளிர்க்கும் மரம்..
வெட்டிய நகம்
விரல்களில் மீண்டும்.
நீரின் மாற்றம் பனியாய்
உருகியது மீண்டும் நீராய்.
இரவு காணும் உறக்கம்.
விடியலில் உயிர்கள் உற்சாகம்..
பொழுதுகள் கடக்கும்
புத்துணர்வும் பிறக்கும்
எதுவும் மாறும்..
இதுதான் என்றும்
மாறாதிருக்கும்...