இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தனது எழுத்தாலும், பேச்சாலும் மக்களிடையே விடுதலை உணர்வை விதைத்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாமல் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் இன்று.
தேச விடுதலைக்காக எண்ணற்ற துயரங்களைத் தாங்கி, தனது இறுதிவரை உறுதியாகப் போராடிய வீரத்தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான, ஐயா ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம் இன்று.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் அங்கமாகத் திகழ, முக்கியப் பங்காற்றியவர். வரலாற்றில் முதன்முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, 'சிலம்புச் செல்வர்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர்.
தமிழும் தமிழர் பண்பாடும் நிலைத்திருக்கும் வரை, ஐயா ம.பொ.சி. அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்.
எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும்.
நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, இன்றைய தினம், @BJP4TamilNadu மூத்த தலைவர்களுடன் இணைந்து, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு R.N. ரவி அவர்களைச் சந்தித்தோம்.
மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் திரு ஸ்டாலின் இருப்பதும், பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும், மாண்புமிகு ஆளுநரைக் கேட்டுக் கொண்டோம்.
Cadres of @BJP4TamilNadu and brothers & sisters of TN gave our Hon PM Thiru @narendramodi avl a rousing welcome on his arrival to attend the culmination event of our En Mann En Makkal PadaYatra in Palladam.
@Murugan_MoS
#VendumMeendumModi
232 தொகுதிகளை கடந்து விட்டோம்!
கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.
பிப்ரவரி 27 ஆம் தேதி உங்களை பல்லடத்தில் சந்திப்போம்.
இதுதாங்க நேரம் - இனி எல்லாம் மாறும்!
We have crossed 232 constituencies
Waiting to cross the last two constituencies along with you on 27th Feb
Look forward to meeting all of you in Palladam.
#EnMannEnMakkal