மாணவர்களே!
உங்கள் கேள்விகள்.
உங்கள் குரல்.
ராகுல் காந்தியுடன் நேரடி உரையாடல்.
Chhatron Ki Goonj — மாணவர்களின் குரல்
10 October | Island Grounds, Chennai
Scan the QR. Join the Movement!
#ChhatronKiGoonj#RahulGandhi#StudentVoice#Chennai
இன்று, 19.07.2026, மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள SVN கல்லூரியில் நடைபெற்ற ‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ நிறைவு விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது!
ஜூலை 13 முதல் 19 வரை நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழாவின் நிறைவு விழாவாக, இன்று காலை ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து, நம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவத்தை மனித வடிவில் பிரம்மாண்டமாக அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை உருவாக்கினோம்.
இந்நிகழ்வில் நானும், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) நிரந்தர உறுப்பினருமான திரு. ப. சிதம்பரம் அவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களும் பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்.
கடந்த பத்து நாட்களாக இந்த விழாவின் ஏற்பாடுகளைத் திறம்பட செய்த ஓபிசி (OBC) மாநிலத் தலைவர் திரு. நவீன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்!
#KamarajarBirthday #KingMakerKamarajar #கர்மவீரர் #காமராஜர் #காமராஜர்பிறந்தநாள் #Karmaveerar #பெருந்தலைவர்
#லஞ்சம்தவீர்நெஞ்சம்நிமிர்
ஜூலை 13 முதல் 19 வரை சிறப்பாக நடைபெற்ற “லஞ்சம் தவிர்... நெஞ்சம் நிமிர்!” மக்கள் இயக்கத்தின் நிறைவு விழாவாக, இன்று (19-07-2026), தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து, பெருந்தலைவர் காமராஜரின் பிரம்மாண்ட மனித உருவப் படைப்பை அமைத்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், MP, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) நிரந்தர உறுப்பினருமான திரு. ப. சிதம்பரம், MP, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திரு. சு. திருநாவுக்கரசர் ஆகியோர் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் OBC துறையின் மாநிலத் தலைவர் திரு. நவீன் அவர்கள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
📍SVN கல்லூரி | மதுரை நாகமலை புதுக்கோட்டை
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
@PChidambaram_IN@ThiruArasarINC
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் திரு. பெ. சண்முகம் மற்றும் மூத்த தலைவர்களை, அக்கட்சியின் மாநில அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சருமான மாண்புமிகு செ. ராஜேஷ்குமார், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
*வருகின்ற 15.07.2026 புதன்கிழமை மாலை வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் நடைப்பெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்க துவக்க விழா பொதுக்கூட்ட அழைப்பு....*
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர்
திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் விடுக்கும் அறிக்கை
மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களின் 56-வது பிறந்தநாள் விழா, தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘விரா” (விஜய் - ராகுல் ViRa) விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 4 கி.மீ. தூரம் பங்கேற்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி மயக்கத்தை போக்குகின்ற வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன். இதற்கு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்நோக்கம் கற்ப்பிக்கின்ற வகையில் இழிவுபடுத்தி, தி.மு.க. ஐ.டி. விங்கில் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரீகமான செயலாகும்.
தமிழகத்தில்60 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு முடிவுகட்டி, தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு இனி எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கே வர முடியாத அளவில் மிகச் சிறப்பான மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத வகையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு அமைந்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
கடந்த காலத்தில் அவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த போது ஊழலின் ஊற்றுக் கண்ணாக அந்த துறையை மாற்றி எத்தகைய லஞ்ச லாவண்யம் நடைபெற்றது என்பதை சமீபத்தில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் விலாவாரியாக ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்தியதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாத அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குறிப்பாக, தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கிற என்னை குறிவைத்து, இழிவுபடுத்தி பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மேலும், தங்களது ஐ.டி. விங் மூலம் இழிவான பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தங்களது தரத்தை தான் அவர்கள் தாழ்த்திக் கொள்கிறார்களே தவிர, எக்காலத்திலும் எங்களை விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். இனியும் இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, வினாத்தாள் கசிவு போன்ற கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வரும் மாணவர்களின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில், "மாணவர்களின் குரல்” (Chhatron Ki Goonj) இயக்கம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் தொடங்கப்பட்டு, பாஜக அரசு மாணவர்களுக்கு இழைக்கும் அநீதிக்கு எதிராகப் போராடவும், இவை அனைத்திற்கும் அரசை பொறுப்பேற்கச் செய்யவும், மாணவர்களின் பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், தற்போதைய கல்வி மற்றும் தேர்வு அமைப்பின் தோல்விகளை வெளிக்கொணரவும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
தேர்வு முறையில் முழுமையான மறுஆய்வு மற்றும் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்
தேர்வு வினாத்தாள் கசிவு (Paper Leak) மாபியாவுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகி, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உறுதியான திட்டமிடலை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்புகளுக்கான நிரந்தர கால அட்டவணையை (Annual Examination & Recruitment Calendar) நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆகிய கருத்துகளை வலியுறுத்தி கேரள மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் திரு ரோஜி எம். ஜான் அவர்கள் நாளை (25.06.2026) வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசியப் பொதுச்செயலாளரும், "மாணவர்களின் குரல்” இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான திரு. எம். லெனின் பிரசாத் அவர்கள் உடன் பங்கேற்கிறார்.
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
Birthday greetings to Shri Vijay Joseph, Hon'ble @CMOTamilnadu@TVKVijayHQ
Wishing him good health, happiness and continued success in serving the people of Tamil Nadu.
I am confident that under his leadership, the spirit of coalition dharma and strong alliance relations will continue to be upheld in the larger interest of Tamil Nadu and its people.
May he be blessed with a long life and many more years of dedicated public service . @INCIndia@INCTamilNadu@INCPuducherry@INCGoa