வன்னியர் வாக்குகளை கலைஞர் மிக கவனமாக கையாண்டார்.
ஆனால் அவருக்குப் பிறகு திமுக வன்னியர் வாக்கு வங்கியை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பெரும்பான்மையான மாவட்டங்கள் வன்னியர் வாக்குகளை கொண்டது. ஆறு வட மாவட்டங்களில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் போயிருக்கிறது.
இன்று சிவி சண்முகத்திடம் இருக்கும் 30 எம்எல்ஏக்களில் சரியாக கையாண்டிருந்தால் 20 இடங்கள் திமுக பக்கம் வந்திருக்க வேண்டியது.
ஏற்கனவே வன்னியர்கள் அதிமுக ஆட்சியில் கிடைத்த 10.5 இட ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்து தான் தடுத்து விட்டதாக நினைக்கிறார்கள்.
அதை ஈடுகட்ட அல்லது சமாதானப்படுத்த எதுவுமே செய்யவில்லை. போதாக்குறைக்கு வேல்முருகனையும் மதிக்காமல் வெளியேற்றியது.
பல்வேறு தரப்பினரின் வாக்குகள் விஜய் கட்சிக்கு பிரிந்த போதும் வன்னியர் வாக்குகள் அதிமுகவின் மரியாதையை காப்பாற்றி இருக்கிறது.
கொங்கு மண்டலத்தை வாக்குகளை பெறுவதற்கு செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் செய்த வேலைகளில் 5 சதவீதம் கூட வன்னியர் வாக்குகளை பெற வேலை செய்யவில்லை.
மெத்தனமான ஏளனமான பார்வையிலே அணுகப்பட்டது.
சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.
சோசியல் மீடியாவில் ஜாதி வெறியோடு சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு 2000 பேரையே இரண்டு கோடி வன்னிய மக்களின் பிரதிநிதிகளாக நினைக்கும் மனப்பான்மை கடந்த அரசுக்கும் இருந்திருக்கிறது போல.
உண்மையில் பட்டியல் சமூகத்தை விட மிக மோசமான நிலையில் இருக்கும் ஒரு பெரும்பான்மை சமூகம்.
கணவனை இழந்த சோனியா என்றெல்லாம் பேசிவிட்டு காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும் பொழுது ஏற்படாத ஒவ்வாமை, ஒன்றிப் பயணித்த கட்சியை, ஒரு தாய் மக்களை உள்ளே வந்தால் நான் வெளியே போய் விடுவேன் என்று கருத்து பேசியதின் விளைவு இன்று கூப்பில் உட்கார வைத்திருக்கிறது. வைக்கப்பட்டிருக்கிறது.
கதறுவதை விட்டுவிட்டு கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக அந்த 20 எம்எல்ஏக்களை கொண்டு வந்து ஆட்சியில் உட்கார்ந்து இருப்பார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அடுத்த முறையேனும் பயன்படும்.
*கண்டன அறிக்கை*
"கூத்தாடி" என்ற சொல்லாடலுக்கு எதிரான கண்டன அறிக்கை
வணக்கம்,
சமீபகாலமாக அரசியல் பிரச்சார மேடைகளிலும், நேர்காணல்களிலும்,
திரைத்துறையைச் சார்ந்தவர்களை விமர்சிப்பதாக எண்ணிக்கொண்டு
, "கூத்தாடி" என்ற சொல்லை மிகவும் இழிவான ஒரு சொல்லாகப்
பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒருவரைத் தாழ்த்திப்
பேச வேண்டும் என்பதற்காக, ஒரு கலை சமூகத்தின் அடையாளத்தையே
கேலிப் பொருளாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கூத்து என்பது தமிழர்களின் மிகத்தொன்மையான கலை வடிவம்.
இக்கலையை நம்பி இன்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து
வருகின்றன. "கூத்தாடி" என்ற வார்த்தையை திட்டுவதற்காகப்
பயன்படுத்துவது, அவர்களின் உழைப்பையும் கலையையும் சிறுமைப்
படுத்துவதாகும்.
தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியாத. நிலையில்
வாழும் விவசாயிகளை போல, நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த
இன்றையச் சூழலில், நலிந்து வரும் நமது பாரம்பரியக் கலைகளைக்
காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் கலைஞர்கள் பலர்,
வறுமையிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கீகாரமும்,
கௌரவமும் கிடைக்க வேண்டிய நேரத்தில்,அவர்களின் அடையாளத்தையே
ஒரு வசவுச் சொல்லாகப் பயன்படுத்துவது அவர்களின் மனதை
புண்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழர்களின் கலையையே
சிறுமைப்படுத்துவதாக அமைகிறது .
எமது கோரிக்கை:
"கூத்தாடி" என்பது ஒரு இழிச்சொல்லல்ல; அது ஒரு பெருமைக்குரிய
அடையாளம். பசி நோக்கா நோன்பிருந்து, இரவு முழுவதும் கண் விழித்து
மக்களுக்காக ஆடிக்காட்டும் கலைஞர்களின் கண்ணியம் காக்கப்பட
வேண்டும். இனிவரும் காலங்களில், பொதுவெளியில் பேசுபவர்கள்
தங்களின் சொல்லாடல்களில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும்
என கிராமிய கலைஞர்களின் சார்பாக தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சங்ககிரி ராச்குமார்
திரைப்பட இயக்குனர் & கூத்தாடி
14-04-26
இயக்குனர் வேலு பிரபாகரன் இப்போது வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.
சிக்கலான கட்டம் தான் என்று மருத்துவர்கள் சொன்னாலும் , அவருக்கு இருக்கும் மன உறுதிக்கு மீண்டு வருவார் என்று நம்புவோம். 🙏
தந்தை பெரியார் மீது காழ்ப்பும் வன்மமும் கொண்டவர்கள் தான் சீமானும் மணியரசனும் இவர்களால் அவரை இழிவுபடுத்த முடியுமே தவிர வீழ்த்த முடியாது, அவர் தான் தமிழர் தலைவர் 🖤 #பெரியார்#தமிழர்தலைவர்