The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
சாதி சான்றிதழ் கேட்டு ஒரு வருடமாக போராடி வந்தவருக்கு தகவல் அறிந்த 24 மணி நேரத்தில் சாதி சான்று வழங்கிய தவெக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் #வன்னிஅரசு க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்
கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு ஒரு வருடமாக அலைக்கழிக்கும் அதிகாரிகளால் இந்திய ராணுவத்திற்கு தேர்வான நிலையில் ஜாதி சான்றிதழ் இல்லாததால் பணியில் சேர முடியாத நிலை இருந்து வருவதாக வேதனை தெரிவித்ததுடன்
அதிகாரிகள் கேட்ட அத்தனை விதமான ஆவணங்களை அளித்த போதிலும் ஜாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் நடந்து வருவதாக கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்தத் அவல நிலையை கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஒருவர் மூலமாக தெரிந்து கொண்டு அண்ணன் Muthalvan Thamizhchelvan மூலமாக சமூக நீதித்துறை அமைச்சர் அண்ணன் வன்னிஅரசு அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றேன் தர்ணாவில் ஈடுபட்டு வருபவர்களின் தொடர்பு எண் வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் உடனடியாக வாங்கிக் கொடுத்தேன்
பின்பு முழு தகவலையும் விசாரித்த அமைச்சர் வன்னி அரசு அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாகவே பரிந்துரை செய்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது ராணுவத்திற்கு தேர்வாகியுள்ள தாஸ் க்கு ஜாதி சான்றிதழ் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு வழங்கினார்
இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்த உடன் அவர்களுக்கு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க தொலைபேசி மூலமாக வலியுறுத்திய மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ( Vanni Arasu )அவர்களுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜாதி சான்றிதழ் வழங்கிட உத்தரவிட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்
அரசூர் முகா.வினோதன்
ஊடகவியலாளர்
விழுப்புரம்...
வலியோர் ஆள எளியோர் வீழ என்ற நிலை முழுவதுமாக அகலட்டும்..
சமத்துவம் பிறக்கட்டும்..
@TVKVijayHQ@VanniTamizhVCK ✊💥
Finally, God mode unleased! 💥💥💥
Video song from
@Suriya_offl sir’s mega blockbuster Karuppu ❤️🔥❤️🔥❤️🔥
▶️https://t.co/tyCHAhPhRO
@SaiAbhyankkar Sambavam🔥
Lyrics @VishnuEdavan1 🔥
"மாண்புமிகு அமைச்சர்"
வெறும் சொற்கள் அல்ல
"ஒடுக்கப்பட்ட மக்களின் பல தலைமுறையினரின் கனவு"
மாண்புமிகு அமைச்சர் என செவிகளில் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இனி
மாண்புமிகு அமைச்சர் என்று வாய் திறந்து சொல்லட்டும்.!
"அதிகாரம் வலிமையானது"
வாழ்த்துக்கள் அமைச்சர் அண்ணன்
வன்னி அரசு 💙❤
இன்று தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, எனது இணையர் ஆதிரை, மகன்கள் பைந்தமிழ் வளவன் மற்றும் செந்தமிழ் திலீபன் ஆகியோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான சமூக நீதி களத்தை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் என்றும் துணையாக இருப்போம் என்று மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளித்தேன்.
@CMOTamilnadu@thirumaofficial
நிறைய பேட்டிகள்ல தோழர் வன்னியரசு, அவரை போராட்டங்கள்ல காவல் துறையினர் எப்புடி கையாண்டாங்க, கைது பண்ணும் போது எப்புடி கையாளுவாங்க மத்த அரசியல் கைதிகளை டீல் பண்றதுக்கும் அவரை டீல் பண்றதுக்கும் உள்ள வேறுபாடுகளை சொல்லிருப்பாரு...
இப்ப வரிசையில் வந்து சல்யூட் அடிக்க🔥🔥
நன்றிகள் முதல்வர் அவர்களே!
நம் தலைவர் Superstar #Rajinikanth அவர்களின் மகள் @soundaryaarajni தலைமையில், சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான சமூக நலத்திட்ட உதவி விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. Nagercoil Round Table 176 மற்றும் Nagercoil Ladies Circle 196 இணைந்து ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டதுடன், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக 5 பெண்களுக்கு E-Autos வழங்கப்பட்டன. சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
நற்பணியும் பயணமும் தொடரும்… 🤘
சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவியில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும் , பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ@thirumaofficial@ambedkarthidal@INCTamilNadu@tncpim@IUMLTNOfficial #cpitamilnadu
சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் @thirumaofficial கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு @VanniTamizhVCK அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
(IUML) @IUMLTNOfficial கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
@TVKVijayHQ அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @CMOTamilnadu
ஜெய் பீம்!
தோழர் @VanniArasu_VCK அவர்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதி,பெண்கள் சமத்துவம்,மதச்சார்பற்ற கொள்கைகளில் தீவிரப் பற்றுக்கொண்டவர். தனது மனதிற்கு சரியென்று படுவதை தைரியமாகப் பொதுவெளியில் பேசக்கூடியவர். அப்படிப்பட்ட ஒருவர் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நிச்சயம் தமிழ்நாடு அரசிற்கு வலுசேர்க்கும்.அவர் கடந்தமுறை தேர்தலில் தோல்வியுற்றபோது மிகுந்த வருத்தமாக இருந்தது. நல்வாழ்த்துகள் தோழர் !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. முகமது அபுபக்கர் அவர்களும், தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. நவாஸ் கனி அவர்களும், தலைமைச் செயலகத்தில் இன்று மாண்புமிகு முதல்வர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
நமது தவெக தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர், மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. காதர் மொய்தீன் அவர்கள் இன்று காலை அறிவித்தார். இந்நிலையில், 'மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகள்' என்ற இலக்கில் அனைவரும் ஒன்றாகப் பயணிப்போம். சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லுறவை எப்போதும் கட்டிக்காப்போம்.
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
🚨Tambaram City Police🚨Under the guidance of Tr.Sanjay Kumar.IPS., Tambaram City Police conducted “Operation Special Drive” and arrested 29 rowdies and drug peddlers. Police seized 2.976 kg ganja, 1,470 narcotic tablets, and 16 narcotic injections. #tambaramcitypolice
கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்தது.
அங்கு நடைபெற்ற அறப்பணியின் ஒரு பகுதியாக, ஐந்து பெண்கள் பயனாளிகளுக்கு ஐந்து ஆட்டோக்களையும், மிகவும் தேவையுள்ள 27 பேருக்கு செயற்கை கை மற்றும் கால் உறுப்புகளையும் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் உறுதியும் மகிழ்ச்சியும் என்னை மிகவும் நெகிழச்செய்தது.
இந்த அறப்பணிப் பயணத்தின் இது எனக்கு ஒரு தொடக்கம் மட்டுமே. என் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும், இனியும் இதுபோன்ற பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன்.
மனநெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும், ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வுடனும், நன்றியுடனும் இருக்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
We are overjoyed to share that our Honorable Chief Minister of Tamil Nadu, Thiru. Joseph Vijay, has extended his heartfelt wishes and congratulations to our producer @prabhu_sr for the grand success of THE ONE @Suriya_offl‘s #Karuppu
It is truly wonderful and heartwarming for our entire team to receive his wishes ♥️