தந்தை 5ம் வகுப்பு.. தாய் 8ம் வகுப்பு.. மகன் 22 வயதில் ஐஏஎஸ் அதிகாரி.. செங்கல் சூளையில் வேலை பார்த்து ஆளாக்கிய தந்தை.. தாயின் சபதம்.. மகனின் விடாமுயற்சியால் வெற்றி பெற்ற குடும்பம்..
#Chennai | #IASExam | #UPSC | #Student | #Parent | #PolimerNews
அண்ணா ஹசாரே என்ற முகமூடியை அணிந்து கொண்டு பாசிச-மதவாத சக்திகள் நடத்திய ஆண்டி கரப்சன் மூவ்மெண்டில் இணைந்து தான் ஏமாறியதை, அந்த மூவ்மெண்டை நம்பி மக்கள் ஏமாந்து ஜனநாயக-மதச்சார்பற்ற சக்திகள் வீழ்த்தப்பட்டு பாசிச-மதவாத சக்திகள் ஆட்சியை பிடித்த விதம் குறித்து சொல்கிறார் ராதிகா கணேஷ்
பயணம் செய் ஆனால், யாரிடமும் சொல்லாதே.
அழகான காதல் கதையைப் போல் வாழ்.
ஆனால், யாரிடமும் சொல்லாதே.
மகிழ்ச்சியாயிரு ஆனால், யாரிடமும் சொல்லாதே.
ஏனென்றால் மனிதர்கள் அழகான விஷயங்களை அழித்துவிடுவார்கள்.
(ஏனெனில் மனிதர்களுக்கு சங்கி குணம் உள்ளது.)
கலீல் ஜிப்ரான்
சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் ஏறி வந்தான் அவன்…
ஒரே ஒரு காரணத்திற்காக — தனது “அம்மா”வை பார்க்க.
பல வருடங்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த ஒரு இந்து அக்கா சவுதி அரேபியாவில் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாட்டில் வேலை பார்த்தாலும், அவர் இதயம் முழுவதும் தாய்மையால் நிரம்பியிருந்தது. பல குழந்தைகள் அவரது கைகளில் வளர்ந்தனர்.
அவர்களில் ஒருவன் — சிறிய கண்களுடன், எப்போதும் அவளது கையை பிடித்துக் கொண்டே இருப்பான். அவனை அவர் தன் வயிற்றில் பிறந்த குழந்தையை விட கூட அதிகமாக நேசித்தார்.
அவனுக்கு காய்ச்சல் வந்தால், இரவெங்கும் தூங்காமல் அவள் அவனருகே உட்கார்ந்து இருப்பாள்.
அவன் அழுதால், அவள் மனசு உடைந்துவிடும்.
காலம் கடந்தது…
சிறுவன் வளர்ந்து இளைஞனானான்.
அக்கா தன் நாட்டிற்குத் திரும்பி கேரளாவுக்கு சென்றுவிட்டார்.
ஆனால் அந்த சிறுவனின் நினைவில், அவள் மறைந்ததே இல்லை.
அவள் செய்த அன்பு, அவள் தந்த அரவணைப்பு — அவன் உள்ளத்தில் உயிரோடு இருந்தது.
பல மாதங்கள் தேடினான். பழைய தொடர்புகளைப் பார்த்தான். யாரிடமோ விசாரித்தான்.
இறுதியில், அவளது முகவரியை கண்டுபிடித்தான்.
ஒரு நிமிடமும் தாமதிக்கவில்லை.
விமான டிக்கெட் பதிவு செய்தான்.
சவுதியிலிருந்து நேராக கேரளாவுக்கு புறப்பட்டான்.
அவள் வீட்டின் கதவின் முன் நின்றபோது, அவன் இதயம் வேகமாக துடித்தது.
“அம்மா என்னை நினைவில் வைத்திருக்கிறாரா?”
“என்னை அடையாளம் காண்பாரா?”
கதவு திறந்தது.
வயது மேலெழுந்தாலும், அந்த அன்பு மாறவில்லை.
அவள் அவனை பார்த்த அந்த கணமே — அவளது கண்களில் கண்ணீர் பெருகியது.
கைகள் விரிந்தது.
“மகனே!” என்று அழைத்தாள்.
அவன் ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்தான் — சிறு வயதில் செய்ததைப் போல.
அவன் கண்ணீர் வடித்தான்.
அவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
அந்த தருணத்தில், மதம் இல்லை.
நாடு இல்லை.
மொழி இல்லை.
அங்கே இருந்தது — ஒரு தாய் மற்றும் மகன் மட்டும்.
அன்பின் உறவு மட்டும்.
மனிதர்களை பிரிக்க மதம் முயற்சிக்கலாம்.
ஆனால் அன்பு — எல்லைகளைத் தாண்டி செல்லும்.
நீங்கள் வாழ்கையில் ஒருவரின் பெரிய நற்கருணையை இப்படிப் நினைத்ததுண்டா?
அந்த அன்பை ஒருநாள் திருப்பிக் கொடுக்க நினைத்ததுண்டா? ❤️
கார்ல் மார்க்ஸ்
மனிதகுலச் சிந்தனைமீது
மேலதிகத் தாக்கம் செலுத்திய
மெய்யாளன்
பூகம்பம் இல்லாமல்
பூமியை அசைத்தவன்
உழைப்பால் உலகை
ஒன்றுபடுத்த நினைத்து
நாடற்றவனாய்ச்
செத்துப்போனவன்
அவன் எலும்புகளை
வறுமையின் ரம்பப் பற்கள்
அறுத்த போதும்
“தத்துவத்தின் வறுமை”
எழுதியவன்
ஆடைகளை
அடமானம் வைத்து
உழைக்கும் வர்க்கத்தின்
மானம் காத்தவன்
குழந்தையின் காலணிகளை
அஞ்சல் செலவுக்கு
அடமானம் வைத்தவன்
மதங்களுக்கெதிராய்
மதமற்ற மதம் கண்டவன்
அறிவுக் காதல்
அவன்மீதெனக்கு
31.05.1993
லண்டன் ஹைகேட்டில்
மார்க்ஸின்
கல்லறை கண்டடைந்தேன்;
முட்புதர் களைந்து
மலர் வளையம் வைத்தேன்
கல்லறையில் உள்ளது
மார்பளவுச் சிலைதான்;
கன்னிமாராவில் நிற்பது
முழு உருவச் சிலை
நன்றி
முதலமைச்சர் அவர்களே!
#கார்ல்_மார்க்ஸ்
@CMOTamilnadu | @mkstalin
#படித்ததில் உணர்ந்தது
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான்
அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.
அதை கண்கானித்துக் கொண்டிருந்த
ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை
எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.
எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.
உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால்
ஒரு 100 ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.
அதற்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்
” 100 ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 ரூபாய் தருகிறேன்
இல்லை என்றால் வேண்டாம் என்றான்
“பிச்சைக்காரன்“.
அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம்
அதை 50 ரூபாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.
அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம்
1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பாராத முதல்
வைர வியாபாரி அதிர்ச்சியுடன்
“ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு மகிழ்ச்சியாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.
அதைகேட்ட பிச்சைக்காரன்
பலத்த சிரிப்புடன்
“ யார் முட்டாள்..?,
எனக்கு
அதன் மதிப்புத் தெரியாது
அதனால் அதை
இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு
இதுவே மிகப் பெரிய தொகை
எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் ,
அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 ரூபாவிற்க்காக
அதை இழந்துவிட்டாய்
இது எவ்வளவு
பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.
இப்படித்தான்
நம்மில் பலர்
#மிகச்சிறிய சந்தோசங்களுக்காக,
#விலைமதிப்பற்ற வாழ்க்கையே
இழந்து விடுகிறோம்...