தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் மிக அருமையான திட்டத்தில்... இதுவும் ஒன்று பெண்களுக்கு மட்டும் கழிவறை காங்கிரிட்.ஆண்களுக்கு தகர சீட்டில் கழிவு வரை...அந்த கழிவறைக்கு ஒதுக்கப்பட்ட பணம் போல் இந்த கழிவறைக்கும் ஒதுக்கப்பட்ட பணம் எங்கே..?
@tnhrcedept
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மக்கள் மருத்துவர் மறைந்த ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவியும், மருத்துவருவருமான ஜெ. வேணி அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மருத்துவர் ஜெயச்சந்திரன் அவர்களைப் போலவே அவரது மனைவியும் சேவை நோக்கம் கொண்டவர். மருத்துவர் ஜெயச்சந்திரன் அவர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்க அனைத்து வழிகளிலும் மருத்துவர் வேணி அவர்கள் ஒத்துழைப்பும், ஆதரவும் அளித்தார்.
மருத்துவர் வேணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாம்பழம் சின்னம் 2026 தேர்தலில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
@draramadoss தலைவர், பாமக, 10. திலக் தெரு, தி.நகர், சென்னை 17 எனும் முகவரிக்கு தேர்தல் ஆணையம் புதிதாக கடிதம் எழுதியுள்ளது.
#Pmk#AnbumaniRamadoss
கனடாவின் புதிய நீதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கேரி ஆனந்தசங்கரி மனித
உரிமைகளுக்காக தொடர்ந்துபோராட வேண்டும்!
கனடாவில் பிரதமர் மார்க் கேர்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில் நீதித்துறை அமைச்சராகவும், கனடாவின் தலைமை வழக்கறிஞராகவும் பொறுப்பேற்றுள்ள எனது நண்பரும், ஈழத்தமிழருமான கேரி ஆனந்தசங்கரிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கனடாவில் கடந்த காலங்களில் தமிழர்கள் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, தமிழர் ஒருவர் அந்த நாட்டின் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை ஆகும். கனடாவின் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆனந்த சங்கரி அந்தப் பதவிக்கு மிகவும் பொறுப்பானவர் ஆவார்.
ஆனந்தசங்கரி 15 ஆண்டுகளுக்கும் மேலாக எனது நண்பர் ஆவார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக மருத்துவர் அய்யா அவர்களாக நிறுவப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியவர்.
பசுமைத்தாயகத்தில் சார்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் நான் பங்கேற்று உரையாற்றிய போது, அந்த அமர்வுகளில் ஆனந்த சங்கரியும் பங்கேற்று எனது முயற்சிகளையும், பசுமைத் தாயகம் அமைப்பின் நடவடிக்கைகளையும் பாராட்டியவர். மருத்துவர் அய்யா மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
கனடாவின் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு என்னுடன் தொலைபேசி மூலம் ஆனந்தசங்கரி உரையாடினார். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட நான், ஏற்றுக் கொண்ட பொறுப்பில் சாதனை படைக்கும்படியும், இலங்கை இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக தொடர்ந்து பாடுபடும்படியும் கேட்டுக் கொண்டேன். அதற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
@gary_srp
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: திராவிட மாடல் ஆட்சியில் குற்றவாளிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. சென்னையின் மையப்பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. அது உண்மை என்றால், அனைத்து காவலையும் மீறி மனித மிருகங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி?
தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறி விடாதா?
திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை.மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலை திசை திருப்புவதற்குத் தான் திமுக அரசு முயல்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொலை - கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள், திமுகவுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தெரிந்தே குற்றங்களைச் செய்பவர்கள் போன்றோர் தான் பாதுகாப்பாக நடமாட முடிகிறதே தவிர, அப்பாவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் தக்க தண்டனையை திமுக அரசுக்கு மக்கள் அளிப்பார்கள்.
@CMOTamilnadu@tnpoliceoffl
வேங்கைவயல்: 2 ஆண்டுகள் நிறைவடைந்தும்
பட்டியலின மக்களுக்கு கிடைக்காத நீதி:
திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட கொடிய நிகழ்வு நடந்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் குற்றம் செய்தது யார்? என்பதைக் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையான காவல்துறை என்று போற்றப்பட்ட தமிழக காவல்துறையால், இந்த விவகாரத்தில் துப்புதுலக்க முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருப்பது தான் இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கு காரணம்.
2022&ஆம் ஆண்டு இதே திசம்பர் 26&ஆம் தேதி தான் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளே விசாரணை தொடங்கியது. பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 31 பேருக்கு டி.என்.ஏ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 3 பேருக்கு குரல் மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். கடைசியாக சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரி கல்பனா தத் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தீவிரமாக விசாரணை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. பல மாதங்களாகியும் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லையா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதன் பிறகும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும்? என்று நீதிமன்றம் வினா எழுப்பியும் அதற்கு காவல்துறை பதிலளிக்கவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஒவ்வொரு மாதமாக அவகாசம் கோரிக் கொண்டிருக்கிறது காவல்துறை.
வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதி வழங்க முடியாததற்காக திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும். வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகள் யார்? என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் தான் திராவிட மாடல் அரசு ஈடுபடுகிறதே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க அக்கறை காட்டவில்லை. இது தான் திராவிட மாடலா? திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பட்டியலின மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு காரியங்களுக்கு திருப்பி விடப் படுகிறது; பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் கூடுதலான பின்னடைவுப் பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. இவை ஓராண்டில் நிரப்பப்படும் என திமுக அரசு அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் கூட அந்த இடங்கள் நிரப்பப் படவில்லை. பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வரும் திமுக அரசுக்கு அந்த மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், வழக்கை சி.பி.ஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl