இன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஈஞ்சம்பாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியேற்றி, மரக்கன்று நட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடிய போது.!
பாமக 38-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை தங்க சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முனைவர் சௌமியா அன்புமணி MLA மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்று உரையாற்றிய போது.!
#PMK
இந்த #பாமக துண்டு உங்க கழுத்தில் இருப்பதை பார்ப்பதற்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா.
இனிமேலாவது பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்களின் கரத்தை உயர்த்துவதற்கு கடினமாக உழைப்போம்
வெற்றி நமதே.
#மாவீரன்_குரு#கனலரசன்#DrAnbumaniRamadoss#PMK
ஊழல் குற்றத்தில் தண்டிக்கப்பட்ட ஜெயில் குற்றவாளி இப்போது சட்டமன்றம் பாராளுமன்றம் செல்லாத புனிதருடன் நமது கோயில் தைலாபுரத்திலா..
யார் தரம் தாழ்கிறது என்பது புரிகிறது.
வேதனையாக இருக்கிறது.
நல்ல வேலை வன்னியர்களுக்கு மருத்துவர் அன்புமணி அவர்கள் இருப்பது ஒரு நம்பிக்கையை தருகிறது.
ஊழல் குற்றத்தில் தண்டிக்கப்பட்ட ஜெயில் தண்டனை குற்றவாளி இப்போது சட்டமன்றம் பாராளுமன்றம் செல்லாத புனிதருடன் நமது கோயில் தைலாபுரத்தில்...
யார் தரம் தாழ்கிறது என்பது நன்றாக புரிகிறது..
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஊழல், கஞ்சா, பாலியல் வன்கொடுமை திமுக அரசை மக்கள் துணையுடன் வீட்டுக்கு அனுப்புவோம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் , தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இந்தத் தேர்தலை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது.
தமிழ்நாடு மிக மோசமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு ஆட்சியாளர்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது கஞ்சா இராஜ்ஜியம் என்று கூறும் அளவுக்கு மூலைக்கு மூலை கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களும் விற்கப்படுகின்றன. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடவே முடியாது எனும் அளவுக்கு அவர்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டன.
தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் தான் தழைத்தோங்கியுள்ளன. பணியாளர்களை நியமிப்பதில் ஊழல், சாலை அமைப்பதில் ஊழல், பாலம் கட்டுவதில் ஊழல், மணல் அள்ளுவதில் ஊழல், நெல் கொள்முதலில் ஊழல், மது வணிகத்தில் வரி ஏய்ப்பு ஊழல், மின்சாரம் கொள்முதலில் ஊழல், பணியிட மாற்றம் வழங்குவதில் ஊழல் என அனைத்திலும் ஊழல் தான். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 6,00,00,00,00,000 ( ரூ. 6 லட்சம் கோடி) ஊழல் செய்து திமுக சாதனை படைத்திருக்கிறது.
திமுக ஆட்சியை அகற்றுவதன் மூலம் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான முன்னேற்றத்தைத் தர முடியும், பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்க முடியும், மது மற்றும் கஞ்சா போதையில்லா தமிழகத்தை உருவாக்க முடியும், உண்மையான விடுதலையை வழங்க முடியும். இதை உணர்ந்து இன்னும் 49 நாள்களில் மக்கள் துணையுடன் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உழைக்க பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்றுக் கொள்கிறது.
சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி விட்டு சமூகநீதி வேடம் போடும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் பாடம் புகட்டும்!
மராட்டிய மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி சமூகநீதிக் காவலர் வேடம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.50% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் சமூகநீதி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது.
சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இன்னும் கேட்டால் சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 5% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு மராட்டியத்தில் நடைமுறைக்கு வரவே இல்லை. அங்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது. ஆனால், இல்லாத இட ஒதுக்கீட்டுக்காக போர் முழக்கம் எழுப்பும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமது மைத்துனரின் ஆதரவில் செயல்பட்டு வரும் தமது சாதி சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தார். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாதங்களை வலிமையாக வைக்காமல் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார்.
அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 31.03.2022ஆம் நாள் ஆணையிட்டது. அதன்பின் இன்றுடன் 1423 நாள்களாகியும் இன்று வரை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு நடத்த வில்லை.
இப்படியாக எந்த வகையில் பார்த்தாலும் சமூகநீதிக்கு துரோகத்தை மட்டும் தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு சமூகநீதி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. வன்னியர்களுக்கு உள இட ஒதுக்கீடு வழங்க மறுத்து துரோகம் செய்த திமுகவுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த
செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி
தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்?
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் கனிமக்கொள்ளையை படம் பிடித்த நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை திருவரங்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி தாக்கியதற்கான காணொலி ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மக்கள் பிரதிநிதி ஒருவரே ஜனநாயகத்தின் நான்காவது தூணின் பிரதிநிதியான செய்தியாளர்களை கொலைவெறியுடன் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
கனிமக்கொள்ளை நடப்பதை அம்பலப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை. அந்தக் கடமையை செய்த செய்தியாளர்களை அவர்களின் படப்பிடிப்புக் கருவிகளை பிடுங்கி, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமான முறையில் தாக்குகிறார். தாக்குதலில் காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கான காணொலி ஆதாரமும் வெளியாகியுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய மு.க.ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன்?
ஆளுங்கட்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு காவல் படைகளை அனுப்பி கைது செய்யும் காவல்துறை, கனிமக்கொள்ளையை அம்பலப்படுத்தியவர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தயங்குவது ஏன்? திமுகவில் உறுப்பினராக இருந்தால் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய உரிமம் பெற்றதாக பொருளா?
நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியையும், அவரது அடியாள்களையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu