க பரமத்தி ஒன்றிய உழவர் பேரியக்க தலைவர் ஆக இருந்த சின்ன தாராபுரம் பெரியார் நகர் செல்வம் அவர்களின் மறைவை ஒட்டி
இன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவியர் மற்றும் மகன்கள் வெற்றி வேல்,குபேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினேன்
…பி எம் கே பாஸ்கரன்
பாட்டாளி மக்கள் கட்சி யின் முன்னாள் மாவட்ட துணை தலைவர் நண்பர் வழக்கறிஞர் நடராஜன் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்
மாயனூர் ல் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்
….பி எம் கே பாஸ்கரன்
தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பா ம க
வன்னியர் சங்கத்தின் மிகுந்த உணர்வாளர் சின்ன தாராபுரம் நடராஜன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது
அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்
….பி எம் கே பாஸ்கரன்
தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பா ம க
அன்பு மகள் சுஜிதா கார்த்திக் க்கு வளைகாப்பு விழா
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் நடைபெற்ற
என் அண்ணன் வழக்கறிஞர் திரு செல்வராஜ் அவர்களின் அன்பு மகள் திருமதி சுஜிதா கார்திக் அவர்களின் வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினோம்
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிப் அவர்கள் 5 சூன் 1896 அன்று பிறந்தார்
இந்திய அரசியல் அமைப்பு சபையின் உறுப்பினர் ஆக இருந்த சுதந்திர போராட்ட வீரரான சாகிபு
அவருடைய பிறந்த நாளில் அவரது தியாகத்தை போற்றுவோம்
….பி எம் கே பாஸ்கரன்
மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கையை ஏற்று
வன்னியர் உள்ளிட்ட 108 சாதி மக்களுக்கு 20 சதவீதம் எம்பிசி இடஒதுக்கீடு கொடுத்த
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு
அவரது பிறந்த நாளில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்
…பி எம் கே பாஸ்கரன்
"தென்னிந்தியாவின் ஜான்சி ராணி" என்று மகாத்மா காந்தியடிகளால் அன்போடு அழைக்கப்பட்டவர் அஞ்சலை அம்மாள் அவர்கள்
இந்திய விடுதலைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த இந்த வீரத் தமிழச்சியின் பிறந்த நாள் இன்று
அம்மாவின் பிறந்த நாளில் அவருடைய வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்
பா ம க நிறுவன தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் செயல் தலைவர் அக்கா ஸ்ரீ காந்தி அவர்கள் வழிகாட்டலுடன் தஞ்சை வடக்கு மாவட்ட பா ம க முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ம க ஸ்டாலின் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்றது