மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.08.2026) சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே - வட்டமேசை தமிழ்நாடு” (INDIA TODAY – ROUNDTABLE TAMIL NADU) மாநாட்டில், ஐ-பேடில், “Let truth speak louder” என்று எழுதி கையொப்பமிட்டார்
#CMJosephVijay
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
Leaked film,
A-censored film,
7-month delay,
non-holiday release — yet #JanaNayagan has crossed ₹80+ Cr share in Tamil Nadu alone! 🔥
If the film had released as planned during the Pongal holidays, it could have easily crossed ₹125+ Cr share in TN and created an all-time record! 🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு இன்று (15.8.2026) சென்னை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றி, தகைசால் தமிழர் விருது, டாக்டர் A.P.J.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள், மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காகத் தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆகிய தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
#CMJosephVijay
#IndependenceDay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay#IndependenceDay
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்.
#CMJosephVijay
#IndependenceDay
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.
#CMJosephVijay
The Vettri Tamil Nadu Investment Conclave 2026 begins.
Presided over by the Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, the conclave marks another significant step in Tamil Nadu’s investment journey, with the Hon'ble Minister for Industries, Investment Promotion and Commerce, Selvi S. Keerthana, joining the proceedings.
Through this morning, the Hon'ble Chief Minister will oversee new investment commitments, lay foundation stones for new projects, inaugurate new industrial facilities, and hand appointment letters to young recruits.
Tamil Nadu is marching towards its goal of becoming a $1.5 trillion economy by 2036. The road there runs through all 38 districts, and that is the journey Vettri takes forward.
#VettriTamilNadu #WhereVisionBecomesVictory
#InvestInTN #InnovateInTN #ThriveInTN
@CMOTamilnadu@TNIndMinOffice@Keerthana4VNR@deepakj2012@Pallavi2607
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
110 விதியின் கீழ் #ThalaivarVijay வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!
நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்க மாநில அரசின் ஊக்கத்தொகை உயர்வு!
சன்ன ரக நெல்லுக்கு ₹2,750,
பொது ரகத்திற்கு ₹2,600 வழங்கி வரலாற்று சாதனை!
டெல்டா மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி
தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.
மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!
தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (8.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
#CMJosephVijay