2018!
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது மி���க் கடுமையாக எதிர்த்தது அண்ணன் சீமான்; நாம் தமிழர் கட்சி. ரஜினிகாந்த் அவர்களின் அரசியலை எதிர்த்து காத்திரமான விமர்சனங்களையும் வைத்தோம்; பாஜக பின்புலத்தில் வருகிறார் எனக் குற்றச்சாட்டையும் வைத்தோம். அதேசமயம், அவர் கட்சி தொடங்குகிற முடிவைக் கைவிட்டபோது அதன�� முழுமையாக வரவேற்றோம்.
'Charismatic Leader' எனக் கூறி, தொடக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களை ஆதரித்த திருமாவளவன், பின்னர், எதிர்க்கத் தொடங்கினார். ஆனால், திமுகவானது ரஜினிகாந்தை கடைசிவரை எதிர்க்கவே இல்லை. அதனையும் நாங்கள் திமுக மீது ஒரு விமர்சனமாக வைத்தோம்.
ஒரே ஒருமுறை, ரஜினிகாந்தை விமர்சித்து, 'சிலந்தி' எனும் புனைப்பெயரில் கற்பனையான நையாண்டி உரையாடல் ஒன்று முரசொலியில் வெளியானது.
அதன்பிறகு, ரஜினிகாந்தே ஸ்டாலினிடம் நேரடியாகப் பேசியதாகச் சொல்லப்பட்டது. அதற்கடுத்து, முரசொலி இதழில், 'ஆசிரியர் குழுவிற்கான அறிவுரை' எனும் பெட்டிச்செய்தி வந்தது. அதில் 'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து முரசொலியில் வெளியான ஒரு கட்டுரை சில நல்ல உள்ளங்களைப் புண்படுத்தியுள்ளது என்பது எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இனிவர��ம் காலங்களில் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு தலையங்கக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என முரசொலி செல்வம் குறிப்பிட்டு இருந்தார்.
அவசரநிலை காலத்திலேயே அசராத முரசொலி, ரஜினிகாந்த் விஷயத்தில் ஏன் பம்முகிறது? ஏன் அந்தர்பல்டி அடிக்கிறது? என திமுக மீதுதான் அந்தச் சமயத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
விஜய்க்கு எதிராக ஆற்றப்படும் எதிர்வினைகளில் 10 விழுக்காட்டைக்கூட அன்றைக்கு ரஜினிகாந்துக்கு எதிராக திமுக செய்யவில்லை. சொல்லப் போனால், திமுக ரஜினிகாந்தை எதிர்க்கவே இல்லை; தயங்கியது; பயந்தது என்றாலும், அக்கூற்றில் தர்க்க நியாயமுண்டு. இதுதான் திமுகவின் சமரசப்போக்கு என நாங்கள் அப்போது விமர்சனம் வைத்தோம். அப்படியிருக்க, ரஜினிகாந்த் திமுகவுக்குப் பயந்தார் என்பது தர்க்க நியாயமற்ற பேத்தல்!
கொரோனா காலக்கட்டம், அரசியல�� சூழல் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டார் ரஜினிகாந்த். அன்றைக்கு தான் எடுத்த முடிவு மிக மிகச் சரியானது என்பதுதான் ��ப்போதும் அவர் நிலைப்பாடாக இருக்கும்.
ரஜினிகாந்த் வைத்த அரசியல் மீதும், நிலைப்பாடுகள் மீதும் கடும் விமர்சனங்கள் எங்களுக்கு இருந்தன. மிகத் தீவிரமான எதிர்ப்புணர்வும் இருந்தது.
அதேசமயம், சரியோ தவறோ தனது மனதில் பட்டதைப் பேசக் கூடியவர் ரஜினிகாந்த். 1995ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவின் காட்டாட்சி உச்சத்தில் இருந்தபோது, அவரை மேடையில் வைத்துக் கொண்டே சொடக்குப் போட்டு சாடியவர் ரஜினிகாந்த்.
1996ஆம் ஆண்டு, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என வெளிப்படையாக எதிர்க்கவும் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். 2001ஆம் ஆண்டு அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி எனப் பாராட்டவும் செய்திருக்கிறார். இதுவெல்லாம் வரலாறு இல்லை; சமகாலச்செய்தி.
ரஜினிகாந்த்!
ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் பேசிய அவர், திமு���வுக்குப் பயந்ததாகக் கூறுவது நகைமுரண். எதிர்ப்போ, ஆதரவோ பகிரங்கமாகச் செய்திருக்கிறார் ரஜினிகாந்த். துணிவோடும் செய்திருக்கிறார்.
ரஜினிகாந்த் ஒருபோதும் கொடநாட்டில் சந்திப்புக்காக வாசலில் காத்துக் கிடந்ததும் இல்லை; ��ையைக் கட்டிக்கொண்டு காணொளி போட்டு, பட வெளியீட்டுக்காக கெஞ்சியதும் இல்லை.
தன்னை நம்பிய ரசிகர்களை மனதில் வைத்து அரசியல் பிரவேசத்தில் இருந்து விலகுவதாக ரஜினிகாந்த் அவர்கள் அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே!
அ��்பாவி ரசிகர்களை ஏமாற்றி அவர்களை அரசியல்படுத்தாமல் இரத்தம் உறிஞ்சும் அட்டை போலப் பயன்படுத்தும் பக்காமாஸ் கும்பலுக்கு ரஜினிகாந்தைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.
தன்னுடைய ரஜினிகாந்த் வெறுப்பை ஆதவ் அர்ஜுனாவை வைத்துப் பேச வைத்திருக்கிறார் பக்காமாஸ்.
ரஜினிகாந்த் அரசியல் வருகையை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போதும் அவர் அரசியல் நிலைப்பாடுகள் மீது முரண்கள் உண்டு; ���னால் தன் கருத்தைச் சொல்வதில் துணிச்சலானவர் ரஜினிகாந்த்.
ஜெயலலிதா அம்மையார் உச்சத்தில் இருந்தபோதே எதிர்த்துப் பேசிய துணிச்சல்காரர். உங்களைப் போல ஒரு படத்துக்காகக் கைகட்டி அணிலாக மாறிய கோழை அல்ல.
அவர் எப்போதுமே துணிச்சலான கழுகு; நீங்களோ களவாணிக் காக்கா."
@rajinikanth @AadhavArjuna
Happy Birthday to my dear friend and legendary superstar, Rajinikanth! Of the select few who shine as heroes both on screen and off it, he remains one of the greatest, with a personal journey just as inspiring as his extraordinary cinematic one. Wishing him many happy returns of the day, and the very best for a long, and healthy life!
@rajinikanth
திரு ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்.
@rajinikanth
Greetings to Thiru Rajinikanth Ji on the special occasion of his 75th birthday. His performances have captivated generations and have earned extensive admiration. His body of work spans diverse roles and genres, consistently setting benchmarks. This year has been notable because he completed 50 years in the world of films. Praying for his long and healthy life.
@rajinikanth
Deeply honoured and grateful for this tribute. My sincere thanks to Ottplay and Hindustan Times for this wonderful initiative. Thank you for all the love. God bless.