தமிழ் நாடு அரசின் அங்கக வேளாண்மை கொள்கை 2023 யை மனதார வரவேற்கிறோம்.
தமிழ் மக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மையை அறிமுகப் படுத்தும் தமிழ் நாடு அரசின் இக் கொள்கையை மனதார வரவேற்கிறோம்.
இன்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு சட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் சட்டப்பேரவை தலைவர் அறையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் மறுமலர்ச்சி திமுக சார்பில் கலந்து கொண்டேன்.
மார்ச் 01, திராவிட முன்னேற்ற கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களது பிறந்தநாளையொட்டி நமது இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.
தமிழுக்கு கிடைத்த வெற்றி..!
சென்னை உள்ளிட்ட மாநகராட்சி மன்றங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இன்று ஒலித்திருக்கிறது.
இது தமிழுக்கு கிடைத்த வெற்றி.
மறுமலர்ச்சி தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றி!
மக்கள் விரோத ஃபாசிச பாஜக உள்ளிட்ட மதவாத சக்திகளை கண்டித்து நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பிதழை விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு அவர்களும், வி.சி.க தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களும் நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
மக்கள் பணியே சிறந்த இயக்கப் பணி!
மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு பெருமை சேர்க்கும் பணி!
இயக்கப் பணிகளால் மக்கள் மனங்களை வென்றிடுவோம்!
ஒருமாத காலத்திற்குள் பல்வேறு கழக நிகழ்வுகளில் பங்கேற்றேன். இது தொடருமானால் அரசியல் பயணத்தில் நாம் மீண்டும் தவிர்க்கமுடியாத இடத்தை அடைவோம்..!
நம்முடைய மின்வாரிய தொழிற்சங்கத்தின் உடைய அங்கீகாரம், விடுபட்ட கேங்மேன் பணி நியமன ஆணை மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு 01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இன்று மாண்புமிகு மின்துறை அமைச்சர் அண்ணன் திரு.V.செந்தில் பாலாஜி அவர்களை சந்தித்தேன்.
திரைப்பட இயக்குநர் நண்பர் திரு @seenuramasamy அவர்கள் அழைப்பின் பேரில் இன்று "இடம் பொருள் ஏவல்" திரைப்படத்தின் சிறப்பு காட்சியை கண்டேன். கவிப்பேரரசு வைரமுத்து, CPI(M) மாநில செயலாளர் திரு கே. பாலகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகமெங்கும் பல இடங்களில் நான் பேசிவருவது போல, நம் தலைவர் வைகோ அவர்கள் ஏந்திய இலட்சிய சுடர் நூற்றாண்டுகளைக் கடந்தும் ஒளி வீசிக்கொண்டே இருக்கும் என்பதற்கு சாட்சியம் தான், நம் கழகத்தின் 'கொடி காத்த குமரன்' தம்பி முருகன் தன் கையில் கம்பீரமாக ஏந்தி பட்டொளி வீசி பறக்கவிட்ட கழக கொடி
தமிழகமெங்கும் திரையிடப்பட்டு வரும் மாமனிதன் வைகோ ஆவணப் படம் 17ஆவது நகரமாகவும், 21 வது திரையிடல் நிகழ்வாகவும் கிருஷ்ணகிரி நகரில் இன்று (12.10.2022) பிற்பகல் 11:30 மணிக்கு முருகன் திரையரங்கில் மக்களுக்கு திரையிடப்பட்டது.
#Mamanithan_Vaiko#மாமனிதன்_வைகோ#Vaiko#DuraiVaiko#MDMK
தமிழகமெங்கும் திரையிடப்பட்டு வரும் மாமனிதன் வைகோ ஆவணப் படம் பதினாறாம் நகரமாக இருபதாவது திரையிடல் நிகழ்வாக திருவண்ணாமலை நகரில் நேற்று மாலை 06:00 மணிக்கு பாலசுப்பிரமணியர் திரையரங்கில் மக்களுக்கு திரையிடப்பட்டது.
#மாமனிதன்_வைகோ#Mamanithan_Vaiko#Vaiko#DuraiVaiko#MDMK
சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர்
அக்டோபர் - 11 சனாதன சக்திகளை முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைத்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் தமிழகம் எங்கும் நடைபெற்றது.
நமது இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்கள் தலைநகர் சென்னையில் பங்கேற்றார்கள்.
மாமனிதன் வைகோ ஆவணப்படம் அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை நகரில் நேற்று 10.10.2022 மாலை 06:00 மணிக்கு குயின்ஸ் பார்க் ரத்தினவேல் திரையரங்கில் மக்களுக்கு திரையிடப்பட்டது.