மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் கீழ்கரணை பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திரு.இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையை எனது தலைமையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சுந்தர் அவர்கள் திறந்து வைத்தார்.
கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் இ.பரந்தாமன், வழக்கறிஞர் திருமதி எஸ்.சுகன்யா ஆகியோர் இன்று (10.9.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின்,எம்.எல்.ஏ., திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு
கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாடல் பள்ளிகளில் வட மாநிலத்தவர்களை நியமித்திருக்கிறது தவெக அரசு.. மாற்றம் என்ற பெயரில் தமிழ் நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கிறது விஜய் அரசு
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
கழகத்திற்கு எதிராக நிற்பது நண்பர்கள் என்றாலும் அவர்களையே எதிர்க்கும் எண்ணம் வருகிறது என்றால் அதற்கு காரணம் கலைஞர் என்ற ஒற்றை சொல் தான். 🙏
#KalaignarForever
உயர் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு:-
2025 - 2026 திமுக அரசு ரூ.8494 கோடி ஒதுக்கீடு
2026 - 2027 தவெக அரசு ரூ.8393 கோடி ஒதுக்கீடு
திமுக அரசை விட ரூ.101 கோடி குறைவாக நிதி ஒதுக்கீடு செய்து தொடர்ச்சியாக உயர் கல்வி மாணவர்களை ஏமாற்றிய தவெக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது
#TNBudget2026_27
பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு:-
2025 - 2026 திமுக அரசு ரூ.46767 கோடி ஒதுக்கீடு
2026 - 2027 தவெக அரசு ரூ.44527 கோடி ஒதுக்கீடு
திமுக அரசை விட ரூ.2240 கோடி குறைவாக நிதி ஒதுக்கீடு செய்து தொடர்ச்சியாக மாணவர்களை ஏமாற்றிய தவெக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
#TNBudget2026_27
பேசாத ஒன்றைப் பேசியதாகப் பொய் வழக்குப் போட்டு அண்ணன் @Udhaystalin அவர்களை, காவல்துறையை ஏவிக் கைது செய்துள்ள த.வெ.க.அரசின் ஆணவ அடக்குமுறையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளூர் நகரத்தில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#WeStandWithUdhayAnna
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி தெற்கு ஒன்றியம் T.C.கண்டிகை கிளைச் செயலாளர் திரு.பாபு அவர்களின் மகன் இறைவனடி சேர்ந்ததைத் தொடர்ந்து நடைபெறும் சுபகிரியை (12-ஆம் நாள் காரியம்) துக்க அனுசரிப்பில் கலந்து கொண்டு, மறைந்த ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினோம்.
உடன்:-
திரு.கே.இராஜேந்திரன்
(திருத்தணி தெற்கு ஒன்றிய செயலாளர்)
மற்றும் கழக நிர்வாகிகள்.
தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் ! கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர். @TRBRajaa அவர்கள்.
த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் 6 மாத அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்துகொண்டு அதன்பிறகு இது பற்றி பேசலாம். தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க த.வெ.க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்ற உண்மையை உணரக்கூடத் திறனின்றி தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது திறமையின்மையை பொய்யான குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சிப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.3லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சிறுபிள்ளைத்தனமான, பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படை புரிதல் இல்லாத பச்சைப் பொய்.
தொழில் முதலீடுகள் குறித்த இன்றைய ஆட்சியாளர்களின் அறியாமையை அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. இதில் செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தானாக குஜராத் மாநிலத்திற்கு செல்லவில்லை. ஒன்றிய அரசால் திட்டமிட்டு தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டவை என்பதை எங்கள் தலைவர், முன்னாள் முதலமைச்சர் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலேயே பகிரங்கமான குற்றச்சாட்டாக வைத்தார், டெல்லியுடன் தொடர்ந்து போராடினார். இதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், திமுகவையே குற்றம் சாட்டுவதன் மூலம், தமிழ்நாட்டின் நலனைக் காவு கொடுத்து, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு த.வெ.க அரசு சேவகம் செய்வது அம்பலமாகியுள்ளது. டொயோட்டா வாகனத் துறை நிறுவனத்தைப் பொறுத்தவரை, அவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் தங்களது முதலீட்டை செய்துள்ளனர் ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவித்துள்ளது. என்னால் இவர்கள் சொல்லும் எல்லா பொய்களுக்கும் புள்ளிவிவரங்களோடு பதில் அளிக்கமுடியும். இவை எதைப் பற்றியும் புரிந்துகொள்ளக் கூடிய திறனற்ற த.வெ.க. அரசு, முந்தைய அரசு கொண்டு வந்த முதலீடுகளுக்கு மட்டும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது வெட்கக்கேடானது.
முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் எங்கள் தலைவர் தலைமையிலான அரசும் அதில் அமைச்சராக இருந்த நானும் உறுதியாக இருந்தோம். முதலீட்டு ஊக்குவிப்பைச் சுற்றியுள்ள அற்ப அரசியல் தாக்குதல்கள் மாநிலத்திற்குத்தான பாதிப்பை ஏற்படுத்தும். எனது பதவிக் காலம் முழுவதும் முதலீடுகள் தொடர்பாக பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டேன். தேவையானபோது மட்டுமே பதிலளித்தேன். ஆனால் எந்த முதலீட்டாளரையும் சிரமமான நிலைக்கு தள்ளாதிருப்பதில் எப்போதும் கவனமாக இருந்தேன். அமைச்சரான எனக்கு அந்த முதிர்ச்சியை வழங்கக்கூடிய தகுதியுடையவராக எங்கள் முதலமைச்சர் இருந்தார். புதிய ஆட்சியாளர்கள் இனியாவது இதை உணர்ந்து, ஒரு அரசியல் வாதத்தில் வெற்றி பெறுவதற்காக பல முதலீட்டாளர்களின் பெயர்களை சேற்றில் இழுத்து விடாமல் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
நேற்று முதல், பல தொழில் துறையினர் எனக்கு தொலைபேசி மூலமாக பேசி இந்த புதிய அரசின் பிரதிநிதிகள் விமர்சனங்களை கையாளும் விதமும், பொதுவெளியில் சேறு வாரி இறைக்கும் விதமும் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலகளாவிய முதலீட்டாளர்களின் முன்னிலையில் தமிழ்நாடு அவமானப்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் அரசியல் பார்வையோடு பார்க்காமல் மாண்புமிகு முதலமைச்சர் தொழில் துறையில் தனி கவனம் செலுத்தவேண்டும். இதில் அரசியல் சாயம் பூசப்பட்டால் தமிழகத்தில் நிலவிய மிகுந்த ஆரோக்கியமான முதலீட்டு சூழல் முற்றிலும் சீர்குலைக்கப்படும். இது மற்ற மாநிலங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை விட்டு முதலீடுகள் வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலீடுகள் வெளியேறாமல் தடுக்க என்ன நடவடிக்கைள் எடுத்தது என்பதை விளக்க வேண்டியதே புதிய அரசின் கடமை. அதற்கு பதிலாக, முந்தைய அரசின் கடின உழைப்பின் மீது தங்களது பெயர் ஒட்டும் செயலில் அவர்கள் ஈடுபடக் கூடாது.
ஊடகங்களின் சில பிரிவுகள் மூலம் பரப்பப்பட்ட பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள், அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெறவில்லை என்பது உண்மை என்னவென்று உரக்க சொல்கிறது. ஏனெனில் 12.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலமாக 30லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகியது மாண்புமிகு திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்பது உலகம் அறிந்த உண்மை. ஆகவே தான் மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசில் இதுவரை இந்தியாவில் எந்த மாநிலமும் நடத்த முடியாத “கன்வர்ஷன் கான்க்ளேவ்” நடத்தப்பட்டு அதில் நானே பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலமாக முதலீடு விவரங்களை எடுத்துரைத்தேன். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பல இதர காரணங்களினால் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்டை வைத்துக்கொண்டு 3 இலட்சம் கோடி இழப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு. இதில் நகைப்பிற்குரிய விடயம் என்னவென்றால் அவர்களது அறிக்கையிலேயே அந்த நிறுவங்களின் முடிவுக்கு விளக்கம் உள்ளது !
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 3 இலட்சம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ள நிலையில் எங்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளையும், 36 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்காகும். திராவிடர் மாடல் அரசு தொடர்ந்திருந்தால் இம்முறை குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும். இன்று இந்த அரசு சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளை குறைத்து தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த சாதனையை திராணியிருந்தால் முறியடித்து காட்டட்டும் பார்போம். இல்லை இதில் பாதியாவது செய்யட்டும் பார்ப்போம்.
உலகளாவிய முதலீடுகளுக்கான போட்டி மிகக் கடுமையானது; முதலீட்டாளர்களுக்கு பல்வேறு தேர்வுகள் உள்ளன. இந்நிலையில் இன்றைய ரீல்ஸ் மாடல் அரசு சொல்லும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்திருந்தால், இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து 2024-25ல் 11.2% ஆகவும் 2025-26ல் 13.16% ஆகவும் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கொண்ட மாநிலப் பொருளாதாரமாக நாம் உருவாகியிருக்க முடியாது. இந்தியாவின் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ஏறத்தாழ 14.5% ஆகவும் இருந்திருக்காது. தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களுக்கும் தொழில் வளர்ச்சி கிடைத்திருக்காது. இதெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் முதலில் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். மாண்புமிகு தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை பார்த்து கற்றுக்கொண்டு அதில் 10% பணியை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் செய்தாலே தமிழகத்தில் இன்று நிலவும் அசாதாரண முதலீட்டுச் சூழல் சற்று சரியாகும்.
உண்மைகளை மறைத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்படும் அவதூறுகளால் தனிப்பட்ட முறையில் திமுக பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால், இப்படி பொறுப்பற்ற முறையில் தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு செயல்பாடுகள் மீது சேற்றை அள்ளி வீசினால் தமிழ்நாடு என்கிற இந்த மகத்தான மாநிலத்தின் வளர்ச்சிதான் பாதிக்கப்படும். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு பறிபோகும். தமிழ்நாட்டிலிருந்து வாய்ப்புகளை அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல உதவுவதே இந்த அரசின் நோக்கம் அல்ல என்று நான் இன்னமும் மனப்பூர்வமாக நம்புகிறேன். எங்கள் தலைவரும் அவர் வழியிலான இயக்கமும் நானும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள்.
ரீல்ஸ் மாஃபியா கோஷ்டிகளை வைத்து பொய்களைப் பரப்பி, தி.முக.வை குறை சொல்வதை இனியாவது விட்டொழியுங்கள். 2016-21 அ.தி.மு.க ஆட்சியை விட 5 மடங்கு அதிகமான முதலீடுகளை தி.மு.க அரசு ஈர்த்த நிலையில், அந்தளவில் கூட அல்ல, உங்கள் ஆட்சிக்காலத்தில் எங்களைவிட இரண்டு மடங்கு அளவிலாவது முதலீட்டை ஈர்க்க முடிகிறதா என்கிற வேலையை உருப்படியாகப் பாருங்கள். அர்த்தமற்ற அரைவேக்காட்டு அரசியல் காழ்புணர்ச்சியோடு குறை பேசுவதை விட்டு, கொஞ்சமாவது செயல்படட்டும் த.வெ.க. அரசு.
வெற்றியும் தோல்வியும்
ஒற்றைநாள் செய்தி என்றே
கற்றுக் கொடுத்திருக்கிறாய்!
விழுந்த வேகத்தில்
எழுந்து நிற்கும்
வித்தையை
பயிற்றுவித்துள்ளாய்.
வாழ்க உன் புகழ்!
#kalaignarforever
75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று @dmk_youthwing தலைமையகமாக விளங்கி வருகிறது.
இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை, காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.
இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
#KalaignarForever #Kalaignar103