சில விஷயங்கள் பிடிப்பது இல்லை...!!!
ஏன்...? எதற்கு...?
என்ற காரணங்கள்
தெரியவில்லை...!!!
ஆனாலும் பிடிப்பதில்லை...!!!
சில விஷயங்கள் மிகவும் பிடிக்கிறது...!!!
ஏன்...? எதற்கு...?
என்ற காரணங்கள்
தெரியவில்லை...!!!
ஆனாலும் பிடிக்கிறது...!!!
பாழடைந்த வீட்டிலும்
பாழடைந்த பொருட்களிலும் பாழடையாமல் பாதுகாப்பாய் இருக்கிறது
யாரோ ஒருவர்
திகட்ட திகட்ட வாழ்ந்த வாழ்வின் நினைவுகள்....✍
#கவிதையின்_கிறுக்கல்
உன்னை நெருங்க முடியாது என்று தெரியும் வானமே இருப்பினும் உன் புகை மறைவில் சில நிமிடங்கள் இளைப்பாற ஆசைக் கொண்டது இந்த சிறகில்லா பறவை....✍
#கவிதையின்_கிறுக்கல்
மரத்தடியில் தனிமையில் அமர்ந்திருக்கும் தருணம் அழைக்காமல் அருகில் வந்தமரும் சருகை கசக்கி வீசும் அளவிற்கு இந்த மனம் இன்னும் குரூரமாகவில்லை.... ✍
#கவிதையின்_கிறுக்கல்
கழுவி வைத்த தேநீர் கோப்பையை எட்டிப்பார்த்துச் செல்லும் ஈக்களை போலவே வெறுமையாய் கிடக்கும் வீதியை அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கிறது என் மனது....✍
#கவிதையின்_கிறுக்கல்
மூச்சு முட்டும் தருணத்தில் எடுத்துப் பார்த்துகொள்ளும் அந்த பழைய குறுஞ்செய்திகளால் தான் இன்னுமும் இயல்பாய் சுவாசித்து கொண்டிருக்கிறேன்....✍
#கவிதையின்_கிறுக்கல்