திமுக தலைவர் மு க ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி உங்க அப்பாவை காணோம் என உதயநிதி ஸ்டாலினை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கிண்டலாக பேசியிருந்தார்
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவியின் கதை தமிழ்நாடு மொத்தமும் அறியும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்
Fight getting grip now!
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
திமுக ஆட்சி காலத்தில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என தொடர்ச்சியாக சொல்லி வந்த முதல்வர் விஜய் பதவி ஏற்ற ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என தேசிய அளவில் நடந்த கூட்டத்தில் கூறி இருக்கிறார்
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
திருமாவையும் சேர்த்து 20 பேர் கூட விசிகவில் இல்லை என்றார் ஆதவ் அர்ஜீனா.
தமிழ்நாட்டு காங்கிரசை விலைக்கு வாங்கிவிட்டார் மு க ஸ்டாலின் என்று பகிரங்கமாக சொன்னார் விஜய். ஒரிஜினல் காங்கிரசார் தவெகவுடன் இருக்கிறார்கள் என மார்தட்டினார்.
அதிமுக ஒரு ஊழல் சக்தி என்று வாய்நிறைய சொன்னார் விஜய். அதிமுக பேரைக் கூட சொல்லாமல் 'மற்றும் பலர்' என்று தவெகவினர் கிண்டலடித்தார்கள்.
இன்று ஆட்சியை தக்கவைக்க பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக என எல்லா அலுவலகங்களுக்கும் பொக்கேவுடன் போய் நிற்கிறது தவெக.
தேர்தல் முடிவு வெளியான அன்றே எதிர்க்கட்சியாக அமர்வோம் என வெளிப்படையாக அறிவித்த திமுகவை விமர்சிக்கிறவர்கள், ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க அதிமுக கட்சியை தவெக திட்டமிட்டு செங்குத்தாக உடைப்பதை பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.
தங்கள் ஆதாயத்துக்காக கட்சிகளை உடைக்கிற சில்லறை வேலையை நாடு தழுவிய அளவில் பாஜக செய்கிறது. தமிழ்நாட்டில் அதை தவெக செய்கிறது.
அதிமுகவிற்கு இதுவரை இருந்துவந்த ஊடக சொகுசை, இப்போது தவெகவிற்கு மடை மாற்றியிருக்கிறார்கள்.
2026ல் தவெக கொண்டுவந்த மாற்றம் இதுதான்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
சட்டமன்றத்துல எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் உடனுக்குடன் பதில் சொல்லிட்டு இருந்த காலம் 👇
இந்த திறன் இல்லாதவங்கதான் வீட்டுக்கு போயி வேற யாரையாவது வெச்சி பதில் சொல்லிட்டு இருப்பாங்க
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு வாழ்த்துகள். மக்களின் அன்பால் வென்றிருக்கிறீர்கள். மக்கள்தம் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்.
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கு வாழ்த்துகள். திராவிட மாடல் ஆட்சி தொடர்வதை உறுதி செய்ய வேண்டிய பெரும்பணி உங்கள் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்பதை நிரூபியுங்கள்.
"மனசும், திறமையும்.."
"எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்"
- முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
#MKStalin#DMK#CMVijay#TVK#TNPolitics #ThanthiTV
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
முதல் கையெழுத்தே மோசடி!
“அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, 500 யூனிட்டை தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இதுவரை இருந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் இனி கிடையாது.
மோசடியிலிருந்து தொடங்குகிறது விஜய் சர்கார்