ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
Tiruvannamalai:
Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam.
இன்று நம் தலைவர் அண்ணாமலை அவர்கள் பொங்கலூர் மாரத்தான் நிகழ்வில் சிறப்பாகப் பணியாற்றிய
தன்னார்வலர்களுக்கு (Volunteers) விருது வழங்கி கௌரவித்த மகிழ்ச்சியான தருணம்.
#திஜக ன்ஸ் கண்ணில் படாம பாத்துக்கோங்க. 😂
📌தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு dead body.
📌மாணிக்கம் தாகூர் ராகுல் காந்திக்கு travel ஏஜென்ட். டீ வாங்கி கொடுக்கிறது, resto bar கூட்டிட்டு போறது மட்டும் தான் அவர் வேலை.
📌தமிழகத்தில் சொந்தமாக 1% vote கூட இல்லாத கட்சி காங்கிரஸ் - தலைவர் #Annamalai
தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் @manickamtagore அவர்களே!
மக்கள் தலைவர் திரு.@annamalai_k அவர்களை விமர்சிப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
தேர்தலுக்கு முன்பு @arivalayam உடன் கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியின் ஆதரவுடன் வெற்றி பெற்றுவிட்டு, பின்னர் அதே கூட்டணிக்கு துரோகம் செய்துவிட்டு,
இன்று அரசியல் சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் புதிய கூட்டணி அமைத்து, அதிகாரத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் செயல்படுபவர்கள் நீங்கள்.
அரசியல் ஆதாயத்திற்காக @TVKPartyHQ உடன் கூட்டணி மாறுவதும், அதிகாரத்திற்காக கொள்கைகளை மாற்றிக்கொள்வதும் உங்கள் அரசியலாக இருக்கலாம். ஆனால் எந்தப் பின்புலமும் இல்லாமல், தனது உழைப்பாலும் துணிச்சலாலும் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்ட @WTLFoundation முதன்மை சேவகர் திரு.K.அண்ணாமலை அவர்களை பற்றி விமர்சிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
முதலில் உங்கள் அரசியல் நேர்மையையும், கூட்டணி தர்மத்தையும், கொள்கை உறுதியையும் மக்களிடம் நிரூபியுங்கள். அதன் பிறகு மக்கள் தலைவரை விமர்சிக்கலாம்...
சந்தர்ப்பவாத அரசியலுக்கு மக்கள் என்றும் சரியான பதிலடி கொடுப்பார்கள்!
காத்திருங்கள்...
#KAnnamalai #ManickamTagore #TamilNaduPolitics
பழனியின் புனித நதியான சண்முக நதியை சீரமைத்து மக்களுக்கு அர்பணிக்கும் விழாவில்💫
பல ஆண்டுகள் பிரச்சனையை கையில் எடுத்து, அதை சரியாக செய்து முடித்தும் காட்டிய We The Leaders Foundation அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கும், களத்தில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்த கனகராஜ் அண்ணன் மற்றும் குழுவினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்💫
@WTLFoundation@annamalai_k
காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜினாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு.
ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் (Cauvery Technical Cell-cum-Inter-State Waters Wing) மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு?
தமிழக அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் மற்றும் திரு. ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?
விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கெனத் தனி அத்தியாயம் படைத்த கப்பலோட்டிய தமிழன், ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சுதேசி இயக்கத்தின் அடையாளமாகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தொழில் வலிமையையும் தன்னம்பிக்கையையும் உலகறியச் செய்தவர். தியாகத்தையும், துணிச்சலையும், தேசப்பற்றையும் தனது வாழ்வின் அடையாளமாகக் கொண்டிருந்தவர்.
அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், நாட்டின் விடுதலைக்காகத் தனது உடைமைகளையும், வாழ்வையும் அர்ப்பணித்த ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
We The Leaders அமைப்பின்
முதன்மை சேவகர் அண்ணாமலை அவர்களால்
தொடங்கப்பட்ட
ETRAM Academy
அரசு தேர்வர்களுக்கான இலவச ஆன்லைன் பயிற்சித் தளம்
உங்கள் கனவுகளை நிஜமாக்க
நமது அமைப்பின் சிறு முயற்சி
அனைவரும் பயன்பெற அளவின்றி பகிர்வோம்